Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசாசுசெட் மரதன் ஓட்ட போட்டியில் குண்டுவைப்பு.

Featured Replies

மசாசு செட்டில் இன்று மாநில விடுமுறை தினம். நாட்டுப்பற்றாளர் தினம்.( Patriots’ Day’) . அதை கொண்டாட போஸ்டனான அவர்களின் தலை நகரில் இன்று நடந்த ஓட்ட போட்டி முடிவிடத்தில் குண்டு  வைக்கப்பட்டிருக்கிறது. மூன்று குண்டுகள். 18 பேர் காயம். 2 மரணம் என ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஓட்டவீரர்களின் முடிவிடத்தில் இருந்த குப்பை வாளிகளில் இரண்டு குண்டுகள் போடப்பட்டிருந்திருக்கு. ஒன்று அவர்களின் பிரபல வாசிக சாலை(JFK Library)  ஒன்றில் வெடித்திருக்கு. பொஸ்டன் பொலிஸ் மேலதிக குண்டுகளை கண்டு பிடித்து அழித்ததாகவும் கூறுகிறார்கள். பொலிஸ் இது பயங்கரவாதமா இல்லையா எனக கண்டுபிடிக்க முயல்கிறது. ஆனால் நியூயோர்க் மாநகர பொலிஸ் தான் பாதுகாப்பை அதிகரித்துவிட்டதாக கூறுகிறது.

 

http://news.blogs.cnn.com/2013/04/15/explosions-near-finish-of-boston-marathon/?hpt=hp_t1

 

Edited by மல்லையூரான்

மூன்று வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன!20 வயது சவுதி அரேபிய  பிரஜையை காவல்த்துறையினர் சந்தேகத்தின் பெயரில் மருத்துவமனையில் கடுங்காவலில் வைத்துள்ளார்கள். இன்னும் பல குண்டுகள் வெடிக்காத நிலையில் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கைத்தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளன மக்களை வீடுகளுக்குள்  இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளன.

http://nerudal.com/nerudal.56642.html

 

 

  • தொடங்கியவர்

Boston Marathon Held On ‘Patriots’ Day’ State Holiday

Boston-Marathon-exp2.jpg

ERIC LACH  APRIL 15, 2013, 4:27 PM

Two people were killed and more than 20 were wounded near the finish line of the Boston Marathon on Monday. The blasts hit Boston on one of its busiest days of the year.

In Massachusetts, Patriots’ Day has been held on the third Monday in April since 1969. The day commemorates the Battles of Lexington and Concord, the first battles of the American Revolutionary War, which took place April 19, 1775. The legal holiday is marked by reenactments of Paul Revere’s Ride from Charlestown to Lexington, William Dawes’s Ride from Boston and Roxbury to Concord, and the battles, themselves, in Lexington and Concord. “Marathon Monday” also normally includes a home game played by the Boston Red Sox.

As a legal holiday, all state, county, and municipal offices are closed on Patriots’ Day, as are many schools.

The Boston Athletic Association organized the first Boston Marathon on April 19, 1897. The current marathon course runs from the town of Hopkinton, Mass. to Boylston Street in Boston, near the John Hancock Tower in Copley Square.

http://tpmmuckraker.talkingpointsmemo.com/2013/04/boston_marathon_patriots_day.php

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியில் நேரடி ஒளிபரப்புப் போகிறது..

 

போஸ்ரனில் வாழும் யாழ் உறவுகள் இருந்தால்.. அவதானமாக இருந்து கொள்ளுங்கள். மக்களை வீடுகளுக்குள் இருக்க பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

http://www.bbc.co.uk/news/world-22160978

 

  • கருத்துக்கள உறவுகள்

போஸ்ரனில் வாழும் யாழ் உறவுகள் இருந்தால்.. அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.

 

பாஸ்டன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு நூலிழையில் உயிர் பிழைத்த டொரண்டோவை சேர்ந்த ராப் ராபின்சன் அவர்கள் கூறியது:

பாஸ்டனில் 200க்கும் மேற்பட்ட டொரண்டோவை சேர்ந்தவர்கள் மாரத்தான் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டோம். நான் போட்டியின் இறுதிக்கோட்டை அடைந்த சில நொடிகளில் பயங்கரமாக குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்தேன்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட  Sarah Hendricks போட்டியில் கலந்துகொண்டு பாதியில் வெளியேறி ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டதால் குண்டுவெடிப்பில் இருந்து தப்பியதாகவும், ஆனால் அவருடைய கணவர் David Mackie குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் போட்டியை கண்டுகளிக்க வந்த டொரண்டோவை சேர்ந்த ஒருவர், தான் போட்டியை சிறிதுநேரம் பார்த்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடிக்கும் ஓசை கேட்டதாகவும் அதை தொடர்ந்து எமர்ஜென்ஸி வாகனங்கள் விரைந்து சென்றதை தான் பார்த்ததாகவும் அதிர்ச்சியுடன் கூறினார்.

 

 

குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் படங்கள் பார்க்க.....

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=59907

 

 

http://thedipaar.com/new/news/news.php?id=59886&cat=world

 

பாஸ்டன் மாரத்தான் போட்டியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றும் மரணமடைந்த வீரர்களுக்கு கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்றும் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகள் அனைத்திற்கு கனடா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் கனடா முழு அளவில் ஈடுபடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

New Democrat Leader Tom Mulcair தனது ஆழ்ந்த வருத்தத்தை குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த கனடியர்கள் குறித்த தகவல்களுக்கு 617-247-5100 என்ற எண்களை தொடர்பு கொள்ள கனடிய அரசு அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிலை அறிய sos@international.gc.ca என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=59910

 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நேற்று நடந்த வெடிகுண்டு சம்பவம் காரணமாக அடுத்த மாதம் டொரண்டோவில் நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டிக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களும் காவல்துறையினர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

டொரண்டோவில் மே மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டியில் சுமார் 50 நாடுகளில் இருந்து 14000 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த போட்டிக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது காவல்துறையினர்களிடம் தகுந்த ஆலோசனை செய்யப்படும் என Glassman, race director of the GoodLife Fitness Toronto Marathon இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாங்கள் இந்த போட்டியை 20 வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருவதாகவும், இந்த வருடமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்த காவல்துறையினர்களிடம் தகுந்த ஆலோசனை பெறப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=59912

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.