Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதி கூட்டவும், மலசலகூடங்களை துப்பரவு செய்யவும் இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர்! சீலரத்ன தேரர்

Featured Replies

Army-Gota.jpg

யுத்தத்தை வெற்றிகளை ஈட்டிய இராணுவத்தினர் தற்போது வீதி கூட்டுவதற்கும், மலசல கூடங்களை துப்பரவு செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றுக்கு வேறு ஆட்களைப் பயன்படுத்துமாறு தாம் கோருவதாகவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 

Seelarathana_Thero1.jpg

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது என்பதற்காக இராணுவத்தினரை வீதிகளைக் கூட்டுவதற்கும், வீதிகளிலுள்ள மலசல கூடங்களைத் துப்பரவு செய்வதற்கும், மரங்களை நடுவதற்கும், மரம் வெட்டுவதற்கும் பயன்படுத்த வேண்டாம். இவர்களுக்கு விவசாயிகளை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இன்று இராணுவத்தில் ஒரு பகுதியினர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர். எனவே இராணுவத்தினருக்கு புதிதாக இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் உதிரிகளாக தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும், இராணுவத் தளபதியிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். காரணம், இராணுவத்திற்குள் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ள ஒரு பகுதியினர் இருக்கின்றனர். அவர்கள் எந்தத் தருணத்தில் இராணுவத்தைவிட்டு வெளியேறுவார்கள் என்பது தெரியாது. ஆகவே இராணுவத்தை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தாது அவர்களுக்கு இராணுவப் பயிற்சியளித்து நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என அவர் தெரிவித்தார்.

 

http://tamilworldtoday.com/?p=11268

 

 

Kandy_02.jpg

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகள் விகாரைகளில்.... சாப்பிட்டு விட்டு, தினவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகள் விகாரைகளில்.... சாப்பிட்டு விட்டு, தினவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தலாம்.

 

 

 

ஏதோ, பல்கலைகழக பட்டதாரிகளை ஆமியில் சேர்த்த மாதிரி இருக்குது 'மொட்டையின்' கதை.
 
தெம்பிலி (இளநீர்) வித்தவனும், ஆடு மாடு அறுத்தவங்களும், தமிழர்களை கொல்லுவத்ற்காக எடுத்தால், வேலை முடிந்தவுடன், இந்த மாதிரி வேலைகளுக்கு தான் விடலாம்.
 
இப்ப தான் முஸிலிம் மக்களை பதம் பார்கலாமா என உங்கள் சக மொட்டைகள் பிளான் வேற போடுதுகள். பிறகென்ன, வேலைக்கு குறைச்சல் இல்லைதானே. 

 

மஹிந்த கொஞ்சம் கவுரவமான, மரக்கறி வியாபார வேலை கொடுத்தாரே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.