Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ம.க.வினர் இன்றும் வன்முறை: வட மாவட்டங்களில் பதற்றம் (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

 

PMK%20Protest%201.jpg

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

 

ramadass%20person.jpg

இதனிடையே, மரக்காணம் கலவரத்தை கண்டித்து நேற்று விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

 

police%281%29.jpg

இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ராமதாசை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து இரவு 11 மணியளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அவர், அதிகாலை 4 மணியளவில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

bus%20fire.jpg

மேலும் கட்சித் தலைவர் ஜி.கே.மணி மற்றும் 400 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறை முழுவதும் எங்கு பார்த்தாலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தலைகளாகவே தெரிந்தன.

 

bus%20fire%201.jpg

பத்திரிக்கையாளர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ராமதாஸ் பேச மறுத்து விட்டார். காவல்துறையினர் பத்திரிக்கையாளர்களை தடுப்பதிலும். ராமதாசை சிறையில் அடைப்பதிலும் குறியாக இருந்தனர். நுழைவாயிலின் அருகே அவருடைய கார் சென்றது. இதையடுத்து அவசர அவசரமாக ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் அவரது கட்சியினரால்  போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

bus%20fire%202.jpg

காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கைதாகினர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை -பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு 8 கிமீ தொலைவில் தாமல் என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று சமூக விரோதிகளால் கொளுத்தப்பட்டது.

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் சென்ற டி.என் 23 நம்பர் 2296 என்ற எண் கொண்ட அப்பேருந்தை தாமல் அருகே வழிமடக்கிய ஒரு கும்பல் கற்களை சரமாரியாக வீசினர். இதில் பயந்துபோன பயணிகள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இச்சமயத்தில் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை பேருந்து மீது ஊற்றி தீ வைத்துள்ளது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. உடனடியாக காஞ்சிபுரம் எஸ்.பி சேவியர் தன்ராஐ சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அடுத்தடுத்து வேலூர் செல்லவிருந்த பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

 

bus%20fire%204.jpg

இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்து 15 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை செய்ததில் தாமல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் என்பவர் தலைமையில் வந்த மர்மகும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளார் திருக்கச்சூர் ஆறுமுகம் மாமல்லபுரம் போலீசாரால் தடுத்து கைது செய்தனர். 7 மணிக்கு பாலூர் காவல்நிலையத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார். சித்திரை விழாவிற்கு காவல்துறையால் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது.

bus%20fire%206.jpg

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் முன்சிப் கோர்ட்டில் நீதிபதி சிவா முன்பு இன்று காலை 7  மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட ஆறுமுகத்தை 14ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆறுமுகம், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாமல்லபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நேற்று இரவு 10 மணிக்கு வேன் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஓ.எம்.ஆர் பகுதியிலும் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் முடையூர் பகுதியில் பா.ம.க.வினர் பனைமரங்களை வெட்டி சாலையில் போட்டி மறியல் செய்தனர்.

bus%20fire%207.jpg

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. திருப்பத்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி அருகே பா.ம.க.வினர் நேற்றிரவு 9 மணியளவில் மறித்துள்ளனர். கலவரக் கும்பல் பேருந்தில் இருந்த அனைவரையும் இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. இது தொடர்பாக 17 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் ஊத்தங்கரையிலிருந்து கல்லாவி செல்லும் வழியில் கலலூர் என்ற கிராமம் அருகே அரசு டவுன் பேருந்து கண்ணாடிகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

 

 

நேற்றிரவு 11 மணியளவில் கும்பகோணத்திலிருந்து ஜெயம்கொண்டம் சென்ற அரசு பேருந்து ஒன்று கோவலாச்சேரி என்ற இடத்தி்ல் வந்த போது மர்ம கும்பலால் கண்ணாடி உடைக்கப்பட்டது.

 

 

tree%20fire.jpg

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று திருவலஞ்சுழி என்ற இடத்தி்ல் வந்த போது மர்ம நபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கும், கும்பகோணத்திலிருந்து சென்னைக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது போன்று சில பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், எஸ்.பி. அன்பு அங்கு முகாமிட்டு பிரச்னை ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=14386

 

 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சாதிப்பிளவுகளை மேலும் தீவிரமாக்குவதற்கு யாரோ முயற்சிக்கினம் போல இருக்கு..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.