Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் அல்-குவேடா – அமெரிக்க ஊடகம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

al-queda.jpg

சிறிலங்காவில் அல்-குவேடா இயக்கத்தின் பிரிவுகள் இயங்கி வருவதாகவும், இந்தக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும் அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

வொசிங்டனில் இருந்து வெளியாகும் இந்த ஊடகம், பொஸ்டன் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஈரான் இராணுவத்தின் ஒரு பிரிவான, குவாட் படைப்பிரிவு, ஹிஸ்புல்லாவின் ஒத்துழைப்புடன் நடத்திய இந்த தாக்குதலில் சிறிலங்காவிலும் பங்களாதேசிலும் உள்ள தனிநபர்களான அல்-குவேடா பிரிவுகளும் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

குவாட் படையின் வழிகாட்டுதலில், ஹிஸ்புல்லா அமைப்பு சுனி இன முஸ்லிம்களை அல்-குவேடாவுடன் இணைந்து சிறிலங்காவிலும், பங்களாதேசிலும் ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், அவர்கள் அமெரிக்காவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நுழைவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130417108120

 

இலங்கையிலும், பங்களாதேஷிலும் அல்கைதா அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பதாகவும், இவர்கள் பயங்கரவாத செயல்பாடுகளுக்காக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக WND எனப்படும் அமெரிக்காவின் சுயாதீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் இந்த இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

http://tamilworldtoday.com/archives/5395

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில தமிழர்களுக்கு வேற.. முஸ்லீம் தலைமைத்துவத்தால் தான் விடிவுன்னு சொல்லிக்கிட்டு கொஞ்சப் பேர் கிளம்பி இருக்காங்க.

 

அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இனங்கண்டதில் இருந்து படுதோல்வி கண்டுள்ளது. விடுதலைப் புலிகளை ஆதரித்து... தமிழீழத்தை அமைத்துக் கொடுத்திருப்பின் அமெரிக்கா இந்த வகையான அச்சுறுத்தல்களை மிக இலகுவாக கையாண்டிருக்கலாம்.

 

எல்லாம் பிளேக்கின் தவறான வழிநடத்தலால் வந்த விளைவுகள். சிறீலங்கா ஈரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நாடு மட்டுமன்றி அது சர்வதேச பயங்கரவாதிகளுக்கு செயற்படவும் ஊடுருவவும் இடைத்தங்கல் நிலையாக உள்ளதோடு.. முஸ்லீம் மதப் பயங்கரவாதிகள்.. சிறீலங்காவில் உள்ள.. முஸ்லீம் மத அடிப்படைவாதிகளின் ஆதரவோடு மறைந்து இயங்கவும் முடிகிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில தமிழர்களுக்கு வேற.. முஸ்லீம் தலைமைத்துவத்தால் தான் விடிவுன்னு சொல்லிக்கிட்டு கொஞ்சப் பேர் கிளம்பி இருக்காங்க.

 

அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இனங்கண்டதில் இருந்து படுதோல்வி கண்டுள்ளது. விடுதலைப் புலிகளை ஆதரித்து... தமிழீழத்தை அமைத்துக் கொடுத்திருப்பின் அமெரிக்கா இந்த வகையான அச்சுறுத்தல்களை மிக இலகுவாக கையாண்டிருக்கலாம்.

 

எல்லாம் பிளேக்கின் தவறான வழிநடத்தலால் வந்த விளைவுகள். சிறீலங்கா ஈரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நாடு மட்டுமன்றி அது சர்வதேச பயங்கரவாதிகளுக்கு செயற்படவும் ஊடுருவவும் இடைத்தங்கல் நிலையாக உள்ளதோடு.. முஸ்லீம் மதப் பயங்கரவாதிகள்.. சிறீலங்காவில் உள்ள.. முஸ்லீம் மத அடிப்படைவாதிகளின் ஆதரவோடு மறைந்து இயங்கவும் முடிகிறது..! :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

எனியாவது அமெரிக்கா சிறீலங்கா அரசு பற்றியும் அங்குள்ள முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் பற்றியும் அறிந்து செயற்படட்டும்..! தமிழர்களை அரவணைப்பதன் மூலம்... இந்த இரண்டு சக்திகளையும் அமெரிக்கா இலகுவாக கையாள முடியும்..! :icon_idea:

மீண்டுமொருமுறை அமெரிக்காவும் அமெரிக்க ஊடகங்களும் இலங்கையின் மேல் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகின்றது. இது எங்கே என்று முடியும் என்று தெரியவில்லை

 



எனியாவது அமெரிக்கா சிறீலங்கா அரசு பற்றியும் அங்குள்ள முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் பற்றியும் அறிந்து செயற்படட்டும்..! தமிழர்களை அரவணைப்பதன் மூலம்... இந்த இரண்டு சக்திகளையும் அமெரிக்கா இலகுவாக கையாள முடியும்..! :icon_idea:

நீங்கள் சொல்வது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் பேராசை போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பத்தை.. தமிழர்களைக் கூட்டழிப்புச் செய்து.... கருவருறுக்க நினைக்கும்.. சிங்கள - முஸ்லீம் பயங்கரவாதிகளிடம் இருந்து... எந்த சர்வதேசத்தின் உதவியோடு எம்மை அடக்கியாள முனைந்தார்களோ அதே சர்வதேசத்தைக் கொண்டு.. எமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயன்படுத்துவதில் தான் தமிழரின் விடிவு தங்கியுள்ளது..! :icon_idea:

 

 

பொஸ்டன் தாக்குதலின் பின்னால் ஈரான் தான் இருந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த தாக்குதல் அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்களாலும் நடாத்தப்பட்டு இருக்கலாம்.

 

அதேவேளை இலங்கையில் ஈரான், பாகிஸ்தான் ஊடுவல் என்பதும் போதுபல சேனா அமைப்பும் அல்கைடா அமைப்பை வளர்க்க உதவும். ஆனால் சிங்கள இனவாத இராணுவம் இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பாவித்து இனவழிப்பை மேற்கொள்ளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

al-Qaeda-2.jpg

அல்-கைதா இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என அறிவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் குறித்து ஆராயப்பட வேண்டும் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக WND.com என்ற சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பொஸ்டன் தாக்குதலுடன் அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு தொடர்பு இருப்பதாக அந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள பலருக்கு அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அல்-கைதா மற்றும் சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களில் இருப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இணைந்து செயற்பட்டவர்களே பொஸ்டன் குண்டுத் தாக்குதல் நடாத்த அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல்கள் மரதன் ஓட்டம் முடியும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் அனைத்து ஊடகங்களும் அவ்விடத்தில் ஒன்றுகூடியிருந்தமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் இஸ்லாமிய தலைமை குழுவொன்றுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்காவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் இடம்பெறும் என இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாமிய தீவிரவாத தலைவர் ஒருவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த புலனாய்வுத் தகவல்கள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் குண்டுவெடிப்பு விசாரணை இன்னும் முழுமை பெறாததால் குறித்த புலனாய்வுத் தகவல்களை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவல் உண்மையாக இருப்பின் பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் முஸ்தபா படர் அல்டின், தலால் ஹமியே மற்றும் மொஹமட் அலி ஜமாடெட் ஆகியோரே தொடர்புபட்டிருப்பார்கள் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக WND.com என்ற சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6902:2013-04-17-11-41-16&catid=1:latest-news&Itemid=18

 

U.S. was warned of terror attacks
 
 
Although it is not known yet who is responsible for Monday’s heinous bombings at the Boston Marathon that killed three and injured more than 100 people, a source within Iranian intelligence services told WND the Islamic regime was behind them and to look for trails through Sri Lanka and Bangladesh.
 
The source said the bombs were planted near the end of the race so that the horrific images of the blasts would be captured by all the media there and be replayed over and over throughout the world.

 

A senior commander of the Islamic regime had warned less than two months ago that terrorism was coming to America.

 

“If the people of America and Europe do not confront the aggressive policies of their governments, they cannot then remain far from the possible future events (terror attacks),” the regime’s armed forces deputy chief of staff, Brig. Gen. Masoud Jazayeri, said in a Feb. 23 interview with Fars News Agency, a media outlet run by the Revolutionary Guards. “Al-Qaida groups and other services which operate for the interests of America (in Syria) will soon change the region of their operations and thereafter create new problems for America and Europe.”
 

Jazayeri, objecting to U.S. involvement in the Syrian civil war, warned that explosions similar to those in Syria would take place in other countries.

Read more at http://www.wnd.com/2013/04/u-s-was-warned-of-terror-attacks/#IdQO8ouFBSyKgfzO.99

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.