Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நண்டு என்று சொல்வதைவிட குண்டு என்று சொல்லலாம்.. அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது..

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

:unsure: நண்டா இது? பார்க்க பயங்கரமா இருக்கு....அரவிந்தன் நீங்கள் அதை பிடித்து பார்க்கவில்லையா??

ஈழவன், நீங்கள் பிடித்து வெட்டி தந்தால் கறி என்ன...பொரியலே வைக்கலாம்..

பிடித்துப்பாருங்கள் என்று எங்களைக்கேட்டார்கள். ஏன் தேவையில்லாமல் கடி வாங்குவது என்று பிடித்துப்பார்க்கவில்லை. நண்டின் முதுகுப் புறத்தில்/பின்பக்கத்தில் பிடித்துத் தூக்க வேண்டும். வனு-அற்று மக்கள் பலர் இன்னண்டினை விரும்பி உண்பார்கள். நல்ல ரூசி என்றும் சொன்னார்கள்.

  • தொடங்கியவர்

THE SECRET GARDEN என்ற இடத்தில் பார்த்ததினை முன்பு எழுதியிருந்தேன். அங்கே உள்ள இந்த நண்டின் படங்கள்

coconutcrabiiqo3.jpg

மேலே உள்ள படத்தில் எவ்வாறு இந்த நண்டு தேங்காயினைச் சாப்பிடுகிறது என்பதினைக்காணலாம்.

coconutcrabiiizl3.jpg

THE SECRET GARDENல் நான் பார்த்த வனு-அற்று ஊர்வனவற்றினை(விலங்குகள்) சில.

flyingfoxht8.jpg

snakemancopyxr2.gif

Edited by Aravinthan

வவ்வால் எல்லாம் இருக்குது :unsure:

ஈழவன்,ஏன் அது மொணாசில் மட்டும் தான் இருக்கும் என நினைத்தீர்களா?

அரவிந்தன், தொட்டு தான் பார்க்கவில்லை..சாப்பிடவும் இல்லையா?

Edited by தூயா

நான் அப்படி சொல்லவே இல்லையே உங்கட வீட்டில வவால் பண்ணையே இருக்கு எண்டு யாழ் களத்துக்கே தெரியுமே :o :P

இன்னும் கொஞ்ச நேரத்தில் சுவையருவியில் வவ்வால் கறிக்கு சமையல் குறிப்பு எழுதீடுவீங்கள் போல இருக்கு :unsure: :P

  • தொடங்கியவர்

நான் சாப்பிட்டுப்பார்க்கவில்லை தூயா. நான் இருந்த விடுதியின் கடற்கரையில் இருந்த சில வாளிகளுக்குள் கனக்க இந்த தேங்காய் நண்டுகளினைக்கண்டேன். அருகில் உள்ள மரங்களின் பொந்துகளில் இருந்து இவ் தேங்காய் நண்டுகளினைப்பிடித்து இவ்வாளிகள் வைத்துவிட்டு மேலதிகமான நண்டுகளினைத்தேடச் சென்று விட்டார்கள். எனது விடுதியில் இருந்து படகில் சென்ற அனுபவத்தினை ஏற்கனவே படங்களுடன் சொல்லியிருந்தேன். அப்படகோட்டியிடம் கேட்ட போது அவருக்குப்பிடித்த விருப்பமான உனவு இந்தத் தேங்காய் நண்டு என்றும், இன்னான்டின் வயிற்றுப்பகுதி மிகவும் சுவையானது என்றும் சொன்னார்.

  • தொடங்கியவர்

ஈவெட்(Efate) தீவைச் சுற்றி ஒரு நாள் பயணத்தின் போது Beachcomberல் மதிய உணவு உண்டும், கடலிழும், நீர் நிலையிலும் நீந்திய பின்பு மீண்டும் பயணித்து எங்களது வாகனம் Eboule ஆற்றுப்ப்பாலத்தினை(River Bridge ) அடைந்தது.

p3050124gt8.jpg

பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

p3050123ys7.jpg

வனு-ஆற்றில் எப்பொழுது பார்த்தாலும் ஆறுகளிலும் , நீர் நிலைகளிலும் குளித்துக் கொண்டிருப்பவர்களைக் காணலாம். இந்த Eboule ஆற்றிலும் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

p3050127yo2.jpg

ஆற்றில் வனு-அற்று மரம் ஒன்றினால் உதவியுடன் செய்யப்பட்ட படகு/மிதவை(Canoe) ஒன்று கரைக்கு ஒருவர் கொண்டுவர நாங்கள் எல்லோரும் அதில் ஏறினோம்.

p3050129gu2.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

படகு ஒட்டியை விட எங்களில் 9பேர் இருந்தோம். இதனால் இன்னொரு படகும் வர, பருமனான நிறை கூடிய 4 பேரை ஒரு படகிலும், மற்றைய5 பேரை( நானும் இப்படகில் தான் சென்றேன்) மற்றைய படகிலும் ஏற்றினார்கள். படகில் ஒரு பக்கத்தில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் அவருக்கு எதிர்த்திசையில் மாறி இருந்தவாறே செல்ல வேண்டும். எங்கள் படகு முதலில் சென்றது. எனது படகில் இருந்து மற்றைய படகில் இருப்பவர்களினைப் புகைப்படக்கருவியினால் எடுத்தபடம்.

p3050131pi9.jpg

p3050139ij8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

படகில் சென்ற போது எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட இயற்கைக்காட்சிகளின் படங்கள்

p3050133ee6.jpg

  • தொடங்கியவர்
p3050138mt2.jpg
  • தொடங்கியவர்
p3050137rn0.jpg
  • தொடங்கியவர்

எங்களுடைய படகில் பயணம் செய்த அவுஸ்திரெலியா நாட்டவர்

p3050134yw5.jpg

  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட 15 நிமிடப்பயணத்தின் பின்பு, அந்த ஆறு பசுபிக் சமுத்திரத்துடன் சேருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

p3050135xj8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சமுத்திரத்துடன் ஆறு சந்திக்கும் இடத்துக்கு முன்பாக இருக்கும் ,ஆற்றில் நாங்கள் போகும் திசைக்கு வலப்பக்கத்தில் உள்ள Warieka என்ற கிராமத்தில் படகு சென்று நிக்க நாங்கள் எல்லோரும் படகை விட்டு அங்கே இறங்கினோம்.

p3050140jb7.jpg

அங்கே ஒலையினால் வேயப்பட்ட ஆடைகள் அணிந்த இரு பெண்களும் ஒரு ஆணும் எங்களை வர வேற்கக் காத்திருந்தார்கள்.

Edited by Aravinthan

கனோல போறது எனக்கு மிகவும் பிடிக்கும்....உண்மைய சொல்லுங்கோ...கடல்ல நீங்க விழலயா?? :blink:

  • தொடங்கியவர்

கனோல போறது எனக்கு மிகவும் பிடிக்கும்....உண்மைய சொல்லுங்கோ...கடல்ல நீங்க விழலயா?? :lol:

மிகவும் மெதுவாகப் போவதினால் நான் உட்பட ஒருதரும் கடலில் விழவில்லை

அண்ணா, தொடர்ந்து எழுதுங்கோ

  • தொடங்கியவர்

இறங்கியதும் அப்பெண்களில் ஒருவர் எங்களின் தலையில் இலைகளினால் வேயப்பட்ட வட்ட வடிவமான வலையத்தினை அணிவித்தார்.

p3050142di5.jpg

அவ்வலையத்தில் செவ்வரத்தம் பூவும் இருந்தது. அதன்பிறகு செவ்விளனீரை வெட்டி ஸ்ரோவின் உதவியுடன் குடிப்பதற்கு இளனீர் தந்தார்கள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

59 கிலோகிராம் உள்ள பெரிய கல்லினைத் தூக்கி அருகில் உள்ள கடலில் வீசச்சொன்னார்கள். மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரும் தூக்கவில்லை.

p3050155wu1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அவர்கள் இருவர் சேர்ந்து கஸ்டப்பட்டு தூக்கி கடலில் வீசினார்கள்.

p3050150qo2.jpg

p3050151fw7.jpg

  • தொடங்கியவர்

கடலில் விழுந்த அந்த பெரிய கல் கடலில் மிதந்தது.

p3050154pz7.jpg

அதே இனத்தினச் சேர்ந்த சிறு கற்களினை அக்கடலில் எறியும் போது அக்கற்கள் மிதக்கவில்லை. கடலில் மிதந்த அந்தப் பெரிய கல் ஆபூர்வ சத்தி வாய்ந்ததாக அவர்கள் சொன்னார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் மிகவும் அபாரமாக இருக்கிறது உங்கள் வர்ணனைகளும் படங்களும்.நாங்களே நேரே போய் பார்த்த மாதிரி இருக்கிறது.நன்றி.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துப் பகிர்ந்த ஈழப்பிரியனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

59 கிலோகிராம் உள்ள பெரிய கல்லினைத் தூக்கி அருகில் உள்ள கடலில் வீசச்சொன்னார்கள். மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரும் தூக்கவில்லை.

நல்ல காலம் தென்னிந்தியா தமிழ் திரைப்படங்களில் வருவது போல கல்லைத்தூக்கினால் தான் திருமணம் என்றால் உங்கள் ஒருவரூக்கும் திருமணமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.