Jump to content

தமிழர் மதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் - இது தமிழ் முதுமொழி

 

இதுதான் தமிழர் மதத்தின் அடிப்படை. வடிவிலா, உருவிலா இறைவனை கும்பிட்ட, தமிழர்களுக்கு - இறைவனுக்கென்று ஒரு வடிவத்தை ஏற்படுத்தி உருவ வழிபாடு செய்ய வழிநடத்தியதுதான் இந்து மதம். இந்த இந்து மத தாக்கத்தால்தான் நாம் இன்று சாதியாக பிரிந்து நிற்கிறோம். தமிழர்களாக இல்லாமல் சாதி வாரியாக தமிழர் பிரிந்து நிற்பதுதான் இந்து மதத்தின் சாதனை. ஏமாந்து நிற்பவன் தமிழன். அப்படியென்றால் இந்த இந்து மதம் நமக்கு தேவைதானா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தோழர்களே! நான் கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் பொருத்தம் இல்லாததைச் சொல்வதையும் எழுதி வைத்திருப்பதையும் நான் கண்டிக்கிறேன். சொல்லட்டுமே, உலகத்தில் 250 கோடி மக்களில் 20 கோடி கூட நாம் இருக்கமாட்டோம். அப்படி இருக்க நமக்கு மாத்திரம் இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றால் என்ன அர்த்தம்? இருக்கிற குழவிக் கல்லுகள் எல்லாம் நமக்குக் கடவுள்களா? கம்பி இல்லா தந்தியும் அநேக ஆயிர மைல்கள் ஒரு மணி நேரத்தில் பறந்து செல்லும் விமானங்களும் கண்டுபிடிக்கும் நேரத்திலா யாகமும், ஓம குண்டமும் வளர்ப்பதும், குழவிக் கல்லுகளை வைத்துக் கொண்டு கடவுள்கள் என்று சொல்லிக் கும்மாளம் போடுவது? எவ்வளவு மானக்கேடு என்று நினைத்துப் பாருங்கள்.

ஒரு விமானம் 20 மணி நேரத்தில் லண்டன், 40 மணி நேரத்தில் அமெரிக்கா போய்ச் சேருகிறது. ஆனால் நமது கடவுள்கள் விமானத்தின் (தேரின்) மேல் உட்கார்ந்து கொண்டு 2,000 பேர் இழுத்தாலும் அந்த விமானம் ஒரு மணிக்கு ஒரு ஃபர்லாங் பிரயாணம் செய்கிறது. இதைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கவில்லையா? இதற்காகவா பத்து ஆயிரம், இருபது ஆயிரம் பேர் போய் பெண்டு பிள்ளைகளைக் கூட்டத்தில் நசுங்க விட்டு வேடிக்கை பார்ப்பது? சமுதாயம் முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரம் கூறும் மக்கள், இன்றைய தினம் இவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துக் கொண்டு யாரால் தான் இருக்க முடியும்? ஒரு யோக்கியனும் சும்மா இருக்கமாட்டான். ஆகவே, இந்த மாதிரியான கேவலமான நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்?

நம் நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? இன்றைய தினம் நம் நாட்டில் காட்சியளிக்கும் சிற்பங்களும், சித்திரக் கலைகளும் நாம் தானே செய்தோம், நம்மால் கட்டப் பட்டவைதானே, இந்தப் பாழாய்ப் போன கோவில் கட்டடங்கள் சிற்பங்கள்? இன்னும் நாட்டிலே அரிய பெரிய வேலைகளை எல்லாம் செய்து வைத்திருக்கும் நம்மை யார்தான் முட்டாள்கள் என்று சொல்ல முடியும்? இன்றைய தினம் நம்மவர்களில் அறிஞர்கள் இல்லையா? இவை எல்லாம் இருந்தும் சில சமயங்களில் நாம் அறிவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகிறோம்.

ஆகையால்தான் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வதற்குக் காரணமாக சில காரியங்களில் நாம் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறோமே தவிர மற்ற எந்தத் தொழில் முறையிலேயும் நம்மை மோசமாகச் சொல்ல முடியாது.

மதம் என்று சொல்லி, புராணம் என்று சொல்லி, கடைசியில் சாமியில் கொண்டு புகுத்திவிட்டால், நம் சொந்த புத்தியை இழந்து அவற்றில் அறிவைச் செலுத்தி விடுகிறோம். அவை எல்லாம் மாற வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்.

நான் இப்பொழுது சொன்னதெல்லாம் இன்றைய தினம் நமக்கு இருக்கிற அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம் அறிவைக் கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்க வேண்டுமென்றுதான் உங்களிடம் கேட்கிறேன். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதை ஒவ்வொன்றும் பயன்படுத்த வேண்டுமென்று தான் சொல்லுகிறேன். இவ்வளவு பரந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்மைத் தவிர அவர்களுக்கெல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், வேதம் எல்லாம்தான் இருக்கிறது. ஆனால் இப்படி எங்கும் இல்லை. எனவேதான் தோழர்களே எல்லோரும் பகுத்தறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும் என்று திரும்பச் திரும்பச் சொல்லுகிறேன்.

---------------------

22.07.1951-இல் சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புருவ மத்தி என்பது எது?

 

ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.

சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.

புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும்  “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.

இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.

புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை?

சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”

           “தேவர் குறளும் திருநான் மறை முடிபும்

            மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை

            திருவாசகமும் திருமூலர் சொல்லும்

            ஒரு வாசகம் என்று உணர்”

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.

ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்?

நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?! புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர். ஒரு புருவம் அதன் மத்தி என்று ஒன்றும் இல்லை, அதன் கீழ் இருப்பது கண்.

இப்படி சிந்திக்க வேண்டும். யூகிக்க வேண்டும். புருவ மத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணை பற்றி தானே சொல்லியிருப்பர்.

நாம் சிந்தித்ததை சித்தர்கள், ஞானிகள் பாடல்கள் கொண்டு பார்போம். எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசயாகவும் கூறிபிட்டுள்ளனர். அதில் சிலவற்றை இதில் பார்போம். இதை விட அதிக விளக்கம் வேண்டின் எங்கள் குருநாதர் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

“புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி” . – சித்தர் காகபுசந்தர்.

புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி. அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும். அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.

“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.  “நடுக்கண் தான் புருவபூட்டு”  இதற்கு விளக்கமும் வேண்டுமோ.

மேலும்   வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”

தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:

 

இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி. அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”  

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்”

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

                        உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

                        பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்

                        சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”

  நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன். நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.

மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது  கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த  சூரிய  , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.

“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”

கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “ஒளி கடவுளை தியானி போமாக என்பதே.” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும்.

இப்படி அனைவரும் கூறுவது ஒன்று தான்.

கண் ஒளியை பற்ற உங்களுள் கடந்து செல்ல குருவிடம் உபதேசம் தீட்சை பெறுங்கள்.

நன்றி..http://tamil.vallalyaar.com/?p=2861

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
1
1.
 
இலைறவனின் உருவம என்ன
?
உடலுக்குள இருக்கும பிரணாயாவம எனும தே!து அது #த்தத்து
 
ஒலி!கின்றது
.
ஆனல் உளளத்து ஈ#ன் ஒளி எனும தே!து
 
அந்தப்பிரணாயாவதே! கண்பன் #ர்ந்த ஒளி!கின்றது
.
சுலைவ
,
ஒளி
,
ஊறு
,
 
ஓலை#
,
நற்றம என்னும பூதமுதகி! தன்த்திலைரகள ஐந்தும ஒடுங்கும
 
முலைறயில் ஒன்றனுள ஒன்றய முப்த்து ஆறு பயயுபடுங்கும
.
"
#த்த முதலைந்துந் தன்வழித் தன்#ரில்
சித்துக்குச் சித்தன்றிச் தே!#ர்விடம தே!வறுண்தே!ட
சுத்த பவளியிற் சுடரிற் சுடர் தே!#ரும
அத்தம இதுகுறித் தண்டுபகள அப்பிதே!
."
சிவத்திற்தே!க ஆதியில்லை
;
அந்தமில்லை
;
உருவமில்லை
;
நிலைனப்வர்க்கு
 
பநஞ்#த்துள ற்றவனய நிற்கும
;
வித்து பிளந்து முலைள பவளிவந்து
 
எங்கும ரந்து விரிந்து எதிலும கந்து நிற்கும
;
ஆலைகயினல்
,
சிவம
,
 
#த்ததின் உளதே!ள #தசிவயும
,
பிரணாயாவகி! ஒளியின் உளதே!ள
 
ஈ#னகி!
ஒளி!கவும
,
ஒளிக்கு ஆதரயுளள இருளுக்குள இருளகவும
,
லினுள
 
பநய!கவும
,
வித்துக்குள ரகவும
,
எல் அணுவுக்குள அணுவகவும
 
உளளன்
.
ஆக
,
சிவதே!
,
பிரணாயாவதே!
,
இலைறவதே!ன
,
எல்ம அறிவகி!
 
உணாயார்லைவப் தே!ல் உருவற்றவன்
;
எங்கும எதிலும நிலைறந்த பருள
.
"
சுருங்கக் கூற எல்ம கடந்த சூனி!ம
.
சூனி!த்திலும இருள
.
ஆக
 
சிவம இருள நிலைறந்த சூனி!ம
."
இது
,
!ம உணாயார்ந்த கரு
(
த்து
).

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
 
946563_132989440231363_546609798_n.jpg
 
ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்

மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது! பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை! அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!

கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!

 

பாபாவுக்கு போகர் முருகனாக காட்சியளித்து ஆட்கொண்டதும் கதிர்காமதில்தான் ! மேலும் தெய்வானை சன்னதிக்கு எதிரில் ஒன்பது ஜீவசமாதிகள் உள்ளது .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.


இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.

ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"

- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை

- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.


ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it's known as the sound of 'big bang'
— with Silver Raju, Swame Swami and Senthil Kumar Krishnan.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.

இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்

’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.
சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.
சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.
‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)
ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)
சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.
அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.
இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.
ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆதித் தமிழர் மெய்யியல்

 
ஆதித் தமிழர் மெய்யியல்

ஆதி. சங்கரன்

முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம்.

பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம்.

1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல்.

2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல்.

3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை.

என்ற மூவகை முன்வைப்பில் காண்போம்.

முதலாவதாக,

இடத்திணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி முதல் பாலையீறாக ஐவகையாகப் பகுத்தனர்.

குறிஞ்சியில் முருகன் தெய்வமாகவும்,

முல்லையில் திருமால் தெய்வமாகவும்

மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும்

நெய்தலில் வருணன் தெய்வமாகவும்

பாலையில் கொற்றவை தெய்வமாகவும்

கருப்பொருள் இலக்கணம் கண்டனர். இன்றைக்குச் செம்மையாகப் பரவியிருக்கும் சிவனியமும், இந்து என்ற சமயமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் யாண்டும் காணப் பெறாத ஒன்று.

குறிஞ்சி நிலத் தெய்வமாகக் கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு மனைவியரும், வினாயகர் போன்ற உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கௌமார சமயம் எனும் நிலைக்கு முருக வழிபாடு வந்த பின் பிற்கால நாடக ஆசிரியர்களின் புலமையாலும், திரைத்துறையின் பக்தித் திரைப்படங்களாலும் குறிஞ்சி நில முருகனின் பொதுவான வடிவம் காண்போர் மயங்கும் வண்ணம் இவ்வாறு திரிக்கப் பட்டுள்ளது.

முல்லை நிலத்தின் திருமாலும் இரண்டு மனைவியர்களுடன்தான் பிற்காலத்தில் மாற்றம் செய்யப் பட்டார். ஆழ்வார்களும், சமயாசிரியர்களும் (திருமாலை உயர்த்திப் பேசுவதாக நினைத்து) அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தியதில் சங்க இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதனை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

அடுத்ததாக, மருத நிலத்தின் இந்திரன் ஆசீவகச் சமயத்தின் ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப் பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த இலக்கியச் சான்று கொண்ட மருத நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர் வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள் இழிவு செய்தன. அவரது உடல் முழுக்கவும் பாலுறுப்பு முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த் தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது, ஒரு காலத்தின் கொடுமை.

நெய்தல் நிலத்து வருணனோ ஒரு துணைத் தெய்வமாகப் படியிறக்கம் செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில் ஒருவனாக முதன்மை யிழந்து போகச் செய்தனர்.

பாலை நிலத்துக் கொற்றவை நமது முன்னோர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு மூல வடிவமானவள். ஆனால் அவளை அடங்காப் பிடாரி என்றும், தீமையே செய்யும் இரக்கமற்றவள் என்றும் வைதீக வந்தேறிக் கதைகள் உருவகப் படுத்தின. இவ்வாறாக இடத்திணையின் பிரிவாக நாம் காணும் ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் வைதீக வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை அப்படியே நாம் நம்பி ஏற்றுக் கொள்ளும் இழிநிலைக்கு நம்மையும் கொண்டு வந்து, அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’ என்றொரு புதுச்சொல் ஒன்றை நம் தலைமீது சுமத்தினர்.

ஒரு சமயம் என்று சொன்னால் அது தோன்றிய இடம், பல்வேறு மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை, அதன் பதிவுகள், சமூக அடையாளங்கள் இன்னோரன்ன பிறவும் தான் அது ஒரு சமயம் என்பதனை வரையறுக்கும். ஆனால் இந்த இந்து என்கிற சமயத்துக்கு ஏதேனும் தோற்ற இடமும், காலமும் உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத் தொகுதியினர் யார் என்ற விவரமும் உண்டா? கூற முடியாது.

இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல் குற்றவாளிகளாக உருவகப் படுத்தும் வல்லடிச் சமயமே இந்து என்ற சமயம். இதன் மூலம் தமிழனின் தொன்மங்களைக் கொச்சைப் படுத்தினர். நமது விழுமியங்களைத் தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள் கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும் ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட் படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு விரும்பிய கருத்துக்கொப்பத் தனது சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும் அறிவு உரிமையும் சமய விடுதலையும் நமக்கு இன்றளவில் வழங்கப் படாமையையே அது காட்டுகிறது.)

நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும்.

இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

இரண்டாவதாகப் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது,

1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப் படியும்,

2. மெய்யியல் வளர்ச்சியில் படிநிலையிலும்

இருவகைப் பகுப்புகளில் ஆதித் தமிழரின் மெய்யியலை ஆய்வோம்.

முதலாவதாக அறிவு வளர்ச்சிப் படிநிலையில் துவக்கக் காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள் என்று பெயர் வைக்கும் முறையும் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. “சப்த மாதாக்கள்” என்று கன்னியர் எழுவரின் வழிபாட்டு வழக்கம் இன்னமும் சில குடிகளிடையே உண்டு. ஏழு கன்னியரில் ஒருவரான அம்பிகா எனும் அம்பிகையே சமணத்தின் இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும் அம்பிகையே பின்னாளில் சிவனியக் கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப் பெரும் தெய்வமாக சிவனின் மனைவியாக மாற்றம் பெற்றாள்.

பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான இருளர் இன மக்கள் இன்னமும் கன்னியர் வழிபாடு செய்து வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம் குறிசொல்லும் வழிபாடும் உண்டு. இந்த யட்சினி எனும் தெய்வத்தின் பெயரால் இன்றும் பலர் குறி சொல்கின்றனர். இந்த யட்சினி யார் என்று பார்ப்போம்.

கணி நந்தாசிரியனுக்கு இயக்கன் என்றொரு பெயரும் உண்டு. மொழி முதல் வாரா எழுத்துக்களின் முன் எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது. எனவே இராமன் என எழுதி ராமன் என ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும் வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன் எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது. இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும் பெயர்கள் சமணத்தை விழுங்கிய சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன் என்பதற்கு இணையான பெண்பால் பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப் பட்டது.

இதல்லாமலும் சிற்சில விடங்களில் தாய்த் தெய்வ வழிபாடு மூதாள் வழிபாடு என்ற பெயரில் இன்று வரை தொடர்வதைப் பல ஊர்களில் நேரில் கண்டு வருகிறோம். மூதாள் என்ற சொல் தாய்த் தெய்வத்தின் அன்பினையும், முதன்மையினையும் பகரும் சொல்லாகும். இருளாயி, கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம் என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றபின் பழைய தாய்த் தெய்வ வழிபாடு தனது முதன்மையினை யிழந்தது. இன்றும் கூடப் பல ஊர்களில் அம்மன் திருவிழாக்கள் முடிந்த மறுநாளில் ஒரு களிமண்ணாலானதோர் பெண் உருவச் சிலையினை வைத்துப் பலவாறாக ஏசியும் திட்டியும் கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர். இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும் அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும் பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி என்ற சொல் ஆசீவக மெய்யியலில் சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின் பெயராகும். திருநிலைகளிலும் கால்காசுகளிலும் இருக்கும் பெண் உருவமே இந்த மாதங்கியாகும்.

பழைய ஆசீவக வழிபாட்டு மரபு செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றதனையே இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு வழிபாடுகள் பெரும்பாலும் இலக்கியங்களில் பதிக்கப் பெறாதவை.

அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப் படிநிலையில் காணும் போது பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக மரபே பெரிதும் முதன்மை பெறுகிறது.

எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,

ஈவு - தீர்வு

அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.

ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவக மெய்யியலை அறிய முற்படு முன் ஒருசில:

1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆசீவக எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த வைதீக நஞ்சினாலும் இழித்துக் கூறப்பட்டு அவரவர் நூல்களில் பதிவு செய்யப்பட்ட மாற்றார் கூற்றுக்களே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஆசீவகத்தின் தோற்றம், காலம் போன்றவற்றில் மயக்கம் ஏற்படக் காரணம் வார்த்தைப் புரட்டும், வரலாற்றுப் புரட்டுமே.

வார்த்தைப் புரட்டு

ஆசீவகத்தை அறிவு வழியிலும், அறிவியல் வழியிலும் நேர் கொள்ள இயலாத வைதீகச் சார்பு மற்றும் ஆசீவக எதிரணியினரால் ஆசீவக அடிப்படைக் கூறுகள் குறித்துத் தவறான பொருள் தரும்படிச் சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை நிகழ்வு’ என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். (இவ்வூழ் பற்றிப் பின்னர்க் காணலாம்.)

ஆனால் எதிரணியினரோ ஆசீவகம் கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு எனத் திரித்துப் பொருள் கூறினர்.

இந்தப் பொருள் முரண்பாட்டால் ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின் அடிப்படையே தகர்ந்து போகிறது.

அமணர் என்பது ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் சொல்.

அமணர் = அம் + அணம் + அர்

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அணம் - ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் - அணம் என நின்றது.)

அர் - பலர்பால் சிறப்பு விகுதி

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

அது போன்றே சூத்திரர் என்ற சொல்லும் தவறாகவே பொருள் சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத் துறைகளிலும் எவ்வகைச் சிக்கல்களுக்கும் விடை காணும் நுட்பமான வழிமுறைகள் சூத்திரம் என வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே இலக்கண நூற்பாக்களும் கணக்கியல் வழிமுறைகளும் சூத்திரம் என்ற சொல்லால் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த சூத்திர முறைகளை அறிந்தவர் எனும் பொருள் படும் சூத்திரர் என்ற சொல்லுக்கு இழிவானவர் என்ற பொருள் கற்பிக்கப் பட்டு தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற சொல் சூழ்ச்சி எனும் சொல்லின் வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் + திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என வருவிக்கப்பட்ட சொல்லாகும்.

சூழ் > விடையைச் சூழ்தல். பல்லாற்றானும் பட்டறிவாலும் தருக்க அறிவினாலும் விடையைச் சூழ்தல்.

திரம் > அவ்வாறு விடைகாணும் ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப் பிழையால் வந்த மயக்கு வழூஉ.

அது போலவே, சமணம் வேறு; சைனம் வேறு. சமணம் ஆசீவக மரபில் கிளைத்தது. மூன்று நல்வெள்ளை நிலையினரால் நெறியாளப்பட்டது. அவர்களில் மூன்றாமவரான மற்கலியும், மகாவீரருமே ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில் மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இருவரும் பிரிய நேர்ந்தது. தாய் மரபான ஆசீவகத்தில் உலகாய்தம், பொருளியல், மாந்த வாழ்வியல் போன்றவற்றிற்கான கருத்துகளுக்கு இடம் உண்டு. அதாவது குமுகத்தைப் புறக்கணித்துத் துறவி கூட வாழ இயலாது என்ற கருத்து ஆசீவகத்தினுடையது.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம் என்பார்க்கும் நிலை

எனும் திருக்குறளும் இங்கு எண்ணத் தகும்.

மாறாக மகாவீரரோ துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவும் கை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். துறவிகள் இல்லறத்தாருக்கு வழிகாட்டும் பொறுப்பாளர்களாக இருப்பதனை அவர் விரும்பவில்லை. துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே தமக்குப் போதும் என்பது அவர் கருத்து. இக் கருத்து வேறுபாட்டால் ஆசீவக சமணத்தை விட்டு சைன சமயத்தை உருவாக்கினார்.

மூன்று ஐயனார்களைத் தவிர நல்வெள்ளை நிலையை அடைந்ததாக தமிழ் அறிவர்களால் யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23 திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப் பட்டதில் இன்றளவும் நமக்கு உடன்பாடில்லை. அது குறித்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சைனம் தனது மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா என்பதே நம் ஐயம். ஒரு வேளை திருத்தங்கரர் மரபினை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத் தனிச் சமயத்தை உருவாக்கிய பின், அவருக்கு முன்பிருந்த திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எள்ளுப் பேரனுக்குப் பிறந்த கொள்ளுப் பாட்டன் என்பது போலிருக்கிறதல்லவா இந்த வாதம்? சைனம் சமணத்திலிருந்து 23 திருதங்கரத் தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட சமயமே சைனம் என்பது தெளிவு. இந்த சைனம் பழைய கள்ளைத் திருடிப் புதிய மொந்தையில் வைத்த கதையாக சமணம் - சைனம் எனும் இரு சமயமும் ஒன்று என்பதான ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர் கூடத் தாங்கள் சமணரா அன்றிச் சைனரா என்று கேட்டால் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர்.

இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும் மேலானதோர் வரலாற்றுப் புரட்டும் உண்டு. அதுதான் ஆசீவகத்தின் தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23 திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப் பின் சமணத்தை ஆசீவகக் கருத்துகளின்று பிறழாமல் ஒரு சமய வரைவிற்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு முன்பே 23 திருத்தங்கரத் தலைமுற்களும், அதற்கும் முன்பே குமுக மரபு கொண்டதுமான ஆசீவகத்தை மற்கலிதான் உருவாக்கினார் என்பது தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி, அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின் சைனத்திற்கு சேர்த்து விடும் வரலாற்றுப் பிழையே இது என்பது தெளிவு.

3. வைதீகம் வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம் வினைமறுப்புக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருத்தில் இன்றளவும் ஆசீவகம் நீர்த்துப் போகவில்லை. ஆனால் ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின் உடன்பாட்டாளர்கள் என்பதான வீண் புரளியும் உண்டு.

ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை மக்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வைதீகம் வருணக் கோட்பாட்டைக் கொண்டு வந்தது. நிறம் என்பது வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக் கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு என்று பேசியது. உண்மையில் ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர் மேல்நிலை யடையும் வரை அறுவகை நிறத்தால் குறிக்கப்பட்டனர். அது அவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக் கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் பதினோராம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் விதிக்கப் படுவது போல ஒரு ஆசீவகப் பள்ளியில் உறையும் புதியவர், இயல் மாந்தர் போன்றோர் அங்குள்ளோரை வகைப் படுத்தி அடையாளங் காணவே இந்த நிறக் கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி நிலையினை அறியவும் இந்த நிறக் கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர் மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சியில் கச்சை அளிப்பதில் இன்னமும் இந்த நிறக் கோட்பாடு பின்பற்றப் படுவது கண்கூடு. ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம் பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ ஆடையின் சிறப்பு தெரியாதவர்களால் உருவாக்கப் பட்டதாகையால் மக்களின் தோலின் நிறத்தையே வகைப்படுத்திப் பிறக்கும் போதே பாகுபாடு செய்தனர்.

மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி வைத்து விட்டு ஆசீவகத்தைப் பார்த்தால் மட்டுமே அது யானையாகத் தெரியும். இன்றேல் அது வெறுங் கல்லாகவே தெரியும்.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். வைதீகமோ பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப் பணிவிடை செய்து படையலும் போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும் என்கிறது. நெய்யும், பருப்புமாகச் சாப்பிட்டு விட்டு உழைக்காமல் உட்கார்ந்திருந்தால் அவனது சிந்தனை மெய்யியலை நோக்கியா போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா போகும்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

1. கருமை & சாம்பல் - துவக்க நிலை

2. நீலம் - இரண்டாம் நிலை

3. பசுமை - மூன்றாம் நிலை

4. செம்மை - நான்காம் நிலை

5. மஞ்சள் - ஐந்தாம் நிலை

6. வெள்ளை - இறுதி நிலை

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.

2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.

3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

1. கரும்பிறப்பில் 1. கருமை முதல் படி

2. கருமை இரண்டாம் படி

3. சாம்பல் மூன்றாம் படி

2. நீலப் பிறப்பில் 1. கருநீலம் முதல் படி

2. நீலம் இரண்டாம் படி

3. வான்நிறம் மூன்றாம் படி

3. பசும் பிறப்பில் 1. அடர்பச்சை முதல் படி

2. பச்சை இரண்டாம் படி

3. வெளிர்பச்சை மூன்றாம் படி

4. செம்பிறப்பில் 1. செம்மை முதல் படி

2. இளம்சிவப்பு இரண்டாம் படி

3. காவி மூன்றாம் படி

5. மஞ்சள் பிறப்பில் 1. அடர் மஞ்சள் முதல் படி

2. இளமஞ்சள் இரண்டாம் படி

3. பொன்மை மூன்றாம் படி

6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே. இந்த நிலையினை வீடடைதல் என்று சொன்னால், வைதீகம் கூறும் சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும் கூறுகிறதோ எனும் ஐயம் எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது வைதீகர்களின் சொர்க்கப் புரட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது என்பதனை விளக்க ஊழ்கத்தை விளக்குவோம். ஊழ்கம் (யோகம்) எனும் சொல் ‘ஊழ்’ எனும் சொல்லினைக் கொண்டு கிளர்த்தலால் ஆசீவகம் கூறும் ஊழினை முதற்கண் விளக்குவாம்.

உழு எனும் சொல்லினடியாக ஊழ் எனும் சொல் கிளைத்தது. ‘விழு’ என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’ என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும் செயலைக் குறிக்கும்.

நிலத்தை உழுகின்ற போது ‘மண்’ எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன் சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம் எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின் கண்ணறைகளில் சேமிக்கப்படுவதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. உயிர்வளி சேமிக்கப்படும் போது மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும் பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி) பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தில் வளி சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கமைவு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பூதங்களில் ‘வெளி’ என்பது இடத்திணையாதலால் இது ஆசீவகக் கோட்பாடுகளில் தெரிநிலை பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம், நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும் உண்டு. வெளிக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் இல்லை. எனவே இது தெரிநிலை பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால் மண், நீர், தீ, வளி ஆகியவை தெரிநிலை பூதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறது.

1. மூலஅணு

2. விளைவணு

மூல அணு என்பது வளியணுவாம். இவ்வளியணுக்கள் வெவ்வேறு விழுக்காடுகளில் தமக்குள் புணர்ந்து நிலவணுவையும் நீரணுவையும் விளைவிக்க வல்லன. எனவே வளியணு மூலவணுவாகக் கருதப் படுகிறது. நீரணுக்களையும், நிலவணுக்களையும் வளியணுக்களாலப் பகுக்க இயலும். ஆனால் வளியணுக்களைப் பகுக்க இயலாது. இவ்வளியணுவே ஏனைய பூதங்களுக்கு அடிப்படை அலகாய் அமைதலின் இது ‘இயக்கணு’ எனவும் வழங்கப்படும். ஆசீவக அணுவியம் மூலவணுவை அழிக்க முடியாது என்கிறது.

விளைவணு

நீரணுவும், நிலவணுவும் வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன. எனவே இவை ‘இயங்கணு’ எனவும் மூல அணுவால் விளைவிக்கப் படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படும்.

நீரணு, நிலவணு, வளியணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கின்ற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது. ஆனால் ஏனைய மூன்று பூதங்களிலும் உள்ளுறைந்து நிற்றலால் ‘தீ’ உள்ளுறைப் பூதம் என வழங்கப் பெறும். அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும் பிரிதலும்) வெப்பத்தின் முன்னலையில் மட்டுமே நிகழும். வெப்பமின்றி அணுவிய நிகழ்வுகள் நடப்பதில்லை. இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப் படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுறைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.

நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்

நீரணு பாய்சீரும்

வளியணு கிடைச்சீரும்

தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.

சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும்.

ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும்.

பால் தன்மைக்கேற்பப் பொருட்களின் வடிவமையும். களிமண், சேறு, பானை, ஓடு போன்றவை ஒரே பொருளின் பல்வேறு பால் தன்மையால் வந்த புற வேற்றுமை வடிவங்களே.

பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும்.

இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.

ஊழ்கமும் மெய்யியலும்

ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை.

ஊழ்கமும் உடலும்

உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும்.

வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும்.

இடகலை நாடி வாதமென்றும்

பிங்கலை நாடி பித்தமென்றும்

சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும்.

வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும்

பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும்

ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும்

சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர்.

இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும்.

சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)

உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும்.

1. வாயில் பாலூற்றுதல்.

2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.

3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல்

4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி)

5. நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.)

6. தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)

7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல்.

8. உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல்.

9. நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.

இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர்.

ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,

நிலப்பூதியத்தில் 11/2

நீர்ப்பூதியத்தில் 11/4

நெருப்புப்பூதியத்தில் 1

வளி பூதியத்தில் 3/4

வெளிபூதியத்தில் 1/2

ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம்.

இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.

ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல்,

ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)

போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)

சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)

கூறுகின்றது.

இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும்.

இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது.

அவையாவன:

1. கடைமிடறு

இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான்.

2. இறுதிப் பாடல்

இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து.

3. இறுதி ஆடல்

கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்.

4. இறுதி வரவேற்பு

ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே.

5. காரிருள்

இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது.

6. நிறையாவழிகையமிழ்தூற்று

உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர்.

7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு

ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க மெய்யியல் கூறுகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

8. ஐயன் நிலை அடைதல்

இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.

முடிவுரை

இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த வந்தேறி சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.

 
 

 
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் வழங்கிய

அணிந்துரை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை. இச்சூழலில்தான் உலகாய்தம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றியும் எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக ஏ.எல். பாசம் அவர்களின் ஆய்வு நூலை மேலும் நுணுகிப் படிக்க வேண்டியிருந்தது.

ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி கோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலியைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவ்விருவரைப் பற்றியும் ஆராய முடியவில்லை எனவும் ஏ.எல். பாசம் வருத்தப்பட்டிருந்தார்.

தமிழில் ‘கழிவெண் பிறப்பு’ என்பதை நல்வெள்ளை என்பர். அந்த நிலையை அடைந்தவர்களை நல்வெள்ளையார் என்பர். அதைப் பாலி மொழியில் ‘பரம சுக்க’ என்பர். பாலி முதலான வட மொழிகளில் அவர்களைப் பற்றி யாதொரு செய்தியும் காணப்படவில்லை என்றாலும், ஆசீவகத்தின் வேர்கள் தமிழ் நாட்டில் நிலை கொண்டிருப்பதாக ஏ.எல். பாசம் கூறியிருப்பதால், கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய இருவரைப் பற்றிய செய்திகளைத் தமிழ் மூலங்களில் தேடினேன். அப்படித் தேட முற்பட்ட போது வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன. இந்தத் தேடலில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் நந்தவாச்சாவே ஆவார்.

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம் கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு அமைக்கப்பட்டனவாகும். அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். அக் கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா எனப் பாலி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியன் எனும் சொல் ஆசான் எனவும் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். பெரியவாச்சான் எனும் வைணவப் பெரியாரின் பெயரே அதற்குச் சான்றாகும். பெரிய+ஆசான் > பெரியவாச்சான் என்றானதைப் போன்றே நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது. இக் கணி நந்தாசிரியனே முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் நற்றிணைப் புலவராவார். திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.. இன்றைய நிலையில் அங்குள்ள கோயில் முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி செய்யக் காணலாம்.

நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவியாவார். திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை கற்படுக்கைக்குரிய வெண்காயபன் என்பவரே அவர் என்பதும், நற்றிணைப் புலவர்களில் ஒருவராகிய மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையார் என்பவரே அவர் என்பதும் தெளிவாயிற்று. இவ் இருவரையும் பௌத்த இலக்கியங்கள் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுகின்றன. இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் ஆய்வின் வியப்பான முடிவுகளாகும். அத்துடன் பாலி மொழியில் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகக் குறிப்பிடும் மூவரையும் தமிழர்கள் பரம ஐயனாராக - பெரமநாதராக -ப் போற்றி வருவதும் கள ஆய்வில் கண்டுணர்ந்த செய்திகளாகும்.

இப்படி ஆசீவகத்தில் பரம ஐயனார்களாக மூவரும் அஃதாவது மற்கலி, காயபர், கணி நந்தாசிரியன் ஆகிய மூவருமே தமிழகத்தில் வழிபடப்பட்டு வரும் போது ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி மட்டும் எப்படி வடநாட்டவராக இருக்க முடியும்? இந்த வினா என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது. வெங்காலூர்ச் சிறையில் பொய் வழக்கு ஒன்றில் தளைப்பட்டிருந்த நேரத்தில் எதிர்பாரா வண்ணம் தோழர் குணா அவர்களும் யானும் மாசாத்தனார் எனும் ஐயனாரே மற்கலி கோசாலர் என்று கண்டுணர்ந்தோம். இப்படியாக ஏறத்தாழ 30 ஆண்டு தொடர் ஆய்வில் ஆசீவகம் பற்றிய பல உண்மைகளைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் சேயாற்றிலிருந்து ஒரு துண்டறிக்கை வந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மற்கலி எனும் பெயர் சேயாறு, வந்தவாசி முதலான பகுதிகளில் பரவலாகப் பிள்ளைகட்குச் சூட்டப்பட்டு வந்ததாகவும், அண்மைக் காலத்தில்தான் அந்த வழக்காறு குறைந்து வருவதாகவும் அத்துண்டறிக்கை உணர்த்தியது. இச் செய்தி ஆசீவகம் பற்றிய ஆய்வில் புதிய வெளிச்சத்தைக் காட்டியது. ஆசீவகத்தின் மூலச்சுவடுகள் சங்க இலங்கியங்களின் அடியூற்றாய்த் திகழ்கின்ற உண்மைகளை எல்லாம் கண்டுணர்ந்த பின்னரும் கூட, ‘ஆசீவகம்’ எனும் பெயர் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. அது எந்த மொழிச் சொல் என்பதிலும் உறுதி செய்ய முடியாத ஒரு நிலையே தொடர்ந்தது. இச்சூழலில்தான் மற்கலி பற்றிய துண்டறிக்கையை அனுப்பி வைத்த தோழர் ஆதி. சங்கரன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை உருவாக்கியவர்கள் என் அன்புத் தோழர்கள் முகில், ஆற்றல், சரவணன் முதலானோர். அந்தச் சந்திப்பு ஆசீவகம் பற்றிய பல புதிர்களை விடுவித்தது. அந்தச் சந்திப்பின் விளைவே, ‘ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்’ எனும் இச்சிறு நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பாகும்.

ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலருக்கும் அந்தப் பெயர் ஒரு பெரும் புதிராகவே இருந்துள்ளது. ஆ+ஜீவன் (உயிர்) என வடமொழிச் சொற்களாகக் கொண்டு அவர்கள் பொருள் விளக்கம் செய்தனர். அம் முயற்சியே அனைத்து வகையான குழப்பங்களுக்கும் காரணமாயிற்று. அந்த நெடுநாளைய குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வை இந்நூல் வழங்கியுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

ஆசீவகம் தமிழ்ச் சொல்லே!

ஆசீவகம் எனும் சொல்லை ஆசு+ஈவு+அகம் என இந்நூலாசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார்.

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற் படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,

ஈவு - தீர்வு

அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற் கான பெயரேயாம்என்பது ஆசிரியரின் விளக்கமாகும். விளக்கம் புதுமையானது என்றாலும் அது இலக்கண விதிக்கு உட்பட்டிருப்பது அக்கருத்தின் மெய்ம்மையை உறுதி செய்கின்றது.

உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்எனும் நன்னூல் (164) நூற்பாவின்படிநிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியல் உகரமானது (முற்றியலுகரமும் கூட) வரு மொழி முதலில் உயிர் வந்தால் (தனக்கு இடமாகிய) மெய்யை விட்டு ஓடிவிடும்.என்பது அந்நூற்பாவின் பொருளாகும்.

‘ஆசு’ என்ற சொல்லில் உள்ள ‘சு’ ச்+உ எனப் பிரியும். வருமொழி முதலில் ‘ஈ’ எனும் உயிர் எழுத்து இடம் பெற்றுள்ளதால் இலக்கண விதிப்படி, ஆசு+ஈ = ஆசீ என்றாகும். ஈவு என்ற சொல்லையடுத்து அகம் வருவதால் முந்தைய விதிப்படி ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என வரும். திரு ஆதி . சங்கரன் தரும் இவ் விளக்கம் இலக்கண விதிப்படியும் பொருந்தி விடுவதால் அப் பெயர்க் காரணம் முழுமையாக விளக்கப்பட்டு விடுகிறது. ஆசீவகம் இடவாகுப் பெயராய் அச்சமயத்தைச் சுட்டியுள்ள உண்மை மேலும் மேலும் கூடுதல் விளக்கம் பெற்றுத் தெளிவடைதல் உறுதி.

பேராசிரியர் அரசேந்திரனிடம் இச்சொல்லின் பகுப்பு பற்றி கலந்தாய்வு செய்த போது அவர், ‘வாழ்க்கைக்கு வேண்டிய பற்றுக்கோடான உண்மைகளை வழங்கிய துறவிகள் வாழும் இடம்’ எனப் பொருள் விளக்கம் தந்தார். அத்துடன் ‘ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ என்ற புறப்பாடலையும் எடுத்துக் காட்டி விளக்கினார். இவ்விளக்கமும் எண்ணத் தக்கதாய் உள்ளது.

ஆசீவகத்தின் அழியாச் சின்னங்களாக ஆசிரியரால் குறிக்கப்படும்,திருநிலை,சுழற்குறி,கந்தழி,இருபுற முத்தலைக் கோல்ஐம்முக்கோணம்ஆகிய குறியீடுகள் யாவும் பிறமொழிச் சொற்களாகவோ அல்லது மொழி பெயர்ப்புகளாகவோ இல்லாமல் தனித் தமிழ்ச் சொற்களாக உள்ளன. அத்துடன் சுழல்குறி எனும் பெயர் பெரிய புதிருக்கான விடையாகவும் அமைந்துள்ளது பெரும் வியப்பாகும். இச்செய்தியைக் கண்ட அளவிலேயே தோழர் குணா அவர்கள் சுழல்குறியை உணர்த்தும் சுழற்றியமே சுவத்திகம் என வடமொழிகளில் திரிபு பெற்றிருக்க வேண்டும் எனக் கூடுதல் தகவலையும் தந்தார். இது இந்நூலின் வரலாற்றுப் பங்களிப்பு எத்தகையது என்பதை உணர்த்தும் சான்றாகும்.

கோள்நூல்

சோதிடத்திற்கு அவர் கையாளும் ‘கோள்நூல்’ என்ற சொல் வியப்பூட்டக் கூடியதாகும். மற்கலியின் கோட்பாட்டை விளக்கும் நூல் ‘அருங்கலைச் செப்பு’ என்பதாகும். அந்நூலில் ‘கோள்நூல்’ எனும் பெயர்க் காரணம் நல்ல வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.

நவக்கோள் கூடி நடத்து மாண்புஉவப்பின் நிகழ்ச்சி யது.

ஆய கோள்க ளாட்ட மதுவேகாய நிகழ்ச்சி யெனல்.

நன்றுந் தீது நவக்கோ ளாட்டமென்று உணர்வ தது

தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள்ஆற்ற செயலென் றுணர்.

என அந்நூல் குறிப்பிடக் காணலாம். கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சோதிடம்’ அமைந்துள்ளதால் அதனைக் கோள்நூல் என வழங்குவதுதானே முறையாக இருக்க முடியும்?

இந்நூல் அளவால் மிகவும் சிறியதுதான். எனினும் மிகப் பெரிய பண்பாட்டு வரலாற்றை - ஓரினத்தின் அடையாளத்தை - மீட்டுருவாக்கம் செய்ய வல்ல அடித்தளத்தைக் கொணடுள்ளது என்பதே உண்மை. இந்நூலாசிரியர் பொறியியல் பட்டம் பெற்றவர். ஆயினும் இவரின் மொழிநடை தனித்தமிழில் இயல்பாயும் எளிதில் புரியும் படியும் அமைந்துள்ளது பெருஞ்சிறப்பாகும். இவ்வளவு அரிய செய்திகள் அனைத்தையும் தம் ஆசிரியரிடம் உடனுறைந்து கற்ற பாடங்கள் என்பதை அறியும் போது ஆசீவகம் அழிந்து விட்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை!

தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் இந்நூல் உறுதி செய்கின்றது.

உலகை மாற்றிப் போட்ட ஓர் அறிவியல் கோட்பாடு சார்பியல் விதியாகும். இக் கோட்பாட்டை 14 பக்கங்களில்தான் ஐன்சுடீன் முதன் முதலாக வெளியிட்டிருந்தார். ஒரு கோட்பாட்டின் வெற்றி அதன் அளவில் இல்லை. அது வழங்கும் செய்தியில்தான் உள்ளது. இந்த உண்மை இந்நூலுக்கும் பொருந்தும்.

தமிழ் இன மரபைத் தன் ஆசானிடமிருந்து கற்ற திரு. ஆதி. சங்கரன் இப்போது நமக்கு அவற்றை ஒப்படைக்க முன் வந்துள்ளார். இன்னும் பல உண்மைகளையும் அவர் தருவார். அவரைத் தமிழ் கூறு நல்லுலகின் சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகின்றேன்.

ஆசீவகம் பற்றி....

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் நமக்கெனத் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இவர்கள் சைனப் படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர். இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.

எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தென்னகத்தில் - குறிப்பாகத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆசீவகத் துறவிகளின் எச்சமாக இருக்கும் சித்தர் பீடங்கள், குருகுலங்கள் மீண்டும் தமது பணியைப் பொது நலம் கருதித் தொடர வேண்டும் எனவும், பொது மக்களையும் அரசமைப்புகளையும் குறை சொல்லிக் கொண்டு, அயனாட்டுப் பண்பாட்டு மோகம் கொண்டு அலையும் இளைஞர் சமுதாயம் தனது பொறுப்புணர்ந்து சுற்றுச் சூழல், பல்லுயிர் ஓம்பல், ஒழுகலாறு, நெறியாண்மை போன்றவற்றில் தனது கவனத்தைத் திருப்பித் தொன்றமிழ் நாட்டின் அருகி வரும் கலைகளைப் புதுக்கித் தருவதில் பங்களிப்பைத் தர வருக எனவும் அழைக்கிறோம்.

இதனை ஒப்புக் கொள்ளும் யாவரும், தமது இல்லத்தில் ஆசீவகச் சின்னங்களை வனையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆதி. சங்கரன்

http://aaseevagappalli.blogspot.in/

 

அஃஉ

முன்னுரை

ஆசீவகம் என்ற சொல்லைக் கேட்கும் போதே அது ஒரு தமிழ்ச் சொல்லா? அன்றிப் பிறமொழிச் சொல்லா? என்பதிலேயே ஆய்வாளர்களுக்குப் பெருந் திணறல் ஏற்படும் அளவுக்கு ஆசீவக நெறி இன்றைக்கு அடைந்துள்ள நிலைமை தோள்மீது கிடக்கும் துண்டினை ஆள் வைத்துத் தேடுவது போல் உள்ளது. ஆசீவகம் வாழ்வியல் நெறியேயன்றிப் பிறவன்று.

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.

ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளையாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,

ஈவு - தீர்வு

அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.

போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக் காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கப்பட்டது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துக்களையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.

பருத்துயர்ந்த ஒரு மரம் பிளக்கப்பட்டுப் பல்வேறு பொருட்களாக மாறுவது போல் (நாற்காலி, கட்டில் போன்று) ஆசீவக மரபு தனது பொதுமையையும், தன்னையுமிழந்து பல்வேறு குழுக்களாகச் சிதறியது. மரம் என்ற பொதுமை, நாற்காலி, கட்டில் என வேற்றுமைப் பட்டது போல் குழுக்கள் சமயங்களாக உருமாறின. அப்பருத்த மரத்தினை வெட்ட உதவிய கோடரிக்கு அம்மரத்தின் கிளையே காம்பாகவும், கொடுவாளுக்குப் பிடியாகவும் இருந்து உதவியது போல் ஆசீவக மரபிலிருந்து பிரிந்த குழுக்களே ஆசீவகத்தின் முகவரியை இல்லாமற் செய்து தாமே பன்னெடுங்காலமாய் இருந்த தனிப்பெரும் பொதுமை போன்றதோர் மாயையை ஏற்படுத்தின. இவ்வாறு தன்னை யிழந்து தமது தொடரிகளாகப் பல்வேறு குழுக்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கு உதவிய ஆசீவக மரபின் அழிக்க முடியாத பண்பாட்டுச் சின்னங்கள் இன்னமும் அழிக்க இயலாச் சிறப்பு நிலையில் குமுகத்தில் விரவிக் கிடப்பதனைச் சுட்டிக் காட்டி எமது மனக் கிடக்கையில் உள்ள பேரவாவினைச் சமன் படுத்து முகத்தான் இச்சிறு நூலினை யாம் யாத்தளிக்கிறோம்.

ஆதரவாளர்களுக்கு நன்றி. கருத்தில் மாறுபாடு கொண்டோருக்கு விடையிறுக்கும் பொறுப்பும் எமக்கிருப்பதால் பிணக்குகளைத் தெரிவிக்கலாம் எனத் தங்கள் மறுப்புக்களை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

நன்றியுடன்

ஆசீவகத்துறவினன்

ஆதி. சங்கரன்

1. திருநிலை

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.

இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.

மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.

கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.

மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்கமாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்கமாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!

(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)

ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.

2. சுழற்குறி

துறவு நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

3. கந்தழி

ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம். உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.

வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப் படுவதும் உண்டு.

இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

4. இருபுற முத்தலைக் கோல்

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.

இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது. இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.

பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.

5. ஐம்முக்கோணம்

ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.

அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.

6. முப்புள்ளி

அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.

மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’ என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’ காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன. அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.

ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.

கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.

ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.

எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.

பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.

7. புள்நகக் கீற்று

பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.

முடிவுரை

ஆசீவகக் கடலினின்றும் சிதறிய ஒரு துளி. மீண்டும் தன் பழைய வடிவம் பெறத் துடிக்கிறது. எமது உணர்வுத் துடிப்பினுக்கிடையில் இழையோடும் தொன்மை அவா தங்களையும் பழைமை உண்மையின் பக்கம் பற்றி இழுக்கும் என நம்பி விடை பெறுகிறேன். நன்றி.

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா?

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் “கோள்நூல்” எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும்.

முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் “கோளம்” எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று “கோபர்நிகஸ்” என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார்.

 
“அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்...”(திருவண்டப் பகுதி, திருவாசகம்)

தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய “ஒளி மறைவு” (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே.

இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனிதனின் பிறப்பியமும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 3600 பாகை கொண்ட நீள் வட்டத்தின் அமைப்பில் குறிப்ப தாகும். (நீள்வட்டம் வரைதல் கைப்பழக்கத்தில் திரிபுற்று நீள் சதுரத்தில் தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும் (பன்னிரண்டு இராசிகளாக) ஒவ்வொன்றும் 300 பாகையை உள்ளடக்கி அமைகிறது. பிறப்பியத்தில் குறிக்கப்படும் இலக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். (அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோளமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் ஆய்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக்கதிர்களுண்டு. அவற்றின் அலை நீளங்களும் ஒளிச் சிதறல் தன்மைகளும் வேறுபட்டவை யாகும். (சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியனவாதல் இதற்கு எடுத்துக் காட்டாகும்.) பிறப்பியத்தில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து கொண்டுள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன. பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புது விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக் கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் “கிரக வலிமை” என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும். இதனையே “வக்ரம்” எனக் குறிப்பிடுவர். எதிர்ப்புலம் கொண்ட கோள் பகுதிகள் உடைந்து சென்று மறுகோளை நோக்கிச் செல்லும். இப்பகுதிகளின் தாக்குதலால் சிறுசிறு பகுதிகள் அழிவதுண்டு. பெரும்பாலும், வளிமண்டல எல்லைக்குள் படும் துகள்கள் எரிந்து போய்விடுகின்றன. இவையே விண்கல் அல்லது எரிகற்கள் விழுவதாகவும் கூறப்படுவதுண்டு. எப்படியிருப்பினும், கோளியக்க எதிர் விசையால் இயற்கைச் சமநிலை தவறாது “கோள் சமனிலை” பாதுகாக்கப் படுகிறது. இதன் தொடர் நிகழ்வுகள் விரிக்கின் பெருகும் என அஞ்சி விடுக்கிறேன்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்)யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்பட்டுப் பெரிதாக்கப் படுவது போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறப்பிய காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.

இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும். அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே கணியம் என்கின்ற சோதிடமாகும். இவ்வளவு பெரிய அறிவியலை சிந்தனா சக்தியும், கல்வியறிவும் இல்லாத பாமரர் சிலர் கொச்சையாகப் பயன்படுத்திப் பொருளீட்ட முனைந்து விட்டதால் “கோள்நூல் அறிவியல்” மக்களிடையே தனது மதிப்பை இழந்து மூட நம்பிக்கையாகக் கருதப் படுகின்றது.

இக்குறையினைக் களையத் திறன் சார்ந்த சிந்தனையாளர்கள் இத்துறைக்கு வருவதே இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற எம் விழைவு கூறி முடிக்கிறோம். மேலும், விரிவான விளக்கங்கள் எமது “காஸ்மிக் கதிர்களும் கடுவெளிச் சித்தரும்” எனும் நூலில் காண்க.

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

வெளியீடு: க

ஆதி. சங்கரன்

திருவள்ளுவராண்டு 2039 கும்பம் திங்கள்

ஆயிரம் படிகள்

அச்சீடு :ஒளவை அச்சகம், மங்கலபுரம், மாத்தூர் அஞ்சல்-631701பேசி: 9443176764

கிடைக்குமிடம் :கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை, வேளியநல்லூர்,சேயாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.பேசி: 9245712491

பத்து உருவா.

http://aaseevagappalli.blogspot.in/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !

உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !அது இறையம்சல்லவா !
நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ! ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !

நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!

கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் !

இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் ! நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !

ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் ! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!

நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் ! சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் !

எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே !

சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !

“ஊனமர்ந்தோரை உணர்வது தானே”
இறைவன் மனித தேகத்தில் “ஊன்” கண்ணில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என்பதை உணர வேண்டும். இம்மானிட பிறவி எடுத்ததன் பயன் இதுவே.

“சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவதறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித் தவரைப் பிதற்று கின்றாரே”

எல்லாம் வல்ல இறைவன் பேரொளி . அதன் ஒரு சிறு சோதியானது மூன்று நிலையாகி சூரிய சந்திர அக்னியாகி முச்சுடராகி விளங்குகிறது. ஐந்து பூதங்களும் இணைந்து ஒரு சேர நின்ற கண்களில் துலங்குகிறது.

மூன்றும் ஐந்தும் எட்டு ‘அ’ என்றும் கண்ணாக நிற்கிறது. ஆதிக்கண் என்றது நாம். நம் தாயின் கருவில் உருவாகும்போது இறைவனால் அருளப்பட்ட ஜீவனைக் குறிப்பதாகும். இரு கண் மூலமாகவே ஆதிகன்னான ஜீவனை அடைய முடியும். பாவாத்மாக்கள் இந்த உண்மையை சொன்னாலும் புரிந்து கொள்ளார். இறைவன் நம் உடலில் இங்ஙனம் குடி கொண்டிருக்க இது புரியாமல் சிவன் விஷ்ணு பிரம்மா என பலவாறு தெய்வங்களை கூறி பிதற்றுவார்கள்.

உடலினுள்ளே பார்க்காமல் உலகிலே தேடுவார்கள்.

நமது கண் ஒளியை பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆன்ம ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று விடும். இதுவே ஞான தவம். இப்படி செய்துதான் நாம் தூய்மையாகிதன் இறைவனை அடைய முடியும்.

நம் சிரசிலிருந்து ஒரு நாடி கீழே இறங்கி நமது தொண்டையில் உள்ள சிறிய நாக்கின் மேல் பகுதியில் அண்ணாக்கின் மேல் நின்று அங்கிருந்து இரு நரம்பாக பிறந்து இரு கண்களிலும் வந்து சேர்க்கிறது.

நாம் நம் கண்மணி ஒளிமூலம் தவம் செய்யும் போது இருகண்ணும் உள்ளே ஒன்றுசேரும் இடமே உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல. இதுவே நமது ஆத்மஸ்தானம். உயிர் இருக்குமிடம்.

“உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”

நமது உயிர் – பிராணன் – ஜீவன் – ஆத்மா இருக்கும் இடம் இதுவே.

இதற்க்கு வாசல் இரு கண்களே ஆகும் இதை அறிந்தால் தானே தவம் செய்ய முடியும். குருவடி தீட்ஷை பெற்று உணர்ந்து தவம் செய்து ஆத்மஜோதியை தரிசிக்கலாம்.


திருமந்திரத்தில் முதல் பாடலாக இங்கே வைக்க விரும்புவது 138 வது பாடல்தான்


பாடல் – 138

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.


இறைவன் திருவடியே நமது கண்கள்!


இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்


விளக்கம்

“திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”
மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.


எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி!

இதுதான் மெய்பொருள்!

“மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே”


திருவடியே கதி, திருவடியே சிவலோகம் மற்றும் திருவடியே சரணாகதி என்று சென்ற பாடலில் உள்ள பாடலை பார்த்தோம். மேலும் தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இதுதான் என்று சொல்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை இந்த திருவடியை பிடித்தால் மட்டும் போதும்

 



ஓம் எனும் மந்திரத்தில் ஓங்காரமாய் விற்றிருக்கும் இறைவா
யாகங்கள் வேண்டா வேத மந்திரமும் வேண்டா -இறை
உணர்வொன்றே போதுமே இறைவா உனை சரணடைய
அடியேன் உணர்வினை அன்போடு நீ அறிவாய் -உயிர்
தந்த இறைவா உயிரும் நீயே என் உணர்வும் நீயே -இவ்வுணர்வே
உனக்குரிய மந்திரமாய் ஒலிக்கட்டும் தொடராய் -தமிழ் வித்திட்ட
இறைவா பற்றற்றேன் பரமனை தேடி பற்றுற்றேன் உன் அன்பால்
இறைத்தமிழினை உயிரினும் மேலென கொண்டேனே -செயலற்று
செய்வதறியா துடித்ததே எம் இனம் வீழ கண்டும் -இன்றளவும்
உயிருள்ள சடலமாய் புவியினில் நிலைத்தேனே-முத்தமிழ் சங்கம்
வளர்த்த இறைவா -கண்டமாம் தென்னாட்டு குமரியும் வீழ்ந்தது -அதன்
எச்சமும் நிலையற்றத்தாய் இடம் தர மறுப்பதேன் ஏனோ - விதியென்பதொ
கயவரின் மதியென்பதொ இல்லை வினையென்பதொ நீ இருக்கையிலே
இறையே நீ அன்றி ஓர் அணுவும் அசையா -இன்று
நீ இருக்க தமிழ் வீழ கண்டீரோ ?-தமிழ் ஒன்றே மூச்சாகி
மானம் உயிரினும் மேலானதென கொண்டதன்றோ எம் இனம்
எப்பழி கொண்டனர் எம் இளம்தளிரும் இனமாந்தரும் - பரிதவித்து உயிர்
நிலையற்று விழ்த்தனரே அக்கொடுங்கோலனின் இன வன்மத்தினால்
கலியனில் பலிக்கொண்டதே தமிழ் இனம் -நாவலனின் பற்றும்
புறம் தள்ளியதே -தீந்தமிழ் எனும் சான்றோர் கூற்றும் பொய்த்துப்போனதோ
முறைதானோ எம் தலைவா ?
உன் அமைதிதனை போக்குவாய் உணர்வுதனை உணருவாய் இறைவா
ருத்திரம் வேண்டுமே உன் ரௌத்திரம் போதுமே
அறம் காக்க சினம் கொண்டு வா
வஞ்சனை புரிந்தோர் ஆழியில் அடங்கட்டும் அதன் சிகரங்கள் சிதறட்டும்
நோக்குவாய் தமிழ் இனத்தினை,போக்குவாய் அதன் துயரினை-புகுவிப்பாய்
இறைச்சார்ந்த அன்பினை,புணர்க்கொணர்வாய் எதிர்நோக்கும் விடியலை
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி உனை நோக்கி அன்புரைப்பேன்
இன விடியலை கண்டு
இனம் நமதே ....அதன் குணம் உனதே
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் உரிய இறைவா போற்றி! ...போற்றி !

இங்ஙனம்

தனயன்
லீ
539643_562147743815556_796392470_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.

விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.

பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-

1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.

2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.

3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.

5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.

6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.

7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.

8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.

இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.

 

Posted

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் - இது தமிழ் முதுமொழி

 

இதுதான் தமிழர் மதத்தின் அடிப்படை. வடிவிலா, உருவிலா இறைவனை கும்பிட்ட, தமிழர்களுக்கு - இறைவனுக்கென்று ஒரு வடிவத்தை ஏற்படுத்தி உருவ வழிபாடு செய்ய வழிநடத்தியதுதான் இந்து மதம். இந்த இந்து மத தாக்கத்தால்தான் நாம் இன்று சாதியாக பிரிந்து நிற்கிறோம். தமிழர்களாக இல்லாமல் சாதி வாரியாக தமிழர் பிரிந்து நிற்பதுதான் இந்து மதத்தின் சாதனை. ஏமாந்து நிற்பவன் தமிழன். அப்படியென்றால் இந்த இந்து மதம் நமக்கு தேவைதானா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

எனக்கு தமிழர் மதம் என்ற சொல் கவர்சிகரமானது அல்ல. அது அவசரப்பட்ட சொற்கோவை. நல்ல பதம் கிடைக்கும் வரை நான் இன்னமும் இந்து சமயத்தில் புகுந்த பிழையான பகுதியை அண்ணாத்துரையில் பதமான "புராண மதம்" என்ற சொற்கோவையைத்தான் பாவித்து வருகிறேன்.

 

சிந்து வெளியில் வாந்தவர்கள் தமிழரா அல்லது இன்று அருகில் இருக்கும் தெலுங்கர், கன்னடர், கேரளர் போன்ற தமிழோடு சேர்ந்த மொழி பேசியவர்களா தெரியாது. ஆனால் அங்கேதான்  சிவனின் உருவங்கள் 5000 -6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கபட்டிருந்தது கண்டு சிவனை அடையாளம் கண்டோம். அப்போது இந்த படங்களும் உருவங்களும் எதற்காக செய்தார்கள், வழிபட பாவிக்கவில்லையா என்றதை தெரியாமல் தமிழர் மதம் அருவக் கடவுளை கொண்டிருந்தது என்பது சரியான வாதம் இல்லை.

 

சிந்துவெளியை கண்டுபிடித்த மேற்கு நாட்டவர் இன்றைய பாணி கற்கோவில்களை அங்கே காணாததால் அது ஆஸ்திக நாகரீகம் என்றும், திராவிடர் ஆஸ்திகர் என்றும் முடிவுகட்டினார்கள். இது இன்றும் திராவிட பகுத்தறிவாளர்களிடம் இருக்கிறது. ஆனால் சிவனின் கழிமண் தட்டுக்களை விளங்கிக்கொண்டபின்னர் அது தவறு எனப்பட்டது. மேலும் சுமேரியர் போன்ற மற்ற இனத்தவருடன் தொடர்பில் இருந்த சிந்துவெளியார் தம்மிடம் கடவுள் இருக்க விட்டால் நிச்சயம் அவர்களிடம் இருந்து கொண்டுவந்திருப்பார்கள்.  

புலிகளின்காலத்தில் கிளிநொச்சியில் கண்டு பிடித்த 3000 ஆண்டு பழைய உருவங்களில்  தியானம் இருக்கும் பெண்கள் இருந்தார்கள். இது பார்வதியை, காளியை, கண்ணகியை குறிப்பனவாகத்தான் இருக்க வேண்டும். அவ்வளவு சிரமம் எடுத்து சாதாரண தியானப்பெண் சிலையை கலை நோகத்துக்கு மட்டுமாக செய்த்திருந்தார்கள் என்றால் அது நம்ப முடியாதது. தமிழர் மட்டும்தான் கடவுள் அருவமுமாக, உருவமாக இருக்கக் கூடியவர் என்பதை அறிந்திருந்தார்கள். தியானத்துக்கு உருவங்கள் அத்திய அவசியமானவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆதி காலத்தில் அதாவது சங்ககாலத்தில் அல்லது அதற்கு முன்பு கடவுள் அருவமாகவே எண்ணப்பட்டார் என்பது என் கருத்து. சாமானியர்களுக்கு அது புரியவில்லையாதலால் பிற்காலத்தில் உருவம் நுழைந்திருக்கலாம். அதுவும் வெளித்தொடர்புகளால் வந்ததா? அல்லது தமிழர்களின் படைப்பா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது.

 

தியானத்துக்கு உருவங்கள் அத்திய அவசியமானவை.- இது உங்கள் கருத்து, ஆனால் உருவங்கள் தேவையில்லை என பல யோகிகள் குறிப்பிடுகிறார்கள். அகத்தியரும், திருமூலரும் எடுத்துக்காட்டுக்கள். உலகிலுள்ள இரு தன்மைகளை புரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்டதுதான் ஆண்-சிவன், பெண்-சக்தி.

 

அவற்றிற்கு உருவம் கொடுத்து, சடங்காசாரங்களை மட்டும் புனைந்து, கதைகளை ஏற்படுத்தியதால் கெட்டது என்ன? இவற்றின் உள் அர்த்தங்கள்.

 

உருவத்திலுள்ள நன்மை என்ன? - எளிதாக அனைவரையும் சென்றடைகிறது.

 

இன்று உள் அர்த்தங்களை முற்றிலும் இழந்து நிற்கிறோம். ஒவ்வொன்றும் தமிழர்களின் அறிவுச்சொத்துக்கள்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன
.
 
இந்து என்பது மதம் அல்ல.தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு,கலை,அறிவியல்,மருத்துவம் நாகரீகம், வாழ்க்கைமுறை ஆகியவை ஆரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இவற்றிற்கு ஆரியர்கள் சூட்டிய பெயர் இந்து நாகரீகம்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
 
வேதங்களில் பறவைகளையும், விலங்குகளையும் தெய்வத்தன்மை வாய்ந்ததாக சொல்லும் கருத்துகள் ஆரம்ப காலத்தில் இல்லை. வேதகாலமானது முடிவுக்கு வரும் நேரத்திலேயே அவைகளை புனிதமானதாக கருதும் நிலை எற்பட்டுள்ளது. அதாவது ஆரம்பகால வேத பாடல்களில் பசுவை... புனிதமாக கருதக்கூடிய எந்த குறிப்பும் இல்லாததை இதற்கு உதாரணமாக சொல்லலாம். சிவனுக்கு எருதுவும் துர்க்கைக்கு சிங்கமும் விஷ்ணுவுக்கு கருடனும் பிரம்மனுக்கு அன்னமும் பிற்காலத்திலேயே வாகனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது எப்படி ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும்.

மனிதன் தவிர மற்ற உயிரனங்களும் தெய்வ தன்மையை தங்களோடு வைத்திருப்பதை சிந்து வழி மக்கள் நம்பி பறவைகளையும் விலங்குகளையும் வழிபட்டு இருக்கிறார்கள். இந்த வழிபாடானது திடீரென்று அவர்களுக்கு தோன்றியதாக இருக்க வாய்ப்பில்லை. பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நம்பி வந்ததையே தங்களது பழக்கத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

சிந்து பகுதி மண் மேடான பிறகு அதிலிருந்து தப்பி பிழைத்த சில மக்கள் கங்கையோரத்தில் குடியேறியிருக்க வேண்டும். பிற்காலத்தில் கங்கை நதி புறத்தில் வேத நாகரீகம் பரவிய போது இந்த மக்களின் வழிபாட்டிலுள்ள கவர்ச்சி மிக்க இந்த அம்சம் வேத விற்பன்னர்களை ஈர்த்து வேதங்களில் இவைகளை பற்றிய குறிப்புகளை ஏற்றியிருக்க வேண்டும். அப்படித்தான் வேதத்தின் கடைசி காலத்தில் இவைகள் வந்திருக்க வேண்டுமே தவிர ஆதியிலிருந்து இம்முறை இருந்ததற்கான வாய்ப்பில்லை.

வேதங்களில் பானிகள் என்று ஒரு புலத்தினர் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் வணிகர்கள் என்று காட்டப்படுகிறார்கள். இப்பானி மக்கள் வட்டி தொழிலை மேற்கொண்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன. மேலும் இவர்கள் புதிதான ஒரு வழிபாட்டு முறையை கடைபிடித்ததாகவும் அந்த முறை வேதமுறைக்கு முரணானதாக இருந்ததாகவும் இதனால் வேத நெறி நிற்பவர்களுக்கும் இந்த புலத்தாரருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் க் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இந்த பானிமக்களே சிந்து வழி மக்களாக இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுடன் ஏற்பட்ட பகைமையை பெரிதாகக் கொள்ளாமல் இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் பொருந்திய வழிபாட்டு முறைகளை வேதங்கள் சுவிகாரம் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.

சிந்துவெளி நாகரீகத்தில் மட்டுமல்ல அதற்கும் முந்தைய காலத்திலும் மதம் இந்த நாட்டில் இருந்துள்ளது பல சர்ச்சைகள் இருந்தாலும் சிந்து நாகரீக காலத்தை கி.மு. 5000 க்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே அதாவது கி.மு. 9000 ஆண்டிலேயே விநாயகரை - யானை உருவை வழிபடும் வழக்கம் மக்கள் மத்தியில் இருந்துள்ளது சிந்துமாநிலத்திற்கு அறுகிலுள்ள நௌஸர் என்னும்இடத்தில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை 1992 ஆண்டு கண்டெடுக்கப்பட்டது இந்த சிலைக்கு இன்றைய வயது 11 ஆயிரம் வருஷம் மட்டும் தான் இபிகே7712 என பெயர் சுட்டப்பட்ட இந்த விநாயகர் உருவம் தற்போது பாகிஸ்த்தான் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது

வேதங்களில் உள்ள சிறப்பான அம்சமே எந்த வகையிலாவது நல்லவற்றை எடுத்து கொள்வதே ஆகும். ஆரம்பகால வேத சுலோகங்கள் ருத்ரனை மூலமூர்த்தியாக கருதியது கிடையாது ஆனால் சிந்து வழி மக்களிடமிருந்து பசுபதியை சுவிகரித்துக் கொண்டவுடன் வேதக்கடவுளான ருத்ரனின் நிலையை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் வேதங்களால் பசுபதி போற்றப்படுகிறார். யோக முத்திரைகளும் பெண் தெய்வ வழிபாடும் மரம், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் மேன்மைகளும் அப்படியே வெளியிலிருந்துதான் வேதத்திற்குள் அழைத்துவரப் பட்டிருக்கின்றன அவைகள் தான் இந்து மதத்தின் ஆதிகூறுகள் ஆகும்
601474_300985506693978_181082583_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.

இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்

 

’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.
சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.
சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.
‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)
ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)
சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.
அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.
இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.
ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.

 
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள்!

=======================================

இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும்,

இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே

இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு

விலகவே முடியாது.

மதப் பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது. தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது

எனவே இந்து மதத்தினின்றும் மதப்பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய

அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும்.

ஆகவே தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு நோக்கம்,

கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும்

உணர்தல் வேண்டும்

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி,தலை வகிட்டில்

குங்குமம் இடுகின்றனரே? இதற்கு சமய விளக்கம் ஏதேனும்

உண்டா? இந்தப் பழக்கம் ஏதோ அந்நிய வரவாக

உணர்கிறேன். விளக்கம் தேவை

தெளிவு :

முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் நெற்றியில் அரத்தத்தைக்(இரத்தம்) கொண்டு வீரத்திலகமிடுவது தமிழர்களின் பண்பாடாகும். பிற்காலத்தில் அம்மை வழிபாடு தோன்றியப் பிறகு போருக்குப் போகும் வீரர்கள் வெற்றியை வேண்டி அம்மனை வழிபட்டு போருக்குச் சென்றனர். வீரத்திலகமிடும் மரபு ஏற்கெனவே இருந்துள்ளதால் இப்போது அம்மனை வழிபட்டு அரத்தத்திற்கு(இரத்தம்) பதில் குங்குமத்தால் திலகமிட்டுச் சென்றுள்ளனர். இதுவே, பின்னாளில் சமய மரபாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், நெற்றியில் குங்குமம் இடுவதுதான் தமிழர்களிடம் இருந்துள்ளது. தலை வகிட்டில் இடுவது தமிழர்களிடம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. இந்தப் பண்பாடு வடவர்களுக்கே உரியதாகத் தெரிகிறது. பண்பாடு அறியாத இன்றையப் பெண்கள் நமது பண்பாடு என்று நினைத்து ஆரியப் பண்பாட்டை பின்பற்றுவதும் போற்றி புகழ்வதும் நகைப்பிற்கிடமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மட்டிலும் தலை வகிட்டில் குங்குமம் இடுவது நமது பண்பாடு அல்ல. இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாம். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்மொழி சித்தர் மொழி; தமிழர் நெறி சித்தநெறி.

தமிழ் மொழி சித்தர்கள் மொழி. சித்தர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் அவர்களாலேயே வளர்கப்பட்டு வருகின்றது. முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களின் உயர்மொழி தமிழ். ஆதாலால், அது ஞானமொழியென்றும், மலங்கள்(கசடு/குறை) நீங்கிய அமுதமொழியென்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு திருச்சி, துறையூர் ஓங்காரக் குடில் சான்று பகரும்.

"கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே

வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"

“கல் தோன்றி மன் தோன்றாக் கால மூத்தகுடி” இந்தக் கூற்றை பலரும் தவறாக கல்லும் மண்ணும் தோன்றாக் காலமென்கின்றனர். ஆனால், "கல் தோன்றி" அஃதாவது கல்விமுறைகள் தோற்றம் கொண்ட, "மன் தோன்றா" அஃதாவது ஆட்சிமுறைகள்(மன்னராட்சி) தோன்றாக் காலத்தில், "வாளோடு" அஃதாவது வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். உலகத்தில் தோன்றிய மூத்தமொழி தமிழ் என்பதே இதன் விளக்கம். உலகமொழிகளுக்கே தாய்மொழி.

தமிழர்நெறி சித்தநெறியே யன்றி இந்துத்துவமல்ல. உலக அறங்களுக்கு மூத்தது சித்தநெறி. இந்து என்பது சமயமோ மார்க்கமோ மதமோவல்ல. அது ஓர் நாகரீகம். சிந்துவெளி நாகரீகமே காலப்போக்கில் திரிந்து இந்து என்றாகிவிட்டது.

நன்றி - tamilcause

1009932_1391938931018085_2036776475_n.jp

 

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற

தாதை – பரமசிவனும்

தாத – பிரமனும்

துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய

தா – இடத்தையும்

தித – நிலைபெற்று

தத்து – ததும்புகின்ற

அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி – தயிரானது

தித்தித்ததே – தித்திக்கின்றதென்று

து – உண்ட கண்ணனும்

துதித்து – துதி செய்து வணங்குகின்ற

இதத்து – பேரின்ப சொரூபியான

ஆதி – முதல்வனே!

தத்தத்து – தந்தத்தையுடைய

அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத – தொண்டனே!

தீதே – தீமையே

துதை – நெருங்கிய

தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து – மரணத்தோடும்

உதி – ஜனனத்தோடும்

தத்தும் – பல தத்துக்களோடும்

அத்து – இசைவுற்றதுமான

அத்தி – எலும்புகளை மூடிய

தித்தி – பையாகிய இவ்வுடல்

தீ – அக்கினியினால்

தீ – தகிக்கப்படுகின்ற

திதி – அந்நாளிலே

துதி – உன்னைத் துதிக்கும்

தீ – புத்தி

தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

via தமிழோலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
வாழ்வியல்:

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

Visit our Page -► தமிழால் இணைவோம்
943202_620852281266359_1716061698_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வேதாந்தம் என்பதெல்லாம் வெறும் தத்துவம், தற்போதைய வாழ்க்கை முறைகளுக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று சொல்பவர்கள் ஒருபகுதி. சித்தர்கள் நெறிமுறைகளெல்லாம் கடினமானவை. அந்த வழியில் சொல்வது என்பது தற்போதைய நடப்பு யுகமான கலியுகத்திற்கு உகந்ததல்ல. அவர்களே கலியுகத்தை வெறுத்து இமயமலையில் எங்கோ சமாதி நிலையில் இருக்கிறார்கள் என்று சித்தர்கள் நெறியையும் குறை கூறி வருபவர்பகள் ஒரு பகுதி. இப்படி பலப்பல கருத்துக்களைச் சொல்லி மக்களை குழப்புபவர்களே பெரும் பகுதி. பொதுவாக மனிதன் உணர்வு மயமானவன். உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுபவன். இந்த உணர்வு என்பது சாட்சிப் பொருளான ஆன்மாவுக்கு உரியது. இந்த உணர்வு பிரகிருதியான இயற்கைக்கு முற்றிலும் வேறுபட்டது என்றே யோக நூல்கள் கூறுகின்றன. பிரகிருதியை செயல்படுத்தும் சக்தியே பிராணன். அதுவே நம்மையும் இயக்குகிறது. நாம் இந்த உணர்வுகளால் பிராண சக்தியை வெகுவாக இழந்து விடுகிறோம். எனவே இதற்குக் காரணமாக விளங்கும் மனதை செம்மைப்படுத்துவதன் மூலமாக பிராண சக்தியை இழக்காமல், ஆன்மிகத்தில் மேன்மையடையலாம் என்றே யோக சூத்திரம் சொல்கிறது. அதற்கான வழிமுறைகளையே வேதாந்தம், சித்தாந்தம், யோக சூத்திரம் எல்லாம் சொல்கின்றன.

இந்த பிராண சக்தியே குண்டலினி சக்தியாக ஒவ்வொருவர் உடலிலும் உறங்குவது போல இருந்து கொண்டு இயக்குவதாகச் சொல்வார்கள். பரந்தாமன் உறங்குவது போல விழித்திருக்கிறார் அல்லவா ? பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தை எடுத்துக் கொண்டால், மனதையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி விளக்கி, அதை நெறிப்படுத்தி யோகத்தில் மேன்மையடைவதைப் பற்றி சொல்லியிருக்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட குண்டலினியைப் பற்றியோ, நாடிகளைப் பற்றியோ குறிப்பிடவே இல்லை. உபநிடதங்களோ, கீதையோ குண்டலினியைப் பற்றி குறிப்பிடவில்லை. அதனால் குண்டலினி இல்லை என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு வந்த சித்தர்கள் அதைக் குறித்து ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து அந்த குண்டலினி யோகப் பயிற்சியைத் தந்திருக்கிறார்கள். ஆக இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். குண்டலினி, மூன்று நாடிகள் எல்லாமே நம் மனதை அறிந்து கொள்ள உதவும் எத்தனையோ வழிமுறைகளில் ஒன்று அவ்வளவுதான். மனதின் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ளவும், அதை நெறிப்படுத்தவும் இன்னும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. எதுவும் ஒன்றுக்கொன்று குறைந்தவைகளல்ல.

வெவ்வேறாக இருந்தாலும் எல்லாம் ஒரே நோக்கத்தை உடையவை. மனிதர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் எவ்வளவோ வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடைய முன்னேற்றத்திற்கும், சாதனைகளுக்கும் ஒரே வழியாகப் பொதுவாகக் காட்ட முடியாது. வெவ்வேறு இயல்புடையவர்களுக்கும் விதவிதமான வழிபாடும், சாதனைகளும் வேண்டியதிருக்கின்றது. இதைத்தான் ''உத்தமோ ப்ரம்மஸத்பாவோ
த்யானபாவஸ்து மத்யம;
ஸ்துதிர்ஜபோ அதமோ பாவோ
பாஹ்ய பூஜா அதமாதம;''
என்று முன்னோர்கள் சொல்கிறார்கள். அதாவது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான ப்ரம்மத்தை அறிந்து, உணர்ந்து அதனோடு இணைந்து சமாதியில் இருப்பது எல்லாவற்றிலும் மேன்மையானது. அதற்கு அடுத்ததாக உள்ள சாதனையில் நான், இறைவன் என்ற இரண்டே பேர்தான். அதுவே த்யானம். அதிலே ஜபம், தபம் எல்லாம் நின்றுவிடும். குறிப்பிட்ட உருவம் மட்டுமே காணப்படும். இது இடைத்தர சாதனை. அதற்கும் கீழான சாதனை ஜபமும் துதி செய்தலும். ஜபம் செய்து கொண்டே இறைவனின் உருவத்தையோ, லீலைகளையோ சிந்தித்தபடி இருப்பது. அதனினும் கீழான சாதனை புறவழிபாடு. அதாவது விக்ரக வழிபாடு, பூஜைகள் எல்லாம். இதிலே கீழே, மேலே என்று சொல்வதெல்லாம் மனதின் படைப்புகளே. இவைகள் எல்லாமே முறையாக மேன்மையடைய உதவும் படித்தரங்கள்.

யாருடைய மனம் எந்தத் படியில் இருக்கிறதோ அங்கிருந்து சாதனையை ஆரம்பித்து முன்னேறிச் சொல்லவேண்டும். ஒரு சாதாரண மனிதனிடம் போய் சமாதியைப் பற்றி உபதேஷித்தால் அவனுக்கு ஒன்றும் பிடிபடாது. ஏதோ சொல்கிறாரே என்று முயற்சி செய்து சில நாட்களில் விட்டு விடுவான். ஆனால் அதே மனிதனிடம் வில்வம், பூ இவற்றையெல்லாம் வைத்து பூஜை செய்யச் சொன்னால், அதை திருப்தியாகச் செய்து வருவான். அவன் மனம் கொஞ்ச நேரமாவது நிலைத்து நிற்கும். அவனுக்கு ஒரு விதமான ஆனந்தமும் ஏற்படும். அப்போது அவன் அடுத்த படியைப் பற்றி சிந்திப்பான். அதுதான் மனிதனின் இயல்பு. ஜெபம் செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமே என்று எண்ணி ஜெபம் செய்ய ஆரம்பிப்பான். பின்னர் தியானம் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று மனதில் தோன்றும். அப்போது பார்த்தால் தியானம் செய்வதிலேயே விருப்பம் இருக்கும். இப்படி மனிதன் தன் குறிக்கோளை நோக்கி முன்னேறியபடியே இருக்கிறான். இதைத்தான் முறையான முன்னேற்றம் என்பார்கள். இவ்வழியில் மனம் அடையும் முன்னேற்றம் ஒருபோதும் மறைவதில்லை. அது மனதில் பதிந்து, படிந்துவிடும்.

எனவே குண்டலினி என்பது மேன்மை அடைந்த அனைவருக்கும் விழித்தெழுவதே. அது தூய பக்தி உள்ளவர்களுக்கும் விழித்தெழும், சற்குருவின் கருணையாலும் விழித்தெழும், தத்துவ ஞான ஆராய்ச்சியாலும் கூட விழிப்படையும். அசாதாரணமான ஆற்றலோ, ஞானமோ ஒருவரிடம் காணப் பெற்றால், அவருக்கு குண்டலினியின் விழிப்பு ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். சிறிது சக்தி சுழுமுனை வழியாகச் சென்றிருக்கிறது என்று கொள்ளலாம். பெரும்பான்மையான சாதகர்களுக்கோ, யோகிகளுக்கோ, மகான்களுக்கோ குண்டலினி விழித்தெழுதல் என்கிற நிகழ்வு அவர்கள் அறியாமலேயே நடக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். எனவே முதல் படியிலிருந்து முறையாகவே செல்பவர்களும் மேன்மையடைவார்கள் என்பதில் சந்தேம் இல்லை. ஆனால், வைராக்யமும், விடாமுயற்சியும், ஆர்வமும் மிகமிக அவசியம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

“உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம்" என்பது சித்தர் பெருமகனார், ஆசான் திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர்.

மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

விரதத்தின் பலன்கள்

விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

உடல் உறுப்புக்கள் தூய்மை

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

இளமை பாதுகாக்கப்படும்

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

மாரடைப்பு தடுக்கப்படும்

வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

விரத்தை யார் தவிர்க்க வேண்டும்?

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

via Nirosha Naren

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
 
10189_204871959667476_244419142_n.jpg

பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே ? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா ? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன ?
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ?
என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
Posted

இந்து, சைவ சமயத்தை வளப்படுத்தும் உங்கள் எதிர்மறை முயற்சிக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.