Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினி சூறாவளி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF5712.JPG

-எஸ்.எல். அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.வை.அமீர், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.கே.பிரசாத்

அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்  மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளனதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் பெய்த மழையை அடுத்து திடீரென சில நிமிடங்களுக்கு மினி சூறாவளி வீசியது. இதனால்  மரங்கள் முறிந்து விழுந்தன. தகரங்கள் காற்றில் அள்ளுண்டன.

அத்துடன் பாடசாலைகளின் கூரை ஓடுகள் பறந்தன. முரக்கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் தடைப்பட்டது. விசேடமாக மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.

கடலில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகள்  கரைக்கு அடித்து தள்ளப்பட்டுள்ளதுடன் சில படகுகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

DSCF5715.JPG

DSCF5703.JPG

DSC04223.JPG

DSC04224.JPG

P1170650.JPG

P1170664.JPG

P1170652.JPG

P1170675.JPG

DSC_0078(2).JPG

DSC_0098(1).JPG

DSC_0130(2).JPG

  • கருத்துக்கள உறவுகள்

519929758Gustav2.jpg

மினி சூறாவளி இலங்கையை விட்டு நகர்கிறது: பாதிப்பு தொடரும்

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு திசையில், திருகோணமலைக்கு வடகிழக்கு கடற் பகுதியில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் தீவிரமடையாத சூறாவளி நகர்ந்து செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

இச் சூறாவளியானது இலங்கையை விட்டு வடக்கு திசையில் நகர்ந்து செல்வதாகவும், இதன் தாக்கத்தை இலங்கையின் பல பகுதிகளிலும் அவதானிக்க கூடியதாக இருக்கும் எனவும் அந் நிலையம் தெரிவித்துள்ளது. 

மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கடல் வரை மணத்தியாலத்திற்கு 850 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக வானிலை அவதான நிலைய பேச்சாளர் வசந்த குமார் தெரிவித்தார். 

இதேவேளை இப்பிரதேசங்களில் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என அவர் குறிப்பிட்டார். 

மீன்பிடி மற்றும் கடற் பிரயாணங்களை மேற்கொள்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கைக்கு மேலாக மற்றும் அயற் பகுதிகளில் காற்று தென் மேற்கு திசையாக மணத்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுகிறது. 

நாட்டின் பல பாகங்களிலும் வானத்தில் கருமுகில் சூழ்ந்திருக்கும். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மழை வீழ்ச்சியாக 200 மில்லி மீற்றர் பெய்யக் கூடும் என அவர் கூறினார். 

இதேவேளை மத்திய, கிழக்கு, சப்பிரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிற்கு 100 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெறும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

கடற்பரப்பிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என வசந்தகுமார் தெரிவித்தார். 

தென்மேற்கு திசை நோக்கி கடற் காற்று மணத்தியாலத்திற்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.