Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை (?)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும்பும் திசையெல்லாம்
திருடப் பார்க்கிறார்கள்.
தமிழனின் தன்மானத்தை..


வறண்ட தீவாய் முல்லை மண்
வந்து போகிறது கனவில்..
ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்..
கண்களில் கூடத்தான்
தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன்


யார் யாரோ சொல்கின்றனர்,
தனி நாடு அமைப்போம் என்றும்
தனி ஆட்சி செய்வோம் என்றும்


உரிமைகள் தொலைத்து,
உயிரையும் தொலைத்து,
சலனமற்ற சடலங்களால்,
செய்யப்போகிறோமா அதை.?


கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம்
கேள்வி கேட்க ஆயிரம் பேர்
முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை
முடிந்த கதை முடிந்த கதை என்று
எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saturday, September 26, 2009

அன்று நான் எழுதிய கவிதை ஒன்று..

 

இந்தளவும் போதும் எனக்கு
 
jagath6_021.jpg

 

 
முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை

முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்

மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று

மீட்பர்களையே அழித்து விட்டு

கடைசித்துளி கண்ணீரொடு

காத்திருக்கிறது...

எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை

கடைசிப் பிள்ளை கண்முன்னே

குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்

காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்

போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி

என் மனுசியின் சதைத் துண்டங்களை

நாய்கள் தின்னும் போதும் சூ..என்று

கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்

சுருண்டு போய்க் கிடக்கின்றேன்

வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த

மனிதர்களின் குருதிக் கடலில்

மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்

கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி

போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்

போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை

நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு

போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே

போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை

கண் முன்னே அண்ணனை காடையர்

கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்

பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்

சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்

கண் கட்டி வாய் பொத்தி

காதிருந்தும் கேட்காது

கையாலாகாத் தனமாய் இருந்த

காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு

நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று

தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்

மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்

பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்

கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்

இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு

கண்ணீரையும் இழந்தோம்

இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு

இந்தளவும் போதும் எனக்கு...
 

Posted by jeeva at 10:51 AM 3 comments icon18_email.gif Links to this post

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சுதர்சன். முற்றுப்புள்ளி வைக்க எவருமே இல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைக் முடிஞ்சுது பின்னர் போடுகிறேன்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saturday, September 26, 2009

அன்று நான் எழுதிய கவிதை ஒன்று..

 

இந்தளவும் போதும் எனக்கு
 
jagath6_021.jpg

 

 
முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை

முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்

மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று

மீட்பர்களையே அழித்து விட்டு

கடைசித்துளி கண்ணீரொடு

காத்திருக்கிறது...

எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை

கடைசிப் பிள்ளை கண்முன்னே

குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்

காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்

போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி

என் மனுசியின் சதைத் துண்டங்களை

நாய்கள் தின்னும் போதும் சூ..என்று

கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்

சுருண்டு போய்க் கிடக்கின்றேன்

வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த

மனிதர்களின் குருதிக் கடலில்

மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்

கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி

போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்

போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை

நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு

போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே

போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை

கண் முன்னே அண்ணனை காடையர்

கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்

பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்

சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்

கண் கட்டி வாய் பொத்தி

காதிருந்தும் கேட்காது

கையாலாகாத் தனமாய் இருந்த

காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு

நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று

தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்

மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்

பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்

கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்

இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு

கண்ணீரையும் இழந்தோம்

இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு

இந்தளவும் போதும் எனக்கு...
 

Posted by jeeva at 10:51 AM 3 comments icon18_email.gif Links to this post

 

 

 

 

நீங்களும் சளைத்தவர் அல்ல கவி வரைய, ஆனால் எல்லோருமே களைத்து விட்டோம் களமுனையில்,,,

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.