Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிகாமம் மாவீரர் இல்லமும் பறிபோகின்றது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமம் மாவீரர் இல்லமும் பறிபோகின்றது!

 

thuylumllam-150x150.jpg

வடக்கினில் தொடரும் இராணுவ நில ஆக்கிரமிப்பின் ஓர் கட்டமாக கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லமும் சுவீகரிப்பிற்குள்ளாகியுள்ளது. வறணி- கொடிகாமம் வீதியினில் குறித்த தென்மராட்சி பிரதேசத்திற்கான விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது.1996ம் ஆண்டு படையினரால் யாழ்குடாநாடு கைப்பற்றப்பட்டவேளை இம்மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் ரணில் -புலிகள் ஒப்பந்தத்தையடுத்து குறித்த மாவீரர் துயிலுமில்லம் மீளகட்டியெழுப்பப்பட்டிருந்தது.எனினும் 2008ம் ஆண்டினில் இராணுவத்தினால் அது மீண்டும் இடித்தழிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் தற்போது குறித்த மாவீரர் துயிலுமில்ல வளவினில் படைத்தளமொன்றை அமைத்து படையினர் நிலை கொண்டுள்ளனர்.அக்காணியினையே தற்போது நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக அறிவித்தல் மாவட்ட காணி காணி சுவீகரிப்பு அலுவலக அதிகாரிகளினால் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு வலய காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருந்த அரசு தற்போது தனியார் காணிகளை வெளியே மக்கள் குடியிருப்புக்களிடையே சுவீகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://tamilnaatham.dk/?p=13250

துயிலும் இல்லம் விடயத்தில் நாங்கள் பெரியளவில் குரல் கொடுக்க முடியாத இக்கட்டில் எங்களை சிறிலங்கா அரசு தள்ளி விட்டிருக்கிறது.

தனியார் காணிகள் அபகரிக்கப்படுவதாக போராடுகிறோம். துயிலும் இல்லம் தனியார் காணியிலா அமைந்திருந்தது என்கின்ற கேள்வி எழுப்பப்படுவது எங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும்.

விடுதலைப் புலிகளும் முன்னர் எதுவித நட்ட ஈடும் தராமல் அபகரித்திருந்தார்கள். நாங்கள் காணிக்கான பெறுமதியை தமிழர்களிடம் கொடுத்தே காணியை பெறுகின்றோம் என்று சிறிலங்கா அரசு சொல்வதற்கு ஒரு வாய்ப்பு இது

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா படையினர்.. தென்னிலங்கையில் படைமுகாம் அமைக்க அரச காணிகளை எடுத்திருப்பது போல.. வடக்கில் எடுக்கவில்லை. மாறாக பொதுமக்களின் நிலங்களே அபகரிக்கப்பட்டு அங்கு இராணுவத்திற்கும்.. குடியேற்றத்திற்கும் நிரந்தர வதிவிடங்களும் கட்டுமானங்களும் அமைக்கப்படுகின்றன.

 

சிலர் இதனை மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பிற்கு அரச காணிகள் சில பயன்படுத்தப்பட்டதை சரிப்படுத்த முனைவதோடு.. புலிகளும் காணி அபகரிப்புச் செய்தனர் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்புச் செயலை நியாயப்படுத்த முனைகின்றனர்.

 

விடுதலைப்புலிகள் வீடற்றவர்களுக்கு இடம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு ஓடியோரின் வீடுகளை எடுத்துக் கொடுத்ததும்.. திட்டமிட்ட சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்களும் ஒன்றல்ல.

 

மேலும் புலிகள் உள்ளூர் மக்களை அடித்து விரட்டி விட்டு.. காணிகளை அபகரித்து நிரந்தர குடியிருப்புக்களோ.. முகாம்களோ.. குடியேற்றங்களோ நடத்தவில்லை. வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் நிலம் கூட யாழ்ப்பாணத்தில் புலிகளால் அபகரிக்கப்படவில்லை. மாறாக.. நிலப் பயன்பாட்டை உள்ளூர் பொருண்மியத் தேவைக்கு உபயோகப்படுத்தினர். இதனால் மக்களும் நன்மை அடைந்தனர். இது இரண்டிற்கும் இடையில்  பலத்த வேறுபாடுண்டு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நடுநிலை எழுத்தாளர் என்று இப்படித்தான் நிரூபிக்கமுடியும்

அதுக்கு

இனம்

பற்று

தாயகம்

என்றெல்லாம் இருக்கப்படாது

சுத்த சைவப்பழம் அவர் :(

நெடுக்காலபோவான் சொல்வது மிகச் சரி! இரண்டு ஒன்றல்ல. ஆனால் உலகம் எதை செவிமடுக்கிறது என்பதுதான் முக்கியம்.

இன்றைய நிலையில் "தனியார் காணிகள் பறிக்கப்படுகின்றன" என்கின்ற கோசம்தான் சரியானது. எங்களை நோக்கி குற்றச்சாட்டு திரும்பக் கூடிய சந்தர்ப்பங்களை நாம் முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாரோட காணியை எல்லாம் எடுத்து ....

கடைசியில .... படையினருக்கு தாரை வார்த்தது தான் மிச்சம் ....

புலிகள் எடுத்து வச்சிருந்த முகாம் காணிகளையும் அப்பிடியே எடுக்காமல் விட்டுட்டான் எண்டு சந்தோச படுங்கோ ..... :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் சொல்வது மிகச் சரி! இரண்டு ஒன்றல்ல. ஆனால் உலகம் எதை செவிமடுக்கிறது என்பதுதான் முக்கியம்.

இன்றைய நிலையில் "தனியார் காணிகள் பறிக்கப்படுகின்றன" என்கின்ற கோசம்தான் சரியானது. எங்களை நோக்கி குற்றச்சாட்டு திரும்பக் கூடிய சந்தர்ப்பங்களை நாம் முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

 

உலகம் சொல்வதை எல்லாம் நியாயம் என்று கேட்டுக் கொண்டு நாம் போராட வெளிக்கிடவில்லை. நாம் போராட ஆரம்பித்தது முதல் உலகம் எங்கள் போராட்டம் நியாயம் என்றும் முத்திரை குத்தியதும் இல்லை..! உலகில் எந்தப் போராட்டத்திற்கும் அப்படி நடந்ததும் இல்லை.

 

போராட்டங்களின் நீட்சிகளும்.. தன்மைகளும்... விளைவுகளும் ஏற்படுத்தும் தாக்கங்களும்.. பூகோள அரசியல்.. இராணுவ.. பொருண்மிய நலன்களில் பரம்பலில் ஏற்படும் மாற்றங்களும்.. மனித உரிமைகள் மீறல்களுக்கான ஆதாரங்களும் வெளிப்பட போது தான்..... உலகம் என்பதான உலக ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் தென்பட்டன.

 

நிச்சயமா.. மக்களின் காணிகள் இராணுவ இயந்திரத்தால் பறிக்கப்படுவதும்.. திட்டமிட்ட இனப்பரம்பலை சிதைக்கக் கூடிய..குடியேற்றங்கள் நடத்தப்படுவதும்  தான் இன்றுள்ள பிரச்சனை.

 

இது குறித்து... பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கோரி.. புலிகள் பேச்சுக்களை இடைநிறுத்திய போது.. பலர் குறைபட்டுக் கொண்டார்கள்.. ஒரு செற்றில்மெண்டுக்கு வந்திட்டு.. இதனை முன்னிறுத்தலாம் என்று புலிகளுக்கு அறிவுரை சொன்னார்கள்.

 

ஆனால் புலிகள் கடைசிவரை.. உறுதியாக நின்றார்கள். பாதுகாப்பு வலயங்கள் அகற்றக்கப்பட்டு மக்கள் அங்கு குடியேற அனுமதிக்க வேண்டும் என்று. முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்திற்கு சமாந்திரமாக இது நிகழ வேண்டும் என்பதும் அங்கு முன்வைக்கப்பட்டது..!

 

அன்று புலிகளின் அந்த நிலைப்பாட்டை எதிர்த்தவர்கள் கூட இன்று.. ஐயோ நிலம் பறிபோகுதே என்று அழுகிறார்கள். உலகம் அன்று புலிகள் கோரிக்கை வைத்த போதும்.. வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தது.. இன்றும் அதைத்தான் செய்கிறது. காரணம்.. தமிழரின் நில இழப்பால் உலகத்திற்கு எந்த சொறி சிரங்கும் இல்லை எனும் போது அது ஏன் சொறிஞ்சு தன்னை புண்ணாக்கிக்கப் போகுது..! ஒதுங்கி இருந்து வேடிக்கை தான் பார்க்கும். அதுதான் உலகம். ஆனால் தமிழர்கள் அப்படி இருக்க முடியாது. சொறி முத்தி அது புற்றுநோயானால் மரணமாவது தமிழர்கள். உலகம் அல்ல..!

 

இவை தான் சர்வதேசத்தின் முன் காட்சிப்படுத்தப்பட வேண்டி உள்ளன. சர்வதேசம் நீதி வழங்கும் என்பதற்காக அல்ல. எமது போராட்டத்தின் தார்மீக நியாயத்தை அவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காக..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.