Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது.. காதல் தூதுவன்..கதை முடியும் நேரம்....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bee.jpg

 

 

அழகு மலர்களின்

மெளன மொழியில்

காதல் கொண்டு..

விரியும் இதழ்களின்

காந்தக் கவர்ச்சியில்

கவர்ந்து..கள்ளுண்டு

கலவி கண்டு

கருத்தரிக்க உதவுகிறான்

காதல்

தூதுவன் இவன்..!

அந்த விசயத்தில்

இவன் ஒரு

"பிளே பாய்"..!

 

மானுட உலகம்

மாற்றி அமைத்திட்ட

இயற்கையின் நியதியில்

கருத்தடை மாத்திரைகள்

கருப்பைகளுக்கு

விடுமுறை தர

யோனிகளுக்கோ

ஓய்வில்லாத உரசல்கள்..!

உராய்வு நீக்கிகளுக்குக் கூட

அங்கு பஞ்சம்..

கிழியும் அந்த

உறைகளின் வியாபாரமோ

இன்று

உச்சியில்..!

நிமிட நேர

உள்ளக் களிப்பில்

போதை கண்டு..

உடலில் சேரும்

அந்த

மாத்திரை

நஞ்சுகளின்

தாக்க அறிதல் இன்றி

கூடிக் களித்திருக்குது

மானுட சமூகம்..!

 

பாவம் இவன்

அதே..

மானுட உலகின்

அரக்கச் சிந்தனையில்

பூச்சி கொல்லி

நஞ்சுகளின்

நாசச் செயலில்

மூளை குழம்பி

இறக்கிறான்..!!

வசந்தம்

கொண்டு வரும்

மணம் நுகர

மனசின்றி..

மலர்களின்

அழகுணரும் உணர்ச்சி இன்றி..

வளர்ச்சி குன்றி

பலவாறு

மடிகிறான்..!

கவிஞர்களின்

கண்ணுள் நுழைந்து

கருத்தில் வந்தவன்..

விளை நிலங்களின்

விளைச்சலில்

பங்கு தந்தவன்..

இன்று

பிறக்க முதலே..

பாடையேறுகிறான்..!

 

"கருக்கொள்ள முதலே

கருவை அழிக்கலாம்"

கருத்தியலோடு

கட்டியணைக்கும்

மானுட தர்மம்..

விசிறும் அந்த

நஞ்சுகள்

அழிக்குது

காதல் தூதனை

அவன் எய்யும்

மன்மத அம்புகளை..!

விளைவு

நாளை தெரியும்

அதுவரை

மானுட தர்மம்

வெறியாடி நிற்கும்..!

 

காலம் கடந்தாவது

உண்மை உணர்த்துமா

சங்கதி..??!

நஞ்சுகள்

நாசம் செய்யும்

இயற்கையின் வனப்பை

மானிடர்

மீட்பரா..??!

விழித்திடுங்கள்

மானுடரே

இந்த நிலை

இனியும் தொடர்ந்தால்..

நாளை உமக்கும்

இதே முடிவுதான்.

தூரம்..

அதிகமில்லை..!

 

 

Bee deaths: EU to ban neonicotinoid pesticides

 

The European Commission will restrict the use of pesticides linked to bee deaths by researchers, despite a split among EU states on the issue.

 

There is great concern across Europe about the collapse of bee populations.

 

Neonicotinoid chemicals in pesticides are believed to harm bees and the European Commission says they should be restricted to crops not attractive to bees and other pollinators.

 

But many farmers and crop experts argue that there is insufficient data.

 

http://www.bbc.co.uk/news/world-europe-22335520

 

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருத்தருக்கும் தேனீயைப் பிடிக்கல்லையா.. அல்லது தேனீட நிலைமை அவ்வளவு மொக்கையாவா போச்சுது..! :D

 

இதையே பெண்.. பிடாரி.. சூனியக் காதல்... அதுஇதென்று.. என்று எழுதி இருந்தால்............................... :lol::icon_idea:

தலைப்பையும் எழுதியவரின் பெயரையும் பார்த்ததும் தேனீயைப் பற்றி இருக்கலாமோ என்று நினைத்தேன். :unsure: அதேதான். :D

ஆனால்  மக்கள் அக்கறை காட்டாமல் இருக்கும் மிக முக்கிய பிரச்சனை.நல்லதொரு கரு.

 

இரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும்  அதிகம் பாவிப்பதனால் தேனீ இனம் அருகி, பழ மரங்கள் / மரக்கறிகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. அத்துடன் விவசாயத்திற்குத் தேவையான நுண்ணுயிர்களும் அழிந்து வருகின்றன. பல குருவி இனங்களைக் காண முடிவதில்லை. கண்ட கண்ட மருநதுகளைப் பாவித்து மண்ணை மலடாக்கி, விவசாயத்திற்கு உதவும் உயிரினங்களையும் அழிப்பது தற்கொலையில்தான் முடியும்.

60, 70 களில்நடந்த  விவசாயப் புரட்சியின் பலனை இன்று இந்திய விவசாயிகள்  அனுபகிக்கிறார்கள்.

 

நெடுக்காலபோவான், நீங்கள் கூறிய விடயம் பல இயற்கை ஆர்வலர்களை கவலைகொள்ள செய்திருக்கின்றது. தேனீக்கள் ஆற்றும் சேவை மகத்தானது, நிலையான தாவர இருப்புக்கு தேனீக்கள் அவசியம்.  சில மக்கள் சொற்ப வியாபார நன்மைகளுக்காக கண்மூடித்தனமாக பூச்சிகொல்லிகளை பயன்படுத்துகின்றனர் இவை பூச்சிகளை மட்டும் கொல்லப்போவதில்லை எம்மையும் மெல்லைக்கொல்லும்.  இணைப்புக்கு நன்றி

 

எழுத மறந்த விடயம்.

முன்பு பழ மரங்களில் நிறையக் காய்கள் காய்க்கும். மரத்திற்கு கூடாதென்பதாலும் காய்கள்பெருப்பதற்காகவும் 30-40 வீதமான பிஞ்சுகளை வெட்டி விடுவேன். இப்ப தேனீயும் இல்லை காய்களும்  இல்லை. கையினால் மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டியுள்ளது. மரக்கறி தாவரங்களிற்கும் இதே நிலைதான்.

பாடசாலை மட்டத்திலேயே இதனைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியம். அதிகமான வளர்ந்தவர்களுக்கு இதனைப் பற்றிய அறிவு குறைவாகவே உள்ளது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக இரண்டே இரண்டு கள உறவுகளுக்குத் தான் தேனீக்களின் முக்கியத்துவமும் விளங்கி அவை இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அவற்றின் நிகழ்கால எதிர்கால பாதிப்புக்களும் விளங்கியுள்ளது..! ம்ம்ம்..! எங்கட சமூகத்திற்கு இயற்கை பற்றிய அக்கறை எந்தளவுக்கு இருக்கு என்பதற்கு இது ஒரு சாட்சி..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.