Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிண்டல் எழுத்துகளுக்கு முற்றுப்புள்ளி

Featured Replies

கிண்டல் எழுத்துகளுக்கு முற்றுப்புள்ளி

[20 - July - 2006] [Font Size - A - A - A]

-மார்வான் மாக்கான் மரிக்கார்-

பாங்கொக்,சிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணி ஒருவர் அங்கு வாங்கக் கூடிய பிரபலமான T- சேட்டுகளில் டங்- இன்- சீக் (Tongue- in- Cheek) ஒன்றாகும். அதாவது, செல்வச் செழிப்புள்ள தீவு நாடான சிங்கப்பூர் ஒரு `சொர்க்க பூமி' என்று இந்த வசனம் வர்ணிக்கிறது.

இந்த சேர்ட்டின் பின் பக்கத்தில் காரணங்கள் ஆக்கபூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. சூயிங் கம் மிட்டாய்க்கு எதிராக சட்ட விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது அபராதம் வீதிக்கப்படும். மலசலகூடத்தை பயன்படுத்திய பின் தண்ணீரை பீச்சாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். தகாத பாலுறவு கொள்வோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், அதிகாரத்துவத்திற்கு பெயர் பெற்ற அரசாங்கத்தை கிண்டல் செய்வோரும் விரைவில் இந்த குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

ஏற்கனவே, `mr brown' என்ற இணையத்தள பெயரில் தனது படைப்புகளை வெளியிடும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளர் லீ கின் முன் என்பவர் அரசின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். சிங்கப்பூரின் 4.2 மில்லியன் மக்கள் மத்தியில் விஷம்போல் விலை அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியன தொடர்பாக கிண்டல் செய்து எழுதியதே இதற்குக் காரணம்.

பிரச்சினைகள் குறித்து வித்துவான்களைப் போல் விமர்சிப்பது, அரசுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரசாரம் செய்வது சிங்கப்பூரில் செய்தியாளர்களது அல்லது பத்திரிகைகளின் பொறுப்பு அல்ல என்று அந்நாட்டு தகவல், தொடர்பாடல், கலைத்துறை அமைச்சின் ஊடக செயலாளர் கிருஷ்ணசாமி பவானி `ருடே' என்ற பத்திரிகைக்கு கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பத்தி எழுத்தாளர் ஒருவர் மக்களுடனான அரசின் நிலைப்பாட்டை சீரழிப்பதற்கு வெகுஜன ஊடகத்துடனான தமது தொடர்புகளை துஷ்பிரயோகம் செய்யும் அதேவேளையில், தம்மை அரசியல் சார்பற்ற ஒரு அவதானி என்று சித்திரிப்பாரேயானால் அவரைத் தொடர்ந்தும் ஒரு ஆக்கபூர்வமான விமர்சகர் என்று கணிக்க முடியாது. அத்தகையவர் ஒரு அரசியல் சார்பான எழுத்தாளரே ஆவார் என்றும் பவானி கூறினார்.

கடந்த வார இறுதியில், இதே அமைச்சைச் சேர்ந்த மற்றுமொரு உயர்நிலை அதிகாரி சிங்கப்பூர் அரசின் இதேபோன்ற நிலைப்பாடு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது: `வாழ்க்கைச் செலவு தொடர்பாக பிரச்சினை எதுவும் இருப்பதாக நீங்கள்கருதினால் அதனை நீங்கள் எடுத்துக் கூறுங்கள். நாங்கள் கூட்டாக இதற்குத் தீர்வு காண முயற்சிக்கலாம்.

ஆனால், ஹாஷ்யம் என்ற பெயரில் விடயங்களை திரித்து அல்லது மிகைப்படுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெளியிட வேண்டாம்' என்று தகவல், தொடர்பாடல், கலைத்துறை துணை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாக சிங்கப்பூரில் இயங்கும் தொலைக்காட்சி நிலையமான `சனல் நியூஸ் ஏசியா' வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய பிரசாரங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை கொண்டு வர முடியாது.

மேலும், பிரதான ஊடகங்கள் அரசுக்கு புகழ்பாடும் அந்நாட்டு வழமையின்படி, `ருடே' பத்திரிகையும் `mr brown' எழுதிய பத்தியை ஜூலை மாதம் 7 ஆம் திகதி இடைநிறுத்தியது. இதற்கு முந்திய வெள்ளியே இப்பத்திரிகை பொருளாதாரம் தொடர்பான கட்டுரையை வெளியிட்டது. ஆட்சிபீடத்திற்கு ஆத்திரத்தை மூட்டிய லீயின் இணையத்தளத்தில் இன்னமும் அக்கட்டுரை காணப்படுகிறது.

`சிங்கப்பூர்வாசிகள் அபிவிருத்தியையே உணவாகக் கொள்கிறார்கள்' என்ற தலைப்பில் 36 வயதான லீ நகைச்சுவையாக எழுதிய விமர்சனத்தில் `சூப்பர்மன்' திரும்புகிறார் என்பது போல எங்கள் வாழ்க்கைச் செலவும் உச்சத்திற்கு சென்றுள்ளது. எங்களால் மட்டும் ஒரே பாய்ச்சலில் அதிகரித்த வாழ்க்கைச் செலவை எட்டிப்பிடித்துவிட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்திற்கும் நாட்டின் விரிவடைந்துவரும் கணினி வலையமைப்பு சமூகத்துக்குமிடையிலான இந்த முரண்பாட்டு நிலை, சிந்தனையைக் கட்டுப்படுத்தும் அரசின் இரும்புச் சட்ட வரம்புக்குள் அடங்க விரும்பாத சிங்கப்பூர்வாசிகளில் ஒரு பிரிவினரின் எதிர்ப்புக்கு வழி வகுக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட எழுத்தாளரின் சுமார் 30 ஆதரவாளர்கள் சன நெருக்கடி மிக்க சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அரசின் தணிக்கையால் கடைசியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கபில நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக 5 பேருக்கு மேலும் கூடவேண்டுமானால் பொலிஸாரிடமிருந்து அனுமதி பெற வேண்டுமென சட்டம் இருப்பதால் இத்தகைய பகிரங்க ஆர்ப்பாட்டங்கள் சிங்கப்பூரில் நடத்தப்படுவது மிக அரிது.

கண்டனத்துக்குள்ளான எழுத்தாளருக்கு அங்குள்ள இணையத்தள எழுத்தாளர்களின் ஆதரவும் உண்டு. "yawning bread" என்ற புனைபெயரில் எழுதும் ஒருவர் திணிக்கப்பட்டுள்ள சமன்பாடு என்னவென்றால், நீங்கள் விமர்சித்தால் அரசாங்கத்தை அவமானப்படுத்துவதே உங்கள் எண்ணம். அவமானப்படுத்த நீங்கள் துணிந்துவிட்டால் நீங்கள் நடுநிலையாளர் அல்ல. ஆனால், ஒருபக்க எழுத்தாளர். எனவே, அரசுக்கு உங்களை அழித்துவிட உரிமை உண்டு என்று கூறுகிறார்.

மற்றவர்கள், சிங்கப்பூர் அரசாங்கத்தின் இந்த அபத்தத்திற்கு வித்தியாசமான அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளார்கள். சிங்கப்பூரில் நகைச்சுவை ஊக்குவிக்கப்படுவதில்லை. நகைச்சுவையை ரசித்து சிரித்தால் எமக்கு பிரம்படி தண்டனையாகவும் கிடைக்கலாம். ஆனால், சுற்றுலாப் பயணிகளை பார்த்து சிரித்தால் குற்றமில்லை என்று மற்றொரு எழுத்தாளர் குறிப்பிட்டார்.

எனினும், ஊடக உரிமைகள் அமைப்புகளைப் பொறுத்தவரையில், சிங்கப்பூரில் விரிவடைந்து வரும் இணையத்தள எழுத்தாளர் சமூகத்தினால் உருவாகும் புதிய சவால்களுக்கு மத்தியில் இத்தகைய முரண்பாட்டு நிலை தவிர்க்க முடியாதது. அரசாங்க ஊடகமான `ஸ்ரெயிட் ரைம்ஸ்' கருத்துத் தெரிவிக்கையில், சிங்கப்பூரில் 22,000 இற்கும் அதிகமான இணையத்தள பத்திகள் உண்டு. உலகிலுள்ள ஏனைய எழுத்தாளர்களைப் போன்றே இவர்களும் பிரதான ஊடகத்தின் ஆசிரியர் தலையங்கத்தில் தங்கியிராமல் பார்வையாளர்களுக்கு நேரடியாக தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கிறார்கள்.

சிங்கப்பூரின் எழுத்தாளர் சமூகத்திற்கு இது ஒரு எல்லை நிர்ணயிக்கும் தருணமாகும். இவர்களில் அநேகமானோர் உயர் கல்வி பெற்றவர்கள். நவீன முறைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று பிராந்திய ஊடக கண்காணிப்பு நிறுவனமான தென்கிழக்காசிய ஊடக கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றொபி அலம்பே பேட்டி ஒன்றின்போது தெரிவித்தார். எழுத்துத்துறை மக்களை தலையெடுக்கச் செய்யும் இந்த வகையில் mr brown' ஒரு முன்னோடியாவார் என்றும் அவர் கூறினார்.

இணையத்தள எழுத்தாளர்கள் மீது சிங்கப்பூர் விதிக்கும் கடும் கட்டுப்பாடு அந்த நாட்டையும் இணையத்தளத்தில் கருத்து சுதந்திரத்தை தணிக்கை செய்யும் ஏனைய தென்கிழக்காசிய, நாடுகளான பர்மா, லாவோஸ், வியட்நாம் ஆகியவற்றின் பட்டியலில் சேர்த்துள்து. இந்த நடைமுறைகளும் விமர்சகர்கள் மீது நட்ட ஈட்டு வழக்குகளை தொடுக்கும் நடவடிக்கைகளும் அவர்கள் மீது சிறைத்தண்டனை அச்சுறுத்தல்களும் சுதந்திர ஊடங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்யைாக உள்ளன.

2005 ஆம் ஆண்டில் பரிசில் அமைந்துள்ள ஊடக கண்காணிப்பு நிறுவனம் மதிப்பீட்டுக்கு உட்படுத்திய 167 நாடுகளில் சிங்கப்பூர் 140ஆவது நாடாக கணிக்கப்பட்டுள்ளது. வளர்முக நாடொன்றுக்கு இது மிக மோசமான கணிப்பீடாகும்.

மேலும், 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதம மந்திரி பதவியை பொறுப்பேற்றவுடன் லீ சியென் லூங் அளித்த வாக்குறுதியை, அவரது அரசாங்கம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது என்பதையே தற்போதைய கட்டுப்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், ஒளிவு மறைவற்றதும் சுதந்திரமானதுமான சிங்கப்பூரை தாம் பார்க்க விரும்புவதாக தெரிவித்த பிரதமர் லூங், பன்முக கருத்துகளை தெரிவிப்பதற்கும் பாரம்பரியமற்ற கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கும் எம்மக்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டுமென அவ்வேளையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வருடம் மே மாதத்தில் இவரது நிருவாகத்தில் அரசியலின் உண்மையான தன்மை குறித்து மேலும் கருத்து வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அவர்களது பிரசாரத்திற்காக இலத்திரன் ஊடகங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வேட்பாளரின் அரசியல் கொள்கைகளை அங்கீகரிக்கக் கூடாதென இணையத்தள எழுத்தாளர்களும் முகாமையாளர்களும் அமைச்சர் ஒருவரால் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

தடை செய்யப்படுமளவுக்கு பகிரங்க அரசியல் கலாசாரத்தில் பிரதமர் லூங் அளித்த வாக்குறுதி பற்றி `mr brown' அதிகம் குறிப்பிடவில்லை என்று சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சீ சியோக் சின், `ஐ.பி.எஸ்'ஸிடம் தெரிவித்தார்.

ஊடகங்களில் திறந்த மனப்பான்மை கடைப்பிடிக்கப்படாமையே இந்தப் போக்கிற்கு காரணம் என்று அவர் கூறினார். இணையத்தள எழுத்தாளர்கள் மேலும் மேலும் வந்து அவர்களது அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்கள். பிரதான ஊடகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

- ஐ.பி.எஸ்.-

http://www.thinakkural.com/news/2006/7/20/...es_page6728.htm

2005 ஆம் ஆண்டில் பரிசில் அமைந்துள்ள ஊடக கண்காணிப்பு நிறுவனம் மதிப்பீட்டுக்கு உட்படுத்திய 167 நாடுகளில் சிங்கப்பூர் 140ஆவது நாடாக கணிக்கப்பட்டுள்ளது. வளர்முக நாடொன்றுக்கு இது மிக மோசமான கணிப்பீடாகும்.

வளர்முக நாடு என்றால் என்ன அர்த்தம் developed country அல்லது developing country ?

சிங்கப்பூர் developed country தானே :roll:

  • தொடங்கியவர்

மதன் உமக்காக உந்தக் கட்டுரையின் மூலத்தைத் தேடிப் பிடித்தேன் நீர் சொன்னதைப் போல் மொழி பெயர்த்தவர் பிழையாக மொழிபெயர்த்துள்ளார்.,இதில் அபிவிருத்தி அடைந்த நாடு என்ற பதம் வர வேணும்.

In 2005, the Paris-based watchdog Reporters Without Borders placed Singapore 140th out of 167 countries surveyed. That was the worst ranking for a developed country.

http://www.ipsnews.net/news.asp?idnews=33938

  • தொடங்கியவர்

அத்தோடு ப்ரவுனின் வலைப்பூவிற்கான இணைப்பு

http://www.mrbrown.com/blog/

¿øÄ¦¾¡Õ þ¨½ôÒ.

¿ýÈ¢ ¿¡Ã¾§Ã.....

¿øÄ¦¾¡Õ þ¨½ôÒ.

¿ýÈ¢ ¿¡Ã¾§Ã.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு நாரதரே.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.