Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுபலசேனா எமலோகத்தில் காரியாலயம் திறந்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும்அஞ்சப்போவதில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனா அமைப்பினர் எமலோகத்தில் காரியாலயம் திறந்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும்அஞ்சப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படுகின்ற கல்முனை பிரதேசத்தில் பொதுபலசேனாவின் காரியாலயத்தினை அமைக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறான இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும், பொதுபலசேனா அமைப்பு ஒரு அரசாங்கமல்ல இவர்கள் எமலோகத்தில் அலுவலகம் திறந்தாலும் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு பௌத்த தர்மத்தை நேசிக்கின்றவர்கள் என்றால் 30 வருட கால கொடிய யுத்தத்தினால் இந்நாடு படுமோசமாக அழிவடைந்தது மட்டுமல்லாது பல உயிர்களையும் பலிகொண்டது.

இன்று யுத்தம் முடிவடைந்த பின் மக்கள் சுதந்திர காற்றினை சுவாசிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் கீழ்தர செயற்பாடுகளில் ஈடுபடாமல் இன மத பேதங்களை மறந்து இந்நாட்டை முன்னேற்றுவதற்கு ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். மாறாக மதத்தின் பெயரால் இந்நாட்டை பிளவுபடுத்துகின்ற எந்த செயற்பாட்டிலுல் யாரும் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

அமெரிக்காவின் பொஸ்டன் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தினை பயங்கரவாத செயற்பாடல்ல என ஒபாமா கூறுகிறார். ஆனால் பொதுபலசேனா அமைப்பினர்கள் அமெரிக்காவுக்கு அறிவுரை கூறுகிறார்கள் இது அல்கைதா, ஜிஹாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடு. மேலும் இம் அமைப்புக்கள் இலங்கை மற்றும் வங்காளதேஸம் ஆகிய நாடுகளில் செயற்படுகின்றது.

இவ் அமைப்பின் செயற்பாட்டுக்கு இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஆதரவு வழங்கி வருகின்றது என குறிப்பிட்டதானது முஸ்லிம்கள் மீது இவ்அமைப்பு கொண்டுள்ள காழ்புணர்ச்சியை காட்டுவது மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு கலங்கத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளையும், முஸ்லிம்களின் மதிப்புமிக்க அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினை அர்த்தமில்லாமல் மதிகெட்ட தனமாக விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும்.

குறுகிய சிந்தனைகளை கொண்டு செயற்படும் இவ் அமைப்பின் நடவடிக்கையினால் பெரும்பான்மை கண்ணியத்துக்குரிய பௌத்த மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், மற்றும் புத்தீஜீவிகள் கவலைகள் தெரிவிப்பதுடன் வெட்கித் தலைகுனிகின்றார்கள்.

சர்வதேசத்தின் சதிவலையில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்துதவியதை இவர்கள் மறந்துவிட்டார்களா? அப்போது இவ் பொதுபலசேனா அமைப்பு எங்கே சென்றிருந்தது. நாம் பொறுமையாகவும, நிதானமாகவும் செயற்படுகின்றோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மேலும் முஸ்லிம் சமூகம் பிளவுபடாமல் ஒன்றுபட்டு ஒரணியில் நின்று செயற்பட்டால் எந்தச் சக்தியாலும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதை மனதில் வைத்துச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=4140

இவர்களின் இருப்பிடம் நரகலோகம் என்றபடியால் இவர்கள் அஞ்சமாட்டார்கள். 

 

இவர் இலங்கை அரசின் ஊது குழல். அவருக்கு தெரியும் பொதுபல சேன என்றவர்கள் யார் என்பது. அவர் எய்தவன் இருக்க அம்பை நோகவில்லை. இவர்தா எய்தவன் தன்னை மறைக்க தேவையான போது அணியும் அபய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவளவு ஊதினாலும் .... பத்தாது ....

 

எல்லாரும் நல்லா படிச்சிட்டாங்க .... :lol: :lol:

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களை போன்று முஸ்லிம்களை வேட்டையாட முனைந்தால் அது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்: அசாத்சாலி

 

246007999asath-sali.jpg

தமிழ் மக்களை வேட்டையாடியது போன்று முஸ்லிம் மக்களை வேட்டையாட முனைந்தால் அது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி அரசாங்கத்திற்கும் பொதுபல சேனாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வட, கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அல்கொய்தா இயக்கம் இல்லை. எனவே தேவையற்ற பிரச்சினையை முஸ்லிம் மக்கள் மீது சுமத்த வேண்டாம்.

தமிழர்களை வேட்டையாடுவதை நிறுத்தியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வேட்டையை ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு எதிராக வேட்டை ஆரம்பமானால் அது மாறுபட்டதாகவே அமையும். அதன் பின் விளைவுகளும் பாரதூரமானதாகவே இருக்கும் என்பதை அரசாங்கத்திற்கும் பொதுபலசேனாவிற்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.