Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைது

Featured Replies

பொஸ்டன் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ்காரருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும்  ரிசின் எனப்படும் நஞ்சை தபால் உறைகளுக்குள் போட்டு அனுப்பிவந்த சந்தேக நபர் இன்று கைதனார். 

 

இன்றைய பொஸ்ரன் விசாரணைகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பலத்த குழப்பங்களை கொடுத்திருந்தது. காலை நேரம் அளவில் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதல் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்தில் அது பிழை என்று அறிவித்தார்கள்.

 

இப்போது ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைதாகியிருப்பதாக அறிவிக்கிறார்கள். இது அதி பயங்கர எழு கொடிய நஞ்சுகளில் ஒன்றாகக் கருதப்படுவது.

 

9/11 பின்னர் அந்திராக்ஸ் என்ற விசக்கிருமிகளை ஒருவர் அனுப்பி வந்தார். அதைப் போல இப்போது  இந்த நபர் பொஸ்ரன் மரதன் ஓட்டபோட்டி தாக்குதலின் பின்னர் ரிசின் அனுப்பிப் பிடிபட்டிருக்கிறார்.

 

 

CNN) -- An arrest has been made in connection with letters sent to President Barack Obama and Sen. Roger Wicker that authorities are testing to determine if they contain ricin, two federal law enforcement officials said Wednesday.

The person was arrested in the Tupelo, Mississippi, area, one of the officials said.

Discovered Tuesday, the letters were addressed to Obama and to Wicker, R-Mississippi.

The letters were stopped at a government mail-screening facility after initial tests indicated the presence of ricin.

Because initial tests can be "inconsistent," the envelopes have been sent off for additional tests, an FBI statement said. The FBI does not expect to receive results from the tests until Thursday, federal law enforcement sources told CNN.

 

http://www.cnn.com/2013/04/17/politics/tainted-letter-intercepted/index.html?hpt=hp_t3

 

Edited by மல்லையூரான்

ரிசின் ஆமணக்கு விதையில் உள்ள நஞ்சு.

 

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க ‘செனட்’ உறுப்பினருக்கு விஷம் தடவிய கடிதம்

 

post.jpg

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ‘செனட்’ உறுப்பினர் ரோஜர் விக்கர். இவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் அதில் செனட் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்கர் இது குறித்து உளவுத்துறையிடம் அவர் புகார் செய்தார்.

அதை தொடர்ந்து அந்த கடிதம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை நடத்திய போது அதில் ‘ரிசின்’ என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த கடிதத்தை அனுப்பியது யார்? என தெரியவில்லை. இது குறித்து உளவுத்துறையும், போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ‘செனட்’ உறுப்பினர்களின் ஊழியர்களும் தீவிர விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ‘செனட்’ உறுப்பினர்களுக்கு வரும் மெயில் கடிதங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் பாஸ்டனில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் ‘செனட்’ உறுப்பினர் விக்கருக்கு கிடைத்தது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு ‘ஆந்த்ராக்ஸ்’ விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதன் பிறகு தற்போது விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது அமெரிக்க ‘செனட்’ உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

ரிசின் ஆமணக்கு விதையில் உள்ள நஞ்சு.

 

ஆமணக்கு விதை நல்லது என்று மருத்துவக் குறிப்புகளில் உள்ளது.

அதில் இந்த கொடிய விசமும் இருக்கா? :o

ஆமணக்கு விதை நல்லது என்று மருத்துவக் குறிப்புகளில் உள்ளது.

அதில் இந்த கொடிய விசமும் இருக்கா? :o

 

 

ஆமணக்கு எண்ணையாக இருக்கலாம். விதையச்சாப்பிட்டால் சங்கு தான்.  :D
 
அமெரிக்கா இந்த ஆமணக்கு நஞ்சை ஒரு பெரிய இரசாயன ஆயுதமாக மாற்ற பல வருடங்கள் முயற்சி செய்து அதில் உள்ள ஒரு குறைபாடு காரணமாக கைவிட்டது. ( அது ஒரு புரதம் என்ற படியால் உயர் வெப்பநிலையில் அழிந்து விடும்) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.