Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் விழுந்த அந்த பெரிய கல் கடலில் மிதந்தது.

அதே இனத்தினச் சேர்ந்த சிறு கற்களினை அக்கடலில் எறியும் போது அக்கற்கள் மிதக்கவில்லை. கடலில் மிதந்த அந்தப் பெரிய கல் ஆபூர்வ சத்தி வாய்ந்ததாக அவர்கள் சொன்னார்கள்

உதே மாதிரி ஈழத்தில் நிலாவரைக்கிணறும் அதிசயம் என்று சொல்வதுண்டு. வரப்போகும் ஈழத்தில், சுற்றுலா செல்பவர்களுக்கு நிலாவரைக் கிணற்றையும் காட்டலாம் தானே

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதே மாதிரி ஈழத்தில் நிலாவரைக்கிணறும் அதிசயம் என்று சொல்வதுண்டு. வரப்போகும் ஈழத்தில், சுற்றுலா செல்பவர்களுக்கு நிலாவரைக் கிணற்றையும் காட்டலாம் தானே

உங்களைதான் சுற்றுலாத் துறை அமைச்சராக்கிறது.

  • தொடங்கியவர்

59 கிலோ நிறை உள்ள அந்தக்கல் சுவாசிக்கும் தன்மை உடையது என்று(????) சொன்ன அவர்கள், பிறகு கடலில் மீன்களுக்கு உணவு வீச பல மீன்கள் அவ்வுணவை உண்டன.

p3050145un0.jpg

p3050147ug3.jpg

  • தொடங்கியவர்

அதன்பிறகு நாங்கள் ஒன்றையடிப்பாதையினூடாக நடக்க அங்கே நாங்கள் வந்த வாகனம் இருந்தது. வாகன ஒட்டி படகில் வரவில்லை. அவர் வேறு பாதையினால் இவ்விடத்துக்கு வந்தார். ஏற்கனவே விபரித்த 59 கிலோ கல்லுள்ள அமைந்துள்ள மிகவும் பெரிய காணி அந்த வாகன ஒட்டியின் குடும்பத்தாருடையது. வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் போர் தந்திரங்களுக்கான சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது.இக்கிராமம் ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்
efatemapsg1.gif
  • தொடங்கியவர்

பெரும்பாலான வனு-அற்று மக்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்து, அதில் கிடைக்கும் உணவினையும், மீன்பிடித்து கிடைக்கும் உணவினையும் உண்கிறார்கள். உண்டபின்பு மர நிழலில் பாய்களினை விரித்துப்படுக்கச் சென்று விடுவார்கள். சிலர் மர நிழலில் இருந்து அரட்டை அடிப்பார்கள். சிலர் கடலிலும், குளம் குட்டைகளிலும் நீந்தியும், குளித்துக்கொண்டும் இருப்பார்கள். வேறு வேலைகளுக்குப் போவதில்லை. உணவு தேடுவதும், உண்டபின் கவலையற்று, மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதினைப் போக்காட்டுவார்கள். மற்றைய நாட்டு மக்கள் அதிகமாக ஆசைப்பட்டு பணத்தினைத் தேட நாள் பூராவும் உழைக்கிறார்கள். கடைசியில் காசு வரும். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி வராது. ஆனால் வனு-அற்று மக்களில் பலர் பணத்தின் மேல் அதிக ஆசைப்பட்டவர்கள் அல்ல. இருப்பதினைக் கொண்டு சந்தோசமாக வாழ்பவர்கள்.உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடாக பி.பி.ஸியினால் (கருத்துக் கணிப்பின் போது) வனு-அற்று நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் வாகனத்தில் செல்லும் போது, எங்களைக் கண்டதும் எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கைகாட்டி வரவேற்பார்கள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வாகனத்தில் ஈவேட் தீவின் தென் கிழக்குப் பகுதியினூடாகச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

மக்கள் மரங்களின் அடியில் படுத்திருந்து கதைப்பதினை இப்படத்தில் காணலாம்

p3050159be8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வாகனத்தில் செல்லும் போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்து மகிழ்ச்சியில் எங்களுக்கு கை காட்டும் வனு-அற்று மக்களில் சிலர்

p3050160la4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அதன்பிறகு நாங்கள் ஒன்றையடிப்பாதையினூடாக நடக்க அங்கே நாங்கள் வந்த வாகனம் இருந்தது. வாகன ஒட்டி படகில் வரவில்லை. அவர் வேறு பாதையினால் இவ்விடத்துக்கு வந்தார். ஏற்கனவே விபரித்த 59 கிலோ கல்லுள்ள அமைந்துள்ள மிகவும் பெரிய காணி அந்த வாகன ஒட்டியின் குடும்பத்தாருடையது. வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் போர் தந்திரங்களுக்கான சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது.இக்கிராமம் ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

உப்பிடித்தான் பிரித்தானியர் ஈழத்தில் ஆண்டபோது யாழ்ப்பாணம் குப்பிளானில் உள்ள தோட்டங்களினைப் பார்த்து நன்றாக இருப்பதினால் 'Good Plan' என்று ஆங்கிலத்தில் சொல்ல, அதன் பிறகு அந்த இடத்துக்கு 'குப்பிளான்' என்று பெயர் வந்ததாகச் சிலர் சொல்வது உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

வாகனத்தில் செல்லும் போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்து மகிழ்ச்சியில் எங்களுக்கு கை காட்டும் வனு-அற்று மக்களில் சிலர்

p3050160la4.jpg

உப்பிடித்தான் ஈழத்திலை 87லை நாங்கள் கை காட்டி வரவேற்க, வந்தவர்கள் எங்களைக் கொன்று குவித்தது யாபகத்துக்கு வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் பிரித்தானியர் ஈழத்தில் ஆண்டபோது யாழ்ப்பாணம் குப்பிளானில் உள்ள தோட்டங்களினைப் பார்த்து நன்றாக இருப்பதினால் 'Good Plan' என்று ஆங்கிலத்தில் சொல்ல, அதன் பிறகு அந்த இடத்துக்கு 'குப்பிளான்' என்று பெயர் வந்ததாகச் சிலர் சொல்வது உண்டு

இப்ப தான் எனக்கு விளங்கிச்சு ஆங்கிலத்தில் மேல் உங்களுக்கு இவ்வளவு கோபம் என்று

:P :P :P :P

  • தொடங்கியவர்

உப்பிடித்தான் பிரித்தானியர் ஈழத்தில் ஆண்டபோது யாழ்ப்பாணம் குப்பிளானில் உள்ள தோட்டங்களினைப் பார்த்து நன்றாக இருப்பதினால் 'Good Plan' என்று ஆங்கிலத்தில் சொல்ல, அதன் பிறகு அந்த இடத்துக்கு 'குப்பிளான்' என்று பெயர் வந்ததாகச் சிலர் சொல்வது உண்டு

குப்பிழாய் என்ற பூண்டு குவிந்து வளர்ந்தமையினால் 'குப்பிழான்' என்ற பெயர் வந்தது.

அரவிந்தன்...படங்களும் வர்ணனைகளும் வழமை போல் அருமை...நீங்கள் சொல்வது சரிதான் ஒரு நாளுக்கு 13 மணித்தியாலங்கள் உழைத்தாலும் உண்மையான மன அமைதி..சந்தோசம் கிடைப்பதில்லை..

:) ஒரு நாளைக்கு 13 மணித்தியாளம் உழைத்தால் எங்க மன நிம்மதி கிடைக்கும் ????

துயா நல்ல காசு வச்சிருகிறா போல துயா ஒரு 20000 டொலர் தாங்களன்???? :blink: :P

அதற்கென்ன சகோதரா..உங்களுக்கு இல்லாமலா?

அரவிந்தனின் படைப்பை குழப்ப வேண்டாம்...அரட்டைக்கு போவோம்

கந்தப்பு தாத்தாவும் ஒரு வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார் எது இதில சரியானது

:lol::lol:

  • தொடங்கியவர்

Efate தீவைச்சுற்றி வரும் போது நான் நெருப்பில் நடந்த சம்பவத்தினை ( http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=236145 ) முன்பு விபரித்திருந்தேன். மேலே இணைக்கப்பட்ட Efate தீவின் வரைபடத்தில் ( http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=248410 )வடபகுதியில் இருக்கிற சாமா Saama என்ற இடத்தில் தான் அந்த இடம் 'VETETAP FIREWALK' இருக்கிறது.

வரைபடத்தின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள Pang Pang என்ற இடத்தைப்பற்றி சொல்லியிருந்தேன். அதற்கு அடுத்ததாக உள்ள இடம் Forari. இங்கே உள்ள கண்ணிவெடி, இப்பொழுதும் அமெரிக்காவில் "Mile a Minute Vines"என்ற பகுதியில் காணலாம். இந்தக்கண்ணி வெடியினை 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் இந்த இடத்தில்(Forari) உபயோகித்தார்கள். இக்கண்ணிவெடி பச்சோந்தியினைப் போல உருவமாற்ற மடையக்கூடியது(Camouflage).

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

Forari க்கு அருகில் உள்ள ' Le Cresionaire Farm ' என்ற இடத்தினைக் கடந்து செல்லும் போது சிறிய நீர்வீழ்ச்சி(Mini Cascades) ஒன்று பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த நீர் நிலையில் குளித்துக் கொண்டு எங்களுக்கு கை காட்டிக் கொண்டிருப்பவர்களின் படத்தினைத் தான் ஏற்கனவே இணைத்திருந்தேன்.

வாகனத்தில் செல்லும் போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்து மகிழ்ச்சியில் எங்களுக்கு கை காட்டும் வனு-அற்று மக்களில் சிலர்

p3050160la4.jpg

  • தொடங்கியவர்

அடுத்து வருகிற கிராமம் 'Eton Village'. இங்கே உள்ள வீடுகளில் பெரும்பாலானவை வனு-அற்றில் கிடைக்கப்படும் மூங்கில்களினால் வேயப்பட்ட சுவர்களினை உடையதாகவும் , மேற்ப்பகுதி 'Natangoora' என்ற இடத்தில் செய்யப்பட்ட கூறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

wilderness2ue4.jpg

  • தொடங்கியவர்

வனு-அற்று மக்கள் மரத்தினால் செய்யப்பட்ட படகில் சில ஆறுகளில் பயணம் செய்கிறார்கள்.

vanuatucanoefh9.jpg

நானும் ஏற்கனவே இப்படகில் சென்றதினை விபரித்திருக்கிறேன். http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=243930

வீடு பார்க்க அழகாக இருக்கு...

  • தொடங்கியவர்

அடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தரப்பட்டன. நான் போன எல்லா இடங்களுக்கு பழங்கள் வெட்டி வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருக்கும். ஏனென்றால் வனு-ஆற்றில் இலையான்களின் தொல்லை அதிகம்.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தரப்பட்டன. நான் போன எல்லா இடங்களுக்கு பழங்கள் வெட்டி வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருக்கும். ஏனென்றால் வனு-ஆற்றில் இலையான்களின் தொல்லை அதிகம்.

ஏனுங்கோ குப்பிளானில இலையான் தொல்லை இல்லையோ பேர்த்தில என்ன தொல்லை இருக்குமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

:P :P :P :P

  • தொடங்கியவர்

கந்தப்பு தாத்தாவும் ஒரு வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார் எது இதில சரியானது

:lol::lol:

குப்பிழான் என்ற கிராமத்துக்கு பெயர் வந்ததற்கு கந்தப்பு சொன்ன காரணத்தினையும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வது உண்டு.

அரவிந்தன்...படங்களும் வர்ணனைகளும் வழமை போல் அருமை...நீங்கள் சொல்வது சரிதான் ஒரு நாளுக்கு 13 மணித்தியாலங்கள் உழைத்தாலும் உண்மையான மன அமைதி..சந்தோசம் கிடைப்பதில்லை..

தொடர்ந்து வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் தூயாவுக்கு நன்றிகள்

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

Banana Bay இல் இருந்து வெளிக்கிட்ட எமது வாகனம் அரை மணித்தியாலத்தில் எங்கள் விடுதியை அடைந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இவெட் தீவைச்சுற்றும் பயணம் மாலை 5 அரை மணிக்கு முடிவடைந்தது. இப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள சுவரஸ்சியமான விவரங்களை அறிந்து கொண்டும், விதிகளில் செல்லும் போது வித்தியாசமான மரங்களினால் அமைக்கப்பட்ட வேலிகள்,தென்னந்தோட்டங்கள், மாட்டுப்பண்ணைகள், நீர்னிலைகள், ஆலமரங்களினை அதிகமாகக் காணக்கூடியதாக இருந்தது.

p3050164ne3.jpg

Edited by Aravinthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.