Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கழிசடையாக மாறியுள்ளது: முபாறக் அப்துல் மஜீத்

Featured Replies

கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கழிசடையாக மாறியுள்ளது: முபாறக் அப்துல் மஜீத் lg-share-en.gif face.jpg By Farhan 

2013-04-30 16:32:39  

கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

கல்முனை கடந்த 1994 முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சிலேயே உள்ளது. ஒரு காலத்தில் கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கிழக்கின் கழிசடையாக மாறியுள்ளது.

அது பிரதேச சபையாக இருந்த போது ஆரம்பித்த ஊழல், மோசடி, செயற்திறண் அற்ற உறுப்பினர்கள் என்பன மாநகர சபையாக மாறிய போதும் தொடர்ந்தது என்பதை எமது கட்சி மட்டுமே பகிரங்கமாக சுட்டிக்காட்டி வந்தது.

இது பற்றி கடந்த வருடம் நாம் விடுத்த பத்திரிகை செய்தியில் கல்முனையின் அவல நிலைக்கு கல்முனை நகரில் உள்ள மாடுகளின் கழிப்பறையாக உள்ள பொது நூலகமே சாட்சி எனக்கூறினோம். இதனை இன்றைய மேயர் சிராஸ் ஏற்காமல் எமக்கெதிராக அறிக்கை விட்டார். தற்போது முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த உப்பினர்களே கல்முனை மாநகர ஊழல்கள் பற்றி பகிரங்கமாக பேசுவதற்கு காரணம் ஊழலில் பங்கு கிடைக்கவில்லை என்பதனால்த்தான் என்றே நாம் பார்க்கிறோம்.

தற்போதைய மாநகர சபையால் மக்கள் மீது பாரிய வரிகள் சுமத்தப்பட்டுள்ளன. கல்முனை நகர மக்கள் பிசியான வியாபாரிகள் என்பதால் அவர்களால் இந்த வரிகள் பற்றி ஆராய்வதற்கு நேரமின்மை காரணமாக லஞ்சம் கொத்து சமாளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வியாபார அனுமதி பத்திரம் பெறுவதற்கு கொழும்பில் கூட இல்லாத நடைமுறைகள் பின்பற்றப்பட்டு லஞ்சலுக்கு வழி வகுக்கப்படுகிறது. வியாபரா அனுமதி பத்திரம் பெற கிராம சேவையாளர் ஒப்பம், விளம்பர பலகை, சமுர்த்தி உத்தியோகத்தர் ஒப்பம் எனக்கேட்டு ஒரு வருடத்துக்கு மேல் இழுத்தடிக்கப்படுகிறது. இத்தகைய அனமதிப்பத்திரம் கொழும்பில் ஒரே நாளில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு மக்கள் மீது இரக்கமற்ற அரக்கர்களைக்கொண்டதாக அலிபாபா கோட்டையாக கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் இருப்பதற்கு பிரதான காரணம் மக்கள் இன்னமும் முஸ்லிம் காங்கிரசை நம்பி அதற்கு வாக்களிப்பதனாலாகும். ஒரு காலத்தில் அமைச்சராக இருந்த ஏ. ஆர் எம் மன்சூருக்குப்பின் பாரிய அபிவிருத்திகள் எதுவும் நடை பெறாமைக்கு இக்கட்சியினரின் சுயநலப்போக்கே காரணமாகும்.

இதன் மேயராக நிசாம் காரியப்பர் மட்டுமல்ல எந்த அப்பர் வந்தாலும் இதே சுயநலம் தொடரும் என்பது எமக்குத் தெரியும். கடந்த ஒரு வருடத்தக்கு மேல் பிரதி மேயராக இருக்கும் நிசாம் காரியப்பர் மாநகர சபை உறுப்பிராகத்தான் இரக்கிறாரா என்பது கூட மக்களுக்குத் தெரியாத நிலையில் அவரது சேவை உள்ளது. இந்த நிலையில் அவர் மேயராக வந்தாலும் மாநகர சபையின் ஊழலையோ, உறுப்பினர்களின் சுய நலன்களையோ ஒழிக்க முடியாது. கல்முனை மாநகர சபையில் இறைவனைப்பயந்த ஈமான், இஸ்லாம் அறிந்த ஒரு உறுப்பினராவது இருக்கிறாரா?

எம்மை பொறுத்த வரை கல்முனை மாநகர சபையில் உறுப்பினர்களை மாற்றுவதில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ஓட்டை வண்டியை வைத்துக்கொண்டு சாரதிகளை மாற்றுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. வண்டியை மாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது தலை முதல் கால் நுணி வரை சயநலம், மக்களை ஏமாற்றுதல், பொதுச்சொத்தை கொள்ளையடித்தல்  என்பதில் ஊறிப்போயுள்ளார்கள். தாம் மக்களுக்கு எந்தச்சேவையும் செய்யாத போதும் மக்கள் இந்தக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்பில் இவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தும் கல்முனையில் இருப்பதால் பழையவர்களின் மோசடிகளும் வெளியே வருவதில்லை. கல்முனையின் ஆட்சியை சுய நலம் இல்லாத எமது கட்சியின் கைகளில் தந்தால் பாரிய பல மோசடிகளையும், ஊழல்களையும் வெளிக்கொணர்வதோடு நல்லாட்சியை நடத்திக்காட்ட முடியும்.

http://www.virakesari.lk/article/local.php?vid=4287

 

கக்கீம் உலகம் முழுக்க பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இவர் என்ன என்றால் கக்கீமை குறைச்சு பேசுகிறார். :o

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை, முஸ்லீம் பிரதேசமாகிவிட்டதா..... சிவபெருமானே.... ஆ...

 

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை, முஸ்லீம் பிரதேசமாகிவிட்டதா..... சிவபெருமானே.... ஆ...

 

சிறிலங்காவின் ....கஷ்மீர் எங்கினம்,சிறிலங்காவின் ....மெக்கா என்றும் சொல்லியினம்...

எப்போது கல்முனை முஸ்லீம் பிரதேசமாக இல்லாதிருந்தது 

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது கல்முனை முஸ்லீம் பிரதேசமாக இல்லாதிருந்தது 

 

கல்முனைக்கு இன்று முஸ்லீங்கள் பூர்வீக மண் என்று சொந்தம் கொண்டாடும் நிலையில்.. அதன் உண்மையான வரலாறு என்பது.. வேறுபட்டது. அது கண்டியை ஆண்ட இறுதித் தமிழ் மன்னனுக்குச் சொந்தமான நிலம்..! அதுமட்டுமன்றி அங்கிருந்த தமிழ் மக்கள் 1990 களில் முஸ்லீம்களாலும் சிங்களப் படைகளாலும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டதோடு விரட்டி அடிக்கப்பட்டும் இருந்தனர். முஸ்லீம்களின் வடக்கு மீள் குடியமர்வு சிங்களவர்களின் வடக்கு மீள் குடியமர்வுகள் குறித்து பேசுபவர்கள்.. கல்முனை.. காத்தான்குடி.. மூதூர்.. கிண்ணியா.. சம்பூர்..அம்பாறை என்று பல இடங்களிலும் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் குறித்து ஏன் பேசுவதில்லை..?!

 

Kalmunai

 

From Wikipedia, the free encyclopedia
 

Kalmunai

கல்முனை —  city  —

 

250px-Kalmunai_Paddy_Fields.jpg
250px-Sri_Lanka_location_map.svg.png
6px-Red_pog.svg.png
Kalmunai

Coordinates: 17px-WMA_button2b.png7°25′00″N 81°49′00″E Country Sri Lanka Province Eastern District Ampara DS Division Kalmunai Government  • Type Municipal Council  • Mayor   Population (2011[1])  • Total 106,780  • Density 4,726/km2 (12,240/sq mi) Time zone Sri Lanka Standard Time Zone (UTC+5:30)  • Summer (DST) Summer time (UTC+6)

 

Kalmunai (Tamil: கல்முனை, Sinhala: කල්මුනේ Kalmune) is a city in the Ampara District of Eastern Province, Sri Lanka. It had a total population of 106,780 as of 2011.[2] It is the one and only Muslim-majority municipality in the country. When Muslims in Colombo were expelled by Portuguese in 17th century, they fled to Kandy and sought refuge with the king in Kandy. Then the king (Rajasingan 11) resettled these Muslim refugees in Kalmunai (8000 refugees) and Kattankudy (4000). Kalmunai was the Royal farm of the king. Because of this settlement, it became a Muslim-majority area.[3]

There were Sri Lankan Muslims, Sri Lankan Tamils, Sinhalese, and Burghers with the Moors forming a majority. It consists of four major regions namely Kalmunai city (Thalavatuvan Junction to Zahira College Road), Kalmunai North (Pandiruppu, Maruthamunai and Neelavanai), Kalmunai South (Sainthamaruthu) and Kalmunai West (Natpittimunai, Savalakkadai).

The devastating Sri Lankan civil war has adversely affected the area with number a forced disappearances, and civil unrest targeting the local civilians. It was also directly impacted by the 2004 Tsunami, leading to number of deaths and destruction of property worth of millions of rupees. It is bounded on the east by the Indian Ocean on the north by the Periyaneelavanai village and on the south by Karaitivu village which is considered to be a suburb of the city.[4

 

Sri Vikrama Rajasinha of Kandy

From Wikipedia, the free encyclopedia
 

 

Sri Vikrama Rajasinha King of Kandy 220px-Sri_Vikrama_Rajasinha.jpg

 

His Majesty Sri Vikrama Rajasinha, King of Kandy Reign 1798 - February 10, 1815 Coronation 1798 Born 1780 Birthplace Madurai, India Died January 30, 1832 Place of death Vellore Fort, India Predecessor Sri Rajadhi Rajasinha Successor End of Sinhalese monarchy

George III of the United Kingdom, as king of British Ceylon Consort to Vencataranga Rajammal

Venkatamma Moodoocunamma Venkata Jammal Royal House Nayaks of Kandy Father Sri Venkata Perumal Mother

Subbamma Nayaka

 

Sri Vikrama Rajasinha (1780 - January 30th 1832, born Kannasamy Nayaka) was the last of four kings, to rule the last Sinhalese monarchy of the Kingdom of Kandy in Sri Lanka. The Nayak kings were Buddhist[1] that spoke Tamil.[2][3][4] The king was eventually deposed by the British under the terms of the Kandyan Convention, in 1815, ending over 2300 years of Sinhalese monarchy on the island. The island was incorporated into the British Empire, and Sri Vikrama Rajasinha was succeeded by George III, as monarch of British Ceylon.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.