Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற அனுமதியோம்! – சுமந்திரன்

Featured Replies

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற அனுமதியோம்! – சுமந்திரன்
dcf269d6-222f-4c04-8b33-2e8d21436eeb1.jp

யாழ். வலி. வடக்கில் தமிழ் மக்களது 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து, இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக தொடர் போராட்டங்களையும் நடத்துவோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இராணுவத்தினர் வடக்கில் அபகரிக்கும் காணிகளில், இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற நாம் இடமளிக்க மாட்டோம். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'அதிகாரத்தைப் பகிர்ந்து  நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கூட்டு ஒப்பந்தத்தை மீளப்பெறும்வரை போராட்டம் 

'தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களின் பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்த இரகசியம் என்ன என்பது எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொட்டகலையில் நடத்திய ஜனநாயகப் போராட்டம்மீது அரசு வழமைபோல காடையர்களை அனுப்பித் தாக்கியது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை மீளப்பெறும்வரை நாம் தொடர்ந்தும் போராடுவோம்.

ஜனநாயக விரோத செயல்

மின் கட்டண அதிகரிப்பானது சாதாரண மக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கின்றது. ஆனால் இது குறித்து சரியான விளக்கம் அளிக்கவோ அல்லது இந்தப் பிரச்சினையை முகாமைத்துவம் செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மின் கட்டண உயர்வு குறித்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதமொன்றைக் கோர, நாடாளுமன்ற அமர்வுகளை அரசு ஒத்திவைத்தது. இது ஜனநாயக விரோத செயலாகும்.

காணி அபகரிப்பு

யாழ். வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 400 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவின்கீழ் இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. கடந்த 26 வருடங்களாக தமிழ் மக்கள் தமது காணிகளில் மீள்குடியேற முடியாதுள்ளனர். அவர்களை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்துமாறு உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ளது.

அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூனுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கையில், 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் குறித்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார். ஆனால் இவற்றை மீறி, வடக்கில் காணி அபகரிப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தக் காணி அபகரிப்புக்கு எதிராக இன்று (நேற்று) வடக்கில் போராட்டம் நடத்தப்படுகிறது. எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

இராணுவத்தினர் வடக்கில் அபகரிக்கும் காணிகளில், இராணுவக் குடும்பத்தையும், வேறு மக்களையும் குடியேற்றத் திட்டமிடப்படுகிறது. இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=dcf269d6-222f-4c04-8b33-2e8d21436eeb

  • கருத்துக்கள உறவுகள்

வெல்க ..சுமந்திரன்...கன நாளைக்கு பிறகு....கூட உணற்சி வசப்பட்டிருக்கிறார்..வழி விடுங்க...

வெல்க ..சுமந்திரன்...கன நாளைக்கு பிறகு....கூட உணற்சி வசப்பட்டிருக்கிறார்..வழி விடுங்க...

ஏற்கனவே போடப்பட்டிருந்த வழக்கை விலக்கி, சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு போதிய நேரம் கொடுக்கவேண்டும் என்று தன்னிச்சையாக அறிக்கைகள் விட்டு  காணி அபகரிப்புக்கு வழி செய்தவரே இந்த சுமந்திரன் தானே!

பார்ப்போம் இப்போ என்ன செய்யப் போகிறார் என்று?

 நாய்கள்  குலைத்து   ஒன்றுமே  ஆகபோவதில்லை .

யாழ். வலி. வடக்கில் தமிழ் மக்களது 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து, இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக தொடர் போராட்டங்களையும் நடத்துவோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து ஸ்ரீலங்கா அரசின் திட்டத்தை தகர்த்தெறிய உங்கள் மூளைவளத்தை உபயோகித்தால் எதிர்கால சந்ததி உங்களை போற்றும்.

இனியும் கண் மூடி  இருக்கமுடியாத அளவுக்கு சிங்களம் தேர்தலுக்கு முன்பாக அதிக வலைவிரிப்புக்களையும் ஆக்கிரமிப்புக்களையும் செய்ய முயல்கிறது. எனவே இவர்களது போராட்டம் தவிர்க்கமுடியாதது. இல்லாதுவிட்டால் தமிழ் மக்களால் மன்னிக்கப்படமுடியாதவர்கள் விரிசையில் வரவேண்டியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.