Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனே ஓ ... ஓ .... ஓ தமிழனே

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி வரை படிக்கும் பாடமொழியாகவும், 100க்கு 98/99 பேர் படிக்கும் மொழிப்பாடமாகவும் தமிழ் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய நிலையில் கல்லூரியில் எப்படித் தமிழைப் பாடமொழி ஆக்குவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திரு. சி.சுப்பிரமணியம் முதலில் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையிலும் பின் திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் நல்ல பணிகளைக் கல்வி அமைச்சராய்ச் செய்து வந்தார். பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகும் கூட இந்த உருப்படியான நிலை நீடித்தது. கலைக் கல்லூரிகளில் தமிழ் பாடமொழி ஆகிவிடும் என்று தான் எல்லோரும் கனவு கொண்டிருந்தார்கள்.

பிறகு நடந்ததுதான் கூத்து. முன்னேற்றங்கள் பின்னேற்றங்கள் ஆகச் சறுக்கினர். எங்கும் பணம் பண்ணுவதே குறியாகிப் போனது; கழுதை தேய்ந்து கட்டெறும்பாகித் தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

முந்தைய ஆட்சியில் தமிழ்ப் பாடமொழி பற்றி நடந்த கூத்துக்களையும் மடிக்குழைப் பள்ளிகளில் தமிழ் ஒழிந்து போன கொடுமையையும் கூறி, அவை பெருகிப் போனதும் பற்றியும் சொல்லி, எப்படி ஒரு இந்திய நிர்வாகத் துறை அதிகாரியின் சொல்லுக்குத் தலையாட்டி, இந்தப் பக்கம் தமிழ்ச் சான்றோர் பேச்சைக் கேளாது, வெறும் பரிவுரை அரசாணையோடு கலைஞர் அரசு நின்றுகொண்டது என்று சொன்னார். வியந்து போனேன். சட்டப்பேரவையைக் கூட்டி தனக்கிருந்த உறுப்பினர் பலத்தைக் கொண்டு அந்த ஆணையைச் சட்டம் ஆக்காமல் தயங்கி நின்ற தமிழினத் தலைவர் (?) பற்றி வருத்தத்தோடு சொன்னார். "வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?" என்று நான் கேட்டேன்.

இதை இங்கு எழுதியதால், அடுத்த கழகம் பற்றி இங்கு கூறவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம். தாய் எட்டடி பாய்த்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு உகந்த கழகம் தான் அதுவும். தமிழ், தமிழ் என்று சொல்லிக் குழிபறிப்பதில் அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி; இதில் என்ன ஒப்பீடு வேண்டியிருக்கிறது? சொல்ல வருவது இதுதான்.

தமிழ் தழைக்க வேண்டுமானால்........என்ன செய்யலாம்?

 

  • Replies 92
  • Views 36k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு இழந்த பகுதிகள்!

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

 

எல்லாம் உண்மைதான்...  enrage-2010.gif

வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கப்பா..!va-taper.gif

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழெனும் கேள்வி?

=====================

தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில் வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத்தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த ஒரு கெண்டை மீனைக் கொண்டு போய் உப்பங் கழியில் போட்டால் அது உயிர் வாழ முடியுமோ? பின் புலத்தை மீறிய ஒரு வாழ்வு உண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ ம் அல்லவா? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர்கள், அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உங்கள் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நீங்கள் தமிழை விட முடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாமல் இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணற்றைத் தாண்டி உயிர் வாழ முடியுமோ?

தமிழும் அது போலத்தான். தமிழ் எனும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ளாமல் தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அல்லது தெரிந்து கொண்டு தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பது ஒருவகையில் திரிசங்கு சொர்க்கமே! தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்?

"தமிழ் சோறு போடுமா?" என்று சிலர் கேட்கிறார்கள்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக்காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடாவிட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீர்களா? மேலே நான் சொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?

சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீர்களோ? நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் நின்று எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகுதான் தமிழில் வினையைச் சொல்லுகிறோம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இந்தச் சிந்தனை முறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்லுவார்கள். மாறாக மேலை மொழிகளில் SVO - நான் பார்த்தேன் அவனை என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன் SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்ளுவது கடினமே. சப்பானியர்கள் முற்றிலும் SOV பழக்கம் உடையவர்கள். அவர்கள் வெள்ளைக் காரர்களைப் புரிந்து கொள்ளுவதும், வெள்ளைக் காரர்கள் சப்பானியரைப் புரிந்துகொள்ளுவதும் மிகக் கடினம் என்பார்கள். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன்படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்லுவதாகக் கம்பன் சொல்லுவான்: "கண்டேன் சீதையை"; இது போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV என்ற சிந்திக்கும் நாம் ஓரோ வழி SVO என்பது போலும் சிந்திக்கிறோம். இந்தியர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. நீ உன் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை என்ற கேள்வி தமிழில் மிக இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல இயலும். இது போல ஆங்கிலத்தில் சொல்லுவது சிலபோதுகளில் தமிழில் நேரடியாய்ச் சொல்ல முடியாது.

சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் பேசும்போது எவை எவை தமிழ்ச்சொற்கள் என்றே தெரியாமல்தான் பேசுகிறோம். வேற்றுமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் தனித்தமிழில் பேசுவதற்கு நாம் பேச முனையும்முன் மொழிச்சொற்கள் பற்றிய அறிவு நமக்கு தேவையாகிறது. இந்த பதிவில் தமிழ் என்று நாம் கருதிய சில வடமொழிச்சொற்களை அடையாளங்கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களை தெரியபடுத்தியுள்ளேன். ஆங்கிலம் மட்டும்தான் வேற்றுமொழி அன்று, தமிழில்லாத எந்த மொழியும் வேற்றுமொழிதான். நான் வேற்றுமொழியை வெறுக்கச் சொல்லவில்லை. தாய்மொழி பேசும்போது வேற்றுமொழிச்சொற்களை மறுக்கவே சொல்கிறேன். அதற்கு இந்த பதிவு ஏதுவாக இருக்குமென்று உளமாக நம்புகிறேன்.

வடசொல் - தமிழ்ச்சொல்

அகங்காரம் - செருக்கு

அகதி - ஆதரவற்றவர்

அகிம்சை - ஊறு செய்யாமை

அங்கத்தினர் - உறுப்பினர்

அங்கீகாரம் - ஒப்புதல்

அசுத்தம் - துப்புரவின்மை

அதிகாரி - உயர் அலுவலர்

அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

அநீதி - முறையற்றது

அபயம் - அடைக்கலம்

அபிவிருத்தி - பெருவளர்ச்சி

அபிஷேகம் - திருமுழுக்கு

அபிப்பிராயம் - உட்கருத்து

அனுபவம் பட்டறிவு

ஆசிர்வாதம் - வாழ்த்து

சாதம் - சோறு

சுத்தம் - துப்புரவு

காரியம் - செயல்

காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.

காரியாலயம் - செயலகம்.

காரியதரிசி - செயலர், செயலாளர்.

ஞாபகம் நினைவு

இலட்சணம் - அழகு

அனுக்கிரகம் - அருள் செய்தல்

ஆராதனை - வழிபாடு

உற்சவம் - விழா

கும்பாபிஷேகம் - குடமுழுக்கு

கோத்திரம் - குடி

சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு

சரணம் - அடைக்கலம்

சிவமதம் - சிவநெறி

பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு

பிரசாதம் - திருப்பொருள்

பிரகாரம் - திருச்சுற்று

(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்

பிரார்த்தனை - நேர்த்திக்கடன்

மந்திரம் - மறைமொழி

மார்க்கம் - நெறி, வழி

விக்கிரகம் - திருவுருவம்

யாத்திரை - திருச்செலவு.

க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்

அபூர்வம் - அருமை

அவகாசம் - ஓய்வு

அவசரம் - விரைவு

அவசியம் - தேவை

அவயவம் - உறுப்பு

ஆகாயம் - வானம்

ஆபத்து - துன்பம்

ஆன்மா - உயிர்

இராகம் - பண்

இரத்தம் - குருதி

இலக்கம் - எண்

உபத்திரவம் - வேதனை

ஐக்கியம் - ஒற்றுமை

கஷ்டம - தொல்லை

கல்யாணம் - திருமணம்

கிரயம் - விலை

குதூகலம் - எக்களிப்பு

கோஷ்டி - குழாம்

சக்தி - ஆற்றல்

சகஜம் - வழக்கம்

சக்கரவர்த்தி - பேரரசன்

சந்தேகம் - ஐயம்

சபதம் - சூள்

சந்தோஷம் - மகிழ்ச்சி

சமீபம் - அண்மை

சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்

சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்

சந்ததி - வழித்தோன்றல்

சிகிச்சை - மருத்துவமுறை

சந்தர்ப்பம் - வாய்ப்பு

சம்பிரதாயம் - தொன்மரபு

சாபம் - கெடுமொழி

சாதாரண - எளிதான

சாட்சி - சான்று

சிங்காசனம் - அரியணை

சிநேகம் - நட்பு

சீதோஷ்ணம் - தட்பவெப்பம்

சுதந்திரம் - விடுதலை

சுயராஜ்யம் - தன்னாட்சி

சுபாவம் - இயல்பு

சேவ - தொண்டு

சேஷ்டை - குறும்பு

சௌகரியம் - வசதி

தற்காலிக வேலை - நிலையிலா வேலை

தாகம் - வேட்கை

தேதி - நாள்

திருப்தி - உள நிறைவு

நஷ்டம - இழப்பு

நிபுணர் - வல்லுநர்

நியாயஸ்தலம - வழக்கு மன்றம்

நீதி - நன்னெறி

பகிரங்கம் - வெளிப்படை

பரிகாசம் - நகையாடல்

பத்தினி - கற்பணங்கு

பத்திரிக்கை - இதழ்

பரீட்சை - தேர்வு

பந்துக்கள் - உறவினர்கள்

பாரம் - சுமை

பாஷை - மொழி

பிரசாரம் - பரப்புவேலை, பரப்புரை

பூர்வம் - முந்திய

மரணம் - சாவு, இறப்பு

மாமிசம் - இறைச்சி

மிருகம் - விலங்கு

முகூர்த்தம் - நல்வேளை

மோசம - கேடு

யந்திரம் - பொறி

யாகம் - வேள்வி

யுத்தம் - போர்

ரகசியம் - மறைபொருள், குட்டு, பூடகம்

ருசி - சுவை

லாபம் - மிகை ஊதியம்

வருஷம் - ஆண்டு

வாகனம் - ஊர்தி

வாதம் - சொற்போர், சொல்லாடல்

வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்

வாலிபர் - இளைஞர்

விஷயம் - பொருள், செய்தி

விபத்து - துன்ப நிகழ்ச்சி

விவாகம் - திருமணம்

வீரம் - மறம்

வேகம் - விரைவு

ஜனங்கள் - மக்கள்

ஜயம் - வெற்றி

ஜாக்கிரதையாக - விழிப்பாக

ஜென்மம் - பிறவி

ஸ்தாபனம் - நிலையம், அமைப்பு

நன்றி : நந்தகுமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி வரை படிக்கும் பாடமொழியாகவும், 100க்கு 98/99 பேர் படிக்கும் மொழிப்பாடமாகவும் தமிழ் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய நிலையில் கல்லூரியில் எப்படித் தமிழைப் பாடமொழி ஆக்குவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திரு. சி.சுப்பிரமணியம் முதலில் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையிலும் பின் திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் நல்ல பணிகளைக் கல்வி அமைச்சராய்ச் செய்து வந்தார். பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகும் கூட இந்த உருப்படியான நிலை நீடித்தது. கலைக் கல்லூரிகளில் தமிழ் பாடமொழி ஆகிவிடும் என்று தான் எல்லோரும் கனவு கொண்டிருந்தார்கள்.

பிறகு நடந்ததுதான் கூத்து. முன்னேற்றங்கள் பின்னேற்றங்கள் ஆகச் சறுக்கினர். எங்கும் பணம் பண்ணுவதே குறியாகிப் போனது; கழுதை தேய்ந்து கட்டெறும்பாகித் தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

முந்தைய ஆட்சியில் தமிழ்ப் பாடமொழி பற்றி நடந்த கூத்துக்களையும் மடிக்குழைப் பள்ளிகளில் தமிழ் ஒழிந்து போன கொடுமையையும் கூறி, அவை பெருகிப் போனதும் பற்றியும் சொல்லி, எப்படி ஒரு இந்திய நிர்வாகத் துறை அதிகாரியின் சொல்லுக்குத் தலையாட்டி, இந்தப் பக்கம் தமிழ்ச் சான்றோர் பேச்சைக் கேளாது, வெறும் பரிவுரை அரசாணையோடு கலைஞர் அரசு நின்றுகொண்டது என்று சொன்னார். வியந்து போனேன். சட்டப்பேரவையைக் கூட்டி தனக்கிருந்த உறுப்பினர் பலத்தைக் கொண்டு அந்த ஆணையைச் சட்டம் ஆக்காமல் தயங்கி நின்ற தமிழினத் தலைவர் (?) பற்றி வருத்தத்தோடு சொன்னார். "வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?" என்று நான் கேட்டேன்.

இதை இங்கு எழுதியதால், அடுத்த கழகம் பற்றி இங்கு கூறவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம். தாய் எட்டடி பாய்த்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு உகந்த கழகம் தான் அதுவும். தமிழ், தமிழ் என்று சொல்லிக் குழிபறிப்பதில் அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி; இதில் என்ன ஒப்பீடு வேண்டியிருக்கிறது? சொல்ல வருவது இதுதான்.

தமிழ் தழைக்க வேண்டுமானால்........என்ன செய்யலாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1001143_171786259658170_1985740329_n.jpg
 
”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)

(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.

அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-

-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!

— with Vishwa D Rationalist.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சாதனையாளருக்கு விருது !

 

1014344_599851280049534_1681068393_n.jpg

சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.

சங்க இலக்கியமே தமிழின் அடிப்படை இலக்கியம் என்றும் அதில் இன்றைக்கு பழக்கத்தில் இல்லாத பல சொற்கள் இருப்பதால் அதன் மொழிபெயர்ப்பு மற்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை விட மிகவும் சிக்கலும் சிரமமுமான ஒன்று என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்தார்.

உதாரணமாக விறலி எனும் சொல்லுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் ஒப்பான சொல் இல்லை என்றும் அப்படியான வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கூடுதல் சிரமங்கள் தோன்றின எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி எனும் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் தொடர்ச்சியாக வந்த தமிழக அரசுகள் சங்க இலக்கியத்துக்கு போதிய அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார் வைதேகி ஹெர்பர்ட்.

இதுவரை சங்க இலக்கியத்தின் பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி இதர ஆறு படைப்புகளையும் அடுத்த ஆண்டு (2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் கூறுகிறார்.
பதிற்றுப்பத்தை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகக் கூறும் அவர், அப்போது பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார்.
வைதேகி ஹெர்பட் அவர்களின் பேட்டி மாற்று மீடியா வடிவில் இயக்க சங்க இலக்கியத்தை பொருத்தவரையில் இதுவரை யாருமே ஒரு நூலுக்கு மேல் மொழிபெயர்த்தது கிடையாது எனக் கூறும் அவர், தன்னுடைய மொழிபெயர்ப்பு படைப்புகளில் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தில் பொருள் சொல்லியுள்ளதாகவும் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தன்னுடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் சொல்கிறார்.

தனது மொழிபெயர்ப்புகள் வர்த்த ரீதியில் எவ்வித பலனையும் அளிக்காது என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும் வைதேகி ஹெர்பர்ட் கூறுகிறார்.


ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

♥, தமிழ் -கருத்துக்களம்-
1044174_494187783982651_68599683_n.jpg

 


 
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

நன்றி : Unmai Sudum

Visit our Page -► தமிழ்ப் பற்றாளர்கள்
1044128_373071069459686_780201960_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1016677_172315292938600_1241485303_n.jpg

மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்?

சரி, வழிபாடு எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று ஹிந்துக் கோயிலுக்கு மட்டும்தானா? மற்ற மதக்காரர்களுக்கு இந்த அறிவுரை இல்லையா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தான் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது அந்தத் தமிழர்களுக்கு தி.கவினர் போராட முன்வர வேண்டும் அல்லவா! எப்பொழுதுதாவது மசூதியில் தமிழில் குரான் ஓதப்பட வேண்டும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதுண்டா? அல்லது வீரமணிதான் சொன்னதுண்டா? இல்லையே ஏன்?

இதோ, நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?

கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!

தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துகளைத் தாங்கிவரும் இதழ் ‘நந்தன் இதழ்.’ ஈ.வே. ராமசாமி நாயக்கரை யாராவது விமர்சித்ததால் உடனே ‘நந்தன்’ இதழில் மறுப்புரை வரும். தலையங்கத்திலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் படம் போட்டுதான் வரும். அந்த அளவுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரை துணைகொண்டு வரும் ‘நந்தன்’ (99 நவம்பர் 1-15) இதழ், ‘குழப்பவாதிகள்’ என்னும் தலையங்கத்தை எழுதியிருக்கிறது.

இதோ அந்தத் தலையங்கம்:-

‘‘முதல் மாதம் என்பதற்காகச் சித்திரையில் விதைப்பதில்லை. மூத்தவர்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள் ஆவதில்லை.

அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலம் நிரந்தரமாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் இந்நேரத்தில், இத்தகைய குழப்பமான, பிற்போக்கான கருத்துக்களை சி. சுப்ரமணியம் போன்றவர்கள் வெளியிடுவது அவர்களை மூத்த அறிஞர்களாகக் காட்டவில்லை. முதிர்ந்த குழப்பவாதிகளாகத்தான் காட்டுகிறது. தினமணி போன்ற ஏடுகள் இக்கருத்தை ஆதரிப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த மொழிப்போராட்டத்தின்போது ஒரு வரலாற்றுப் பிழை நேர்ந்தது. இந்தி மொழியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் ஒரு சேர எதிர்க்கத் தவறியதால் நேர்ந்த பிழை அது! இந்தி எப்படி நமக்கு அந்நிய மொழியோ ஆங்கிலமும் அப்படித்தான். இதனை நாம் கணிக்கத் தவறிய காரணமத்தினால்தான் ‘பேச்சுத் தமிழ்’ ஆங்கிலத்தின் ஆக்கிரமிரப்பால் சீரழிந்து போய்விட்டது. ‘மணிப்பிரவாள’ நடையில் இருந்து தமிழை மீட்டு தமிங்கில நடைக்குத் தாரை வார்த்துவிட்டோம். இந்த வரலாற்றுப் பிழையை நேர் செய்தாக வேண்டும். ‘தொடர்பு மொழியாக’ ஆங்கிலம் வேண்டும் என்பதெல்லாம் இந்த விஞ்ஞான யுகத்தில் அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள். ஒலியின் வேகத்தையும் விஞ்சுகிறது கணினிகளின் மொழிமாற்றும் திறன்வேகம்!

இந்நிலையில் இந்தி, ஆங்கிலம், இந்த இரண்டு அந்நிய மொழிகளின் ஆதிக்கங்களையும் அகற்றிவிட்டுத் தமிழைத் தமிழ்நாட்டின் ஒரே பயிற்று மொழியாக தமிழ்நாட்டில் ஒரே ஆட்சி மொழியாக, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழையும் ஒன்றாக ஆக்குவது ஒன்றே தமிழை வாழ்விக்கும், தமிழரை வாழ்விக்கும் ஒரே வழியாகும்.

இன்று இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் அரியணையில் ஏற்றிவிட்டால் தமிழ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும்.

தமிழைத் தமிழ்நாட்டின் பயிற்று மொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் கொண்டுவருவதற்காக, தமிழ் உணர்வாளர்கள் போராடுவது மட்டும் போதாது. ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக்கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாகத்தான் வாழநேரும்.’’

இந்தத் தலையங்கத்தில் ‘நந்தன்’ இதழ், இரண்டு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.

1. ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டோம்.

2. தமிழ் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து விட்டது. அதனால் ஆங்கிலம் வேண்டாம்.

இந்த இரண்டு விஷயங்களை ஆராயும் முன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
‘தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்காதே’ என்ற கோஷம் 1926-ப் பிறகுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தியை வித்திட்டவர் யார் தெரியுமா? சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்காதே என்று எந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரோ அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு வித்திட்டார்.

கவிஞர் கலைக் களஞ்சியம் இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கட்டுரை!

‘பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

‘திரு.வி.க. வின் வாழ்க்கை குறிப்புகள்’ என்ற நூலில் பக்கம் 436-ல் ‘ராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே’ என்ற திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வே. ரா. 1925-க்குப் பிறகு அவர் பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல்கட்டமாக அவரால் வித்திடப்பட்ட இந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

‘சித்திர புத்திரன்’ என்ற புனைபெயரில் பெரியார் ஈ.வே.ரா. 07-03-1926-ல் தனது குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வே.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம்தான் என்ன?

பெரியார் ஈ.வே.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைபெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வே.ராதான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வே.ராவைப் பார்த்து ‘நீதானே தென்னாட்டில் இந்திக்கு வித்திட்டாய்’ என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்குப் பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க, அதை நீதிக் கட்சியினர் எதிர்த்த போது நீதிக்கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வே.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?

மூன்றாம் வகுப்புவரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வே.ராவுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்களின் மீதும், தமிழ்மொழியின் மீதும் திடீரென்று அவரது 47-வயதில் பாசமும், பற்றும், பீறிட்டுவரக் காரணம்தான் என்ன? அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.

தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுடையவர் போல நடந்து கொண்டு வந்த பெரியார் ஈ.வே.ரா நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

1.6.1954-ல் வெளியான ‘விடுதலை’ இதழில் பெரியார் ஈ.வே.ரா, ‘நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம் என்று என்னைக் கூடக்கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்கவே மாட்டான்’ என்கிறார்.

‘‘தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி, சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப்படுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை’’ என்றும் “ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல’’ என்றும் ‘‘என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை’’ என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்” என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.

1967-ல் நடந்த தேர்தலில்போது பெரியார் ஈ.வே.ரா ஆதரித்து வந்த காங்கிரசும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வே.ரா. 01.10.1967ல் ‘விடுதலை’ .இதழில் ‘‘தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?’’ என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரிவிட்டார் என்பதுதான்.

“பெரியார் ஈ.வே.ராவின் பேச்சுக்களையும் செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், இந்தியை அவர் உள உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் இந்தியை அவர் எதிர்க்க காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது’’
(புதிய கோடாங்கி, ஏப்ரல்-2003)

கவிஞர் கலைக்களஞ்சியம் சொல்வதுபோல ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஹிந்தி மொழி எதிர்ப்புக்குக் காரணம் பார்ப்பனர்களின் மேல் இருந்த வெறுப்புதான் என்பதை அறியலாம்.

மேலும் ஒரு கருத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் கூறுகிறார்.

பாவாணர், ‘‘(பெரியார்)… இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாய்ச் சொன்னார்’’ என்று கூறுகிறார். (நூல்: பாவாணர் வரலாறு)

ஆக இந்தியெதிர்ப்பு தமிழ்ப் பற்றால் அல்ல என்பது தெளிவாகிறது.

இனி நந்தன் இதழ் விஷயத்திற்கு வருவோம். ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டதற்கு காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான். ஆம். அந்த வரலாற்றுப் பிழையைச் செய்து ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்த ஆங்கிலப் பற்றுதான், அதை எதிர்க்க தவறிவட்டதற்கு காரணம். நாம் ஏற்கனவே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கிலமோகம் பற்றி பார்த்தோமல்லவா!

மேலும், நந்தன் இதழ் கொண்டாடுகிற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கில மோகத்தைப் பார்ப்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

*நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.
(விடுதலை. 18-10-1962)

*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.
(விடுதலை. 06-07-1968)

*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை.
(விடுதலை. 29-06-1968)

*ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி-II)

இதிலிருந்து தெரிவதென்ன? ஆங்கிலத்தை எதிர்க்காததற்குக் காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கில மோகம்தான் என்பது தெளிவாகிறதல்லவா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கருத்துக்களைத் தாங்கி வரும் நந்தன் இதழ், ஆங்கிலம் வேண்டும் என்று சி. சுப்பிரமணியம் சொன்னதால் அவரை முதிர்ந்த குழப்பவாதி என்கிறது. ‘நந்தன்’ வழிப்படிப் பார்த்தால் ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட முதிர்ந்த குழப்பவாதிகள்! ஆம். ‘நந்தன்’ கொள்கைப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் குழப்பவாதிதான்.

நந்தன் இதழ், ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய (ஆங்கிலம் வேண்டும்) அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும் என்று சொல்கிறது. ‘நந்தன்’ வழிப்படி, முதலில் எதிர்க்க வேண்டியது ஆங்கிலம் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிமைச் சிந்தனைகளைத்தான்.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் படிக்கும்போது அந்த அடிமைச் சிந்தனையில் அகப்பட்டுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்ன ஆங்கில மோகம் பற்றியக் கருத்துக்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள் என்று கருதி தமிழர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

நந்தன் சொன்னபடி, எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக வாழ நேரிடும் அவலநிலைக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் முதிர்ந்த குழப்பவாதியின் கருத்தாகக் கருதி அதை ஒதுக்கிவிட வேண்டும்.

(‘நந்தன்’ இதழின்படிப் பார்த்தால், ‘நந்தன்’ இதழ் எதிர்க்க வேண்டியது ஈ.வே. ராமசாமி நாயக்கரைத்தான், சி. சுப்பிரமணியத்தை அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன சி. சுப்பிரமணியம் மட்டும் முதிர்ந்த குழப்பவாதியாம். ஆனால் ஆங்கிலம் வீட்டுமொழியாக, நாட்டுமொழியாக ஆக வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும் தமிழுக்காக பாடுபட்டவராம். ‘நந்தன்’ இதழின் இந்த ஓரவஞ்சனையை என்னவென்று சொல்லுவது?

ஈ.வே.ராவைப் பற்றி பாவாணர்:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி நமது உள்ளங்களிலே எழுமானால் அதற்கு விடையாக ஒன்றுமில்லை என்ற பதில்தான் வரும். ஆனால் தமிழுக்காக ஒன்றுமே செய்யாத ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கிலத்திற்காக நிறைய செய்திருக்கிறார். இதை நாம் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த கடிதம்!

தமிழ் நாட்டுத் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.

அன்பார்ந்த ஐயா,

வணக்கம்.

தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாயத்(சமுதாய) துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.

அன்பன்
ஞா. தேவநேயன்.

குறிப்பு:- திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங-ஆம் பக்கத்தில் 25-06-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகர சபைத்தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.
(தென் மொழி. 7:10, 11 பக்கம்-22-24)
(நூல்:- பாவாணர் வரலாறு)

இந்த கடிதத்திலிருந்து நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் மொழித்துறையில் அதாவது, தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று, நாம் கூறவில்லை; தமிழுக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட பாவாணர் கூறுகிறார். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருடன் இணைந்து சமூகப் பணியாற்றியவர். ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழக மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்திட்டவர் என்றெல்லாம் பாராட்டிய பாவாணர் தான் ஈ.வே.ரா. மொழித்துறையில் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கில கலைக்கல்லூரிக்கு ஈ.வே.ரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்வழிக் கல்லூரிக்கு அல்ல. தமிழுக்கு ஒன்றுமே செய்யாத ஈ.வே.ராவைத்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர் என்று சொல்லித் திரிகின்றோம். இது வெட்கக்கேடான விஷயமல்லவா!

இதிலே கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே. ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. ஈ.வே.ராவுக்கு தமிழ்மொழிமேல் பற்று இருந்தால்தானே பதில் கடிதம் அனுப்புவார்? அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்தது மலடியிடம் பிள்ளையை எதிர்ப்பார்ப்பது போல்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்மொழியை மட்டும் வெறுக்கவில்லை. தமிழ்ப் புலவர்களைக் கூட வெறுத்தார். சங்ககாலப் புலவராகட்டும் அல்லது அவருடன் வாழ்ந்த பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த கவிஞர்களாகட்டும் – அவர்கள் தமிழ் புலவர்களாக, கவிஞர்களாக இருந்தால் அவர்களின் மேல் ஈ.வே.ராக்கு வெறுப்புத்தான் இருக்கும்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற சங்ககாலப் புலவர்களை ஈ.வே.ரா. எப்படியெல்லாம் திட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேப்போல் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் ம. பொ. சிவஞானமும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வெறுப்புக்குத் தப்பவில்லை. இவர்கள் ஆதரிப்பவர்களையும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வெறுத்தார். அந்த உண்மைகளைச் சற்றுப் பார்ப்போம்.

பாரதிதாசனுக்குப் பணம் எதற்கு?

பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.

28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம்.

ஏன் தெரியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்ற விழா எனலாம் இதனை! அதோடு மாற்றார் எவ்வளவு இருட்டடிப்புச் செய்திடினும் எங்களாலும் பணம் சேர்த்து முடிப்பு அளிக்க முடியும் என்பதை உணர்த்திய விழா.. சுயமரியாதைக்காரன், நாஸ்திகன் என்று ஏளனமாகக் கருதப்பட்டவர்களுக்கும் ஒரு கவிஞன் உண்டு. அவன் புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. அவர் யார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.

அவருக்குத்தான் இதில் சற்றும் உடன்பாடு இல்லை. ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’’ என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு எவ்வளவு வெறுப்புப் பாருங்கள். இவருக்கு பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்புக் கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

கேட்டுச் செய்ய வேண்டாமோ என்று கேட்கிறார். கேட்டிருந்தால் கண்டிப்பாக ஓத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை அவரது பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பல விஷயங்களை கழகத்தவரை, முக்கியமாக அப்போது பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரையை, கேட்காமலேயே செய்திருக்கிறார். 1947-ஆகஸ்ட்டு 15ம் நாள் திராவிடருக்குத் துக்கநாள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவரையும் கலக்காமல் அறிக்கைவிட்டார். தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களில் கூட கழகத்தவரை கேட்காமலேயே செய்திருக்கிறார்.

அதனால் கேட்டு, செய்ய வேண்டாமோ என்ற கேள்வியை கேட்க ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத் தகுதியில்லைதானே!

 

- விஜய பாரதம்


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும்.
ஆனால் எத்தனை பேருக்கு அதன்
அர்த்தம் தெரியும்...?
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும்
ஐந்து அலகு நிலையுடையது.
அ - அகண்டாகார சித்தை விளக்கும்
ஓங்கார ஐம்பூதத்திற்குள்
பதி நிலையக்கரமாகும்.
இ - பதியைவிட்டு விலகாத
சித்தை விளக்குவதால் அனந்தாகார
பேதங்காட்டும் உயிர்ச்சித்த
கலையக்கரமாம்.
பதி சித்தாத்ம
கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு
குறிக்கப்படும். த்-ம்-ழ்
எழுத்துக்களுக்கு உரை:
த் - ஏழாவது மெய். அறிவின்
எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின்
படியைக் குறிக்கும்.
ழ் -
பதினைந்தாவது இயற்கையுண்மைச்
சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக்
குறிக்கும்.
எல்லா மொழிகளுக்கும் பிதுர்
(தந்தை)
மொழியென்று ஆன்றோர்களால்
கொண்டாடப்பட்டதும்,
இனிமையென்று நிறுத்தம்
சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ்
தான் இயற்கையான சிறப்பியல்
மொழியாகும்.
இவ்வாறு இராமலிங்க அடியகளார்
கூறுவதைப் போல் சுருக்கமாகச்
சொல்வதானால் "தமிழ்
மொழியே அதி சுலபமாக சுத்த
சிவானு பூதியைக் கொடுக்க
வல்லது".
(தமிழ் தேசிய மாணவர் இயக்கம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

— with Lakshaan Prithiv, Thisa Upgraded, Praveenan Sivalingam, Purusothman Nadeswaran and Praneev Ganeshamoorthy.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவியல் ஆய்வு முடிவு :

வட இந்திய மரபு வழி மரபணு (ANI) 39 - 71% இந்திய இனக் குழுக்களில் பெரும்பாலும் காணப்படுகிறது எனில், 29 - 61% (ASI) தென்னிந்திய மரபுவழி மரபணு இந்திய நாட்டில் காணப்படுகிறது என்று பொருள் கொள்வது இயல்பான ஒன்றுதான் என்ற முடிவி ற்கு நாம் வரமுடிகிறது.

ஒப்பாய்வு :

சென்னைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கற்கருவி களின் காலம் 15.10 இலக்கம் - 17 இலக்கம் ஆண்டுகள் பழமையா னது என்ற அறிவியல் ஆய்வு முடிவை முனைவர் சாந்திபப்பு அவர்கள் வெளியிட்டதன் அடிப் படையில் பார்த்தால் இந்த மரபணு ஆய்வின் முடிவு விளங்கும்.

இருபிரிவு மரபு அணுக்கள் :

இந்திய நாட்டின் 25 - வேறுபட்ட குழுக்களினிடையே நிகழ்த்தப் பட்ட மரபணு ஆய்வின் முடிவில் வடஇந்திய மரபு வழி, தென் னிந்திய மரபு வழி என இரண்டு மரபணு பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது கண்டறியப்பட்டது .

வடஇந்திய மரபு வழி மரபணு :(ANI- Ancestral North Indian)

வடஇந்திய மரபு வழி ஐரோப்பிய பெருநிலப்பகுதி , ஆசிய பெரு நிலத்தின் நடுப்பகுதி, நடு – கிழக்குப் பகுதி , ஆகிய இடங்களில் வாழும் மக்களின் மரபணுவை ஒட்டி இருக்கிறது !

தென்னிந்திய மரபு வழி மரபணு :(ASI - Ancestral South Indian)

இந்தியாவில் இன்றுவாழும் மக்களில், இரு பிரிவுகளாக பிரிந்து, தென்னிந்திய மரபு வழி மரபணு (Genetic) கொண்ட இனம் , வட இந்திய மரபு வழி மரபணுகொண்ட இனத்திலிருந்து மாறுபட்டு , கிழக்காசிய மரபணுவிலிருந்தும் வேறுபட்டு தனித்துவம் கொண்டதாக விளங்குவ தாக அறிவியல் ஆய்வு முடிவு கூறுகிறது !

தமிழ் நிலத் தொன்மையும் தொல்குடியும்:

இங்கு வாழும் மாந்த இனம் இவ்வுலகின் தொல் குடிதான் என்பது அறிவியல் ஆய்வு சார்ந்த முடிவே என்பது, இன்றும் தென்னிந்திய மரபுவழி மரபணு தனித்துவத்துடன் விளங்குகிறது என்ப தனை ஐத்திரபாத் அறிவியல் கழகமும் (CCMB), அமெரிக்கநாட்டு ஆர்வர்டு பல்கலைக்கழகமும் இணைந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

தொடர்ந்து கடற்கோளால் மூழ்கிய குமரிக் கண்டத்தில் (லெமூரியா) தோன்றிய மாந்த இனம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவிற்றா? அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்ததா ?

இந்த வினாக்களுக்கு விடையாக 15,10,000 - 17,00,000 ஆண்டுகட்கு முந்தய பழமையான கற்கருவிகள் தமிழ்நாட்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில் கிடைத்தன !

சென்னையைச் சுற்றி (பழைய வட ஆற்காடு மாவட்டம்) பன்னாட்டு வானூர்தி நிலையம் எதிரில் உள்ள பல்லாவரம் மலைகள் உள்ளிட்ட 169 இடங்களில் இந்தக் கற்காலக் கற்கருவிகள் கிடைத்துள்ளன என்பதைக் கணக்கில் கொள்க .

ஆதலின் கற்காலக் கற்கருவிகளைப் பயன்படுத் திய மாந்த இனம் 15,10,000 ஆண்டுகள் முதல் 17,00,000 வரை இங்கு வாழ்ந்தனர் எனில் அதற்கும் முற்பட்ட காலத்தில்தானே தமிழ்நிலத்தில் அவர்கள் தோன்றியும் தொடர்ந்தும் வாழ்ந்திரு த்தல் வேணடும், என்று இந்த அறிவியல் அகழ் வாய்வு முடிவு இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்கி றது.

இன்றைய ஆங்கில வழிக் கல்வியின் விளைவு !

இது பண்ணுதல் தமிழ் ! சென்னைத் தமிழ் போல !

இவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு மேனாட்டுக்காரன் அலறுகிறான் !

In the game of Cricket :," he is declared caught out " ! என்று அவனுக்குப் புரியாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்த இவனுக்கு மட்டுமே முடியும் !

இவர்கள் தமிழையா கொல்கிறார்கள்! இல்லையில்லை ஆங்கிலத்தையே !

இதைக் கேட்ட ஆங்கிலேயனும் நகைக்கிறான் ! கேரளா,கருநாடக,ஆந்திர மாநிலத்தவரும் காரி உமிழ்கிறார்கள் ! ஏன் ? அவர்கள் பேசுவது அவர்கள் மொழியில் மட்டுமே !

உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக, இல்லை ! இல்லை ! ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதி பிற உட்பகை பற்றி கூறாது விடுகிறேன்.

தன்னை அறியா , தன்னிலை அறியா தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி ! உலக வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் ! மேல்நாட்டினரும், சீனரும், யப்பாநியரும், தன் நாட்டு வரலாற்றின் அடிப்படையில்தான் அரசியல் நடத்துகிறார்கள் ! ஆனால் நாமோ !

ஏன் ? நம் அருமைச் சிங்களர் இன்றுவரை மகாவம்ச வழிகாட்டலில் மட்டுமேதான் அரசியலை நடத்தி அதன் படியே ஈழத் தமிழரை அழிதொழிக்கிறார்கள். வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் முடிந்தால் பிறருடன் கூட்டு சேர்ந்து அனைத்துத் தமிழரையும் அழிப்பார்கள். உலகமும் வேடிக்கை பார்க்கும் !

சிந்திக்கச் சொல்கிறேன் ! வழி என்ன ?

தெரியவில்லை !

உணர்ச்சிவயப்படாமல் தன் நிலை அறிந்தால் மட்டுமே போதும் ! உன்னையே நீ அறிவாய் !

வழி தானே பிறக்கும் ! நீங்கள் செய்ய வேண்டுவது நம்மை நாமறிவோம் ! உணர்வோம் ! இதுவன்றி பிறிதொன்றும் வேறில்லை !

இது ஒன்றே வழி ! வேறு முறை அன்று ! நம் தமிழருக்குள் தமிழுணர்வாளர் நீக்கிய , தமிழ் அறிந்த நம் தலைமுறை நீக்கிய அடுத்த தலைமுறை இளைஞர்கட்கும், குழந்தைகட்கும் நம் நிலை குறித்து சொல்லி சொல்வோம் !

"எப்படி இருந்த நாம் இப்படி ஆனோமே!"

நம் பெருமைகளைச் சொல்லி பின் நம் நிலை சொன்னால் புரியும் அனைவர்க்குமே !

நம் வரலாற்றை முதலில் முழுதாக அறிவோமே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத் தமிழனும்

தமிழச்சியும் பெருமையுடன்

படிக்கவேண்டியது இது...

இதனை

உங்களுடன் பகிர்வதில்

எங்களுக்குப் பெருமகிழ்ச்சி..

தயவுசெய்து

நிதானமாக முழுமையாகப் படிக்கவும்...

இது நமது முன்னோர்களின் நுட்பமான அறிவியல் அறிவினை விளக்கும் கட்டுரையாகும்..

படித்தபிறகு அனைத்துத் தமிழுள்ளங்களுக்கும் பகிரவும்..

தமிழகம்-

அறிவும் அறிவுசார்ந்த இடமும்..

பழந்தமிழ் மக்கள்

இயற்கையோடு

இயைந்த வாழ்வு

மேற்கொண்டிருந்தனர்..

எனவே, இயற்கையைப்பற்றி

நன்கு அறிந்திருந்தனர்..

இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட

இயலாவண்ணம்,

மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர்..

வாழும் முறைமைக்கு அடிப்படையான ஐவகைநிலப் பாகுபாட்டை

குறிஞ்சி,

முல்லை,

மருதம்,

நெய்தல்,

பாலை

எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர்..

இவையே பின்னர்,

திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று...

பூக்களை

உவமையாகவும்,

உருவகமாகவும் கையாளும் வண்ணம்

மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்..

மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து

நோய் நீக்கவும்,

தளர்ச்சி போக்கவும்,

ஊட்டம் பெறவும்

பயன்படுத்தியுள்ளனர்..

ஈராயிரம் ஆண்டுகளுக்கு

முன்பு வாழ்ந்த கபிலர்,

தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார்..

இந்நூல் ஆரிய அரசர்

பிரகத்தனுக்குத்

தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது...

எனவே,

இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால்

தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்..

கபிலர் பெருமானால் குறிக்கப்பெறும் பூக்கள் வருமாறு :

அடும்பு

அதிரல்

அவரை

அனிச்சம்

ஆத்தி

ஆம்பல்

ஆரம்

ஆவிரை

இலவம்

ஈங்கை

உந்தூழ்(பெருமூங்கிற்பூ)

எருவை

எறுழம்

கஞ்சங்குல்லை

கரந்தை

கருவிளம்

காஞ்சி

காயா

காழ்வை(அகிற்பூ)

குடசம் (வெள்ளை நிற பாலைப்பூ)

குரவம்

குருக்கத்தி

குருகிலை(முருக்கிலை)

குருந்தம்

குவளை

குளவி

குறிஞ்சி

குறுநறுங்கண்ணி

கூவிரம்

கூவிளம்

கைதை

கொகுடி

கொன்றை

கோங்கம்

கோடல்

சண்பகம்

சிந்துவாரம்

சிறுசெங்குரலி (கருந்தாமக்கொடிப்பூ)

சிறுபூளை

சிறுமாரோடம் (செங்கருங்காலி)

சுள்ளி

சூரல்

செங்காந்தள்

செங்கொடுவேரி

செம்மல்

செருந்தி

செருவிளை

சேடல்

ஞாழல்

தணக்கம்

தளவம்

தாமரை

தாழை

தில்லை

திலகம்

தும்பை

துழாய்

தேமா (தேமாம்பூ)

தோன்றி

நந்தி

நரந்தம்

நள்ளிருள்நாறி (இருவாட்சிப்பூ)

நறவம்

நாகப்பூ

நெய்தல்

பகன்றை

பசும்பிடி

பயினி

பலாசம்

பாங்கர்

பாதிரி

பாரம்

பாலை

பிடவம்

பிண்டி

பித்திகம்

பீரம்

புழகு(எருக்கம்பூ)

புன்னாகம்

புன்னை

போங்கம் (மஞ்சாடிப்பூ)

மணிக் குலை

மணிச்சிகை (செம்மணிப்பூ)

மராஅம் (மரவம்)

மருதம்

மா

முல்லை

மௌவல்

வகுளம்

வஞ்சி

வடவனம்

வழை

வள்ளி

வாகை

வாழை

வானி

வெட்சி

வேங்கை

வேரல் (சிறுமூங்கிற்பூ)

பூக்களின் நிலைகளை அரும்பு,

போது,

மலர்,

வீ,

செம்மல் என ஐந்து வகையாகப் பகுத்தனர்..

மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் பகுத்தனர்..

பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது..

மேலும் முல்லை அரும்பு அல்லது மல்லிகை அரும்பு போல் சிறியதாயும் கூர்மையாயும் இருப்பது அரும்பு..

அடுக்கு மல்லிகை அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது மொட்டு..

தாமரை அரும்பு போல் பெரிதாக இருப்பது முகை..

இதுவும் பசு முகை,

எதிர்முகை, கொழுமுகை என மூவகையாகும்..

பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும்..

அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல் பொதிந்து இருக்கும்.. அஃதாவது கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை பொதிந்து கிடக்கும்..

இந்நிலை போது எனப் பெறும்...

பொதிந்து கிடப்பது போது என்றாயிற்று எனக் கூறலாம்..

(பொதிந்து வைத்தல் என்றால் பொட்டலம் கட்டுவது போல் ஒன்றை உள்ளே வைத்திருத்தல்..)

மல் என்பதற்கு வளம் என்றும் பொருள் உண்டு..

எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்பெறும்..

(இவ்வாறு வளத்தை உருவாக்காதவை - மல் அற்றவை - மலடு எனப்பெறும்..)

மலர்ந்த பின்பு,

தேன் நீங்கி மகரந்தம் கெட்டு வாடிப்போன - அலர்ந்து போன - பூ அலர் எனப் பெறும்..

பூ வாடிய நிலை செம்மல் ஆகும்..

மரத்தில் இருந்து உதிர்ந்து

கீழே வீழும் பூ வீ எனக்

குறிக்கப் பெறும்..

மகரந்தப்பை, கருப்பை முதலியன பூக்களின் அடிப்படை உறுப்புகளாகும்..

இவை உரிய பக்குவ நிலைக்கு வரும்வரை, இவற்றைத் தழுவி இருப்பது,

புல்லி எனக் கூறப்பெறுகிறது..

அவ்வாறு புல்லுதல் அல்லாதது (அல்+இ) அல்லி ஆகும்..

சுருக்கமாகக் கூறுவதாயின்,

அகஇதழ் அல்லி என்றும்,

புற இதழ் புல்லி என்றும் சொல்லப்படும்...

பூக்காம்பு - தண்டு சிறியதாக இருப்பது காம்பு எனப்பெறும்..

பருமனாகவும் மென்மையாகவும் இருக்கும் காம்பு தாள் அல்லது தண்டு எனப்பெறும்..

உள்துளையுள்ள காம்பு நாளம் எனப்பெறும்..

அக்காலத்தில் தமிழ்நாட்டவரிடமே

இருந்த இந்நுட்பமான

அறிவியல் அறிவு,

இக்காலத்திலும்கூடப் பிறமொழிகளில் அமையவில்லை..

பூவின் பாகங்கள்:

புல்லி வட்டம்

அல்லி வட்டம்

மகரந்த வட்டம்

சூலகம்

என நான்கு வகைப்படும்..

இவற்றுள் புல்லி வட்டம் பூவின் புற அடுக்காகும்..

இது பச்சை நிறத்தில் இருக்கும்..

அல்லி வட்டம் என்பது பூவிதழின் தொகுப்பாகும்..

மகரந்தவட்டமானது

அல்லி,

மகரந்தப்பை,

மகரந்த இழை,

சூல்,

புல்லி,

பூத்தளம்

எனப் பகுக்கப்படும்..

சூலகத்தில்

சூல்முனை,

சூல்தண்டு,

சூல்பை,

ஆகியவை உள்ளன..

இப்பாகுபாட்டை எல்லாம்

பண்டைக்காலத்திலேயே

பாங்குடன்

நம் முன்னைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான்

தமிழில் உள்ள

அறிவியல் வளத்திற்குப்

பெருமை சேர்ப்பதாகும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக வேளாண்மை அன்றும் இன்றும் ⋅

பண்டைத் தமிழர்களின் வேளாண்மைக் காலத்தை மிகக் குறிப்பாக அறுதியிட்டுச் சொல்ல முடியாதெனினும், நாகரிகம் என்று இப்போது ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற காலத்திற்கும் முந்தையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. உலகிலேயே வாழ்நிலப் பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பது பல ஆய்வாளர்களின் ஆணித்தரமான கருத்தாகும். இது இன்று அறிவியலாளர்கள் பகுக்கின்றன திணைமவியல் (Ecological Zones) பகுதிகளுக்கு சற்றும் குறைந்ததன்று.

குறிஞ்சி எனப்படும் மலையும் மலை சார்ந்த நிலமும்,

முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலமும்

மருதம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த நிலமும்

நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த நிலமும்

நாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதற்கடுத்தாற் போல் வறட்சிக் காலத்தில் முல்லை, குறிஞ்சி என்ற பகுதிகளை பாலை என்று பிரித்தனர். ஆனால் இதற்கு ஏனைய நிலத்தைப்போல் நிலையான நிலம் கிடையாது. எந்த இடத்தையும் இயற்கை பாலையாக ஆக்குவதில்லை என்பதற்கு மிக அறிவியல் வகைப்பட்ட பார்வையாக இஃது உள்ளது.

குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து – அது அடர்ந்த காடாக இருந்தால் – அதைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அந்த இடத்தில் விதைகளைத் தூவிவிடுவார்கள். (அல்லது காட்டுப் பன்றி மண்ணைக் கீறி கிழங்குகளைத் தின்றுவிட்டுப் போன இடங்களில் விதைப்பார்கள்) தவசங்கள் இயல்பாக விளைந்து விடும். குளிர்ந்த காடுகளாக இருப்பதால் எப்போதும் மழை இருக்கும். ஆகவே குறிஞ்சி நில மக்கள் ஏர் கொண்டு உழாமல் வேளாண்மை செய்தனர். இதை மலைபடுகடாம் என்ற கடைச்சங்க நூல், ”தொய்யாது வித்திய துளர்பாடு துடவை” என்று குறிப்பிடுகிறது. அதாவது ”உழாது விதைத்த நல்ல விளைநிலம்” என்று பொருள். வளப்பமான அந்தக் குறிஞ்சி நிலத்தில் உழவேண்டிய தேவை இல்லை. அங்கு பற்றாக் குறையாக இருப்பது சாம்பல் ஊட்டம் (பொட்டாசியம்) மட்டுமே. அதற்காக அம்மக்கள் எரிந்துவிட்டு விதைக்கிறார்கள். இன்று உலகம் முழுமையும் பேசப்படுகிற அறிஞர் ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர். மேலும் குறிஞ்சி நிலத்தில் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும். நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை.

முல்லை நிலத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பைகூட எளிய கலப்பைதான்.

பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்,

”பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்

களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்

குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி” (196-199)

என்று தவசங்களைத் சேர்த்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையையும் குறிப்பிடுகின்றது.

இதே கலப்பை மருத நிலத்திற்கு வரும்போது அகன்று விரிந்து ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது. பெரும்பாணாற்றுப் படையில்,

”குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்

நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி”

என்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது. இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள். இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம். இதை வள்ளுவப் பெருமான் ”மடுத்தவாயெல்லாம் பகடன்னான்” என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார். வலுவான மாடுகள், அகன்ற கலப்பைகள் என்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது. விளைந்த தவசங்களைச் சேர்த்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்திருந்தனர். ”ஏணி எய்தா நீள் நெடு மார்பின்” (பெரும்-245) என்று மிக உயரமான குதிர்களைக் குறிப்பிடுகின்றது.

விளைந்த விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்திருக்கின்றது. பொருநர் ஆற்றுப்படை என்ற நூல்

”சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட்டு ஆக” என்று குறிக்கின்றது.

வேலி நிலம் ஆயிரம் கலம் விளைந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

இதேபோல ஒரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது. அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன. அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது.

”கௌவை போகிய கருங்காய் பீடியேழ்

நெய்கொள வொழுகின”

என்று மலைபடுகடாம் (102) கூறுகிறது.

மிகப் பண்டைய இலக்கணமான தொல்காப்பியம். ”ஏரோர்களவழி” என்ற ஒரு குறிப்பைத் தருகிறது. ஏறத்தாழ கி.மு.800 ஆண்டைச் சார்ந்த இந்நூல் தொழில் பகுப்பை வைத்து இலக்கணம் வகுத்துவிட்டது. இதில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற தொழில் பிரிவுகளையும் குறிப்பிட்டு உழவுத் தொழில் செய்பவர்களை ஒரு பிரிவாகப் பதிவு செய்கிறது. ஆயினும் இதில் வேளாண்நுட்பங்கள் பற்றி அதிகம் இல்லை. ஆனால் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக் கால இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை உழவுத் தொழிலை மிக விரிவாக 196-240 வரிகளில் விளக்கியுள்ளது.

உழவின் பெருமை பற்றியும் அதன் இன்றியமையாமை பற்றியும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் யாவையும் தவறாமல் குறிப்பிடுகின்றன. வேத (வைதீக) நூல்கள் மண்ணைக் கீறுவது பாவம் என்று உழவுத் தொழிலை குறித்தபோது தமிழிய நூல்கள் உழவைப் பெருமைக்குரியதாகக் கருதின.

”உழுதுண்டு வாழ்வாரே வாழவார் மற்றெல்லாந்

தொழுதுண்டு பின்செல்வர்” என்றும்

”பலகுடைநீழலும் தன்குடைக் கீழ் காண்பர்” என்றும் குறள் சொல்கிறது. உழவர்கள் போர் செய்யும் உரிமையும் கொண்டனர் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

”வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்த்தனர் என்ப அவர்பெறும் பொருளே” (தொல்: 626) (பொருளதிகாரம் மரபியல்)

வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருள் கொண்டதாகும். (வேள்-விருப்பம்).

கம்பர் உழவுத் தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார். அதைத் ”திருக்கை வழக்கம்” என்று சிறப்பிக்கிறார். மற்றோர் இடத்தில் மன்னர்களையே தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார்.

”மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை

ஆழிதரித்தே அருளும்கை-சூழ்வினையை

நீக்குங்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி

காக்கும்கை” என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

இதையே பெரும்பெண் புலவர் ஒளவையார் வேறு மொழியில் கூறுகிறார்,

”ஆற்றங்கரையின் மரமும் அரசுஅறிய

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றோ-ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்று நல்வழியில் கூறுகிறார். இத்தகைய சிறப்பான தொழில் இன்று சிதைந்து சிறுத்துப் போய்விட்டதை நினைத்தால் நெஞ்சம் கனக்கும்.

உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும். அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்தாற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி. தமிழிசையும் அவ்வாறு ஐரோப்பா சென்றுள்ளதை அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

மேலும் பல மேல்திசை, கீழ்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கி.மு. 300-களில் அரிசி, ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம்-இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசான ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் தேசம் சென்றது.

அரபி மொழியில் – அல்ருஸ் (al-ruz)

ஸ்பானிய மொழியில் – அராஸ் (arroz)

இலத்தின் மொழியில் – ஒரைசா (oryza)

இத்தாலியில் – ரைசே (riso)

பிரெஞ்சு மொழியில் – ரிஸ் (riz)

ஜெர்மனியில் – ரெய்ஸ் (reis)

ஆங்கிலத்தில் – ரைஸ் (rice)

இப்படியாக படிப்படியாக ஒலி மாற்றம் பெற்றது அரிசி. ஆனால் இன்று ஆங்கில அகராதிகளில் இதை இலத்தின் சொல் என்று போட்டு விட்டு, கீழைத் தேசத்துத் தோற்றம் என்றும் தோற்றம் தெரியாதவாறு குறித்துள்ளனர். என்னே இன்றைய தமிழர்களின் விழிப்புணர்வு!

எவ்வாறு அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தார்களோ அதேபோல உலகின் பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்கு பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர். கரும்பு என்பது பலராலும் இன்று விரும்பப்படும் பயிர். ஆனால் அது நமது பழம்பண்டைப் பயிரன்று. வெளியில் இருந்து வந்தது. நமக்கென்று இனிப்பைப் கொடுத்து வந்தது பனையாகும். அதியமான் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னனின் முன்னோர்கள் கிழக்காசிய நாடுகளில் இருந்து கரும்பைக் கொண்டு வந்ததாக இலக்கியக் குறிப்பு உள்ளது. கரும்பின் தோற்றகத்தை இன்று பயிரியல் அறிஞர்கள் கிழக்காசியா என்றே கூறுகின்றனர்.

”அரும்பெறல் அமிழ்த மன்ன

கரும்பிவட்டந்தோன் பெரும் பிறங்கடையே” என்று அதியமானின் மகன் பொகுட்டெழுனியைப் பார்த்து ஒளவைப் புலவர் கூறுகிறார். (புறம்:392)

மாமழை போற்றுதும்

வேளாண்மைக்கு அடிப்படை நீர். ”நீரின்று அமையாது உலகு” என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கும் வியப்புத் தருவன. ஆனால் அந்த மரவில் வந்த இன்றைய மக்கள் நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த வேதனை உண்மையாகும்.

”மாமழை போற்றுதும் மாமழைபோற்றுதும்” என்பார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டுவந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டு விட்டது. பட்டினப்பாலையில் ”வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தப் பூவுலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாதது என்ற அறிவியல் உணமையையும் அவ்வரிகள் குறிப்பிடுகின்றன.

இதேபோல, ”மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்” (நற்றிணை-99)

என்ற பாடல் வரிகள் நீர் பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

அகநானூறு, ”மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………

பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை” என்று கூறுகிறது.

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ”தேல்ஸ்” மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ”அரிஸ்டாட்டில்” போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்­ருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulies and hydraulic Research-A Historical Review) இதுதான் கி.பி. 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ”மாறாநீர்” (குறள்:701) பற்றி தெளிவுபடக் கூறியுள்ளார். இதற்கு முன்பே சங்க இலக்கியங்கள் கூறியதை நாம் பார்த்தோம்.

மழையை உலகத்தின் அச்சாணியாகப் பார்த்துள்ளனர்,

”உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப்

பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறும்

………

இரவுப் பெயல் பொழிந்து உதவியோயே” (நற்:139)

என்ற வரிகள் மழையை மக்கள் பார்த்த பார்வையைக் கூறுகிறது. ஆனால் நமது தமிழ்க் குழந்தைகள் இன்று ஆங்கிலப் பள்ளிகளில் ரெயின் ரெயின் கோ அவே (rain rain go away) அதாவது ”மழையே, மழையே! போ, போ!” என்று பாடுகின்ற அவலத்தைக் காணுகின்றோம்.

வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் சமமாகப் பாவிக்க வேண்டியது மன்னனின் பண்புகளில் தலையாயது என்பது பண்டைத் தமிழர்களின் கோட்பாடு, சாதிக்கொரு நீதி என்பது தவறு என்பது அதன் அடிப்படை, இதைக் கூறவந்த புலவர் அதற்கு எடுத்துக் காட்டாக மழையைக் கூறுகின்றார்.

”அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி” (புறம்:142)

வற்றிப் போய்விட்ட குளத்தை நிரப்பியும் அதேபோல வேறுபாடு இல்லாமல் அகன்ற வயல்களின் மீது பொழிந்தும் விளைச்சலே தராத உவர்நிலப் பகுதிகளிலும் நீரைச் சொரிந்தும் பாகுபாடு இன்றிக் கொடுக்கும் மழை என்பது இதன் பொருள்.

மாரி (மழை) என்பது தமிழகத் தாய்த் தெய்வத்தின் பெயர்.

வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வள்ளுவர் படைத்துள்ளார். ”உணவாகி, அப்படியான உணவிற்கும் உணவாகும்” மழை பற்றி (துப்பார்க்கு துப்பாகி….) அவர் இயற்றியுள்ள அதிகாரம் அனைவரும் நன்கு அறிந்ததே.

மழைபற்றிய அறிகுறிகளை பண்டை மக்கள் மிகக் கவனமாகக் பதிந்தள்ளனர். விண்மீன்களும் கோள்களும் அமையும் அமைப்பை வைத்தே மழை பொழியும் வாய்ப்பைக் கணித்துள்ளனர்.

”வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர

வறிதுவடக்கு இறைஞ்சிய நீர்சால் வெள்ளி

பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்

கவிழுங் கருவியொடு கையுற வணங்கி

மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்

கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை”

கதிரவன் வானில் வரும்போது வடக்கிருந்து ஒளிமிக்க வெள்ளியானது ஆநியம் எனப்படும். மூலத்தில் இருக்க நல்ல மழை கிடைக்கும் என்ற செய்தி உள்ளது.

இதேபோல முக்கூடல் பள்ளு,

மழை வருவதற்கான குறிகளாக, நண்டுகள் சேற்றைக் குழைந்து வளைகளை அடைப்பதும், மரக்கிளைகள் சுழன்று காற்று அடிப்பதும், மேற்கிலும் தெற்கிலும் மின்னல் சூழ்ந்து வெட்டுவதும், வானம்பாடிகள் மழைக்காக வானத்தில் பறப்பதும் கூறப்படுகின்றன. ஆற்று வெள்ளம் றாளை வர…. என்ற பாடல் இதை நன்கு விளக்கும்.

மழைநீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும். என்ற நிலை குறிஞ்சி நிலத்தில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையானது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் உயர்ந்த மலைகளில் போதுமான மழைப் பொழிவு அப்போது இருந்ததால் அவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் திணை விதைப்பதும், ஐவன வெண்ணெல் விதைப்பதும் அறுப்பதுமாக இருந்தனர். இந்த மழைப் பாசன மக்கள் காடுகளை உயிர்போலக் காத்தனர். இவர்களது தேவை மிகக் குறைவு. எனவே இயற்கை இவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டே இருந்தது. தலைவி தலைவனது வருகைக்காக காத்திருந்து மழை வந்ததும் அதற்கு நன்றி சொல்வாள். என் இனிய மழையே உனக்கு நன்றி. எனது தலைவனை விரைவில் வரச் செய்த உனக்கு நன்றி என்று சொல்வாள். அதே சமயம் மற்றொருத்தி ”அட மழையே ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய்? என் தலைவன் இன்னும் வரவில்லை. நீயோ அதற்குள் வந்து என்னை இன்னலில் ஆழ்த்துகிறாயே! என்று திட்டுவாள். ஆக மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் ஒட்டிப் போன இந்த மழை முல்லைநிலத்திலும் அதே போலப் பார்க்கப்பட்டது. மாடுகளும் ஆட்டு மந்தைகளும் மழையில் நனைந்து கொண்டு நடுங்குவதும் கோவலர்கள் குழலை மறந்து நடுக்கத்தில் பல்லால் இசைப்பதும் சுவையான பதிவுகள்.

மருத நிலம்தான் பாசனத்தில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஓடும் ஆற்றின் போக்கைத் தடுத்து அதை வேண்டிய இடத்தில் வேண்டிய முறையில் பயன்படுத்த முனைந்த இந்தச் சாதனை மாந்தர்குல வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்து விட்டது. சுமேரிய, எகிப்து, சிந்து நாகரிகங்கள் தோன்றுவதற்கும் இதைப் போன்ற வேறு பல நாகரிகங்கள் கால் கொள்வதற்கும் இது வழிகாட்டிற்று. மெசபடோமியாவில் பண்டைய மக்கள் செய்த அணைக்கட்டுமானங்கள் அவர்களுக்கு விளைச்சலை அதிகம் கொடுத்ததோடு மட்டுமல்லாது, அடிக்கடி ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையும் குறைத்துள்ளது. ஊர், என்ற இடத்தில் அவர்கள் அமைத்த நீர்த் தடுப்புகள் பற்றிய செய்திகளை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

எகிப்து மக்கள் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே நைல் ஆற்றில் நீர் வரும் அளவைக் குறிக்க ஒரு அளவுமானியை நிறுவியுள்ளனர். அதன் பெயர் நைலோமீட்டர் என்பதாகும். இவர்கள் களிமண் போன்ற எளிதில் கரையாத மண்ணைக் கொண்டு அணைகளை அமைத்துள்ளனர். சிந்துச் சமவெளி மக்கள் அணைகளை அமைத்து நீரைத் தேக்கி பாசனத்தை விரிவாக்கியுள்ளனர். இவர்கள் கட்டிய அணைகளை ஆரியர்கள் எனப்படும் கால்நடை மேய்த்துக் கொண்டு வந்த மக்கள் உடைத்துள்ளனர். இதைத் தங்களது நூலான ரிக் வேதத்தில் குறித்துள்ளனர்.

”நதிகளை விடுவித்த காரணத்தால் இந்திரன் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். வான் மேகமாகக் குவிந்துள்ள நீரை அவன் விடுவிக்கிறான். இந்திரனால் விடுவிக்கப்பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு நீரோ‘ட்டத்தைத் தடுத்துள்ளனர். அசுரனாகிய விரித்திரன் ஒரு பாம்புபோல மலைச்சரிவில் படுத்துக் கிடக்கிறான். அவனை இந்திரன் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன. இந்த அரக்கனின் மூச்சற்ற உடலின் மீது நீர் பிரவாகமாக ஓடிற்று” என்று குறிப்பு உள்ளது.

இவ்வாறு பண்டைச் சமூகங்கள் ஆறுகளின் மீது அணைக்கட்டுவதும் அவர்களை எதிர்க்க முனையும் மற்றொரு குழுவினர் அதைச் சிதைப்பதும் காணப்படுகிறது. ஐரோப்பியர்கள் பாசனம் பற்றி பண்டைக் காலத்தில் அறிந்திருக்கவில்லை. நைல் ஆற்று அணைகள் மிகப் பழமையானது என்ற போதிலும் உலகின் பழமையான இன்றும் பயன்பாட்டில் உள்ள அணைக்கட்டு கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். கல்லணை கி.பி., 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சிலப்பதிகார காலம் எனலாம். இதற்கும் முன்பே தமிழகத்தில் பாசனக் கட்டுமானங்கள் பல இருந்துள்ளன. தமிழகத்தில் இன்றுவற்றிப் போய்விட்ட ஆறுகள் பல அன்று தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன. வைகையைக் கடக்க கோவலனும் கண்ணகியும் படகில் வந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்த ஆறுகளைத் தவிர்த்து மிக அதிக அளவில் செயற்கைக் குளங்களை அமைத்திருந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனப் பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே பரந்துபட்டு வேளாண்மை செய்ய வேண்டுமாயின் நீரைச் சேமிக்க வேண்டும். அதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கினர். படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு, பட்டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய் என்று 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்துள்ளன. இது தவிர சுனை, பொழில் போன்ற இயற்கை நீர் நிலைகள் தனி. நீரோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அது வாரம், பாரம், போடு, வரை, அணை, கூலம், தீரம் என்று பெயர் பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டவை. இவற்றிற்குள் வேறுபாடுகள் உண்டு.

இப்படிப்பட்ட கட்டுமானங்களை எல்லா மன்னர்களும் செய்துள்ளனர். அவர்களது நோக்கம் இடம் விட்டு இடம்பெயராமல் வேண்டுமளவு விளைச்சல் எடுக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தங்களது பெருமையையும் புகழையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினர். தங்களைக் பாடும் புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்தனர். பாசனத்தைப் பெருக்குவதன் மூலம் விளைபொருள் மீத்தம் அதிகமாயிற்று. இதனால் அண்டை நாட்டு மன்னர்களைவிட தான் உயர்ந்தவன் என்று காட்டிட ஏதுவாயிற்று. எனவே மன்னர் ஒருவரை விஞ்சி ஒருவர் பாசனத்தை விரிவாக்குவதில் முனைப்பாக இருந்தனர். கலைகளும் தொழில்களும் பல்கிப் பெருக இந்த பாசனமே அடிப்படையாயிற்று. இன்னும் மாந்தர்குல வரலாற்றில் பாசனத்தில் பிடிமானம் தளரவேயில்லை. பல்வேறு உலக நாடுகள் இன்று நாடுவிட்டு நாடு பாயும் ஆறுகளைத் தடுத்து பாசனக் கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. காலங்காலமாக இருந்த பாசன உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டின் உரிமையை தொடர்ந்து மீறி வருவதை நாம் அறிவோம். உச்ச நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற அவமதிப்புச் செய்த பின்னும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு பாசனம் என்பது போர்களுக்கான பொருளாக அன்றும் இன்றும் இருந்து வருகிறது.

கரிகாலன்

பட்டினப்பாலையும், பொருநராற்றுப் படையும் புகழ்ந்துபேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப் போல போர்களில் ஈடுபட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு கால்நடைகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான்.

”தண்கேணித் தகைமுற்றத்து

பகட்டெருதின் பலசாலை”

என்ற பட்டினப்பாலை வரிகள் இதைக் கூறுகின்றன.

இவனது மிகப்பெரும் பணிகளின் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது.

இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்ட வேண்டியவன்.

”அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்

கரிகாலன் காவிரிசூழ் நாடு” (பொருநர்)

என்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள்.

கி.பி. முதல்நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவன் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்திவந்த காவிரிக்கு அணைபோட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி ”ஓடும் நீரில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்” என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்துகொண்டே போய்விடும். அல்லது நீரை வேறுபக்கம் திருப்பிவிட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்றவேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவது கடினம். அன்றைய காலத்தில் கன்னட நாட்டினர் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதை விட மிகப் பெரிய அளவில் காட்டு வளம் உள்ளபோது எவ்வளவு தண்­ர் வரும் என்று நாம் கணக்கிடலாம்!

இதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்ட மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும்பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த அணையை பேயர்டு சுமித் என்பார் தென்னிந்திய பாசனம் (Irrigation in South India) என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியால்தான் கண்டறியப்பட்டது. ஆர்தர் காட்டன் இந்த அணையை ”பெருமித அணை” (Grand Anaicut) என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த அணை அன்று கட்டப்பட்டது என்றால் திருவரங்கம் எனப்படும் தீவுப்பகுதியில் காவிரி பிரிந்து கொள்ளிடம் என்றும் காவிரி என்றும் ஓடி மீண்டும் கல்லணைப் பக்கம் இணைகிறது. பொதுவாக காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறுவார்கள். திருவரங்கம் அருகே கொள்ளிடத்தின் அமைப்பு நிலமட்டத்தைவிட உயர்வாக உள்ளது. அதே சமயம் கல்லணைப் பக்கம் வந்தவுடன் அதன் நிலமட்ட உயரம் குறைகிறது. இதனால் அந்தக் காலத்தில் அடிக்கடி காவிரி உடைந்து பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு உடைக்கின்ற இடத்தில் ஆற்றின் போக்கை மிக இயல்பாக அணை ஒன்று கட்டி திருப்பிவிட்டுள்ளனர். இதனால் வெள்ளச் சேதம் குறைந்ததோடு வேளாண்மையும் பெருகிற்று.

பல்லவர் தந்த பாசனம்

சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள். ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப் பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரெனப் பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன். இதிலிருந்தே இவனது பெருமை காணக்கிடைக்கிறது.

இளந்திரையன் கரிகாலனின் பேரன் என்ற செய்தியும் உள்ளது. இப்படியான இந்தத் தமிழ் மன்னன் மிக அருமையாக பாசனப் பணிகளை மேற்கொண்டவன். இவன் அமைத்த ஏரி தென்னேரி என்றழைக்கப்படும் திரையன் ஏரி ஆகும். இந்த ஏரி காஞ்சிபுரத்திற்கு தெற்கு 10 மைல் தொலைவில் உள்ளது. நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடு இந்த திரையன் ஏரியைப் பற்றி குறிப்பிடுகின்றது.

பல்லவர்கள் பல்வேறு வகையான பாசனக் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் பல வாரியங்களை அமைத்துள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், செப்பேடுகள், கல்வெட்டுகளின் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.

இவர்கள் தமிழரல்லாத இனத்தவர்கள் ஆயினும் பின்னர் தமிழோடு இரண்டறக் கலந்து விட்டனர். இவர்கள் நிறையக் காடுகளை வெட்டி வயல்களாக மாற்றியுள்ளனர். தமிழகத்தின் வடபகுதியில் இவர்கள் செய்த பாசனப் பணிகளால் இன்றும் அங்கு வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

கூரம் செப்பேடு ”வித்யா விநீத பல்லவ பரமேச்சுர கரம் எடுத்து ஏரி தோண்டி” என்று குறிக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு வைரமேகத் தடாகம் என்ற குளத்தை உருவாக்கியதற்கான செய்தியைக் கூறுகிறது. இது தவிர நாட்டுக்கால், ஆற்றுக்கால் என்ற இரண்டு வாய்க்கால் கட்டுமான முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஆற்றிலிருந்து நேரடியாக நீரை வயலுக்கு கொண்டு வரக்கூடிய அமைப்புகள் மற்றும் ஏரிக்கு நீர் கொண்டு வரும் அமைப்புகள் என்று தெரிகிறது. இது தவிர நீரூற்று வாய்க்கால்கள், ஊற்றுக்கால் என்று கூறப்படுகின்றன. இதை ஒளவையார் குறிப்பிடும் ”ஊற்றுக்காலால் உலகூட்டும்” என்ற தொடர் நினைவூட்டுகிறது. பாலாற்றில் இருந்து நீரானது பல ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவை தவிர கூற்றன் வாய், வா(ய்)த்தலை, தலைவாய், முகவாய் என்று பெயருள்ள பாசனக் கட்டுமானங்கள் ஆற்றிலிருந்து நீரை வயலுக்கு கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. திருச்சி அருகே உள்ள வா(ய்)த்தலை, போன்ற ஊர்கள் இதற்கு நல்ல சான்று. இவற்றைப் பராமரிக்க நிலமானியங்கள் வழங்கப்பட்டிருந்தன.

சிற்றூர்களில் குடியாட்சி முறை நன்கு நிலவியிருந்தது. முறையான தேர்தல்கள் நடந்துள்ளன. தன்னாட்சியுடன் கூடிய நிர்வாக அமைப்பு இருந்தது. இந்த சிற்றூராட்சியின் கீழ் அலுவல் முறைப்படி பல சிறு குழுக்கள் இருந்தன. இவற்றுக்கு வாரியங்கள் என்று பெயர். இன்றைய அரசு அமைந்துள்ள வாரியங்களுக்கு முன்னோடியாக அன்றைய பல்லவ நாட்டு மக்கள் முன்னோடியாக இருந்ததை அறிய முடிகிறது. அவை

1. சம்வத்சர வாரியம் – பொது வாரியம்

2. தோட்டவாரியம் – தோட்டக்கால் பயிர்களைப்பற்றியது.

3. ஏரி வாரியம் – ஏரிகள் பராமரிப்பு, ஏரிப் பாசனம்

4. கழனி வாரியம் – மருத நில வயல்களைப் பற்றியது.

5. பஞ்ச வாரியம் – வரிவசூல் பற்றியது

6. கணக்கு வாரியம் – ஏர், மதகு, அணைக்கட்டு, கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது.

7. தடிவழி வாரியம் – வயல், பாத்திகளுக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.

இவ்வளவு நுட்பமான அறிவியல் முறையில் மேலாண்மை அமைப்பை உருவாக்கியமை இன்றும் வியப்பாகவே உள்ளது. இந்த வாரியங்கள் கிராமசபையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்துள்ளன

நன்றி : தொகுப்புகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும்.

அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

மாயன் காலண்டர்

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம் & தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது.

நன்றி: தேடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்:

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம்

பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக

விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு

இல்லாத சிறப்பு) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து

நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள்

அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க,

செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும்

இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும்

இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச்

சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை

பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும்

கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச்

சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த

நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும்

இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள்

அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை,

கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை

உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ்

எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக

மூலமாக விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை

பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும்

தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத

தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும்

சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை

தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும்

கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத்

துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின்

மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும்

பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப்

பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு

அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை

""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!''

ம.சோ. விக்டர் நேர்காணல்

மொழி ஆய்வுத்துறையின் முக்கிய பிரிவுகளில் முதன்மையானது சொல்லாய்வுத் துறை. ஒரு சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிந்து விளக்கிக்கூறும் சொல்லாய்வு மூலம் ஒரு மொழியின் செவ்வியல் தன்மையை உணர முடியும். சொல்லாய்வுத் துறையில் தன்னிகரற்றுத் திகழ்ந்து தமிழுக்கு அணி சேர்த்தவர் பாவாணர். பாவாணருக்குப் பிறகு மொழி ஆய்வை மிக நுட்பமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரே. அவர்களில் தனித்துவமான கோணத்தில் தமிழின் தொன்மையை ஆய்ந்து வருபவர் மொழியறிஞர் ம.சோ. விக்டர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவரது தமிழறிவு மிகப் பரந்தது என்றால் மிகையில்லை.

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர். இவரது முதல் ஆய்வு நூலான "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' நுட்பமான கவனம் பெற்றது. இந்த நூலைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் பத்தொன்பது தமிழாய்வு நூல்கள், தமிழ்மொழியின் தொன்மையை ஆணித்தரமான தரவுகளோடு முன்வைக்கின்றன. இவரது ஆய்வின் தெளிந்த குரல், தமிழ்மொழி தனது தாக்கத்தை உலக மொழிகளில் செலுத்தியிருப்பதை நிறுவுகிறது. இவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்தோம்...

ஒரே ஆசிரியரின் உழைப்பில், ஒரே நேரத்தில் பத்தொன்பது மொழி ஆய்வு நூல்கள் வெளிவருதல் என்பது தமிழ் கூறும் நல்லுலகில் மிகுந்த ஆச்சரியமூட்டக்கூடியதாகவும், தமிழ்மொழி குறித்த ஆய்வில் இதற்குமுன் நிகழ்ந்திராத பாய்ச்சலாகவும் இருக்கிறது. இத்தகைய பதிப்பு முயற்சி எப்படிச் சாத்தியமானது? தவிர, 2004-ல் வெளிவந்த உங்களது முதல் மொழி ஆய்வு நூலான "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துக்கு எத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தீர்கள்?

""எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துக்கான எதிர்வினைகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மொழி ஆய்வில்- குறிப்பாக சொல்லாய்வு என்று வருகிறபோது, மிக ஆழமான ஆய்வினை வரலாற்றின் துணை கொண்டு, புவியியலின் துணைகொண்டு நிறுவிட வேண்டும். நான் எனது முதல் சொல்லாய்வை முடித்த கையோடு அதைப் புத்தகமாகவும் எழுதி முடித்தேன். அதனைப் பதிப்பிக்கும் முன்பு, தமிழறிஞர் கள், பேராசிரியர்களிடம் கொடுத்து கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். எனவே ஒளியச்சு செய்த பிரதியை பதினைந் துக்கும் அதிகமானவர்களிடம் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒப்புதலான கருத்தையும் தரவில்லை; எதிரான கருத்தையும் தர வில்லை. இறுதியாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் மொழி யியல் அறிஞருமான பொற்கோ அவர்களைச் சந்தித்து பிரதி யைக் கொடுத்தேன். தாமதமின்றி படித்து முடித்த பொற்கோ என்னை அழைத்து, "உங்கள் ஆய்வும், அதன் முடிவுகளும் மறுக்க முடியாதபடி வலுவாக இருக்கின் றன. யார் என்ன சொன்னாலும் எதை யும் காதில் போட் டுக் கொள்ளாதீர்கள். உடனடியாக இதைப் பதிப்பித்து வெளி யிடுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார். அதன் பிறகே எனது சொந்தப் பணத்தில் அந்த நூலைப் பதிப் பிக்கும் வேலைகளில் இறங்கினேன். எழு பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எனது பொருளாதா ரச் சூழலுக்கு இந்தத் தொகை பெரிய சுமைதான். எனினும் தயக்கமின்றி பதிப்பித்தேன். ஆய்வின் முடிவுகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காக அறிஞர்கள், பேராசிரியர்கள் என்று பலருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். ஆனால், ஓராண்டுகள் வரை எந்த விதமான எதிர்வினைகளும் இல்லை. பதிப்பிக்கும் போதே சில நண்பர்கள், "தங்களின் தாய்மொழி குறித்து மட்டுமல்ல; பண்பாடு குறித்தும் கவலை அற்றவர்களாக தமிழர்கள் வாழத் தலைப் பட்டு விட்டார்கள். இவர்களை நம்பி நீங்கள் இத்தனை பெரிய தொகையைச் செலவு செய்ய வேண்டுமா?' என்றார்கள். ஆனால் நான் அவர்களுக்கு மறுமொழியாக, "இந்த பூமிப்பந்தில் கடைசித் தமிழனும் அழிந்து விட்டால்கூட, தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும். இன்று நூற்றுக் கும் அதிகமான உலக மொழிகளில் தமிழின் தாக்கம் இருக்கிறது. அதுதானே எனது ஆய்வு. எனவே நிச்சயம் சில தமிழர்களாவது இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு நம்மை ஆதரிக்க வருவார்கள். அதுவரை காத்திருப்போம்' என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.

நண்பர்களை அமைதிப்படுத்தி விட்டேனே தவிர, தொடர்ச்சி யாக நமது ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வரமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இந்த நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் எனது நூலை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர் "தி பார்க்கர்' கருணாநிதி என்னை முடுக்கிவிட்டார். ""எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' ஆய்வு நூல், இருபதுக்கும் அதிகமான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது' என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அடுத்த புத்தகம் வராது என்ற அச்சம் காரணமாக, நான் தனித்தனி ஆய்வுகளாக முன்னெடுக்க விரும்பிய பல முடிவு களை இந்த ஒரே புத்தகத்தில் கொட்டியிருந்தேன். அதை அவர் கண்டுபிடித்து விட்டார். நல்லேர் பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் பத்தொன்பது புத்தகங்களின் சுருக்கம்தான் "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' ஆய்வு நூல்.

பிறகு அச்சாளர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி முதல் புத்தகத்தில் நான் ஆய்ந்து முன்வைத்த செய்திகளை விரிவு படுத்திப் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். கடந்த நான்காண்டு காலத்தில் இப்படிப் பதினைந்து புத்தகங்களை எழுதி முடித்து, கையெழுத்துப் பிரதியை நண்பர் கருணாநிதிக்கு அனுப்பிவிடுவேன். அவர் ஒளியச்சு செய்து, எனக்குப் பிழைப் படியை அனுப்புவார். நான் பிழை திருத்தி அவருக்கு அனுப்புவேன். எங்கே நான் சோர்ந்துவிடுவேனோ என்று எண்ணி, "உங்கள் ஆய்வுகளைப் பதிப்பிக்க நிச்சயம் யாராவது வருவார் கள். யாராலும் நிராகரிக்க முடியாத ஆய்வுகள்' என்று என்னை இடையறாது இயங்க வைத்தார். அவரது நம்பிக்கையும் எனது நம்பிக்கையும் வீண் போகாத வண்ணம் ஓர் அற்புதம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதாசிவம் என்பவர் எனது நூலைப் படித்துவிட்டு, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "நான் உங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல், முதன்முறையாக என்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது' என்றார். பிறகு சென்னை வரும்போது அவரை சந்திப்பதாகச் சொன்னேன். அவ்வாறே அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர், பரந்துபட்ட வாசகர் என்பதும், தமிழ் மொழி சார்ந்த நற்பணிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயைச் செலவு செய்து வருபவர் என்றும் தெரிந்தது. எனது ஏனைய ஆய்வுகளைப் பற்றித் தெரிந்துகொண்ட அவர், தமிழ் மய்யம் அமைப்பை நிறுவி, தமிழ்ப் பணியாற்றி வரும் அருட்தந்தை ம. ஜெகத் கஸ்பர் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். சதாசிவம் மூலமாக எனது முதல் நூலை ஏற்கெனவே கஸ்பர் அவர்கள் படித்திருக்கிறார். முதலில் எனது பத்து நூல்களை வெளியிடுவதாக அவர் சொன்னதும் எனக்கு பெருவியப்பு. பத்து நூல்களின் ஒளியச்சுப் பிரதிகளைப் படித்துப் பார்த்த கஸ்பர், "உங்களது மற்ற ஆய்வு நூல்களையும் கொண்டு வாருங்கள்' என்றார். பின்னர் அனைத்தையும் படித்து முடித்து "மொழி ஆய்வில் தவிர்க்க முடியாத நூல்கள் இவை' என்று அவர் சொன்னதும் எனது கண்கள் பனித்து விட்டன. இப்படித்தான் எனது முதல் நூலான "எபிரேயத் தின் தாய்மொழி தமிழே' புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் இருபது நூல்களை தமிழ் மய்யத்தின் நல்லேர் பதிப்பகம் ஒரே நேரத்தில் வெளியிட்டது.''

இத்தனை நூல்களுக்கான தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆய்ந்து எழுதி முடிக்க உங்களுக்குத் தேவைப்பட்ட கால அவகாசம் எவ்வளவு? முக்கியமாக இந்த ஆய்வு களில் இறங்க உங்களைத் தூண்டியது எது? உங்களின் பின்னணி பற்றியும் கூறுங்களேன்...

""எனது சொந்த ஊர், இன்றைய அரியலூர் மாவட்டத்தின், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை. ஒரு எளிய கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர் கடலூரில் உள்ள தூய வளனார் உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்த்து விட்டார்கள். முதல் வகுப்பு தொடங்கி பள்ளி இறுதி வகுப்பாகிய பத்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்றேன். அது மிகச்சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர்- புலவர் நற்குணம் என்ற தமிழறிஞர். எனக்குள் தமிழுணர்வை விதைத்தவர் அவர்தான். இன்னொரு பக்கம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிற காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. அண்ணாவின் பேச்சும், அவர் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் மொழிநடை அந்தக் காலகட்டத்தின் புதுமை, எழுச்சி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. அண்ணா வைத் தொடர்ந்து கலைஞரின் பேச்சும் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. பதினைந்து வயது இளைஞனாக, முப்பது கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று, சிதம்பரத்தில் அவரது பேச்சைக் கேட்கச் சென்றேன். தமிழ் இலக்கியம் குறித்து அவர் பேசியவை என்னை சங்க இலக்கியம் வாசிக்க வைத்தது. அத்தனை சிறிய வயதில், நமது சங்க இலக்கியத்தில் தமிழரின் வாழ்வும் வரலாறும் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

இன்னொரு பக்கம் எனது பள்ளியில் நடத்தப்பட்ட மறைக் கல்வி வகுப்புகளில் பைபிள் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. அந்த வயதில் பைபிளின் மொழியும், அதில் கூறப்படும் வரலாறுகளும், அந்த வரலாறுகள் நிகழ்ந்த தாகக் கூறப்படும் நாடுகளும் பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் எழுந்தது. பின்னர் பைபிளில் குறிப்பிடப்படும் இடங்கள் இன்றைய உலக வரைபடத்தில் எந்த நாடுகளில் இருக்கின்றன, அங்கே வசிக்கும் மக்கள் யார், பேசும் மொழி, அவர்களது வழிபாடு, பண்பாடு பற்றி நூலகங்களில் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித் தேன். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேலைக்குச் செல்ல வேண்டிய குடும்பச் சூழல் இருந்ததால், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இரண் டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மழைக்குக்கூட கல்லூரியில் ஒதுங்க முடியாத வாழ்க்கைச் சூழல். ஆனால் ஆசிரியர் பணி அமைதியாகச் சென்று கொண்டிருந் தது. எனக்கு ஒரு வகையில் அது சாதகமாக அமைந்து விட்டது. தமிழ் இலக்கியங்களை ஒன்றுவிடாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தனித்தமிழ் இதழ்கள் எனக்குக் கிடைத்தன. அவர் வெளியிட்ட "தென்மொழி' இதழின் தொடர் வாசகனாக மாறினேன். அந்த இதழில்தான் தேவநேயப் பாவாணர் எனக்கு அறிமுகமானார். "தென்மொழி'யில் அவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரும். அந்த கட்டுரைகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதியாக பாவாணர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றி "தென் மொழி' மூலம் அறிந்து, அவற்றை வாங்கிப் படித்தேன். அந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன என்றுதான் சொல்ல வேண்டும். "தமிழ் வரலாறு', "தமிழர் வரலாறு' ஆகிய இரண்டு புத்தகங்கள்தான் அவை. இவற்றைப் படித்து முடித்த தும், பாவாணரின் அத்தனை ஆய்வு நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்தேன். கடற்கோளால் அழிந்து போன குமரிக்கண்டம் குறித்தும், தமிழர்கள் உலகெங்கும் சென்று பரவி வாழ்ந்தது குறித்தும் தனது ஆய்வில் கோடிட்டுக் காட்டுகிறார். அதே நேரம் தமிழ் மொழியின் சொற்தொகுதியில் எவை தமிழ்ச் சொற்கள், எவை பிறமொழிச் சொற்கள், அவற்றை எப்படிக் கண்டறிவது என்று தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தை- புதிய கண்ணோட் டத்தை பாவாணர்தான் முதலில் வகுத்தார். விரிவான மொழி ஆய்வுக்கு வித்திட்டவர் பாவாணர்தான். பாவாணர் வழியில் நான் சொல்லாய்வைத் தொடங்கக் காரணமாக அமைந்தது பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் உள்ள "ஊர்' என்ற சொல். ஆபிரகாம் குடியேறி வாழ்ந்த பகுதியின் பெயர், எபிரேய மொழி எனப்படும் ஹீப்ரு மொழியிலும் "ஊர்' என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஊர் என்பது தூய தமிழ்ச் சொல்லாயிற்றே! இது எப்படி அங்கே போனது என்ற கேள்வியோடு ஆய்வில் இறங்கினேன். இப்படித் தான் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்லாய்விலும் மொழி யாய்விலும் எனது வாழ்வைச் செலுத்தி வருகிறேன்.''

பாவாணரின் வழியில் மொழி ஆய்வை இடையறாது செய்து வருவதாகச் சொல்கிறீர்கள். பாவாணரின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரமும் சிறப்பும் அவர் வாழும் காலத்தில் கிடைத்ததா?

""பாவாணர் என்றில்லை; தொல்காப்பியருக்கே கூட ஆதரவு கிடைக்காத நிலை இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் ஒரு ஆய்வாளனுடைய முடிவு களை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒரு ஆய்வு நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. பாவாணருக்கும் அதுதான் நேர்ந்தது. பாவாணரின் ஆய்வுகள் இன்றைக்கும் விவாதப் பொருளாக இருந்தாலும், அவரது பங்களிப்பை- தமிழ்மொழிக்கு அவர் சீர்செய்ததைப்போல யாரும் செய்துவிடவில்லை. அதுதான் உண்மை. மிகப்பெரிய இலக்கண ஆசிரியர்- தமிழையும் தமிழர்களின் வரலாற்றையும் புத்துயிர் பெறச் செய்த தொல்காப்பியரே பல தவறுகளைச் செய்திருக்கிறார் என்று பாவாணர் பட்டியலிட்டார். தொல்காப்பியர் மிகப்பெரிய மேதை. அவர் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்திருக்கலாமா என்று துணிந்து கேட்டவர் பாவாணர். தனது வாழ்நாள் வரை யிலும் தமிழ்ப்பணி செய்தவர் பாவாணர். தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் பிறகு சுமார் பதினெட்டு நூற்றாண்டு இடைவெளியில் தோன்றிய மாபெரும் தமிழறிஞர் பாவாணர். சொல்லப்போனால், தொல்காப்பியருக்கு உரிய இலக்கண அறிவும், திருவள்ளுவரிடம் காணப்படும் கவித்துவ மேதமையும், இவற்றோடு வரலாற்று அறிவும் பாவாணரிடம் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால் ஒரு மிகப்பெரிய ஆய்வாளராக அவர் திகழ்ந்தார். அவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்காதது குறித்து தமிழர்களாகிய நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.''

பாவாணருக்கு முன்பு தமிழாய்வை முன்னெடுத்த அறிஞர்கள் என்று யாரைக் கணக்கில் கொள்ளலாம்?

""பாவாணர் அளவுக்கு விரிவான மொழி ஆய்வை முன்னெடுத் துச் செல்ல வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் யாருமில்லை. பாவாணருக்கு முன்பு என்று வருகிறபோது, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் உலகளாவிய பரவலைப் பற்றி கருத்து சொன்னார்களே அன்றி முறையான ஆய்வினை யாரும் செய்யவில்லை. இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால் கால்டுவெல் பாதிரியாரை, மொழி ஆய்வை முன்னெ டுத்த முன்னோடி என்று குறிப்பிட முடியும். தமிழின் பல சொற்கள், ஐரோப்பிய மொழிகளில் வழக்கிலிருப்பதை அவர் தான் முதன்முதலில் சொன்னவர். தென்னகத்தில் பேசப்படும் திராவிட மொழிகளின் ஒற்றுமையை விளக்கி ஒப்பிலக்கணம் கொடுத்தவர். குறிப்பாக ஸ்கேண்டிநேவிய நாடுகள் என்று குறிப் பிடப்படுகிற நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பேசப்பட்ட மொழிகளுக்கும் தமிழுக்கும் தொடர்பிருப்பதை முதன் முதலில் சுட்டிக்காட்டியவரும் கால்டுவெல்தான். அதேபோல சமஸ் கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கோடிட்டுக் காட்டினார். கிறிஸ்துவ மிஷனரிக்காக இறைப்பணியாற்ற வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு தீவிரத்தன்மை கொண்டது இல்லை எனினும், கணக்கில் கொள்ளத்தக்க முன்னோடியானது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.

இவர்களுக்குப் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரிதிமாற் கலைஞர் வருகிறார். இந்திய மொழிகளில் மூப்புடைய மொழி தமிழே. அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னார். ஆனால் அவர் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஏதோ தமிழின்மீதுள்ள ஆர்வத்தில் சொல்லுகிறார் என விட்டுவிட்டார்கள். அதன்பிறகு மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கமே நடத்திக் காட்டினார். மறைமலைக்குப் பிறகு 1940-களில்தான் பாவாணர் அறிமுகமாகிறார்.''

எபிரேயத்தின் தாய்மொழி தமிழ்மொழிதான் என்ற ஆய்வை முன்வைக்கும் நீங்கள், மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள், மொழியறிஞர்களிடம் காணும் குறைபாடு, பலவீனம் என்று எதைச் சொல்வீர்கள்? எபிரேய மொழியை ஆய்வு செய்த மேலை நாட்டறிஞர்கள் தமிழின் தொடர்பைக் குறிப் பிட்டிருக்கிறார்களா?

""கீழை மொழிகள் குறித்த பரிச்சயம் இல்லாதது தான் மேலைநாட்டு மொழியறிஞர்களின் மிகப்பெரிய குறைபாடு என்று நான் சொல்வேன். எபிரேயம் பற்றிப் பேசுகிறபோது, தமிழ்நாட்டில்- தமிழறிஞர் களிடம்கூட எபிரேயம் என்ற சொல்லைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. எபிரேயம் என்பது கி.மு.3000 ஆண்டுகளில் பாபிலோன் நாட்டிற்குக் குடிபெயர்ந்த ஒரு மக்களினத்தின் பெயர் என்று சொல்கிறார்கள். ஏபிரேயர்கள், எபிரேயம் என்ற சொல் எப்படி வந்ததென்றால், "ஹீப்ரு' என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது அது எபிரேயம் ஆயிற்று என்கிறார்கள். "ஹீப்ரு' என்ற சொல் எப்படி வந்தது, அதனுடைய மூலச்சொல் என்ன என்று ஆராய்கிறபோது, அது "அப்பிரு' (ஆல்ல்ண்ழ்ன்) என்ற சொல்லிலிருந்து வந்தது என்கிறார்கள். அப்பிரு என்ற சொல் எப்படித் தோன்றியது, அதன் பொருள் என்ன என்று பார்த்தால், அது முழுமுற்றாகத் தமிழ்ச்சொல். இன்றைய ஈராக் நாட்டில், இரட்டையாறு என்று அழைக்கப்படுகிற டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிகள் ஓடுகின்றன. இன்றைய ஈராக் அன்றைய பாபிலோன். இவற்றில் டைகிரீஸ் ஆறு கிழக்குப் பக்கமாகவும், யூப்ரடீஸ் ஆறு மேற்குப் பக்கமாகவும் இருக்கிறது. டைகிரீஸ் ஆற்றங்கரைக்கு கிழக்குப் பக்கமிருந்து குடிபெயர்ந்து வந்த ஒரு இன மக்களைத்தான், அங்கே ஏற்கெனவே வசித்து வந்த மக்கள் "அப்பிரு' என்று அழைத்தார்கள். அந்த மக்கள் கிழக்குப் பகுதியிலிருந்து ஏன் வந்தார்கள்; அவர்கள் யார் என்பதையெல்லாம் இதுவரை எந்த வரலாற்று ஆசிரியர்களும் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். டைகிரீஸ் ஆற்றுக்கு அந்தப் பக்கமிருந்து வந்ததால் அவர்கள் "அப்பிரு' என்று அழைக்கப்பட்டார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது அந்தப் பக்கம் என்பதற்கு "அப்பிரு' என்று அவர்கள் சொல்வது "அப்புற' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. அப்புறத்து மக்கள் என்பதற்கு வரலாற்றாசிரியர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் "பட்ஹற் ள்ண்க்ங் ர்ச் ற்ட்ங் தண்ஸ்ங்ழ்.' ஆனால் "அப்பிரு' என்ற சொல், "அப்புற' என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஆய்வு செய்தவர்கள் அத்தனை பேரும் மேலை நாட்டு அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள். கீழை வரலாற்று அறிவோ, மொழிகள் குறித்தோ அறியாதவர்கள்.

டைகிரீஸ் ஆற்றின் அப்புறத்திலிருந்து வந்து நதிக்கரையில் குடியேறிய மக்கள் சில காலம் கடந்த பிறகு, பாபிலோன் தலைநகராக இருந்த "ஊர்' நகரில் குடியேறினார்கள். இந்த "ஊர்' நகரை உருவாக்கியவர் கள் சுமேரியர்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய ஈரான், ஈராக், லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், அரேபியா, எகிப்து ஆகிய பகுதிகளில் வாழ்ந்திருந்த- வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மக்களைப் பற்றி தெளிவான வரையறையோ வரலாறோ இதுவரை யாரும் கண்டறிந்து சொல்லவில்லை. குறிப்புக்களை மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் சுமேரிய மக்கள் உருவாக்கிய பாபிலோனிய நாகரீகம் கி.மு. 3000 ஆண்டுகளில் செழித்தோங்கி வளர்ந்து நின்றது என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு, அங்கே "செமிட்டிக் இன' மக்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். செமிட்டிக் இனம் எங்கிருந்து வந்தது, அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது தெரிய வில்லை. காலப்போக்கில் சுமேரிய இனமும் செமிட்டிக் இனமும் கலந்தபோது, ஒரு புதிய மொழி உருவாகி இருக்கிறது. அதை அக்கார்டிய மொழி என்கிறார்கள். இவர்களோடு அப்புறத்திலிருந்து வந்த "ஹீப்ரு' மக்கள், "ஊர்' நகரில் குடியேறி அந்த இனம் பல்கிப் பெருகும்போது, ஏற்கெனவே அங்கே வாழ்ந்திருந்த சுமேரிய மக்கள், செமிட்டிக் இன மக்களுடன் கலந்தபோது, அப்புறத்து மக்கள் பேசிய மொழி சுமேரிய மொழி, செமிட்டிக் மொழியுடன் கலந்து புதிய மொழி உருவானபோது- அதை எபிரேபிய மொழி- அதாவது "ஹீப்ரு' என்று தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஹீப்ரு எனும் எபிரேய மொழி பேசிய மக்கள் வசித்த "ஊர்' நகரத்துக்கு கிழக்கே அரபு மக்கள் இருக்கிறார்கள். மேற்குப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இப்படி கி.மு.3000 ஆண்டுகளில், மத்தியதரைக் கடலை ஒட்டிய கிழக்குப் பகுதியில் பேசப்பட்ட இத்தனை மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இந்த மொழி களைப் பேசிய மக்கள் மிகச்சிறந்த நாகரீகத்தில் செழித்தோங்கி வாழ்ந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக கி.மு. 3000 ஆண்டுகளிலேயே வரிவடிவத்திலேயே இலக்கியங்களைப் படைத் திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சுமேரியர்கள், "ஆப்பு' எழுத்து என்று சொல்லத்தக்க வகையில் களிமண் தட்டுக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த சுமேரிய வரிவடிவங்களும் சிந்துவெளியின் வரிவடிவங்களும் ஒன்றுதான் என்பது எனது ஆய்வின் உறுதியான முடிவு. ஆனால் மேலை மொழி அறிஞர்கள் யாரும் புதைந்துபோன இந்த வரலாற்று உண்மையைக் கண்டறியவில்லை. குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர்கள், அங்கே நகரிய நாகரீகத்தை வளர்த்து வாழ்ந்து வந்தனர். பின்னர் சிந்துவெளி மக்களின் ஒரு பகுதி மக்கள், புலம்பெயர்ந்து சென்று பாபிலோன் மற்றும் "ஊர்' நகர நாகரீகத்தை உருவாக்கி வாழ்ந்தார்கள். இப்படி சிந்துவெளியிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழினமே சுமேரியர், யூதர், போனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம். இதற்கு சிந்துவெளி, சுமேரிய நாகரீகங்களின் வரிவடிவங்கள் ஒத்துப்போவதை மட்டும் நான் சான்றாகக் கூறவில்லை. ஏபிரேய மாகிய "ஹீப்ரு' மொழியில் இருக்கும் எண்ணிறந்த தமிழ்ச் சொற்களின் கூட்டமே சான்று.''

சிந்துசமவெளி- மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பற்றித் தெரிய வந்தபோது, அவற்றை ஆரிய நாகரீகம் என்றல்லவா அறிவித்தார்கள்? அப்படியானால்- வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இன- மத பற்று கொண்டவர்களா?

""எல்லாரையும் அப்படிப் பொதுமைப்படுத்திவிட முடியாது. ஆனால் பலர் ஆரியச் சார்பு கொண்டவர்களாக இருந்திருக்கி றார்கள். அவ்வளவு ஏன்... தமிழ்ச்சூழலில், மொழி ஆய்வு என்றால் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது மட்டும் தான் ஆய்வு என்று சாதி பார்த்து அங்கீகரிப்பதும் நிராகரிப் பதும் நடந்து வந்திருக்கிறது. இன்றும் இப்படி துலாக்கோல் தூக்குகிற அவலம் இருந்தாலும்கூட, இத்தகைய பார்வைகள் வெகுவாகக் குறைந்து வருவது ஆய்வுகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க உதவியிருக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகம் என்று வருகிறபோது அங்கே இருந்த தமிழர் சமயம், வாழ்வியல் என்பது ஆரியர்களுக்குக் கிஞ்சிற்றும் தொடர்பற்ற ஒன்று. சிந்துவெளி எழுத்துகளை ஐந்நூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் தொல்லியலாளர்கள் படித்துப் பார்த்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கூறியிருக்கிறார்கள். இப்படிப் படித்துச் சொன்னவர்களில் மேலை நாட்டு அறிஞர்களும் சிலர் உண்டு. அவர்களில் டாக்டர் "பர்பலோ' என்பவர் சொன்ன செய்திகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் சாதகமான கருத்துகள். மிகுந்த நடுநிலையும், வரலாற்றுத் தெளிவும் கொண்டவை. அதாவது "சிந்துவெளி எழுத்துகள் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துகளே- சிந்துவெளி மொழி என்பது தமிழ்மொழியே' என்று அவர் கூறினார். இந்தக் கருத்து ஆரிய சார்புடைய ஆய்வாளர் களைப் பெரிதும் எரிச்சலடையச் செய்தது. பிறகு 1920-களில் டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஆங்கிலேயர்கள் இருப்புப் பாதை போட்டபோது பல மண்மேடுகள் எதிர்ப்பட்டன. இவற் றைத் தகர்த்து எறியும்போது பானை ஓடுகள், காசுகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் எல்லாம் கிடைத்தன. பிறகு அந்த மேடு களில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டபோது அங்கே ஒரு நகரமே புதைந்து கிடந்ததைப் பார்த்தார்கள். அதுதான் மொகஞ்ச தாரோ. இது என்ன நாகரீகம், இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்றெல் லாம் தெரியாத நிலையில், "இது ஆரிய நாகரீகமே' என்று அறிவித்து விட்டார்கள். அப்போது பம்பாய் நகரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியாரான "ஈராஸ்' என்பவர், மொகஞ்சதாரோவுக்கும் சிந்து வெளிக்கும் சென்று, அங்கே கிடைத்த பானை ஓடுகள், வரிவடிவ எழுத்துகள், இன்னபிற பொருட்களை எல்லாம் ஆய்ந்து பார்த்து, இது திராவிட நாகரீகம் என்று அதிரடியாகச் சொன்னார். இவர் இப்படிச் சொன்னதும், இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் அதிர்ச்சி அலை பரவியது. ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று சுமேரிய எழுத்துகளையும் சிந்து வெளி எழுத்துகளையும் ஆய்வு செய்து இரண்டும் ஒன்றுதான் என்றார். இத்தனை தீர்க்கமாகவும் தெளிவாகவும் அவர் ஆய்வு செய்து சொன்னதற்கு அவர் பன்மொழிப் புலமையும் பைபிள் அறிவும் வரலாற்று அறிவும் கொண்டவராக இருந்தார். மிகக் குறிப்பாக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட இருபது செவ்வியல் மொழிகளில் பரிச்சயமும் தேர்ச்சியும் பெற்றவராக அவர் இருந் ததுதான். தமிழரின் வரலாற்றுக்கு மாபெரும் திருப்பு முனையைக் கொடுத்தது ஈராஸ் பாதிரியாரின் இந்த ஆய்வுதான். ஈராஸ் பாதிரியாரின் தெளிவான ஆய்வும், அவரைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் வெளிவந்த பிறகே ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் இனி மூடி மறைப்பதற்கு எதுவு மில்லை என்று வாயை மூடிக் கொண்டார்கள்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நீலகண்ட சாஸ்திரி, பரிதிமாற்கலைஞர், ஐராவதம் மகாதேவன், ராகவன் அய்யங்கார் என்று பல அறிஞர்கள் பிராமணர்களாக இருந்த போதிலும், தமிழர்களாகவே பிறந்து வாழ்ந்ததால் மொழி ஆய்வில் ஆரிய சார்பு இல்லாமல் மாபெரும் சாதனைகளைச் செய்திருக்கி றார்கள். இவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது; முடியாது.''

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை என்றாலும், பெரும் பான்மையான ஆரிய பண்டிதர்கள், இந்தியாவின் முதல்மொழி சமஸ்கிருதமே என்றும்; தமிழை நீசமொழி என்றும் தாழ்த்தி வந்திருப்பதை- இன்னும்கூட தாழ்த்தப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

""சமஸ்கிருதம் என்பது தேவமொழி, அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் தான் எழுதப்பட்டன; அதை சூத்திரன் படிக்கக் கூடாது என்றெல் லாம் விதிகளை வகுத்தார்கள். ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழர்கள் வேதங்களைப் படிக்க வில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது அவர்கள் சமஸ்கிருத மொழியில் ஆர்வம் காட்டினார்கள். குறிப் பாக மேக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்தார். அதில் பல கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள லாம்; இன்னும் பலவற்றை நிராகரித்தும் விடலாம். பின்னர் வில்சன் என்ற ஆங்கில அறிஞர் ரிக் வேதத்தைப் படித்து அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அந்த நூல் ரிக் வேதத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. அதுவரை வேதத்தைப் படித்தறியாத பலருக்கும் இந்த நூல் வேதம் பற்றிய மாபெரும் மாயைகளைத் தகர்த்தது. தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக ரிக் வேதம் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். எனக்கும் வில்சனுடைய ஆங்கிலப் பிரதியே ஆய்வுக்குப் பயன் பட்டது. வரலாற்றறிஞர்கள் தங்களுடைய ஆய்வில், "கி.மு. 2000-க்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை' என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்கள். கி.மு.2000 என்பது அதிகபட்ச கால வரையறை. தற்காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒரு புதிய சான்று கிடைத்தது. அப்போது முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறையின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அவர், "இந்த சான்றின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.7,500 என்று அரசு முடிவு செய்கிறது' என்று அறிவித் தார். அதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், "இது திராவிட நாகரீகமா அல்லது ஆரிய நாகரீகமா?' என்று கேட்டார். ஜோஷிக்கு திராவிட நாகரீகம் என்று சொல்ல மனமில்லை. ஆரிய நாகரீகம் என்று சொல்லச் சான்றில்லை. மாறாக "இந்திய நாகரீகம்' என்று சமாளித்தார். இப்போது வரும் சான்றுகளின்படி, கி.மு.10,000 ஆண்டுகளில் சிந்துவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான செய்திகள் வருகின்றன.

ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. "சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; "சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது

நன்றி : தமிழில் மட்டும் பேசுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000380_555259854532791_1063071547_n.jpg

 

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்'' (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)

என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர்.

பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.

முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.

ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.

என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்

எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர்

அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.

எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

=====

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள்.

உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.

"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.

"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.

இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி

என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.

களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).

தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்

"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.

தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.

பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice

காரணப் பெயராகிய புதிய சொற்கள்

தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.

* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.

S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)

* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா

* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்

* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.

* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.

ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.

"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.

கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.

"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?

(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.

ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை

ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.

சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...

"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".

"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.

தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.

http://www.sathursekaran.com/

http://www.youtube.com/watch?v=gB-L3D-CZqU
http://www.youtube.com/watch?v=gOTuxIOoi7k
http://www.youtube.com/watch?v=c131JwY4cCE

தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?

இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.

தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.

கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.

19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?

20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?

எழுச்சிக்குச் சில காரணங்கள்

ஒருநாடு எழுச்சியுற்று, தனிநாகரிகம் பெற்ற நாடாகத் திகழ வேண்டுமானால்...

1) கல்வியில் சிறந்தோங்கியிருக்க வேண்டும்.

2) பெண்கல்வி, பெண்ணுரிமை பேணப்பட வேண்டும்.

3) சிறந்த அரசர்கள் அல்லது அமைச்சர்கள், தானைத் தலைவர்கள் மிகுந்திருக்க வேண்டும்.

4) ஏற்றுமதிப் பொருட்கள் இருத்தல் வேண்டும்.

5) உலக நாடுகளின் நடுநாயகமாக இருத்தல் வேண்டும்.

6) திரைகடல் ஓடி ஒடிச் சம்பாதிக்கும் வணிகர் குழு இருத்தல் வேண்டும்.

7) அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள் பல்கிப் பெருகி இருக்க வேண்டும்.

முற்காலத்தில் மிளகாய் கிடையாது. மிளகுதான் உறைப்புச் சுவையைத் தரக்கூடியது. ஒரு மூடை மிளகு ஒரு சில நேரங்களில் ஒரு சிறு மூடை தங்கத்திற்கு ஈடாக விளங்கியது. மிளகின் மருத்துவக் குணங்கள் மிளகின் விலையை எப்போதுமே உச்சத்தில் இருக்க வைத்தன. அன்று ரோமாபுரி அவையின் பிளினி அலறிய அலறல் இன்றும் நம் செவியில் விழுகின்றதே. - ஐயோ எங்கள் நாட்டுப் பொன்னும் பொருளும் தமிழகத்திற்குப் பெருவாரியாகச் செல்கின்றதே - தமிழகத்திலிருந்து அறுசுவைப் பொருள்கள் பல நாடுகளுக்குச் சென்றன. மருந்து, மருந்துப் பொருள்கள், ஆடைகள், சாயமிடப்பட்ட ஆடைகள், உருக்காலான வாளும், வேலும், மிளகும் பிற வாசனைப் பொருள்கள், யானைத்தந்தம் இன்ன பிற பொருள்கள் உலகெங்கும் சென்றன. இதனால் தமிழன் வளம் பெற்றான். தமிழ் நாகரிகம் வளம் பெற்றது. நிலை பெற்றது. உலக நாகரிகங்களின் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம் அல்லவா? மற்ற நாகரிகங்கள் கட்டுச் சோற்று நாகரிகங்கள். எனவே 300 - 400 ஆண்டுகளில் நிலை குலைந்தன. தமிழ் நாகரிகம் மட்டுமே 5000 ஆண்டுகள் நின்று நிலைத்தது.

வீழ்ச்சிக்குச் சில காரணங்கள்.

1) தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று.

2) கலப்பு மன்னர்கள் ஆட்சியும் (குலோத்துங்கன்) வேற்று மன்னர்கள் ஆட்சியும் (விசயநகர மன்னர்கள்) தோன்றின.

3) வேற்று மத மன்னர்கள் ஆட்சி (மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சி) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான்.

4) ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை.

5) தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் (மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன்- சுந்தர பாண்டியன் போராட்டம்)

6) குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல், அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது. திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது.

7) சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனைத் தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல்.
அரபியக் கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல்.

9) இடைத் தரகராக மாறிய அரேபியரும், ஐரோப்பியரும் தமிழர் வணிகத்தைச் சீரழித்தல்.

10) கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை.

11) மேற்கல்வி பூணுால் பார்ப்பனனுக்கு மட்டுமே.(ராமப்பையனின் குளறுபடிகள்)

12) போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது. தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது.

13) மிளகாய் மலிவாக வந்தது. மிளகின் ஆதிக்கம் குன்றியது.

14) ஐரோப்பியர் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர்.

15) இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்சிகளுக்கு ஆங்கிலேய கும்பினியர்களும் அதன்பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் விதித்தனர். எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியுற்றது.

சுழலும் இயற்கையின் விதி.

இயற்கை எப்பொழுதும் முடங்கிக் கிடப்பதில்லை. அஃது ஒரு சுழற்சியின் பாற்பட்டது. சுழல் விதிப்படி கீழிருப்பது மேலே வரும். மேலே இருப்பது கீழே செல்லும். தற்காலிகமாகத் தாழ்ந்திருக்கும் தமிழ் நாகரிகம் மேலே வரவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அன்று மிளகும் பிற வாசனைப் பொருட்களும் தமிழனின் வணிகக் களத்தைப் பெருக்கியது. இன்று.. கணிணியும் மென்பொருள் ஏற்றுமதியும் தமிழகத்திற்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு மாநாட்டில் பேசியதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். - கணினி இயற்கைக்கு ஒரு வரம். இன்னும் 50 ஆண்டுகளில் தமிழனின் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும். மீண்டும் தமழ் நாகரிகம் உலகில் அரங்கேறும். தமிழ் உணர்வு இப்போது 2 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனை 5 விழுக்காடு ஆக்கிவிட்டால் தமிழ் நாகரிகம் மீண்டும் உச்சம் பெறும். கணினி தமிழகத்திலலும் இந்தியாவிலும் பொற்காலத்தை உருவாக்கி உள்ளது. இதை மறுக்க முடியுமா? ஏன் மாற்றிவிடத்தான் முடியுமா? இன்னும் 50 ஆண்டுகளில் கணினி கை கொடுக்கும். அதன்பின் உயிரியல், உயிரி வேதியல், போன்றன மேலும் ஒரு 50 ஆண்டுகளுக்குத தமிழனுக்கு வரமளிக்கும். இலங்கைப் பிரச்சனையால் தமிழ் உணர்வு இன்னும் பல்கிப் பெருகும். மனநெருக்கம் மிகுதியாகும். கல்வி, மேலாண
பலவைகையான தகவல்களை கொண்டுள்ள திரி.
 
நன்றி.
 
 
  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1377133_352681244867386_640212503_n.jpg

 

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து ப
யணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.