Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் மனதை தான் அறிவதாக மகிந்த ராஜபக்‌ஷ கூறுகிறார்!

Featured Replies

Mahinda.jpgஒரே நாட்டிற்குள் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தமிழர்கள் மனங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்பதைத் தான் நம்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள மக்களின் மனதை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாடு வேண்டுமெனக் கோரிய பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட கொப்பேகடுவையை வடக்கு மக்கள் வெற்றிபெறச் செய்தனர். ஒரே நாட்டிற்குள் வாழவேண்டும் என்ற இந்த மனப்பான்மை மீண்டும் தமிழர்கள் மத்தியில் இன்று கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு அழுத்தங்களும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களும் எமக்குப் புதியவை அல்ல. வருடக்கணக்காக இருந்த ஆயுதப் பயங்கரவாதத்தை சர்வதேசமும் பயன்படுத்திக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி இலங்கையை தமக்குத் தேவையான வகையில் இயக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்தும் முயற்சிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஊடகச் சுதந்திரம், மனித உரிமைகள் இவை அனைத்தையும் காலத்திற்குக் காலம் பயன்படுத்தி இலங்கையில் சர்வதேசம் தலையீடு செய்ய முயற்சிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக சர்வதேசம் இதனைப் பயன்படுத்தி வருகிறது.

மனித உரிமைகளைப் பேணுவதற்கோ, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கோ இவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையைப் பிளவுபடுத்துவது எப்படி? அடிமைப்படுத்திக் கொள்வது எப்படி? போன்றவை இவர்களது திட்டத்தின் உள்நோக்கமாக இருக்கிறது.

எனினும், இவற்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ளும் அறிவு தற்போது இலங்கை மக்களுக்கு இருக்கின்றது என்பதை தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

 

முழுமையான உரை 

http://tamilworldtoday.com/archives/11070

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு அழுத்தங்களும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களும் எமக்குப் புதியவை அல்ல. வருடக்கணக்காக இருந்த ஆயுதப் பயங்கரவாதத்தை சர்வதேசமூலம் நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இதனைப் பயன்படுத்தி இலங்கையை எமக்குத் தேவையான வகையில் இயக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்தும் முயற்சிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இப்படித்தான் அவர் சிங்களவருக்கு கூறியிருக்க முடியும். சிங்களம் தவறாக தமிழில் மொழிபெயர்தல் மரபு.

 

மகிந்தா சர்வதேசத்தை ஏமாற்றுவதாக நினைத்து  தமிழரை அழித்து தானும் வகையக்க மாட்டினார்.  மாட்டிகொண்டுவிட்ட வௌவால் முள்ளு பல இடங்களிலும் குத்துகிறது.  இதையே கண்டியில் எகிலபொலவும் பிலிமாதளவும் தங்கள் சண்டைகளை ராசசிங்கன் மீது எற்றி அவனையும் அழித்து தாங்களும் பிடிபட்டவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.