Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பை உடைக்க சதி முயற்சியில் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon3191.jpg

பல கட்சிகளைப் பிரித்த இந்த அரசு, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கச் சதி செய்கின்றது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
 
பா.அரியநேந்திரன்
 
"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்காகச் சில சக்திகள் கட்சியினுள்ளும் ஊடுருவியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றது. பல கட்சிகளை உடைத்த இந்த அரசு எங்களையும் பிரிக்க முயல்கிறது.
 
நாங்கள் தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் மாத்திரமே விடுதலையைப் பெற முடியும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரன்.
 
சி.சிறீதரன்
 
"தமிழினத்தின் தாங்கு சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் பல வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே ஒரு அரங்கம் உருவாக்கினார்கள்.
 
இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விரும்பினால் இணைந்து வரலாம் என்று. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை அழிப்பதற்கான முயற்சி இதுவென்பதை அவர்கள் இனித்தான் உணர்வார்கள்.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிதறடிக்கப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறடிக்கப்படப் போகின்றது'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
 
சீ.யோகேஸ்வரன்
 
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்த தாவது:
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் எங்கள் தலைமை எல்லோரையும் அரவணைத்துச் செயற்படுகின்றது.
 
ஒரு காலத்தில் எங்கள் இனத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசின் தொங்கு பாலமாகச் செயற்பட்டவர்கள் எல்லோரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
 
ஏன் நாங்கள் அவ்வாறு செய்தோம்? எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகவே. ஆனால் எங்களுக்குள் வந்த பின்னர் எங்களுக்கே சதி செய்தால் விடமாட்டோம்.
 
மாவை சேனாதிராசா
 
"எங்களுக்கு கட்சியில் பதவி ஆசையில்லை. ஆனால் பதவி சரியானவர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. 
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=692652010102108704

 

சிங்களவர் அதைத்தான் காலகாலமாக செய்துவருகிறான் அதற்க்கு விலை போவதற்கும் தமிழர் தரப்பில் எப்போதும் சிலர் இருந்து வந்திருக்கின்றனர் இந்தமுறை யார் என்பதுதான் தெரியவில்லை

 

தமிழன் தலைவிதி :(

 

சிங்கள அரசையும் இராணுவத்தையும் தமிழர்கள் கேள்வி கேட்கமுடியாது என்ற துணிவிலும், சிங்களவரில் பழியைப் போட்டால் தமிழர்கள்
உடனே நம்பி விடுவார்கள் என்ற எடுகோளை வைத்தும்   தமிழரசுக்கட்சி இலகுவாக சிங்களவனின் மேல்  பழியைப் போடுகிறார்கள்.
உண்மையாகவும் இருக்கலாம்.?
தனக்கு விருப்பமான கொடி சிங்கக்கொடி என்று தலையில் தூக்கி வைத்ததை ஆதரித்தவர்கள்,
த தே கூ இன் சிங்களத்தின் மீதான குற்றச்சாட்டை இலகுவாக ஏற்பார்கள். 
 
அதே வேளையில் தமிழரசுக்கட்சியின் தலைமையாலும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு 
மன்றக் குழுத்தலைவரான  ஐயா சம்பந்தராலும், கடந்த காலங்களில் தமிழர்களின் உணர்வுகளின்
மேல் சவாரி செய்யப்பட்டதை கடந்த கால வரலாறு தெரிந்தவர்கள் இலகுவில் மறந்திருக்க  மாட்டார்கள்.
 
ஐயா மாவை கூறுவது போல் பதவி ஆசைகளே இல்லை என்றால்  தேர்தல் காலங்களில்  கட்சிகளிடையே
தொகுதிகள் தொடர்பான  மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை .
 
மொத்தத்தில் இவர்கள் தமிழர்களை வைத்து ஏதாவது காமடி கீமடி பண்ணுகிறார்களோ? என எண்ணத்தோன்றுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உடைவது மகிந்தவால் அல்ல... சம்பந்தனின் விட்டுக்கொடாமையால்.! எனவே சம்பந்தன் தான் மகிந்தவின் ஏஜெண்டாக இருந்து அதைச் செய்ய வேண்டுமே தவிர.. உடையுது.. சிதறுது என்று சொல்லிக் கொண்டிருப்பதற்காக அல்ல.. தேசிய தலைவர் அதனை உருவாக்கினார். தமிழ் மக்களுக்காக.. சுயநல அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால் செயற்படவே அதனை உருவாக்கினார். அதனை சம்பந்தன் இப்போ தவறாக தனது கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வெளிக்கிட்டு சிதைக்கிறார் என்பதே உண்மை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஓர் சில நாட்களின் முன் ''கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்தியவர்களை வைத்துக்கொண்டு கூடமைப்பைப் பதிவு செய்தால் அரசு சட்டப்பிரச்சினையை ஏற்படுத்தலாம்''
என சிங்களத்துக்கு மெதுவாகப் போட்டுக்கொடுத்தவரும் மரியாதைக்குரிய ஐயா சம்பந்தன்  தான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் உடைக்கவில்லை ....

தேசியம் பேசி உடைந்தார்கள் ....

பதிவு செய்து உடைந்தார்கள் ....

கட்சி மோதலில் உடைகிறார்கள் .... :lol:

கூட்டமைப்பு உடைவது மகிந்தவால் அல்ல... சம்பந்தனின் விட்டுக்கொடாமையால்.! எனவே சம்பந்தன் தான் மகிந்தவின் ஏஜெண்டாக இருந்து அதைச் செய்ய வேண்டுமே தவிர.. உடையுது.. சிதறுது என்று சொல்லிக் கொண்டிருப்பதற்காக அல்ல.. தேசிய தலைவர் அதனை உருவாக்கினார். தமிழ் மக்களுக்காக.. சுயநல அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால் செயற்படவே அதனை உருவாக்கினார். அதனை சம்பந்தன் இப்போ தவறாக தனது கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வெளிக்கிட்டு சிதைக்கிறார் என்பதே உண்மை..! :icon_idea:

 

தமிழர் வலிமையை உடைக்க சிங்கள அரசு சதி செய்யத் தயங்காது. இது புது விசயம் இல்லை. இது எதிர்பார்க்க, எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் இந்த சதிக்கு உள்வீட்டில் இருந்துகொண்டு இடம் கொடுக்க சிலர் இல்லை என்றால்  சதி முயற்சிகள் கைகூடாது. 

இந்த முறை சம்பந்தனும், சுமந்திரனும்  தான் அந்த உள்வீட்டு உதவியாளர்கள்.

முன்னர் தமிழர் வலிமையை உடைக்க சிங்கள, இந்திய அரசுகளின் சதி முயற்சிகளுக்கு உதவியவர்கள், வரதராஜர், தேவானந்தா, சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன்,  KP, கருணா முதலிய பல எட்டப்பர்கள் என்று பெரியவர்களும் சொல்கிறார்கள். நாமும் பார்த்தோம்.

இப்போது தமிழர் வலிமையை உடைக்க மேலுள்ளவர்களுடன் சம்பந்தன் பின்கதவால் இணைத்துக் கொண்ட சுமந்திரனும் சேர்ந்துள்ளார்.

கூட்டமைப்பினர்  வாக்குகள் பெற்றது, அரசியல் பலம் பெற்றது  விடுதலைப் புலிகள் மீதுள்ள நன்மதிப்ப்பால் தான் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.