Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களும் தமிழர்களா . . . ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதா .... மனிதா  ..... !

 

                                 இவர்களும்  தமிழர்களா . . . ?

[   “ …….    பொய்யை நான் வெறுப்பதன் காரணம் என்னவென்றால்  உன்னைப்போலவே நான் என்  வாழ்கையையும்  கவனமாக கொண்டு  செலுத்த விரும்புகிறேன், அப்படி செய்ய   என்  உண்மையான நிலைமையை  நான் கணக்கிடக் கூடியதாக இருக்க வேண்டும்.  நீ எனக்கு பொய் கூறும்போது, உனக்கு உன் நிலைமை தெரியும் ஆனால் நீ எனக்கு பொய்யான விபரத்தை தந்து என்னுடைய வாழ்கையை  இருட்டடிப்பு  செய்கிறாய். ……   “      (… The reason that I hate lies is because, like you, I wish to navigate carefully through life, and to do so I must be able to calculate my true position. When you lie to me, you know your position but you have given me false data which obscures mine.   மேலும் படிக்க  : Lying. by Jonathan Wallace, www. Spectacle.org/0500/lies)  ]

 

 "இவர்களும் தமிழர்களா  .....?"   தலையங்கமே  என்ன  பிரச்சனையாக  இருக்கு  என்று  பார்கிறீர்களா ?

பிரச்சனைதான்.  விரைவாக  காசு பணம், சொத்து சுகம் சேர்த்து  வேண்டும் என்ற வெறிபிடித்த  பேராசை பல  புலம் பெயர்ந்த  தமிழர்களால் சக  புலம் பெயர்ந்த  தமிழர்களுக்கு  பல பிரச்சனைகள்.

தமிழனை தமிழன்  ஏமாற்றி  வாழ்வது  படு வேகமாக  ஒரு  நோயாக, வெறியாகசகஜமாக  பரவிக்கிடக்கிறது.   இந்த  நோய்  பிடித்த  தமிழர்களால்  ஏராளமான   தமிழர்கள் சொல்லென்னா துன்ப  துயரங்களை  கண்ணீருடன்  அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.   இவர்களின்  கபட நாடகங்களுக்கு   பலியாகி  வீடு வாசல்களை  இழந்தவர்கள், சேமிப்பை  இழந்தவர்கள் ,  வேலைகளை இழந்தவர்கள்,  பையித்தியமானவர்கள், வாழ்கையை தொலைத்தவர்கள்,  திருமணம் செய்து வாழ வேண்டிய வாழ்கையை இழந்தவர்கள்,  தற்கொலை செய்து கொண்டவர்கள்மீள  முடியாத அளவுக்கு  பாதிக்கப்  பட்ட குடும்பங்கள்  என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.   பாதிக்கபட்டவர்களின்  கதைகளை கேட்டால் கொடூரத்திலும் கொடூரம்.  ஆனால்  ஏமாற்றுக்காரர்கள்  ஈவிரக்கமற்ற விதத்தில் பொய்களை கூறி  வசதியாக இருக்கிறார்கள்.

பாதிக்க  பாதிக்கபட்டவர்கள்   நீதி மன்றங்கள்  போகாதபடி  இவர்கள் கெட்டிக்காரத்தனமாக ஏமாற்றுகிறார்கள்.  

ஏமாற்று  பேர் வழிகள் பல வகை . அதனால்  ஏமாந்த  கதைகளும் பல வகை.

கல்வி  அறிவு  குறைந்த சாதாரண மனிதர்களில்  இருந்து புத்தி ஜீவிகளும் அடங்குவார்கள்.  ஆகவே பாதிப்புகளும் பல வகை.

ஏமாற்றுபவர்கள்  விடையை  ஏற்கனவே  மனதில் வைத்துகொண்டு தாங்கள் ஏமாற்ற போகும் மனிதர்களுக்குக் கேற்ற  மாதிரி கணக்குகளை பல வழிகளில், பல தரங்களில் போட்டு கொண்டிருப்பார்கள் தாங்களே வெல்லக்கூடியதாக  .  

இந்த ஏமாற்று  பேர்வழிகள்  ஒருவனின்  அறியாமையை , தேவைகளை , ஆசைகளை , அல்லது  தங்கள் மேல் வைக்கும்  நம்பிக்கைகளை   சாதகமாக்கி , அல்லது  பிழையான வழிகளில் ஆசைகளை காட்டி   அல்லது  பொய்யான வாக்குறுதிகளை கூறி  பணத்தை அபகரிக்கிறார்கள்.  சிலர் பணத்துடன் தலைமறைவாகிறார்கள் , சிலர் செய்கிறதை செய் என்ற சண்டித்தனங்கள் செய்கிறவர்கள் , … இப்படி பல சம்பவங்கள்.

சில தமிழ் இளைஞர்கள் வேறு நாட்டவர்களுடன் இணைந்து  தமிழர் வீடுகளில் நடந்த  களவில் ஈடுபட்டதாகக்  கூடி கேள்விப்பட்டிருக்கிறோம்.  

 

அதுமட்டுமா  குடும்பகாரர்களே  வேறு குடும்பகாரர்களுடன் பழகிவிட்டு விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து  சாப்பாட்டை கொடுத்து விட்டு விருந்தாளிகளின் வீடுகளுக்கு போய்   களவெடுத்து, பிறகு பிடிபட்ட  கதைகளை  கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

எல்லாமே  தங்களுக்கு  மட்டுமல்ல தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு, பரம்பரைக்கு காசு பணம் சொத்து சுகங்கள் சேர்க்க வேண்டும் என்ற  பேராசையால் .

மிகவும்  வேதனையான, கசப்பான  என்னுடைய  சொந்த  அனுபவங்களில் ஒன்றை  உதாரணத்திற்கு இறுதியில்  கூறுமுன்  சில கருத்துக்களை உங்கள் சிந்தனைக்கு  முதலில்  கூற விரும்புகிறேன்.

" சொல்வதெல்லாம் உண்மை "  என்ற  ஒரு  டிவி  நிகழ்ச்சியை   உங்களில்  பலர் பாத்ர்திருப்பீர்கள்.    அதில் சில சம்பவங்களை  பார்க்கும்போது   நீதியை  தேடி ......நியாயத்தை தேடி .... தர்மத்தை தேடி  ... உரிமையை தேடி ... பாதுகாப்பை தேடி ...  " சொல்வ தெல்லாம்  உண்மை "  என்ற  நிகழ்ச்சியாளர்களை வேறு வழியில்லாமல்  நாடி  சிலர் வருகிறார்கள்.

சட்டங்கள்  இருக்கின்றன . . .  சட்டத்தின் காவலர்கள்  இருக்கிறார்கள்.. . வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் . . . நீதி மன்றங்கள் இருக்கின்றன ...  . ஆனால் அங்கு போயும் தாங்கள் கேட்பது  கிடைக்காது  ... ஜெயிக்க முடியாது ...  அல்லது   நீதியை பெற  பணம் வேண்டும்  அல்லது  கால விரயோகம்   என்பதாலும்  அவர்களை  நாடி வருகிறார்கள்.  சில சமயம்  பார்த்தால்  முன் பின் தெரியாத இந்த பாதிக்கபட்டவர்களுக்காக  நிகழ்ச்சிகளை பார்த்த  மக்களே  அநியாயங்களை கண்டு கொந்தளிக்கிறார்கள்.   நியாயத்தை வென்றெடுக்க மக்கள் சக்தியாக உருவெடுக்கிறார்கள்.

பொதுவாக  சாட்சிகளும் ஆதாரங்களுமே  நீதி மன்றங்களுக்கு  தேவை .  அவைகள் இருந்தால் மட்டும் நீதி கிடக்கும் என்று இல்லை.  ஏனெனில்  நீதி எப்போதுமே   உண்மையுடன்  சரியாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. அதனால்  உலகில்  நீதித்துறை எப்போதுமே  கேள்விகளுக்குரியது.

ஆச்சரியமாக  இருக்கா?    உண்மை என்பது  என்ன ?

உதாரணமாக  மனிதன் உருவாகிய கணிதத்  துறையை எடுத்து கொள்ளுங்கள்.  நாடுகள்  கடந்தாலும், தலைமுறைகள் கடந்தாலும், கலை கலாச்சாரங்கள் மாறிக்கொண்டிருந்தாலும்,  மத நம்பிக்கைகள் மாறுபட்டாலும் ,  மொழிகள் மாறி இருந்தாலும்  ஐந்துடன் ஐந்தை கூட்டினால்  பத்து தான்.  பெருக்கல்  வாய்பாட்டை உலக முழுவதும்  ஒரே  மாதிரித்தான்  படிக்கிறார்கள், பாவிக்கிறார்கள்.  பைதகரஸ் தேற்றம்  இரண்டாயித்து  அறுநூறு ஆண்டுகளுக்கு முன்  பைதகரஸ்  என்பவர்  உருவாக்கினார்.  அதில் மாற்றமே  இல்லை  எக்காலத்திலும் அது மாறாதது. கணிதத்  துறை  உண்மையானது, சரியானது . இன்றைய  உலகம்  இருபத்திநாலு  மணிநேரம் கணிதத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.  கணிதம் என்றுமே எந்த நாட்டிலும்  தூங்க முடியாது. கணிதத் துறை என்றுமே மாற்ற  முடியாத உண்மைகளை கொண்டது.   அதுஆரோக்கியமாக  வளர்கிறது. கடவுளை நம்புகிறவன் சரி, நம்பாதவன் சரி கணிதத் துறையை நம்புகிறான்.

நீதித்துறை அப்படியாஇல்லையே! 

நாட்டுக்கு  நாடு, காலத்திற்கு காலம்,  அரசியலுக்கு  அரசியல் , நீதிபதிக்கு  நீதிபதி, ஆளுக்கு ஆள், கலை கலாச்சாரங்கள், மத நம்பிக்கைகள் ஏற்ப மாறுபடுகின்றன.   உதாரணமாக  பாருங்கள்  இளம் பெண் றிசானா நபீக்கு சவூதி அரேபியாவில் கழுத்தை வெட்டி மரண தண்டனை.  அதே நாட்டில் தனது  ஐந்து வயது மகளை வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த மதகுரு விடுதலை. வல்லன் வகுத்த வழி என்பார்களே.  நீதியையும்  அவ்வழியே.  எவனின் பலம் அதிகமாக இருக்கிறதோ  அவன் பக்கம் நீதி சாய்ந்து விடுகிறது.

அதுமட்டுமா ஒரு வழக்கறிஞரை  நாடி வழக்கு போட்டால் எவளவு செலவாகும் என்று  உங்களுக்கு தெரியாதா?    செலவு  செய்தும் பலன் கிடைக்காமல் போகும் நிலைமைகளும் உண்டல்லவா?   குற்றங்கள் அதற்கான சூழ் நிலைகள், இடங்கள், ஆட்கள்  கடுகளவு மாற்றமின்றி   ஒன்றாக இருந்தாலும் அவற்றுக்கான தண்டனைகள்  ஒரே மாதிரி எப்போதும்  இருப்பதில்லை.

ஆயிரம்  குற்றவாளிகள் தப்பலாம்  ஆனால் ஒரு  நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது  என்பது நீதித்துறையின்  தாரக மந்திரம். ஆனால் ஆயிரம் குற்றவாளிகள் தப்பும் போது, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி  கிடைக்காமல் போகிறதே!    அதுமட்டுமா ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் தண்டிக்கபட்ட சரித்திரங்களும் உண்டல்லவா ?

சில பல சமயங்களில்   நீதி எப்படி  தீர்க்கபடுகிறது  என்று தெரியுமா?  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறுகிறார்  குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு  ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கின்றது !!! “ .   அறிஞர் அண்ணா கூறுகிறார். சட்டம் ஓர் இருட்டறை!  அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு  கிடைப்பதில்லை! “   சரி  ஐக்கியநாடுகள் இஸ்தாபனத்திலாவது  கிடைக்கும்   என்று  நீங்கள்  நம்புகிறீர்களா?  

கணிதத்துறை போல் மதங்களும், அரசியலும் இருந்துவிட்டால்  இந்த  உலகமே ஒற்றுமைக்கு, சமத்துவத்துக்கு,  சமாதானத்திற்கு, வழி  வகுக்குமல்லவா?

ஆங்கிலத்தில்  “NAME AND SHAME”  என்ற தலைப்பின்  கீழ் பல இணைய தளங்களை  நீங்கள் பார்க்கலாம். அது மட்டுமா  டிவி  நிகழ்ச்சிகளும்  உண்டு.  தனி  மனிதர்  முதல்   நிறுவனங்களால் ஏமாற்றப் பட்டவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் தங்கள்  பரிதாப கதைகளை வெளியிடுகிறார்கள். தங்களுக்கு  நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் புகைப்படங்களை கூடி அவற்றின் பாதிக்கப் பட்டவர்கள்  கொடுத்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட   நம் சக தமிழர்கள்  தாங்கள் எப்படி பாதிக்கப் பட்டோம் , யாரால் பாதிக்கப்பட்டோம்  என்ற உண்மை  கதைகளை  தமிழர்களுக்கு  சொல்ல நம் தமிழ்  இனைய தளங்கள்,   ஊடகங்கள்  “NAME AND SHAME”   தலைப்பு போன்ற ஒன்றை  உருவாக்கி , வழி அமைத்து கொடுக்குமாறு  வேண்டுகோள் விடுக்கிறேன்.

"வாழு, வாழ விடு"  என்ற கோட்பாட்டை  பொய்கள் கூறி  ஏமாற்றி  வாழும்  தமிழர்களுக்கு எதிரான அகிம்சா வழி போராட்ட பாதை இது.   சக மனிதனின் வாழ்க்கை ஏமாற்று பேர்வழிகளுக்கு விளையாட்டாக இருக்கிறது.  இதை மன்னிக்க, ஏற்றுக்கொள் சகிக்க முடியாது.


புலம் பெயர்ந்த நாடுகளில்  இருந்து   நம் தாயகத்திற்கு போய் அங்குள்ள  மக்களையும்  ஏமாற்றும்  காமாந்தகாரர்கள், பணம் பிடுங்கிகள்பணத்தை காட்டி தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்கிற  எல்லோரையும்  சக தமிழர்களுக்கு  அடையாளம்  காட்டுங்கள். சரியான முறையில் அட்டவணை  படுத்துங்கள் .  இவர்களின் "பெருமை"யை  அவர்களின் பரம்பரையினர்  எதிர்காலத்திலும் தெரிந்ததுகொள்ள  சேமித்து வையுங்கள்.

இவற்றால் என்ன  நன்மைகள்  என்று நீங்கள் கேட்கலாம்.

 

நம்  மக்கள்  மத்தியில் உள்ள ஆட்டுத்தோல்  போத்த  ஓநாய்கள்  அடையாளம்  காட்டப்படுகிறார்கள் . 

இதனால்  சக  தமிழர்கள் எச்சரிக்கையாக  இருக்க உதவும் அல்லவா?  இங்குள்ள  உற்றார், உறவினர்,  நண்பர்கள்  இந்த  ஓநாய்களை தங்கள் வட்டத்தில் இருந்து புறக்கணித்து  ஒதுக்கலாமல்லவா?   மேலும் பலர் முன் வந்து  இவர்களால் எப்படி எல்லாம் தாங்களும் பாதிக்கபட்டோம் என்று  சமூகத்திற்கு கூறலாம் அல்லவா? அது மட்டுமல்ல  ஏமாற்றி விட்டு தலைமறைவாக வாழும் பலரை சமூகத்திற்கு முன் கொண்டு வர  வாய்ப்பு கிடைக்கிறதல்லவா?  இந்த ஓநாய்கள் தாங்களாக இலகுவில்  மனம் திருந்த மாட்டார்கள், இவர்களை  தமிழ் சமூகம்  கூடியவரை திருத்த முயலாம்  அல்லவா?  இந்த ஓநாய்கள்  நம் தாயகத்திற்கு  உல்லாச   பிராணிகளாக ( பிரயாணிகளாக )  தங்கள் உறவினர்களிடம், நண்பர்களிடம், அல்லது  தங்கள்  சொத்துப்பத்துகளை  பார்க்க  அல்லது கோவில் திருவிழாக்களுக்கு  என்று வரும் போது  நம் தாயாக தமிழர்களும்  இவர்களை புறக்கணித்து  ஒதுக்கலாம் அல்லவா? பாதிக்கப்  பட்டவர்களுக்கு  சமூக ஆதரவு கிடைக்கும்   அல்லவா? ஏனப்பா இப்படி  செய்கிறாய்  என்று சமூகம் ஆதரவற்றவனுக்கு  ஆதரவாக எழுந்து  இந்த  ஓநாய்களை  தட்டி  கேட்க வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா?  அதுமட்டுமல்ல அந்த  ஓநாய்களும் அவமானத்திற்கு பயந்து  திருந்தி  தங்களால்  பாதிக்க பட்ட  நபருக்கோ, குடும்பத்திற்கோ பரிகாரங்கள் செய்ய முன்வரலாம் அல்லவா?  சக தமிழர்களை  மட்டுமல்ல எவனையுமே  ஏமாற்றி   பிழைக்க  எவருக்குமே  துணிவு வராது அல்லவா?  நம்பிக்கை  துரோகச்  செயல்கள் குறையுமல்லவா? எந்த ஓநாய்  ஆவது ஏமாற்றினால்  பாதிக்க படுகிறவர்கள்  உடனே NAME AND SHAME ”  போன்ற இந்த இணைய தளத்தில் வெளியீட்டு ஏமாற்றுபவர்களுக்கு எதிராக  மக்கள் ஆதரவை தேடலாம் அல்லவா?  இப்படி பல பல சமுதாயத்திற்கு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன அல்லவா ?

 

மேலும் கூட்டம் கூட்டமாக  இருந்து தமிழர்களை ஏமாற்றுபவர்கள் மிக மிக மிக  குறைவு.  ஏமாற்றி வாழ்பவர்கள் ஒன்றில்  திருமணமாகாத தனித்தவராக  அல்லது  திருமணமான குடும்பஸ்தர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக குடும்பஸ்தர்கள் அதுவும் பிள்ளை  குட்டிக்காரர்கள்  என்றால்  சமுதாயத்தில் அவர்கள்  நன்றாக வேரூன்றிய மரத்தை போல் கணிக்கபடுகிறார்கள்.  குடும்பஸ்தர்கள்  குடும்ப கஷ்டங்களை , நன்மை தீமைகளை, பாவ புண்ணியங்களை புரிந்தவர்கள், அனுபவபட்டவர்கள், முதிர்ச்சி பெற்றவர்கள்  என்று  அவர்கள்  மேல் பொதுவாக  மக்கள்  மிக அதிகமாக நம்பிக்கை வைக்கிறார்கள்  முன் பின் தெரியாத குடும்பங்களாக இருந்தாலும் கூட.    ஏமாற்றி வாழும் குடும்பங்களுக்கு அது செளகரிகமாக இருக்கிறது.  போதாக்குறைக்கு  கோவில் குளம் போய்க்கொண்டு  , மதச்  சின்னங்களையும்  உடலில் அணித்திருந்தால், கடவுளைப்பற்றியும் பேசினால்  அப்பாவி  மக்கள் இன்னும் அதிகமாக அவர்களை நம்புகிறார்கள்.

சில தமிழ் குடும்பங்களை பார்த்தால் நான் மேலே சொன்ன சிறப்பு தகுதிகளை காட்டி  கணவன் அல்லது மனைவி அல்லது கணவனும் மனைவியும்  சேர்ந்து  மற்ற  அப்பாவி  தமிழ் குடும்பங்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.

 

உதாரணமாக  சாமி வேஷம் போட்டு ஒருவன் அந்நிய  ஊரில் ஏமாற்றுவது சுலபம்.  காரணம்

அவன் போட்ட  வேஷம்  மக்களை நம்ப வைக்கும்.   அவன் ஆசாமி என்று கண்டு பிடிக்கபட்டவுடன் வேறு  ஊருக்கு போய் தன் நாடகத்தை நடத்துவான் . அவனின் நாடகம் ஓயாது   எதுவரை என்றால்  தகவல்  தொடர்பு சாதனைகளால், ஊடகங்களால்  மக்கள் எல்லோருக்கும் அவனைப்பற்றி   தெரியப்படுத்தும் வரை.

 

புலம் பெயர்ந்து நாம் வாழும்  வெள்ளையர்களின் நாடுகள் பரந்த தேசங்கள், அத்துடன் எல்லோருமே இலங்கையின் பல் வேறு பகுதிகளில் இருந்தது  அகதிகளாக வந்தேறு  குடிகள் நாங்கள் . இலங்கையில் இருந்து வந்த உறவினர்கள் , நண்பர்களை தவிர மற்றும்படி தமிழர்கள் தமிழர்களுக்கு பெரும் பான்மையாக  அந்நியவர்கள் .   ஆனால்  தமிழர்கள் என்பதால் நம்பி பழகிறோம்.  தமிழர்களுக்குள் ஆட்டுத்தோல் போத்த  ஓநாய்கள்  சிலர்  இருக்கிறார்கள் என்பதை அனுபவப்பட்ட பின்தான் காண்கிறோம்.  தலை வழுக்கையான பின் சீப்பு கிடப்பதுபோல் அனுபவம் இருக்கிறது.  ஓநாய்களிடம்  இழந்தபின் அனுபவத்தை பெற்று என்ன பலன்ஓநாய்களை அடையாளம் காட்டி  எச்சரிக்கையாக இருங்கள் என்று ஏனைய தமிழர்களுக்கு பெற்ற அனுபவங்களை கூறலாம்.  ஆட்டுத்தோல்  போத்த  ஓநாய்களை அடையாளம் காட்ட  “NAME AND SHAME”   போன்ற தகவல் பகுதி அவசியமாக இருக்கிறது.

 

விக்கி லீக்”  உலக ஆட்சிபீடங்களை  கலக்குகின்றன.  ஒன்றுமே செய்ய வழியற்றவர்களாக இருக்கிறார்கள்.  அதனுடன் ஒப்பிடும்போது “NAME AND SHAME”  என்ற  பகுதிகள் அற்பமானது,  ஆனால் அதனால் சமூகம் சார்ந்த நன்மை இருக்கிறது.  அப்பாவி மக்கள்  முன் எச்சரிக்கையாக இருக்க அனுபவப்பட்ட, பாதிக்கப்பட்ட  மக்கள்  செய்திகளை வெளியிடுகிறார்கள்.

 

 

ஏமாற்றி வாழ்பவர்கள் தனித்தனி குடும்பங்கள் . குடும்பங்கள் கூட்டு சேர்ந்து  ஏமாற்றுவதில்லை. மோசடிக் குடும்பங்களுக்கு எதிராக பாதிக்க பட்டவர்கள் மக்கள் சக்தியுடன் நியாயம் கேட்கும்போது  மோசடிக் குடும்பங்களுக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள்.  மேலும் குடும்பத்திற்கு  அதுவும்  தங்கள் பிள்ளைகளையும் பாதிக்ககூடிய அவமானம்  வருவதை பொதுவாக  யாரும் விரும்புவதில்லை.

அதனால்  தமிழர்களை  மோசடிகள் செய்து  காசு பணம், சொத்து  சுகங்கள் சேர்க்கும் குடும்பங்கள்  தங்கள்  குட்டுகள்  வெளிக்கிட்டு  விட்டதே  அல்லது வெளிக்கிட போகிறதே என்ற பயயத்தால் தாங்கள் ஏமாற்றியவர்களுக்கு  பரிகாரங்கள்  செய்யலாம்  அல்லவா?

 

ஒரு சமூக  பிராணி மனிதன்.  அவனுக்கு  உறவு மிக அவசியம். அவனால்  தனித்து வாழ முடியாது.  சக மனித  பிராணிகளை நம்பி வழவேண்டியதா யிருக்கிறது .  ஆகவே  தமிழர்கள் சக  தமிழர்களை நம்பி வாழ்வது இயற்கைதானே.

ஆனால்  தான் ஏமாற்றப் போகும்  சக பிராணியுடன்  சிரித்து  சிரித்து  பேசி, பழகி,  நம்ப வைத்து ஏமாற்றுகின்ற பிராணி என்றால் அது  மனித  பிராணி மட்டுந்தான்.  பல தமிழர்களும்  அப்படியான எண்ணத்துடன்  சக தமிழர்களுடன் பழகுகிறார்கள்.  இதனால் ஒரு தமிழன்  முன் பின் அறியாத இன்னொரு தமிழனுடன்  நம்பி, சகஜமாக பழகும்  நிலமைகள் அருகிக் கொண்டே போகிறது.

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி றை  பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி


தாய்  மண்ணை விட்டு  உறவுகள், உடைமைகள் எல்லாம்  துறந்து  அகதிகளாக  சிதறி

வெள்ளையர்கள் நாடுகளில் தஞ்சம்  புகுந்தோம்.

காசு  பணத்துடன்  வந்து  நாங்கள்  தஞ்சம் அடையவில்லை.

தமிழகத்தில்  அகதி முகாம்களில் இருக்கும்   நம் மக்கள்  அனுபவிக்கும் வாழ்க்கை  வசதிகள், மனித உரிமைகள்  என்பவற்றுடன்  ஒப்பிடும் போதும்  சரி,  நம் தாயகத்தில் இருக்கும் பாதிக்கபட்ட நம் மக்கள் அனுபவிக்கும்  வாழ்க்கை வசதிகள் ,  மனித உரிமைகள் என்பவற்றுடன்  ஒப்பிடும் போதும்   சரி வெள்ளையர்களின்  நாடுகளில்  புலம் பெயர்ந்த  நாங்கள் அனுபவிப்பது  பல  மடங்கு மேலான  அதுவும் சொகுசான  வாழ்க்கை  வசதிகள்,  மனித உரிமைகள்.   ஆனால்  இந்த ஓநாய்கள்  எண்ணங்கள் முழுக்க – “ நாயை  நாடு வீட்டில் குளிப்பாட்டி நல்ல சோறு வைத்தாலும் அது எதையோ தான் திங்க போகும்.என்பது போல் ஏமாற்றி  பிழைப்பதில்  இருக்கிறது.

நம் தாய் நாட்டுடன்  ஒப்பிடும் போது  சுதந்திரமான, வளமான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சகல  உரிமைகளை வெள்ளையர்கள் எங்களுக்கு தந்துள்ளார்கள்

வெள்ளையர்களின்  நாடுகளில்   உண்ண , உடுக்க, இருக்க  எல்லோருக்கும்   இருக்கிறது.

நாங்கள்  முன்னேறுவது   என்பது  எங்களுடைய  முயற்சி, உழைப்பு , அதிஸ்டம், சூழ்நிலைகள்…. என்பவற்றில் தங்கியுள்ளது.  

 ''கல்லறை போகும் வரை சில்லறை  தேவைப்படுகிறது  என்று  ஒரு சமயம்  கவிஞர் வாலி  அவர்கள்  கூறினார்.  கூறிய  வார்த்தைகள்  முற்றிலும்  நியாயமானவை.

அதனால் ஒரு  மனிதனுக்கு பண ஆசை  இருப்பது  தவிர்க்க முடியாதது  ஒன்று.

அதற்கு நேர்மையாக உழையுங்கள், தொழில் தர்மத்துடன் உழையுங்கள் , வீடுகளை  வாங்குங்கள், நகைகளை வாங்குங்கள், கடைகளை வாங்குங்கள், கட்டடங்களை வாங்குங்கள், காருகளை வாங்குங்கள், பணத்தால் என்ன வெல்லாம் அனுபவிக்க முடியுமோ அவற்றை அனுபவியுங்கள்,  என்னத்தையாவது  செய்யுங்கள்   அது உங்கள் சுதந்திரம்.  அதற்காக  தமிழர்கள்  சக தமிழர்களை  ஏமாற்றி , வஞ்சித்து காசு பணம் ,  சொத்து சுகங்கள் சேர்ப்பது  நியாயமா?

 

சிலர் வெளிப்படையாக  கூறுவார்கள் இந்த நாட்டில்  கள்ளம்  செய்யாமல் வாழமுடியாது  என்று.  பலர் சொல்லமாட்டார்கள். செய்வார்கள்.

வெள்ளைகாரர்கள்  அப்படியா  செய்கிறார்கள்என்று கேட்டால் அவர்களுக்கு கள்ளம்  செய்ய தெரியாது என்பார்கள்.

வெள்ளையர்களின் அரசாங்கங்கள்  தங்கள் மக்களுக்காக சட்டங்களை கடுமையாக வைக்கவில்லை. அது  நம்மவர்களில் பலரின்   " வீக்கங்களுக்கு "  நல்ல வாய்ப்பாக இருந்தன.  ( இப்போ புது புது  சட்டங்களை அரசாங்கங்கள் கடுமையாக  அமுல் படுத்துகின்றன. )

அகதிகளாக வந்த எம்மை  வெள்ளையர்கள் ஏமாற்றி,  நம்பிக்கை துரோகம் செய்து  பிழைக்கிறார்களா ?   இல்லையே .  எம்மை  அரவணைத்து அதுவும் பொறுமையுடன் நடக்கிறார்கள்.

 

உயிரை பாதுக்காக்க அகதிகளாக வந்த தமிழர்களை   சக  தமிழ் அகதிகள் நியாயமற்ற பணப்பேராசைக்கு அடிமையாகி  ஏமாற்றுவது , நம்பிக்கை துரோகம் செய்து பிழைப்பது  நியாயமா?

நல்லவர்களும் சரி  கெட்டவர்களும் சரி  சக மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .  நல்லவர்கள் விரும்புவது  மனித நேயத்தால், கெட்டவர்கள் விரும்புவது  ஏமாற்றி பிழைப்பது  சுலபம்  என்பதால்.

தங்கள் குடும்பங்களுக்கு   நல்லவற்றை செய்ய தெரிந்த கெட்டவர்கள், மற்றவர்களை ஏமாற்றும் போது , துரோகம்  செய்யும் போது  தெரிந்தே  செய்கிறார்கள்.

சிலர் கூறுவார்கள்  பொன்னுக்கும் , மண்ணுக்கும்  விடும் முதலீடு எப்பவும் வீண் போகாது, வளரும்,அழியாது  என்று.   உண்மைதான்.  அவற்றில் ஆர்வம்  உள்ளவர்கள்  கஷ்டப்பட்டு  உழைத்து வாங்கி  சேர்த்து  வளர்ச்சி ”  அடையுங்கள் . அதைவிட்டு விட்டு குறுக்கு வழிகளில்  சக தமிழர்களை ஏமாற்றி  “  வீக்கம்  அடைவது  நியாயமா?   இந்த  பேராசைகாரர்களின்  செயல்களுக்கு  அவர்களின் குடும்பமும்  ஒத்துழைப்பு வழங்கிறார்கள்

நாம்   தமிழர்கள்.

நெற்கதிர்கள்  வயலில் சோறாக விளைவதில்லை. கடவுள் இரண்டு கைகள், கால்களையும், மூளையையும்  தந்துள்ளார்.  சோற்றை பெறுவதற்கு  எவளவு தூரம் ஒரு  மனிதன் கஷ்டப்படவேண்டும் என்பது  தெரியாத விடயமா ?   இடையில் வந்து ஒருவன் சோற்றை அபாகரித்துக் கொண்டு  போக ,  பட்டினியால் பாடுபட்டவன் தவிப்பது  நியாயமா?

எம்மில்  மிக மிக பெரும் பான்மையானவர்கள்  இந்துக்கள், சிறு பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் .

யாம் எல்லோருமே  இறை பக்தி, மத பக்தி  கொண்டவர்கள்,  ஆன்மீக ஈடுபாடுகள் கொண்டவர்கள் .  

பலர் வீடுகளில்  கடவுள் படங்கள், சிலைகள்   வைத்திருக்கிறார்கள் ...

தாங்கள்  நடத்தும் வியாபார ஸ்தாபனங்களிலும்  வைத்திருக்கிறார்கள் ...

ஓட்டும்  வாகனத்திலும்   வைத்திருக்கிறார்கள் ...

கழுத்திலும்  மத சின்னங்களை அணிந்திருக்கிறார்கள்  ...

சிலர்  காசு வைக்கும்   பேஸ்”  சிலும் கூட  வைத்திருக்கிறார்கள் ...

அதுமட்டுமா  இலங்கையில் தங்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்காக  இங்கு  விரதம் இருக்கிறார்கள் ...

சிலர்  கோவில் திருவிழாக்களுக்கு  அங்கு பறந்து போகிறார்கள் ...

இங்கும் கோவிலுக்கு  போகிறார்கள் ...

தினமும் போகிறவர்கள் இருக்கிறார்கள் ...

திருவிழாக்களை  கொண்டாடுகிறார்கள் ...

அன்னதானங்கள் செய்பவர்களும் இருக்கிறார்கள் ....

சாமிமார் வந்தால்  போய்  தரிசிக்கிறார்கள் .. .

இப்படி பல பல  பல

அப்பப்பா . . . என்ன  இறை பக்தி  நம்மவர்களுக்கு. ! நல்ல விஷயம்  !

மதங்கள் என்பதெல்லாம் ஆன்மிகம் , கோவில்கள்  , கடவுள் சிலைகள்  , சடங்குகள்  , திருவிழாக்கள்  , சாமியார்கள்/குருக்கள்  ஆகியோருடன் சம்பந்த பட்டவை , ஆனால் வாழ்க்கை வேறு என்று  பலர்   நினைக்கிறார்கள்.

நாளாந்த  உலக  வாழ்கையில் எப்படி வாழவேண்டும் என்பதை   மதங்கள்  வழிகாட்டுகின்றன . இதை   பணம் பேராசையால் பலர்  சகஜமாக  புறக்கணிக்கிறார்கள் .

வணக்கமும்  வாழ்வும்  ஒன்றானவை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. அதுதான்  அறநெறி வாழ்க்கை.  

 
இரும்பில் இருந்தே  துரு தோன்றினாலும்
இரும்பை அந்த துருவே அரித்து தின்று
விடுகிறது. அது போலவே, அறநெறியில்
இருந்து தவறியவர்களை அவனுடைய
செயல்களே நாளுக்கு நாள் அழிவை
நோக்கி நடத்தி செல்லுகின்றன"...- புத்தர்

 ஐந்து தர்மங்கள் பற்றி  இந்து மத கட்டுரை ஒன்று படித்தேன். நீங்களும் படிக்க அதில்  இருந்து  முக்கியமாக என் கட்டுரை சார்த்த கருத்துக்காக  அவற்றில் இருந்து  சிலவரிகளை  கீழே குறிப்பிடுகிறேன்.

  “அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், சௌசம், இந்த்ரிய  நிக்ரஹ  ஏதம் சாமாதிகம்  தர்மம்  சாதுர்வர்ணே பிரதிர் மனு.

மூன்றாவது தர்மமாகச் சொன்னார்கள் அஸ்தேயம். அஸ்தேயம் என்று சொன்னால் இன்னொருவனுடைய பொருளை அபகரிக்கக் கூடாது என்று அர்த்தம். நமக்கு  நியாயமாக இன்னொருத்தனிடமிருந்து வரவேண்டி இருந்தால் அதை நாம்  விரும்பினால்  தவறில்லை. நாம் அநியாயமாக இன்னொருத்தனுடைய வஸ்துவை நம்முடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுதான் மிகவும் பாபமாகும். ( நன்றி : http://www.ammandharsanam.com )

  “
உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி”   என்று  யேசு சொன்னார்.  யேசுவை நேசிப்பவர்கள்  அவர் கூறிய வார்த்தைகளின் படி நடப்பார்கள்.   மற்றவர்களை  மோசடி  செய்து  ஏமாற்றி பணம் தேடுகிற எண்ணமே வராது .

 மத நூல்கள்  மட்டுமா  கூறுகின்றன ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  மேலாக வரலாற்று தொடர்ச்சி கொண்டது  தமிழ் இலக்கியங்கள் பல   மனிதரின் வாழ்கையை  பல்வேறு கூறுகளில் அலசி ஆராயிந்து, எப்படி மனிதர்கள் வாழ வேண்டும் என்று தெளிவு பட  கூறுகின்றன.  நாம் தமிழர்கள்  அல்லவா? அவற்றில் கொஞ்சமாவது  படித்திருப்போம்.  திருவள்ளுவர் சரி, ஒளவையார் சரி கூறுகிறார்களா  ஏமாற்றி  வாழுங்கள்  என்று ?
 

பணப்பேராசை பிடித்த  தமிழர்களே நேர்மையாக  வாழ பழகுங்கள்.

 "வயலுக்கு கேடு களைகள், மனித
வாழ்வுக்கு கேடு அவனது ஆசைகள்".....- புத்தர்

 மரணத்தின் போது  நமது உடைமைகள் என்று கருதிக் கொண்டிருக்கும் எதையுமே நம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. இதை நன்றாக அறிந்தும்கூட வாழும் சொற்ப காலத்தில் 'இது எனது, இது எனது" என்று சொல்லி சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்! - புத்தர்

 
நேர்மையே மிக சிறந்த  கொள்கை”  (Honesty is the best policy" - Benjamin Franklin ).

  “
ஞானம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம்  நேர்மை” ( Honesty is the first chapter in the book of wisdom.” – Thomas Jefferson.)

 
உண்மை  சம்பவங்கள் சிலவற்றை கேளுங்கள்:

ஒரு கோழியை கடன் வாங்கியதற்காக மரணம் தன்னை நெருங்கும் வேளை கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கூறியதை  கேளுங்கள் :

“ . . . .  கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. விஷத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அப்போது அவர் தன் சீடர்களான பைடோ, கிரீட்டோ ஆகியோரை அழைத்தார் : "நான் எக்ஸ்ளிப்யாஸி என்பவரிடம் ஒரு கோழி கடன் வாங்கினேன். அதைத் திருப்பிக்கொடுப்பதற்குள் என் நிலைமை இப்படியாகி விட்டது. நீங்கள் அவருக்கு அதை வாங்கிக்கொடுத்து  என் கடனைத் தீர்த்துவிடுங்கள்,'' என்று சொல்லி உயிரை விட்டார். நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கடைபிடித்ததால் தான், இன்று அவர் நம்மால் நினைக்கப்படுகிறார். “   (நன்றி: http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=4727)

 

மார்கழி  06, 2012 ஆண்டு வியன்னா நகரிலே, ஒரு பஸ்ஸில்  ஒரு மூதாட்டி  தன்  பையை மறந்து போய் விட்டு விட்டார்.  அதில்  390,000  ஈரோக்கள்   அதாவது   509,700 டொலருகள்  இருந்தன. அந்த பையை கண்டெடுத்த  பஸ்  சாரதி அதை எடுத்து போலீசில்  ஒப்படைக்க, அதை அவர்கள் அந்த மூதாட்டியிடம் சேர்பித்தார்கள்.

 கார்த்திகை 21, 2012  சிங்கப்பூரில்  ஒரு  வாடகை கார் சாரதி  தன்  காரில்   £ 500,000  கண்டெடுத்து  அதற்கு சொந்தமான உல்லாச பிரயாணிகளிடம் ஒப்படைத்தார்.

 மாசி 08, 2007 இல்  நியூ  யோக்”  நகரில்  வாடகை கார் சாரதி,   பங்களா தேசத்துகாரர், ஒஸ்மான் சவுத்திரி  என்ற பெயர் ,   தன்  காரில் ஒரு பையை கண்டெடுத்தார் .   அந்த பையில்  பல்லாயிரக்கணக்கான டொலர்கள்  பெறுமதி வாய்ந்த  31 வரை மோதிரங்கள்  இருந்தன.  அதற்கு உரிமையாளரை தேடி கண்டு பிடித்து ஒப்படைத்தார்.  வேடிக்கை என்ன வென்றால் , அந்த பெண் வாடகை காரை  விட்டு   இறங்கிய சமயம் கொடுத்தடிப்” 30 சென்ட்ஸ் .

  “கனடா மிரர்”  வாசித்த செய்தியில்  ஒரு பகுதியை  கீழே  தருகிறேன்.  மிகுதியை வாசித்து பாருங்கள்.

கடையுடைத்து திருடிய காசை 30 வருடங்களின் பின் திருப்பிக் கொடுத்த திருடன் : 1980 தான் ஒரு கடையை உடைத்துத் திருடிய 800 டொலர்களையும் அதற்கான வட்டியாக 400 டொலர்களையும் ஒருவர் கடை உரிமையாளரிற்கு ஒப்படைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.   ……  (http://www.canadamirror.com/international/7775.html)

 
பல்வேறு கால கட்டங்கள், பல்வேறு சூழ் நிலைகள், பல்ல வேறு நாடுகள் , பல்வேறு தராதரங்களிலும்  கூட பொதுவான  கொள்கையான  நேர்மையே மிக சிறந்த  கொள்கை”  யை  பல மனிதர்கள்   கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே கடைப்பிடிக்க முடியாத கடுமையான கொள்கையல்ல பேராசைக்காரர்களை  தவிர .

ஆழமாக  சிந்தித்து  பாருங்கள்.

இராமாயணத்தை எழுதியதாகக் கூறப்படும்  வால்மீகி ஒரு காலத்தில்  திருடனாக இருந்தவர் என்று  என்பது சொல்லப்படுகிறது.

மகாத்மா  காந்தியின்  வாழ்க்கை வரலாறு தற்காலத்தில் எத்தனை பேருக்கு தெரியுமோ? அவர்  ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த படியால் தான்  இங்கிலாந்து வந்து படித்து  பாரிஸ்டர் (Barrister) பட்டம் பெற்றார்.  13 ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.   ஒரு மனிதனுக்குரிய பலவீனங்களுடன்  வாழ்ந்தவர் அவர்.  மிக இளம் வயதல்லவா?   ஆனால் அவர் ஒரு நாள் அரிச்சந்திரா(  ஹரிச்சந்திரா ) நாடகம் பார்த்தார். இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திரா நாடகமே தனக்கு  வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய்  மகாத்மா  காந்தி தனது வாழ்க்கை வரலாறான சத்திய சோதனைநூலில் குறிப்பிட்டுள்ளார்.  அவரிடம் இருந்த வாய்மையால் தான் இந்தியமக்கள்  அவர் கூறுவதை எல்லாம் நம்பினார்கள்.  அவர் பின்னால் இந்திய மக்கள் நின்றார்கள்.  தனது சௌகரிகமான  வாழ்கையை  துறந்து,  மக்கள் விடுதலைக்க வாழ்ந்த  மாமனிதர், உண்மையிலே மகாத்மா. அவருடைய  வாழ்கையில் வாய்மையின்  உயர்வை உயர்த்திய  அரிச்சந்திரா  நாடகத்தை பற்றி  என்ன சொல்வது .  வாய்மைக்கு  சொல் எதிர்சொல் பொய்.  மகாத்மா காந்தி  ஒரு  பொய்யராக இருந்திருந்தால்  மக்கள் அவர் பின்னால் நின்றிருப்பார்களா?  சுதந்திரம்தான் கிடைத்திருக்குமா?   அரிச்சந்திரா ஒரு அரசன்.  சூரிய குலத்தின் 28 ஆவது அரசன்  தனது வாழ்வில், சொன்ன  சொல் தவறாமை, பொய் சொல்லாமை  என்னும் இரண்டு  ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தான். அவனின் கதையை  மறந்தவர்கள், தெரியாதவர்கள் படித்து பாருங்கள்.

 நாங்கள்  அரிச்சந்திரா  அரசனைப்போல்  அல்லது  மகாத்மா காந்தி  ஆக முடியாவிட்டால்  அது குற்றமல்ல .நேர்மைக்காக, உண்மைக்காக, கொள்கைக்கா  அவர்கள் ஏற்கனவே  இருந்த  காசு பணம் சொத்து சுகங்களை ,  தங்களை  துறந்தார்கள்,  

 
நாங்கள்   இழப்பதற்கு  ஒன்றும் இல்லை ஏனெனில்  நாம் காசு பணத்துடன், சொத்து சுகங்களுடன் அகதிகளாக வந்தவர்கள் அல்ல ஆண்டிகளாக  வந்தோம்.  ஆனால் சுய நலத்திற்காக  சக மனிதனை ஏமாற்றி பிழைப்பது , சக மனிதனுக்கு  நம்பிக்கை துரோகம் செய்வது  மிகவும்  மன்னிக்க முடியாத செயல், ஈனத்தனமான, நியாயப்படுத்த முடியாத  துரோகம்.

தர்மராஜா  என்ற பெயரை  வைத்திருப்பார்கள் பலர். ஆனால் சிலரோ  அதர்ம செயலை

செய்வார்கள்.

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 2 டை பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 2


கர்ணன்  என்று பெயரை  வைத்திருப்பார்கள் பலர்.  ஆனால் சிலரோ  கொள்ளைக் காரர்களாக , ஏமாற்றி பிழைப்பவர்களாக இருப்பார்கள்.


சுவாமி நித்தியானந்தா என்று உலகமே அழைத்து ராஜசேகரனை.   ஆனால் அந்த  ஆசாமி பேரின்பத்திற்கு வழி கூறி கொண்டிருந்தவன், சிற்றின்பத்தை  சுவைத்து கொண்டிருந்தான், உலகம் முழுதும் குவித்துள்ள பல கோடிக்கணக்கான  சொத்துக்கள், அடவாடித்தனமான பேச்சுகள், கூறும் பொய்கள், விடும் சாபங்கள், தங்க சிம்மாசனம் போன்ற  இருக்கைகள், முடிகள் , உடைகள், பாது காவலர்கள், ...  அப்பப்பா !

அதே சமயம் ஸ்ரீ  ராமகிருஷ்ண  பரமஹம்சர் , சீரடி சாய்பாபா,  சுவாமி விவேகானந்தர், . . .  போன்ற எளிமையான மகான்களை பாருங்கள். எங்கே உண்மை  இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இறந்து  இன்றும்  வாழ்ந்தது கொண்டிருப்பவர்கள்.

சிந்திக்கவும்” (http://www.sinthikkavum.net/2011/10/blog-post_18.html)  என்ற இணையதளத்தில்  தமிழரின் பெருமை பற்றி  "தமிழன் என்று சொல்லடா  தலை நிமிர்ந்து நில்லடா"  தலையங்கத்தின் கீழ் எழுதப்பட்டிருப்பதை படித்தேன்.

படிக்கவே ஆனந்தமாயிருக்கிறது , பெருமையாக இருக்கிறது. ஆனால் இன்றுள்ள தமிழர்கள் பெரும்பான்மையினர் அப்படி இல்லையே.  ஒரு தமிழன்  சக தமிழனுடன்  பழகவே  பயப்படும் அளவுக்கு நிலைமைகள் கூடிக்கொண்டு போகின்றன.

சக தமிழர்களை ஏமாற்றும்  பேர்வழிகளே, பொய்யர்களே  ,  திருடனாய்  பார்த்து  திருந்தா விட்டால் திருட்டை  ஒழிக்க முடியாது' என்ற பாடல் நினைவுக்கு  நினைவுக்கு வருகிறதா?

விரைவாக காசு பணம், சொத்து  சுகம் சேர்க்க சக தமிழர்களை ஏமாற்றி வாழ்பவர்களே  உங்கள் பாவங்களுக்கு  பரிகாரம்  தேடுங்கள்.

உங்களை மரணம்  அணைக்கும்  வேளை  நான் யாருக்கும்  நன்மை செய்யாவிட்டாலும் , யார் குடும்பத்தையும்  கெடுக்கவில்லை , யாரையும் ஏமாற்றவில்லை , பேராசையால்  மற்றவர்களுக்கு  செய்த கொடுமைக்காக  நான் பரிகாரம் செய்துள்ளேன்  என்ற நிம்மதியுடன்  கண்களை மூடுங்கள்.

 ஏமாற்றுவதை காட்டிலும்  தோற்றுப் போவது  மரியாதைக்குரியது.  - அபிரகாம் லிங்கன்

 நீங்களும்  வாழுங்கள் , மற்றவர்களையும் வாழ விடுங்கள்.

 அப்படி இல்லை  உங்கள் பலவீனம்  பேராசைதான் என்றால் , அதற்காக  எப்படியும் வாழலாம் என்றால்,  யாரையும்  ஏமாற்றாமல், எவர்  சாபங்களை தேடாமல்,  எவர்  குடியையும்  கெடுக்காமல்  காசு பணம், சொத்து சுகம்  சேர்க்க  ஒரு  தொழில்  துறை உண்டு.

செய்யும்  சேவைக்கு ஏற்ற  பணம் கிடக்கும்.  அப்படி என்ன தொழில் என்று  ஆச்சரிய பட தேவையில்லை .

யேசு  நாதர் வாழ்ந்த காலத்தில் கூடி அந்த  தொழில்  இருந்திருக்கிறது.

தொடர்ந்து  வாசியுங்கள் எல்லாம் புரியும்.

ஒரு  பேட்டியில்  ஒரு  பாலியல் தொழிலாளி கூறினார் , " நீங்கள்  எல்லோரும்  பணத்திற்காக  உங்கள் உடல் உறுப்புகளை  பாவித்து  உழைக்கிறீர்கள் , நானும்  அப்படியே.  பணத்திற்காக  என்  உடல் உறுப்புகளை பாவித்து உழைக்கிறேன்."  

 பேராசைகாரர்களே  தர்க ரீதியாக அந்த பெண்  கூறிய நியாயம்  சரிதானே ?

 
அதுமட்டுமா  சில வருடங்களுக்கு  நான் பார்த்த  டிவி  நிகழ்ச்சி ஒன்றைப்பற்றி கூற விரும்புகிறேன்.

 அமெரிக்காவில்  ஒரு நெடும் சாலையை  அருகே ஒரு விபச்சார விடுதி உள்ளது.  அது " சன்  பெர்னாண்டோ  வலி" பகுதியில்  என்று நினைக்கிறேன்.  அப்பிரதேசத்தில்  வரட்சியான பின் தங்கிய பகுதியில் அது    உள்ளது.  ஒரு நடுத்தர வயது  பெண் தன்  வீட்டில் இருந்து  அங்கு  போய்  விபச்சார தொழிலில்  ஈடுபட்டு  விட்டு வருவாள்.  அதுதான் அவளின்  தொழில்.  அந்த பெண்ணின் தாயாருக்கும்  தெரியும்.   அந்த  பெண்ணுக்கு  ஒரு மகள். அந்த மகள் ஒரு பட்டதாரி.   அந்த பெண்ணின்  விபச்சாரியான தாயார்  தன் மகளை அந்த விபச்சார  விடுதியில்  வேலைக்கு சேர்த்து  விடுகிறார்.  அந்த  மகளும்  விபச்சார தொழிலில் ஈடுபடுகிறாள்.  ஆச்சரியமான விஷயம்  என்னவென்றால் அவளுக்கு  ஒரு காதலன் இருக்கிறான்.  அவனே  காலையில்  அந்த இளம் பெண்ணை  அந்த  விபச்சார  விடுதியில்  இருந்து வீட்டுக்கு  கூட்டி போகிறான்.

 அதே விபச்சார விடுதியில் வேலை செய்யும்  இன்னுமொரு  ஒரு  பாலியல் தொழிலாளியை காட்டுகிறார்கள் , அந்த பெண்  தன்  சேமிப்பில், உழைப்பில்  தன்  பிற்காலத்திற்காக  ஒரு வீடு கட்டுவிக்கிறாள். உடலின் வனப்பே அந்த பெண்ணின் மூலதனம். வயது போய்விட்டால் அவளுக்கு   கிராக்கி  இருக்காது அல்லவா .

 அப்பட்டமாகவே அவர்கள் டிவிக்கு  பேட்டியும்  கொடுத்தார்கள் தங்கள் வாழ்கையை பற்றி.

இன்னுமொரு  டிவி  நிகழ்ச்சியில்  பார்த்தேன், கணவன்  காரில் தன்  மனைவியை கூட்டி வந்து  பாலியல் தொழிலாளிகள்  நடமாடும் வீதியில்  விடுகிறான்.  விட்டு போட்டு  வீட்டுக்கு  போகவில்லை.  தன் மனைவிக்கு  காரில் கூட்டிக்கொண்டு  போறவனால்  ஆபத்து வரக்கூடாது   என்பதற்காக  காரை பின் தொடருகிறான். தனக்கு ஆபத்து  ஏற்பட்டால்  அந்த பெண்ணிடம் தன் கணவனுக்கு தெரிவிக்க  சிக்னல்இருக்கிறது.

 ஆண்  பாலியல் தொழிலாளிகளும்  இப்போ இருக்கிறார்கள்.  ஆண் / பெண் "எஸ்கார்ட்" (male/female escorts) தொழில்  என்று ஒன்று இருக்கிறது.

மேலும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் ,  மகனின்  தொழில்  "புளு பிலிம்"  தயாரிப்பது .  தாயாருக்கும்   அது தெரியும். அந்த மகனின் அங்கிள்  மனேச்சர் ஆக இருக்கிறார்.  அது அவர்களின்  குடும்ப  வியாபாரமாம்.

அது மட்டுமா  பல்கலை கழக படிப்பு செலவுகளுக்காக  நைட்  கிளப்புகளில்  நிர்வாண நடனம் ஆடும் மாணவிகளை பற்றிய செய்திகளை  ஒரு சமயம்  வாசித்தேன்.

 "பாலியல் தொழில்(sex industry) இன்று தொழில்  துறைகளில்  ஒரு தொழிலாக இருக்கிறது.  .

அதிலும்  பல விதமான  துறைகள் உண்டு . பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு. அதற்கான சட்ட  பாதுகாப்பு, லைசன்ஸ், குறிப்பிட்ட இடம்  என்றெல்லாம் இருக்கிறது. மருத்துவ வசதிகளும் பெறலாம்.

 ஒரு தனி மனித  உரிமைக்கு  சட்டத்தில்  கொடுக்கபட்ட  மதிப்புகளில் ஒன்றை பாருங்கள்.

ஒரு  பாலியல் தொழிலாளியை  அவரின்  சம்மதமில்லாமல்   பாலியல்  தொழிலாளிதானே என்று யாரும்  பலாத்காரம் பண்ண முடியாது.   அவர்கள் முறைப்பாடு செய்தால் சட்டம் அவர்களுக்கு சாதகமாக  இருக்கும்.

 கிழே உள்ள   செய்திகளை  வாசியுங்கள்.  டென்மார்க் February 1, 2013: பாலியல் தொழிலாளிகளுக்கும் டவ்பெங்க வேண்டும் :  கொன்ஸ்சவேட்டிவ்  (http://www.alaikal.com/news/?p=121614).

சுற்றுலாவை மேம்படுத்த விபச்சாரத்தை சட்ட ரீதியான தொழிலாக்க இலங்கையில் கோரிக்கை . -(November 20, 2012  http://nermai-endrum.blogspot.co.uk)

மறுபடியும் சட்ட அங்கீகார விபச்சாரத்தை பற்றி  வாயை திறந்த தென்மாகாண  உறுப்பினர்  அஜித் பிரசன்ன (15/03/2013  http://www.madawalanews.com/news/srilanka/503)

இலங்கையில் போதிய பெண்கள் கிடைக்காவிடில் வேறு நாடுகளில் இருந்து  பெண்களை வரவழைக்கலாம்  என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.   அஜித் பிரசன்ன  கூறியதையிட்டு பலர் சிரிக்கலாம்,  எதிர்க்கலாம், ஆனால் கடைசியில் ஒரு நாள் அவர் கூறிய தொழிலுக்கு  நிச்சயமாக சட்ட அங்கீகாரம்  கிடைக்கும்  நாள் வெகு தூரமில்லை.  சட்ட  அங்கீகாரம் கிடைத்து விட்டால்  எல்லாமே  நீதியானது  தானே?  வேலை வாய்ப்பின்றி இருக்கும் பெண்களும் , ஆண்களும்  அந்த  தொழிலை நாடி போகும் காலமும் வெகுதூரமில்லை.  வேலை தேடி  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  போனால் , தங்களால் உதவ முடியாவிட்டால் ஏன் பாலியல் தொழிலுக்கு  போககூடாது என்று  ஆலோசனை  கூறுவார்கள்.  

அஜித் பிரசன்ன உண்மையிலேயே  ஒரு  தீர்கதரிசனவாதி.  அவர்  உண்மையை சரியாக   தெளிவாக  கூறியுள்ளார்.  இலங்கையில் போதிய பெண்கள் கிடைக்காவிடில் வேறு நாடுகளில் இருந்து  பெண்களை  வரவழைக்கலாம்  என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.   மற்றவைகளை ஏமாற்றி  "வீக்கம்" அடையும்  புலம் பெயர்ந்த தமிழர்களே  வேறு நாடுகளில் இருந்து   வேறு பெண்களை வரவழைகாமல்  எங்கள்  மனைவிமார் , மகள்மார் , மகன்மார்  எல்லோரையும்  கூட்டி வாறோம்  என்று கூறுங்கள்.  ஏனெனில்  எங்கள்  தேசிய இனம்  ( Nationality) என்ன வென்று  கேட்டால் வெள்ளையர்கள் மனிதாபிமானத்தால் எமக்கு  வழங்கிய  பிரஜா  உரிமையை வைத்து  நாங்கள்  வெளிநாட்டு  பிரஜைகள் என்று பெருமையாக கூறலாம் அல்லவா?  நீங்கள் வெளிநாட்டு பிரஜைகள் மட்டுமல்ல ,வாழும் நாட்டையும்  சக தமிழர்களை ஏமாற்றி  சேர்த்த  பணத்தில் ஆடம்பரமாக இருக்கும் போது,  நம்ம  தாய் நாட்டில்  ஒரு உயர்தர பாலியல் தொழிலாளிகளாக  அல்லது  நடத்துபவர்களாக  இயங்க வாய்ப்பு இருக்கல்லவா.?   பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட நாட்டில்  விபச்சாரத்திற்கு விரைவில்  சட்ட  அங்கீகாரம் கிடைப்பது என்பது ஒரு யுயுப்பி”.

மற்றவர்களை ஏமாற்றி  சுரண்டி  வாழும்   புலம் பெயர்ந்த  தமிழ்  சீமான்களே,  சீமாட்டிகளே  "பாலியல் தொழில்” (sex industry) துறையில்  நீங்கள்  ஏன்   இறங்கி  உழைக்க கூடாது ?

நீங்கள் பணத்திற்காக மற்றவர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகங்களுக்கு உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஆதரவு தருகிறார்கள் என்றால்,  நான் மேலே சொன்ன "பாலியல் தொழில் துறையையும்" பற்றி  கூச்சபடாமல்  அவர்களுடன்  ஆலோசித்து பாருங்கள்.  ஏமாற்றி உழைப்பதைவிட மேன்மையான  தொழில்.

மீன்  வித்த காசு  மணக்கவா  போகிறது ? நாய் வித்த காசு குரைக்குமா குரைக்கவா போகிறது ?   இல்லையே.   காசின் பெறுமதியும்  மாறாது   எப்படி வந்தாலும் உங்களுக்கு  பணம்தானே வேண்டும்?

 
அதைவிட்டு விட்டு ஒரு  சக மனிதனை  நீங்கள் ஏமாற்றும்போது  பணத்திற்காக  ஏமாற்றும் போது  அவனின்  குடும்பமும்  சேர்ந்து  பாதிக்கப் படுகிறது.  அவன் குடும்பமும் பாதிக்கப் படும்போது அவனின் வருங்கால தலை முறைகளும் பாதிக்கப் படுகிறது.  

 பைபிளில்  இருக்கிறது   ஜேசுநாதர்  ஒரு விபச்சாரியை  மன்னித்து  இனிமேல்  பாவம் செய்யாதே என்று அனுப்பினார் என்று .  ( அவர் விபச்சாரத்தை  தொடர  அனுமதித்தார் என்று அர்த்தமில்லை. ) அதுமட்டுமா தன்னை சித்திரவைதை  செய்து  சிலுவையில் அறைந்த  யூதர்களை  "  பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்" என்கிறார்.  ஆனால்  விபச்சாரியையும், எதிரிகளையும் மன்னித்த யேசு  நம்பிக்கை துரோகியைப்  பார்த்து அதாவது  தன்னுடைய பன்னிரெண்டு  சீடருள் ஒருவரான  இருந்து  , தன்னுடன் உண்டும் , உறங்கி , தன் போதனைகளை கேட்டும்  தன்னை  எதிரிகளிடம்  காட்டி கொடுத்த  யூதாஸ் இஸ்காரியோத்தைப்  பார்த்து  மன்னித்தேன்  என்று  அவர் கூறியதாக பைபிளில்  இல்லை. யேசுவை  பணத்திற்காக ஆசைப்பட்டு  அதாவது  முப்பது  வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு  யூதாஸ் காட்டி கொடுத்தான். இறுதியல்  அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.  

 ஸ்ரீ  ராமகிருஷ்ண  பரமஹம்சர் அவர்கள் கூறிய கதைகளில் நான் கீழே  குறிப்பிடும்  இரு கதைகளை தேடி எடுத்து படித்து பாருங்கள்.

காதிலே கேட்பது  பகவத் கீதை, மனமோ விபச்சார விடுதியில்.  நண்பர்கள் இருவர் - ஒருவன் விபச்சார விடுதிக்கு போகிறான், மற்றவன்  உபநியாசம் கேட்க போகிறான்.

இன்னுமொரு  கதை.  ஒரு சந்நியாசியும்  அவரின் இருப்பிடத்திற்கு  முன்னால்  வாழ்ந்த  ஒரு விபச்சாரியைப் பற்றிய  கதை.

எப்படியாவது எந்த வழிகளிலாவது  நானும் விரைவில் பணக்காரனாகவேண்டும் என்ற வெறி பிடித்து ஆடுபவன்  மனதில்  கடுகளவு கூடி இரக்கம் இருக்காது.  கல்லும் கரையும் .... கல்லுக்குள் ஈரம். . . என்பார்களே ,  அதெல்லாம்  இவர்களிடம்  அறவே இல்லை.

 உடல் வெறும் சதையும், இரத்தமும் , எலும்புகளால் ஆனது. அழிய கூடியது.  உடல் எப்படி தோன்றியதோ அது ஒரு நாள் அழியப் போகிறது.   மண்ணில்  புதைத்தால்  மண்ணோடு மண்ணாக மக்கி மறைகிறது.  எரித்தால்  எரிந்து சாம்பலாக  போகிறது . (   முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டு . . . பட்டினத்தார். “ )

 
ஏமாற்றுப்பவர்களே,  நீங்கள்  ஒருவனை  ஏமாற்றும்போது அந்த ஏமாற்றத்தின் தாக்கம் பெரிதாக இருந்தால், ஏமாந்தவன்  மட்டுமல்ல  ஏமாந்தவனுடன் அவனை சார்த்த  குடும்ப அங்கத்தவர்களும் மனம் வெந்து அழுந்துகிறார்கள். அவர்களுக்குள் உள்ள  ஆன்மாக்கள் அழுதுகொண்டே இருக்கும் . வல்லமையற்ற  பாதிக்க பட்டவர்களால்  அதற்கு மேல்  என்ன செய்யமுடியும் ?

சிந்தித்து பாருங்கள் விரவாக பணக்காரனாக  வர வேண்டும்  என்பதற்காக  யாரையும் ஏமாற்றி , நம்பிக்கை துரோகம்  செய்யலாம்  என்று  எந்த சட்டமாவது  எந்த நாட்டிலாவது  அனுசரணையாக இருக்கிறதா?  இல்லையே.

 பணத்திற்காக  விலை போகும்  விபச்சாரிகளை  விட  பணத்திற்காக  சக மனிதர்களை ஏமாற்றி  உழைப்பவர்கள், பொய்யர்கள்  மிக மிக  ஈனப்பிறப்பானவர்கள்,  மன்னிப்புக்கு  தகுதியற்ற  துரோகிகள்  என்று நான் நினைக்கிறேன் .  ஏனெனில் ஒரு விபச்சாரி  யாருக்குமே  நம்பிக்கை துரோகம் செய்யவோ,  ஏமாற்றி  பணம் பறிக்கவோ  இல்லை. யார்  குடியையும் அவள் கெடுக்க வில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே ?

சரி  இப்போ என் கதையை கேளுங்கள்.

 நான் ஒரு இளைஞன்  அல்ல. மகானும் அல்ல. ஒரு சாதாரண தமிழன். வாழ்கையில் மாலைப் பொழுதை நெருங்குகின்ற வயது. வேலையும்  இல்லை. வேலை கிடைப்பது என்  வயதுக்காரார்களுக்கு மிக கஷ்டம்.  நாடுகளும்  பொருளாதார  நெருக்கடிகளில்  சிக்கி  தவிக்கின்றன. படித்தும் வேலையில்லாமல் இருக்கும்  இளைஞர்கள் ஆயிரம், ஆயிரம்.  எனக்கோ  படித்துகொண்டு இருக்கிற பிள்ளைகள் ஒரு பக்கம் . இருப்பதோ வாடை வீடு.  நோய் நொடிகள்  ஒருபக்கம்.  சரி  இவையெல்லாம் என் சொந்த பிரச்சனைகள்.

புலம் பெயர்ந்து  கிட்டதட்ட  இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன.  ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்  நாடு இங்கிலாந்து.  பிள்ளைகளின்  கல்வியின்  பொருட்டு  ஏனைய  வெள்ளையர்களின்  நாடுகளில் இருந்து  இங்கிலாந்துக்கு  இடம்  பெயர்ந்த  நம் நாட்டு தமிழர்களில்  நானும் ஒருவன்.  நாடு விட்டு நாடு இடம் பெயர்ந்து வாழ்வது  எல்லோருக்கும் அதிஸ்டமாக அமைவதில்லை. வேரூன்றி வளர்ந்த மரத்தை பிடிங்கி  வேறு ஒரு இடத்தில், வேறு  ஒரு சூழ்நிலையில் நடுவதை  போன்றது குடும்பகாரரின் நிலைமை.  நிலமை மோசமாகலாம்  அல்லது தப்பி  பிழைக்கலாம் அல்லது வளர்ச்சி அடையலாம்.

முதல்  வாழ்ந்த நாட்டில்,  அந்த நாட்டு பாஷை  சரியாக தெரியாவிட்டாலும் கூட,  நான் செய்த வேலைக்கு , சட்டபடியான  சம்பளத்துடன்    பல சலுகைகளையும் வெள்ளையர்கள் தந்தார்கள். அதுமட்டுமா  மிகவும் மனிதாபிமானத்துடன் நடத்த பட்டேன்.   எனக்கு ஆங்கில பாஷை சுமாராக  தெரியுமாததால் , ஒரு அசட்டு துணிவில்  இருத்த  நாட்டை , வேலையை விட்டு  இடம் பெயர்ந்தேன். எனக்கு நெருங்கிய  உறவினர்கள், நண்பர்கள்  என்று  இங்கிலாந்தில் யாரும் கிடையாது.  எனது வயது, என் குடும்ப சூழ்நிலைகள்  நல்ல வேலை வாய்பை தேடுவதற்கு  சாதகமாக  அமையவில்லை.  ஏதாவது  ஒரு தொழில் நான் செய்ய வேண்டும்  என்ற நிலையால், ஒரு கடை எடுத்து நடத்தலாம் என்று முயன்றேன். அது என் துறை அல்ல ஆனால் எனக்கு வேறு வழியும் கிடைக்கவில்லை.

ஏறத்தாழ ஏழு  வருடங்களுக்கு முன்,  தமிழ் நண்பர் ஒருவர் எனக்கு கூறினார்  சிட்டி(London city)  யில் ஒருவரின் கடை  இருக்கிறது,  கொமிசனுக்கு கொடுக்க இருக்கிறார், அவர் இலங்கையிலும்  இந்த நாட்டிலும்  ஆசிரியராக  இருந்தவராம்  அவருடன் கதைத்தது  பாருங்கள் என்று தொலைபேசி இலக்கத்தை தந்தார்.   “கொமிசன்”  என்பது ,   கடையின் உரிமையாளர்  சொல்லுகிற  தொகையை கிழமைக்கு  கிழமை  நாம் கொடுத்தால் சரி.   நானும் அந்த  ஆசிரியருடம்   தொலை பேசியில் கதைத்தே போது , “கடையை  போய்ப்  பாருங்கள், பார்த்த பின் கிழமை  கொமிசனைப் பற்றி பேசுவோம்என்றார். கடையை போய் பார்த்தேன்.  கடையை  பார்த்து  முடிய அந்த  ஆசிரியரிடம் கேட்டேன்  கொமிசன்  எவளவு எதிபார்க்கிறீர்கள் என்று. அவர் கேட்ட தொகை  நியாயப்படுத்த  முடியாத அளவுக்கு  இருந்தது. கேட்கும்  தொகை  நியாயமானது  என்று நிரூபிக்க  அவரிடம்  ஆதாரமாக

 

 

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 3 டை  பார்க்க. )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 3

 

 

வியாபார வரவு செலவு  கணக்குகளும் கிடையாது.  ஒரு கோழியை வைத்துக்கொண்டு  கோழிப்பண்ணைக்கு  "கொமிசன்" கேட்கிறாரே  என்று  நான் அந்த முயற்சியை  கைவிட்டேன்.
 

என் வீட்டு டெலிபோன்  இலக்கத்தை வைத்திருந்த  அந்த   ஆசிரியர்  சில வாரங்கள் கழிய  ஒருநாள்   என் வீட்டுக்கு டெலிபோன்  செய்தார். அச்சமயம் நான் வீட்டில் இல்லாததால்  என் மனைவியிடம் கூறியுள்ளார் தன்  கடைக்கு  "ஸ்டாப்"  ( ஊழியர்)   தேவையாக உள்ளது,  என்னை தன்  கடையில் வேலைச் செய்ய முடியுமா, தான் சம்பளம் தருவதாகவும், அன்று பின்னேரமே  தன்  கடைக்கு வரும்படி கூறும்படி  கூறியுள்ளார்.  இச் செய்தியை என் மனைவி எனக்கு கூறினார்.  நானும் தொழில் ஒன்றும் இல்லாமல் இருந்த போதிலும்  முன் பின் தெரியாத ஒருவர், நான் கண்ணால் கூடி காணாத ஒருவரை  நம்பி  கூப்பிடுகிறார்  என்பதற்காக  போவதா  என்று  நான் போகவில்லை.

 மீண்டும்  ஒரு நாள்  அந்த  ஆசிரியர்  என் வீட்டுக்கு  டெலிபோன்  செய்து  என்னுடன் நேரடியாக பேசினார்.  தான் கடையை யாருக்காவது கொடுக்கும் வரை கொஞ்ச காலம் தனக்கு உதவும் படியும், தான் அதற்கு சம்பளம் தருவதாகவும் அதுமட்டுமல்ல  தானும், நானும்  ஆசிரியர் தொழில் இருந்ததால் ஆசிரியர்களுக்கிடையில்  கருத்து  ஒற்றுமை  இருக்கும், ஒத்துப் போகும்  என்று  தன் கடையில் வேலை  செய்யும் படி வருந்தி அழைத்தார்.  பொதுவாகவே  ஆசிரியர்  தொழில் பார்த்த  ஒருவரை சமூகம்  மிகுந்த நம்பிக்கையுடன் கௌரவமாக பார்ப்பது  புதிதல்லவே. அதுமட்டு மல்ல  நானும் அந்த துறையில் இருந்தவன் கூட.  மாதா,  பிதா , குரு,  தெய்வம் என்ற வரிசையில் வருபவர்  அல்லவா ஆசிரியர்.

எனக்கும் அச்சமயம் வேலை ஒன்று இல்லாததால்  நானும் இந்த  ஆசிரியரின்  வேண்டுகோளுக்கு   இணங்கி  எனக்கு  வியாபாரம் ஏதும் சரி வரும் வரை  அவர் கடையில் வேலை செய்ய  சம்தித்தேன்.

நான் புலம் பெயர்ந்த நாடுகளில்  வெள்ளையர்களை தவிர  எந்த  தமிழனிடமும்  நான் வேலை செய்தது கிடையாது.  ஒரு புலம் பெயந்த நாட்டில் இருந்து  நான் செய்த தொழிலை கைவிட்டு  பிள்ளைகளின் கல்விக்காக  ஆங்கிலேயர் நாட்டுக்கு  நான் இடம் பெயர்த்தால் பல கஷ்டங்களை நான் அனுபவிக்க வேண்டியிருந்தது, ஆனால் கையில்  இருந்த சேமிப்பை  வைத்து பிழைக்க முயன்றேன்.

பொதுவாக வெள்ளையர்கள் தங்களிடம் வேலை செய்பவர்களை  மனித நேயத்துடன் மனிதர்களாக நடத்துவார்கள்.  சட்டப்படி என்ன வெல்லாம் கொடுக்க வேண்டுமோ அதெல்லாம் தங்கள் வேலையாட்களுக்கு கொடுப்பார்கள். வேலையாட்களில் உள்ள திறமைக்காக மேலும் சலுகைகள் செய்வார்கள்.

உதாரணமாக  இலங்கையில் கெளரவமாக வாழ்த்த குடும்பங்களில் இருந்த வந்த பலர் " மேடம் வீட்டு வேலை " என்று வெள்ளையர்கள் நாடுகளில் பல வெள்ளையர்களின் வீடுகளில் வேலை செய்கிறார்கள்,  அநேகருக்கு  பாஷைகள்  கூடி ஒழுங்காக பேசவே  தெரியாது.  கூடுதலாக  அப்படிப்பட்ட வேலைகள் பெண்களுக்குத்தான் அதிக வாய்ப்பு. அங்கு அவர்கள்  கழிவறை,குளியல் அறைகள்  உட்பட வீடு முழுவதும்  சுத்தம் செய்யவேண்டும். உடுப்புக்கள் மெசினில் தோய்த்தெடுத்து, அயன் பண்ண வேண்டும் ,  இப்படி பல வேலைகள் .  அதுமட்டுமா  வீட்டு திறப்புகளை வெள்ளையர்கள்  வேலை செய்பவர்களை நம்பி கொடுத்து விட்டும்  போவார்கள். அதுமட்டுமா  வேலை செய்பவர்களை மனிதர்களாக  மனிதாபிமானத்துடன்  கௌரவமாக நடத்தி சட்டபடி என்ன வெல்லாம் செய்ய விடுமோ அதன்படி  அவர்களுக்கு  செய்வதுடன் , அதற்கு மேலாக மனம் உவந்து பல சலுகைகளையும் சிலர்  செய்வார்கள்.  அப்படி உழைத்து  நம்மவர்கள் சிக்கனமாக சேமித்து  வாழ்கையில் முன்னேற்றங்களை கண்ட  தமிழர்கள்  இருக்கிறார்கள்.

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் சொந்த வியாபாரங்களை ,  சொந்த  இஸ்தாபனங்களை வைத்திருக்கும் அநேகர்  தங்களுக்கு  என்று  ஆளுக்கு ஆள் , நேரத்திற்கு நேரம்  சட்டத்தில்  எழுதாத விதி முறைகள் வைத்திருக்கிறார்கள். தாங்கள் விரைவில்  பணக்காரர் ஆகவேண்டும்  என்ற கடும் பேராசையால்  நேர்மையை ப்பற்றி , மனித  நேயத்தைப் பற்றி ,  தொழில் தர்மத்தை ப்பற்றி,  சட்ட திட்டங்களைப் பற்றி  பலருக்கு  அக்கறையில்லை.   இவர்களிடம்  வேலை செய்வது  மிக மிக  கஷ்டம். விரல் விட்டு எண்ணக்கூடிய  விதி விலக்காக  நல்ல தமிழ் முதலாளிமார் இருக்கிறார்கள்.

பொதுவாக இந்த பணப்பேராசை கொண்டவர்களை  எடுத்து கொண்டால்,  ஒரு ஆளை வேலைக்கு வைக்கும்போது  - அந்த நாடுகளில் அரசாங்கங்களால் நிர்ணயிக்கபட்ட  மணித்தியாலத்திற்கு  ஆக குறைந்த  ஊதியத்தில், மூன்றில் இரண்டு, அல்லது அரைவாசி , அல்லது மூன்றில் ஒரு  பங்கைத்தான்   ஊதியமாக   கொடுப்பார்கள். ஊதிய உயர்வு  என்பது  கேள்விக்குறி. மேலும்  வருடாந்த  விடுமுறைகள் ஊதியத்துடன்  வழங்க வேண்டும் என்ற கதைக்கு  இடமே இல்லை. சட்ட பிரகாரம் வேலைக்கு வைத்திருப்பவர்களை   முதலாளிமார்  பதிய வேண்டும். அது அருமை . சிலர்  கூடிய  நேர வேலையை  வாங்கி கொண்டு, குறைந்த  ஊதியத்தையும் கொடுத்துக் கொண்டு,  சட்டத்தின் பிடியில் தங்களை காப்பாற்ற  சட்டபடி  சம்பளத்தையும், குறைந்த வேலை நேரத்தையும்  சம்பள தாள்களில் பொய்க்கு  பதிந்து  கொடுப்பார்கள்.  தொழிலாளி  தன் குறைந்த நேரத்திற்கு சம்பள தாள்கள் காட்டி, ஜீவியத்திற்கு காணாது என்று  அரசாங்க சலுகை  காசுகளை எடுக்க வேண்டியதுதான். குடும்பகாரர்கள் என்றால் செலவுகள் கூட.

அகதி அந்தஸ்து  அல்லது  வதிவிடப்  பத்திரம் கிடைக்காதவர்களுக்கு  வேலை செய்ய உரிமை இல்லை.  அதுமட்டுமா  மாணவர்களுக்கான  விசாக்களில்  இருப்பவர்களுக்கு  குறிப்பிட்ட  அளவு நேரம் தான் வேலை செய்யலாம்.  இவர்களை  எல்லாம்  குறைந்த சம்பளத்தில் நீண்ட நேர வேலைக்கு வைத்து  சுரண்டுவார்கள்.  ஆறு பணத்திற்குக் (குறைந்த காசுக்கு ) குதிரையும் வேண்டும், அது ஆறு கடக்கப் பாயவும் வேண்டும்இந்த முதாளிமாருக்கு.. அதுமட்டுமா  மிகவும் அசிங்கமான முறையில் தொழிலாளிகளை  திட்டி பேசுபவர்களும் உண்டு.  ஒரு வேலையாள் எப்போதுமே  முதலாளி கூப்பிட்டவுடன்  வேலைக்கு போகவேண்டும், அவனுக்கு சுகமில்லையோ , அல்லது  வேறு அலுவல்கள் இருக்கிறதோ, அல்லது அன்று ஓய்வுநாளோ அதெல்லாம் கணக் கெடுக்கபடமாட்டாது. போகாவிட்டால் அவளவும்தான், சிலசமயம் வேலையிலிருந்து  நிற்பாட்டு படுவார்.

பலருக்கு  சம்பள பாக்கிகளை  கொடுக்காமல் விட்ட  கதைகளும்  உண்டு. தொழிலாளியை  பயன்படுத்தி வங்கி யில் கடனை அவன் பெயரில் எடுப்பித்து விட்டு , சிலகாலம்  கழிய  ஏதாவது  மனஸ்தாபங்களை உருவாகி  கலைத்த  சம்பவங்களையும் உண்டு.  தொழிலாளி  வாயை நீண்ட நேரம் அசைத்தால் கடையில் இருந்து  எதையோ எடுத்து சாப்பிடுகிறான் என்ற சந்தேகம். தொழிலாளி  நன்றாக உடுத்தி இருந்தால்,  அல்லது  நல்ல கார் வைத்திருந்தால் , அல்லது நகைகள் போட்டிருந்தால் எல்லாம் தங்கள் கடையில் அடித்த காசில் தான் நடக்குது என்ற  சந்தேகம்.   தொழிலாளியுடன்  ஏதும் மனஸ்தாபம் வந்துவிட்டால் கள்ளன்”  என்று  படம் கட்டி கலைத்து விடுவார்கள்.  போதாக்குறைக்கு  தங்கள் நன்பர்களுக்கு, உறவினர்களுக்கு   மட்டுமல்ல  எல்லோருக்கும் அந்த தொழிலாளியைகள்ளன்”  என்று   கூறித்திரிவார்கள்.

இது ஒருபுறம் இருக்க    நம்ம  முதலாளிமார்  தாங்களும் கள்ள வேலைகளை செய்து கொண்டு  கள்ள பழக்கங்களை  தங்கள் தொழிலாளிகளுக்கும்  பழக்கி விடுவார்கள்.  காரணம்  அரசாங்கத்திற்ககட்டவேண்டிய  வரிகளை  மறைப்பதற்காக .  கடைகளை  தங்கள்  உறவினர் பெயரில் வாங்கி வைத்து கொண்டு , தங்கள்  கடைகளில்  தொழிலாளியாக  அதுவும் குறைந்த நேரம் வேலை செய்து  கொண்டு அரசாங்கம்  கொடுக்கும்  சலுகைகளையும் எடுத்துகொண்டு இருப்பவர்களும்  உண்டு. இப்படி சொந்த வீட்டிலேயே,  வீடு உறவினர் பெயரில்  வாங்கப்பட்டிருக்கும்,  வாடைக்கு இருப்பவர்களா காட்டி சலுகைகள் எடுப்பவர்களும் உண்டு.  சில தமிழர்களின் கடைகளில் சாமான்கள் வாங்கினால் பற்று சீட்டை கேட்டுத்தான் வாங்கவேண்டும்.  ஒரு சமயம் ஒரு தமிழரின் கடையில் பணம் செலுத்தி சாமான்கள் வாங்கி முடிய பற்று சீட்டை கேட்டு வாங்கி பார்த்தேன்,  வாங்கின சாமான்களின் தொகையை விட  நான் வாங்காத சமானின்  விலை சேர்க்கப்பட்டிருந்தது. நான் அதை சுட்டிக்காட்ட  "சொறி ", தவறுதலாக பில்லில் அடிபட்டு விட்டது என்றார்  உரிமையாளர்.  இப்படி தில்லு முல்லுகள் பல பல பல பல.  

நான் நிறைய  கேள்விப்பட்டிருக்கிறேன்.  இந்த கடை முதாளிமார்கள்  செய்கிற களவுகள், அநியாயங்களை   பார்த்து , சில தொழிலாளிகளும்  கள்வரான கதைகளும் உண்டு.   பிறகு கதையை கேட்டால் தொழிலாளிகள் முதலாளியை பற்றி நிறைய குறைகள்  கூறுவார்கள். முதலாளி தொழிலாளிகளைப் பற்றி நிறைய குறைகள்  கூறுவார். இப்படித்தான் பலர் சிலரின்  கதைகள்  உள்ளது.

ஆனால்  பலர்   கடைகளுக்குள்  தெய்வத்தின் படங்கள் அதற்குரிய  மரியாதைகளுடன் வைத்திருப்பார்கள்.    நிறை சொத்து  பத்துகள்  சேர்ப்பார்கள்.  சிலர் வீட்டுக்கு  விலை கூடிய புது காருகள் இரண்டு மூன்று வருடத்திலே வாங்குவார்கள், சிலர்  காசு கட்டி தங்கள் பெயர்களை காட்டும் தனிப்பட்ட  இலக்க தகடுகள் (number plates) காரில் பொருத்துவார்கள். தட புடலா வீட்டு கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள்  நடக்கும்.   இப்படி பல...பல ... பல ...

இறை  பக்தி, மத பக்தி, ஊரில் உள்ள கோவில் மேல்  உள்ள பக்தி ... எல்லாம்  இருக்கும்.   இதுபோக கோவில் திருவிழாக்களில் ,கொண்டாங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.  தங்கள்   பிராத்தனைகளுக்காக  கோவில்களை நோக்கி புனித  பயணங்கள் செய்வார்கள். விரதங்கள் இருப்பார்கள். இந்தியாவில இருந்து சாமிமார், சாத்திரிமார் வந்தால் சிலர் தங்கள் வியாபாரம் நன்றாக நடக்க அவர்கள் பின்னால் திரிவார்கள்.  அன்னதானங்களும் செய்வார்கள்.  இப்படி பல கதைகள் நிறைய உண்டு.  

ஒரு எக்கவுண்டன் எனக்கு கூறினார்  சரியான  வரி  கட்டாமல்  தவிர்க பல தனிப்பட்ட கடைக்காரர்கள் செய்கிற மோசடிகளால்,   பெரிய சுப்பர்  மாக்கட்டுகள்  பல இடங்களில் பரவலாக்க  திறந்து  கொண்டு போகும்  tesco express, sainsbury loca, etc.   போன்ற கடைகளை  அரசாங்கம் தடை செய்வதில்லை.  காரணம் அந்த சுப்பர்  மாக்கட்டுகள் ஒழுங்காக அரசுக்கு வரி கட்டுகிறார்கள். வேலையாட்களுக்கும்  சட்டபடியான ஊதியம், சலுகைகளும்  கொடுக்கிறார்கள்.
 

வியாபார  ரீதியில்  வேவ்வேறு வேறு துறைகளை சார்த புத்தி ஜீவிகள்   தங்கள்  சேவைகளை வழங்குகிறார்கள். அவர்களில் சிலரிடம் அகப்பட்டால்  அவளவுந்தான். கதை கந்தல். எனக்கு தெரிந்ததை விட  தெரியாதவை  அதிகம்.

சரி  இப்போ என் கதையை தொடருகிறேன்.  தொடர்ந்து  படியுங்கள்.

அந்த  ஆசிரியரின் பெயரோ  சாதாரண  பெயரல்ல. மகா பாரத்தில் வரும்  பஞ்ச பாண்டவர்களின் மூத்தவருக்கு  என்ன பெயரோ  அவர்  பெயருடன் "ராஜா" வும்   இணைத்துள்ளது.   அவரை செல்லமாக அவர் வயதை ஒத்தவர்கள் பாண்டவர்களில் மூத்தவரின் பெயரை சொல்லியும்,  மற்றவர்கள்  “மாஸ்டர்   என்றும் அழைப்பார்கள்.

புலம் பெயர்ந்த நாட்டில முதல்  முறையாக  ஒரு புலம்  பெயர்ந்த  தமிழர் ஒருவரிடம்  நான் வேலைக்கு போனது என்றால் இந்த "ஆசிரியர்  "  ரிடம் தான்.  

2006 ம் ஆண்டு நடுப்பகுதியில்  அவர் கடைக்கு  வேலைக்கு  போனேன். அன்று தான் அவரை முதல் முதலாக கடையில் கண்டேன்.   ஆஜான பாகுவான தோற்றம். என்னைவிட அதிக உயரம்.  அவருடன் பழகிய  ஒருவர் அண்மையில்  கூறிய மாதிரி அவர் சனி பகவான் நிறம்.  என்னைவிட   எட்டு,  பத்து வயது மூத்தவராக  காணப்பட்டார்.    அவருடன்  உரையாடும் போது  தன்னை பற்றி  அவர் கூறிய தகவல்கள்  என்னவேன்று  பாருங்களேன்.  
 

தான் ஆசிரியராக மலைநாடுகளில் உள்ள பாடசாலைகளிலும், கொழும்பு 12  இல் உள்ள முஸ்லிம் பாடசாலையிலும் கணித பாடம் படிப்பித்ததாகவும்,   இறுதியாக  தானும்  தன்  உடன்பிறப்புகளும் படித்த  சாவகச்சேரி  டிறிபேக்  கல்லூரியிலேயே    நாட்டை விட்டு புறப்படும் வரை அதாவது  1989  ம் ஆண்டு வரை  தான் ஆசிரியராக  கடமை ஆற்றியதாகவும்  , அத்துடன்   யாழ்/  மத்திய  கல்லூரியில் அரசு  நடத்தும்  க.பொ .த ( சாதாரணம் ) கணித பேப்பர்  திருத்தியதாகவும், முதல் முதலாக தான் அக் கல்லூரிக்கு  கணித பேப்பர்  திருத்த  போன போது தன்  தோற்றத்தை கண்டு ஆசிரியைகள் பயந்ததாகவும் எனக்கு  பெருமையாக  கூறினார்.  தமிழ் ஆசிரியர்களுக்கான  சங்கங்கள் இரண்டினதும் ( முந்தைய ) செயலார்களின்  பெயர்களை  குறிப்பிட்டு  அவர்கள் தனக்கு  நல்ல நண்பர்கள் என்றார். மேலும்  தான் கொழும்பில் படிப்பித்த காலத்தில் , கொழும்பு கல்வி கந்தோரில் தமிழ் பிரிவில் எதையும் எந்த ஆசிரியருக்கும்  செய்து கொடுக்ககூடிய செல்வாக்கு  தனக்கு இருந்து  பல தேவைகளை தனக்கு பழக்கமான  ஆசிரியர்களுக்கு  சம்பள பாக்கிகள், இடமாற்றங்கள், … என்பன  செய்வித்து   கொடுத்ததாக கூறினார். அதுமட்டுமா  தனது  ஊர்  நுணாவில் என்றும்,  அங்கு  தங்களுக்கு சொந்தமாகவே கோவில்  இருக்கென்றும் கூறினார்.  

அதுமட்டுமா  தான் மலை நாட்டில்  (மத்துகம என்ற இடத்தில் )  படிப்பித்து கொண்டிருந்த போது சொந்தமாக கற்பூர  பற்றரி  நடத்தியதாகவும் அங்குள்ள பெண்  பிள்ளைகளுக்கு  வேலை கொடுத்ததாகவும், தன்னிடம்  சொந்தமாக  பரினாகார் இருந்ததாகவும், கதிர்காமம் வரை சென்று  கற்பூர வியாபாரம் செய்ததாகவும்  கூறினார்.  அவரின் கற்பூர  பிராண்ட்  "பழனி மார்க்" என்றார்.    இதை விட தனது சொந்த  ஊரில்  இருந்த போது  தன் வீட்டில்  வேலைக்காரர்கள் வைத்திருந்து  வசதியாக வாழ்ந்ததாகவும் , தனது  தந்தையார் ஒரு ஆசிரியர் என்றும் தாயார்  ஊர்  தெல்லிப்பளை, தாயார் பகுதியில்  எல்லோரும் படித்தவர்கள் ரெயில்வேயில்  சீப்  எக்கவுண்டன், இன்னுமொரு உறவினர் நீர்பாசன தலைமை அகத்தில்  சீப்  இஞ்சினியர்  என்றெல்லாம் கூறினார்.   கொழும்பில்  இருந்து  சாகவச்சேரிக்கு  மாற்றலாகி  படிப்பிக்க வந்த பின்னும்  தான்  “பழனி மார்க் “  கற்பூர தொழிலை தொடர்ந்து  செய்ததாக கூறினார்.  தான் யாழ்ப்பாண  பஸ்  நிலையத்தில்  நின்றால் தன்னை பலர் என்ன மாஸ்டர் இங்கு  நிற்கிறீர்கள் ?” என்று வந்து கதைப்பார்கலாம், அவளவுக்கு  தான் பிரசித்தம்  பெற்றவர்  என்றார்.  அதுமட்டுமா தான்  வேளாளர் ஜாதி  என்றும், தனது ஊரில்   நன்மை, தீமைகள் நடந்தால் அவற்றுக்கு  தான் தான் தலைமை தாங்கி  நடத்தி வைப்பதாகவும்,  நாட்டு பிரச்சனைகளால் நாட்டை விட்டு  புறப்படுமுன்  தன்  வீட்டு  " சவர் "  ( SHOWER ) ரில்  குளித்து  வெளிக்கிட்டவர்  அப்படி தான் வசதி வாய்ப்புகளுடன் வாழ்தவர்

என்றும், தன்  மனைவி  யாழ்/ பல்கலை கழகத்தில்  வெளிவாரி  மாணவியாக கணிதம் கற்றவர்  என்றும்,  தான்  லண்டனில்  உள்ள  ஒரு  பல்கலை கழகத்தில்   படித்து  பி.ஏ .ஹோனஸ்”  பட்டம் பெற்ற பட்டதாரி  என்றும் கூறினார்.  அதுமட்டுமா, லண்டனில்  உள்ள சிறுவர் பாடசாலைகளில் தான் ஒரு "  சப்பிளை  டீச்சர் " ஆக பணியாற்றியவர்  என்றும் கூறினார்.   தான்  இங்கிலாந்து வந்து  சில மாதங்களில்  கோட் சூட்”   போட்டுக்கொண்டு  இங்கு பாடசாலைகளில் படிப்பிக்க போன  செய்தி இலங்கையில்  தன் சொந்த ஊருக்கும் ,  தன் நண்பர்களுக்கும் பரவி விட்டதாம்.   தன்னுடைய தாயார் வழி கிறிஸ்தவர்கள் என்றும்,  தனக்கு  எம் மதமும் சம்மதம்,   தங்களுக்கு  தெரிந்த கிறிஸ்தவ குடும்பத்துடன், அவர்களின்  கோவிலால் வருடா வருடம்  அழைத்து செல்லப்படும்  வோல்சிங்கம்”  மாதா  கோவிலுக்காக ஒருநாள் புனித யாத்திரைக்கு  தான் குடும்பத்துடன் போய்  வருவதாக கூறினார். இப்படிக்கூற காரணம்  நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்  என்பதால்தானோ  என்னவோ. அதுமட்டுமா இந்த நாட்டில்  தன் வீட்டில் தான்  சீட்டுகள் நடத்துவதாகவும்,  ஒரு சமயம் சீட்டு பிடித்தவர்களில்  ஒருவர் பயணம் போகும்போது  விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், அவர் தன்னிடம் சீட்டு போட்டது  அவரின் வீட்டுக்காரர்களுக்கு  தெரியாது  ஆனாலும்  அவர் கட்டிய  சீட்டுக்காசை அவர்கள் வீடு தேடிப்போய் கொடுத்ததாகவும், அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று தன்  நேர்மையை  பிரமாதமாக  கூறினார். அதுமட்டுமா இலங்கையில் உள்ள  நண்பர் ஒருவருக்கு  தான் வருடா வருடம்  காசு அனுப்பி உதவி புரிவதாக கூறினார்.   அதுமட்டுமா  தன் கடை,  கட்டடம், தன்  வீடு எல்லாம் தனக்கு சொந்தம் என்றும், “மோட்கேட்ஜ் கட்டி கொண்டிருப்பதாக கூறினார். அதுமட்டுமா வருடா வருடம் தான்  இங்குள்ள செல்வ  விநாயகர் கோவிலில் மூவாயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதாக கூறினார்.   இங்குள்ள தன் உறவினர்களை பற்றி குறிப்பிட்டு, தன் அக்கா மகனிடம்   நூறுக்கு கிட்ட  வீடுகள், கடைகள் சொந்தமாகவும், அக்கா மகள்  மாதா மாதம் ஏலத்தில் வீடுகள் வாங்குவதுதான் வேலை  என்றார்.

அவர் எக்கவுண்டன், இவர் டாக்டர் , அவர்  ஏரோ பிளேனுக்கு  பாடி”  (BODY)  அடிக்கிறவர், ... என்றெல்லாம் பெருமையாக கூறுவார்.  வருடா வருடம்  " அம்மா"  (ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி  தேவி) இந்தியாவில் இருந்து  வருடா வருடம்  இந்த நாட்டுக்கு வரும்போது  தான் குடும்பமாக  மூன்று நாட்கள் இரவில் போய் இருந்தது தரிசித்து  காலையில்  வருவதாகவும்  அவ அரவணைக்கும் போது  ஒரு சக்தியை தன்னில் உணர்வதாகவும் கூறினார்.  என்னையும்  அந்த " அம்மா " அவர்களிடம் கூட்டி போகவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

இந்தியாவில் இருந்து  யாரும்  சாமிமார் வந்து விட்டால்,  அவர்களை தரிசிக்க போய் விடுவார். அதுமட்டுமா அடிக்கடி இங்குள்ள இந்து கோவிலுகளுக்கு போய்  கொண்டிருப்பார். நான் இவரின்  ஊரை சேர்ந்தவனுமல்ல, இவர் படித்த  பள்ளிக்கூடத்தில்  படித்தவனுமல்ல, படிப்பித்தவனுமல்ல.  இவருக்கு  நெருக்கமான  ஒருவரை கூடி எனக்கு அச்சமயத்தில் தெரிந்திருக்க வில்லை.  இருப்பினும்  மேலே சொன்ன தகுதிகள் கொண்ட  தமிழர்  ஒருவர்  இருக்க முடியாது, நம்ப முடியாது என்று  இல்லையே. தன்னைப்பற்றி இவர்  சொன்ன  தகுதிகள்  முழுவதும் எனக்கு கிடையாது,  வயதாலும் பல வருடங்கள் நான் இளமையானவன்.    எள்ளளவு சந்தேகம்  இன்றி  இவரை நம்பினேன்.  இவரிடம் எவளவு சம்பளம் தருவீர்கள் என்று  கூடி நான் கேட்கவில்லை. அவளவு  தூரம்  மதிப்பும், நம்பிக்கையும் ,  பற்றும் வைத்திருந்தேன்.  அதனால் அவரிடம் வேலை செய்ய தொடங்கினேன்.  வேலை  நேரம்  என்பது, அவரின் கடையில்   இரண்டு  நேர " சிப்ட்  டியூட்டி ".  ஏழு  நாளும்  கடை திறந்தபடி .  ஏற்கனவே அவரிடம்  தொழிலாளிகள இருவர்  வேலை  செய்து கொண்டிருந்தார்கள்.  மொத்தம்  பதிநாலு  " சிப்ட்  டியூட்டி " களில்  நான்

 

 

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 4 லை பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 4

 

 

 

ஆக  இரண்டு, சில சமயம் மூன்று, சிலசமயம்  நாலு " சிப்ட்  டியூட்டி " கள்  செய்வேன்.  அதாவது யாரும் லீவு எடுப்பதைப்  பொறுத்து.  நான் அதிகமாக பின்னேர "சிப்ட்  டியூட்டி" யை செய்வது வழக்கம். காரணம் எனது பிள்ளைகள்  சிறுவர்களாக இருந்ததால்  பாடசாலைகளுக்கு கூட்டி செல்லவேண்டிய நிலைமைகள் எனக்கு இருந்தன .  நான் பின்னேர "சிப்ட்  டியூட்டி" யை செய்ததாலும்,  இந்த  பெரிய மனிதர்   பின்னேரங்களில் வந்து கடை பூட்டும் வரை இருந்து  சேர்ந்த காசுகளை எடுத்து செல்வதாலும்,  அதுமட்டுமல்ல   தேனீர்  தயாரித்து  எனக்கும் தந்து,  மிகவும்  பண்பாக என்னுடன் கதைப்தாலும்  உயர்ந்த  மதிப்பு வைத்து  நட்புடன் பழகினேன்.

நான் வேலை செய்ய தொடக்கி அந்த வார முடிவில்  ஊதியத்தை  தந்தார்.  தந்த ஊதியத்தை சம்பளத்தை பார்த்து  எனக்கு  அதிர்சியாக  இருந்தது.    ஆக குறைந்த  ஊதியம்  என்று  சட்டபடி அரசு நிர்ணயித்தில்,  கிட்ட தட்ட  அது அரைவாசி ஊதியம். அதில் கிட்டதட்ட ஐந்தில் ஒரு பகுதி  என் இருப்பிடத்தில்  இருந்து இவரது கடைக்கு போய்  வர  பிரயாணத்திற்கு  செலவாகி  விடும். அதுமட்டுமா பிரயாணமே  போய்  வர  சராசரியாக இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.  இப்படித்தான் தான் எல்லோருக்கும்  ஊதியம்  கொடுப்பதாக கூறினார்.  சரி மனுஷன்  நல்லவராக இருக்கிறாரே அதுவும் என்னிடம்  உதவியல்லவா கேட்டவர், ஒரு ஆசிரியரா இருந்தவர்  என்று  அந்த சம்பளத்தை சரி என்று ஏற்றுக்கொண்டேன்.  அவரும் விரைவில்  கடையை விற்று விடுவார்  அத்துடன் நானும்  வேறு ஒரு கடை எடுத்து போய் விடுவேன் என்று  நம்பிக் கொண்டிருந்தேன். கடையில்  என்னுடன் சேர்த்து மூன்று பேர் வேலை  செய்தார்கள்.  ஒரு ஊழியர்  மாணவருக்கான  விஸாவில் இலங்கையில் கண்டியில் இருந்து  வந்தவர்.  அவர் ஒரு இளைஞன் . மற்றவர்  இந்த நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர், ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டு   பின்  தன்  கடையை  விற்றவர், வேறு ஒரு கடை எடுக்கும் வரை இந்த  பெரிய மனிதரின்  கடையில் வேலை செய்து கொண்டிருத்தார்.

இதே நிலையில் நான் கடை ஒன்று  எடுக்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் சரி வருவதாயில்லை. என்னிடம் காசு  இருப்பதும்  இந்த  பெரிய மனிதருக்கு  தெரியும்.   அடிக்கடி கதைக்குபோது  என் பிரச்சனைகள் , கஷ்டங்கள் , பலவீனங்கள் ,  யாரும்  எனக்கு உதவ கூடிய நெருங்கிய சொந்த பந்தங்கள்  இல்லாத நிலை, …  எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டு,  எனக்கு புத்திமதிகள்  " புத்தர்  "  மாதிரி  கூறுவார்.  உண்மையில்  நல்ல புத்திமதிகள். நான் ஆட்களுடன் பழகுவது குறைவு  என்பதால் தன்னைப்போன்ற  ஆட்களுடன்  பழகச் சொல்லுவார்.   இந்த  பெரிய மனிதர் என்னை விட பல வருடங்கள்  வயதால்   மூத்தவர் மட்டுமல்ல , சமுதாயத்தில் அவர்  கண்ட, பெற்ற  அனுபவங்கள் அதிகமாய் இருந்ததால் அவர் கூறுவதை எல்லாம்  நம்பி  ஏற்றேன்.  அந்த தருணத்தில் இந்த பெரிய மனிதர்  ஒரு தந்தைபோல்  (  A FATHER FIGURE  )   எனக்கு  அத்தருணத்தில் எனக்கு  காணப்பட்டார்.   அவர் மேல் அந்த நேரம் அதீத நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தேன்.

சில மாதங்களில்  செல்ல   இந்த  பெரிய மனிதர்  என்னிடம் கேட்டார்.  தனக்கு  அவசரம் காசு தேவையாக  இருக்கிறது,  என்னை தனக்கு கட்டாயம் உதவும்படியும், சும்மாய்  தரவேண்டாம், தான் அப்படி வாங்க மாட்டேன், அதற்கு  வட்டியும்  போட்டு ஒரு சில மாதங்களில் தருவேன் என்றார்.  நான் அதற்கு உடன்படவில்லை.  நான் அவரின்  வசதியான  உறவினர்களிடம்  கேட்டும்படி   அவருக்கு  கூறினேன்,  அதை அவர் கௌரவ  குறைவாக  கருதினார்.   அவரும்  கேட்கிறாரே  என்று  கேட்ட தொகையை கொடுத்தேன்.  சாட்சிகள் இல்லாமல்,  எழுத்தில் அவரின் நிபந்தனைகள் எழுத்தி வாங்காமல்  கடை எடுக்க வைத்திருத்த காசு முழுவதையும்  அவரின் வாக்கு  நாணயத்தை  நம்பி  நட்பின் அடிப்படையில் கொடுத்தேன்.

அவரும் எனக்கு  தந்த  வாக்குப்படி  பணத்தை தந்து  விட்டார்.   தந்துவிட்டு  பிறகு  சில மாதங்கள் போக கூறினார் தன்  வீட்டுக்கு  பக்கத்து  வீடு விற்க  போட்டிருக்கிறது, அந்த வீட்டு உரிமையாளர் தன்னை வாங்கும்படி அடிக்கடி கேட்கிறார் என்றார்.   ஒருநாள் கேட்டார்  தான்  ஓரு  முதலீடு  செய்ய  அதே பணத்தை திரும்ப கேட்டார். அதுவும்  ஆறு  மாதங்களில்  திரும்பி  அதற்கு  தான் வட்டியும் போட்டு கட்டாயம் தருவதாக ஏனெனில் வங்கியில்  எடுத்தாலும் வட்டிதானே என்றார்.  அச்சமயத்தில்  நான் வியாபாரம்  ஒன்று  எடுக்க தேடியும்  கிடைக்க வில்லை.  அதுமட்டுமல்ல  அவரின்  நூறு வீடுகள் கடைகள் வைத்துள்ள  உறவினரிடம்  கேட்கும்படி ,  ஏனெனில்  கடை  கிடைத்தவுடன் அதை வாங்க எப்போதும் என் பணம் தயாராக என்னிடம் இருக்க வேண்டும் என்று கூறினேன்.  சொந்த  பந்தங்களிடம் கடன்  பட விருப்பமில்லை  அத்துடன்  என்னுடைய   நிலைமைகளும்  தனக்கு நன்றாக தெரியும் என்பதால் தான் பிழை  விடமாட்டேன்,  இதவிட  தான்  நிறைய  கொடுக்கல்  வாங்கல்கள் பலருடன்  செய்ததாக எனக்கு கூறினார்.  

அதுமட்டுமல்ல   தனக்கு  இந்த நாட்டில் உள்ள வீடு, கடை  மட்டுமல்ல,  சாவகச்சேரி  நகரில்  மிகவும் பெறுமதியான காணி பூமி சொத்து பத்துகள் இருக்கு  ஆகவே பயப்பட வேண்டாம் , அத்துடன் கடையும் கொடுத்தால் காசும் வரும் பயப்படவேண்டாம், உங்களுக்கு  தேவை என்றவுடன் அவைகளை விற்றாவது தருவேன்  என்று  வாயால் உத்தரவாதமும்   தந்தார்.   அவர் தந்த  வாக்குறுதியை  நம்பி நான் கடை எடுக்க வைத்திருந்த பணத்தை கொடுத்தேன். 

இப்படியான நிலையில்  இருவருக்கிடையில்  சாட்சிகலும்  இல்லாமல்  , எழுத்திலும்  எழுதப்படாமல் நம்பிக்கையின் அடிப்படையில்  நடந்த  " வாக்குறுதி  ஒப்பந்தம் "  ( ஆங்கிலத்தில் verbal promise, word of honor,  gentleman's agreement, . . .  )  என்பார்கள்.

நாளாந்த வாழ்கையில்  நாங்கள் எங்கள் பெற்றோருக்கு , பிள்ளைகளுக்கு , உறவினர்களுக்கு  , நண்பர்களுக்கு , பழகியவர்களுக்கு  ….  இப்படி   பலருக்கு  வாக்குறுதிகளை  கொடுக்கிறோம் ... அவர்களும்  வாக்குறுதிகளை தருகிறார்கள் .   ஆனால் எல்லாமே எழுத்துகளில் எழுதி , சாட்சிகள் வைத்து  நடப்பதில்லை.   எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.  மனட்சாட்சி அற்றவர்கள் , பேராசைக்காரர்கள், பொய்யர்கள்  சுலபமாக மீறி விடுவார்கள்.  

இந்த ஆசிரியப் பெரும்தகை தன்னை பற்றி எனக்கு கூறிய பெருமைகள், அதுமட்டுமா ஏற்கனவே சொத்து பத்துகளுக்கு  அதிபதி , "புத்தர்" மாதிரி பேச்சுக்கள், ஆன்மீக வாதி, வருடா வருடம்  மூவாயிரம் பேருக்கு  இங்கு கோவிலில் அன்னதானம் செய்யும் வள்ளலார்,  எனக்கு முதலாளியும்  கூட , கேட்பதோ முதலீட்டுக்கு,  ஏற்கனவே  தான் ஒரு  நாணயஸ்தன்  என்று  நிருபித்துள்ளார், ... ஆகவே நான்  அவரை நம்பி கொடுத்தத்தில்  ஏதும் தவறிருப்பதாக  என் மனதில் தென்படவில்லை.  ராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்ததது  என்பார்களே அதுபோல்  நானும்  இவரின் முதலீட்டுக்கு  உதவினேன்.

நான்  கொடுத்தது  தொகை பெரியது.   விதை நெல்லாக  வைத்திருந்த  பணம் அது. என்னிடம் காசை வாங்கி  அவர் என்ன  முதலீடு செய்தார் ,  இன்னொரு வீடு வாங்கினாரா ?,  சிலர் அபிப்பிராயப்படுவது போல்  பெரும் வட்டிக்கு  கொடுத்து  உழைக்கிறாரா   என்பது  எனக்கு  இன்று வரையும் தெரியாது.   அச்சமயங்களில் முதலீட்டை பற்றி   கேட்டால் சொல்லுவார்  " மறைப்பேன்  பொய் சொல்லமாட்டேன்",  …  “எல்லாவற்றையும் எல்லோருக்கும் கூறமுடியாது, கூறினால் உலகம் பயித்தியக்காரன் என்று சொல்லும் என்று அடிக்கடி  தத்துவங்கள் கூறி அதற்கு உதாரணங்கள் கூறி  சொல்ல  மறுத்து விட்டார்.  

ஆறு  மாதங்கள்  கடந்தன காசும் இல்லை கதையும் இல்லை. கேட்டால் சொல்லுவார்  இந்தா கடை விலைக்கு  போகிறது, தந்து  விடுவேன் என்றார்.  இப்பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க,   இந்த   பெரிய மனிதரின்  கடையில் வேலை செய்த  நான் உட்பட தொழிலாளிகளின் நிலைமைகளையும் , அவர்   கடை  நடத்திய  அழகையும் கூறுகிறேன் கேளுங்கள்.

இந்த  பெரிய மனிதர்  கடையில்  மாணவர்  விசாவில் இருந்த தமிழ்  இளைஞனுக்கு  ஒருநாள்   சட்ட ரீதியான சம்பளத்துடன்  பெற்றோல்  ஸ்டேஷனில்   ஒரு  நல்ல வேலை கிடைத்ததுஅந்த  சம்பளமானது இந்த ஆசிரியப் பெரும்தகை கொடுத்து கொண்டிருந்த சம்பளத்தைவிட  இரண்டு மடங்கு,  அத்துடன் இளைஞனின்  இருப்பிடத்திற்கு கிட்ட.    அந்த இளைஞன் அதை இந்த  பெரிய  மனிதரிடம்  கூறி  தான் கடை வேலையை  விட்டு விலகுவதாகவும் தன்  சம்பளப் பாக்கியை தருமாறு   கேட்டுள்ளார்.    அது இந்த  பெரிய மனிதருக்கு  விருப்பமில்லை. சம்பளம் கூட கிடைக்கிறது  என்றவுடன்  அவன் தன்  கடையில் வேலையை  போய் விட்டான் , அதுமட்டுமல்ல சம்பள பாக்கியில் ஒரு நாள் சம்பளத்தை விடும்படி பிறகு  தாரேன் என்று  தான்  கூற,   இல்லை என்று வாங்கி சென்று விட்டான் என்று மிக மோசமாக  திட்டோ திட்டு என்று  அந்த இளைஞனைப் பற்றி  எனக்கு  கூறி ஆத்திரத்துடன் பேசினார். பல நாட்களாக , பல தடவைகள் இப்படியே  திட்டி கொண்டிருந்தார்.  அவரின் கோபத்திற்கு  காரணம் உங்களுக்கு  விளங்குகிறதா ?  குறைந்த ஊதியத்திற்கு  வேலை அனுபவம்  உள்ள,  அதே சமயம் சட்டப்படி  தான் பதியாமல் வைத்திருக்க கூடியதாக  ஒரு ஊழியரை   தேடவேண்டுமே.   அந்த இளைஞன்  வேலை செய்த  காலத்தில்  ஒரு சமயம்  வருடா வருடம்  கோவிலில் தான் கொடுக்கும் அன்னதான தினத்தன்று  அன்று ஓய்வில் இருந்த இந்த இளைஞனை  பண்ட பாத்திரங்கள்  தூக்கி உதவ கேட்டபோது , அந்த  இளைஞன் வரவில்லை என்று எனக்கு கூறி திட்டினார்.  கடையை  காலை அந்த  இளைஞன்  திறக்க வேண்டிய  தேவை  வந்தால், கடை திறப்பை வாங்க சாமம் பன்னிரண்டு  மணியளவில் பஸ் எடுத்து வந்து  இந்த  பெரிய மனிதரின்  வீட்டுக்கு கிட்ட உள்ள ரயில்வே  ஸ்டேஷனில்   காத்திருப்பார்  . இரவு கடை பூட்டி  சிட்டி”  யிலிருந்து  ரெயின் மூலம்   இந்த  பெரிய மனிதர்  வர  சாமம் பன்னிரண்டு  மணியாகும்.  காசு கொடுத்து  இன்னொரு  கடை திறப்பு  செய்வித்து  கொடுக்க  இந்த பெரிய  மனிதர்  அக்கறை காட்டவில்லை, விற்கிற  கடை தானே என்று.  மாணவர் விஸாவில் வாறவர்களுக்கு   சலுகைகள், இலவச பண உதவி  இங்கு கிடைக்காது. கொடுக்க மாட்டார்கள்.  அதனால் அந்த இளைஞன்  தான் வாழ்வதற்கு  இந்த  பெரிய  மனிதர்  கொடுக்கும் அற்ப  ஊதியத்தில் தான்  வாழவேண்டும்.   சுவாசிக்கிற  காற்று ஒன்றை தவிர மற்றதெல்லாவற்றிக்கும் அவர்கள் காசு கொடுத்துதான்   அனுபவிக்க வேண்டும்.  பாவம் அவர்கள் நிலை.  அதற்குள் இந்த  பெரிய  மனிதர்  எல்லோருக்கும்  கொடுக்கும் சம்பளம் எப்படி  என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.   இந்த  பெரிய மனிதரின்  கடை  " சூன் 1" (ZONE 1)  இருப்பதால்   " சூன் 2 "  ( ZONE 2  ) வரை ரெயினில் வந்து  நடந்து வருவார்  காசை சேமிக்க.  

இதே சமயம்  அந்த  கண்டி இளைஞன்  கூறி  அந்த இளைஞனின்  தூரத்து உறவினர் ஒருவரை  இந்த பெரிய மனிதர் வேலைக்கு  வைத்துகொண்டார். நடுத்தர வயது, கொழும்பு சொந்த ஊர்,  அவருக்கு குடலில் புற்று நோய்  ஏற்பட்டு  இரண்டு தரம்  ஆப்பிரேசன்  செய்யப்பட்டவர் . ஆனால் அந்த சமயம் அவருக்கு  வதிவிடப் பத்திரமோ , அகதி அந்தஸ்தோ  கிடைக்காததால்  இந்த நாட்டு சலுகைக்  காசுகள் கிடையாது. மருத்துவம் இலவசம்.   அவர் வேலை செய்ய தொடங்கினார்.  ஆனால் அதே  குறைந்த ஊதியம் தான். இவை ஒருபுறம் இருக்க  நீண்ட காலமாக  அவரின் கடையில் வேலைக்கு  வைத்திருந்த வியாபார  அனுபவம்  மிக்கவரை  நிற்பாட்ட  இந்த  பெரிய மனிதர்  தீர்மானித்தார்.  இந்த  பெரிய மனிதர் அந்த ஊழியருக்கு   எங்களுக்கு  தரும் ஊதியத்துடன்  ஒப்பிடும்போது ஆறில் ஒரு பங்கு  அதிகமாக கொடுத்து கொண்டிருந்தார்.  இப்போ அதைவிட குறைந்த ஊதியத்திற்கு ஆட்களை எடுத்து  விட்டாரே. அதுமட்டுமல்ல  இந்த  பெரிய மனிதர் அவருடைய  கிழமை  ஊதியத்தை கொடுக்க தவறினால், அவர் நடந்த வியாபார காசில்  தன்  ஊதியத்தை கணக்கு பார்த்து  கிழமை முடிவில் எடுத்து விடுவார்  இது இந்த பெரிய மனிதருக்கு  பிடிப்பதில்லை.   மேலும் கடையில் ஒரே ஒரு  சிறு  " கீட்டர் "  (room heater) மட்டும்தான். அது மின்சாரத்தை   கொஞ்சம்  கூட  இழுக்கும்.  குளிர் காலத்தில் மட்டும் பாவிப்போம். இந்த  பெரிய மனிதர்   வயதானவர்  என்றபடியால்  பொதுவாக  அந்த " கீட்டர் "  ரை   தன்னை நோக்கி திருப்பி  வைத்துவிட்டு  ஒரு கதிரையில் இருந்து விடுவார்.  தொழிலாளியை  பற்றி  அவர் அக்கறை படமாட்டார்.  தொழிலாளிகள்  நாங்கள்  இருப்பதற்கு  ஒன்றுக்கு மேல் ஒன்று  அடுக்க  பட்ட பிளாஸ்டிக் பெட்டிகள் உண்டு அதற்கு மேல்  மென்மைக்காக  பழைய  பத்திரிகை தாள்களை அடுக்கி வைத்துத்  தான் இருப்போம்.  ஒரு  நாள்  இரவு தன்  மகனை  காரில் அனுப்பி அந்த " கீட்டர் "  ரை  தன் வீட்டுக்கு எடுபித்து விட்டார்.  பல்கலை கழகத்தில் படிக்கிற ஒருவனுக்கு விளங்காதா  தான்  " கீட்டர் "  ரை   தூக்கி கொண்டு போவதால், கடையில் ஒரு  " கீட்டர் "   ரும் இல்லாமல் இருக்கும் என்று. அதுமட்டுமல்ல வேறு " கீட்டர் "  வாங்கி போடவில்லை. கடையில்  இப்போ " கீட்டர் "  இல்லை. குளிர் காலம் வேறு.  அத்துடன்  கடைகளுக்கான  நாலடி  நீளமான  திறந்த " பிரிச்ஜ் "  சுக்கு முன்னால்தான்  "ரில்"  (cash register) கவுண்டரும்  இருந்தது.  குளிரின்  கொடுமை  எப்படி இருக்கும் என்பது  அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.  நாங்கள் என்ன வடதுருவப் பகுதிகளில் இருந்து  வந்த எஸ்கிமோஇனத்தவரா?  இந்த பெரிய மனிதர் கடைக்கு  மிகவும்  பிந்தி வந்து  காசுகளை சேகரித்துகொண்டு, கடை பூட்டியதும்  போய் விடுவார்.    இதற்கிடையில்  இந்த பெரிய  மனிதரின் நண்பர் என்று  வயதான ஒருவர்  வேலைக்கு வந்து சேர்ந்தார்.  அவர் இலங்கையில் ஒரு அரசு ஊழியராக  இருந்தவர்.  அவர் பின்னேரத்தில்  இரண்டு மூன்று " சிப்ட்  டியூட்டி " கள்  செய்ய தொடங்கினார். பின்னேரத்தில்  இந்த பெரிய மனிதர்  போற படியால்  இருவரும்  சம்பாஷிக்கலாம் அல்லவா.  " கீட்டர் "  ரை  எடுப்பிப்பதற்கு முதல் கடை  பூட்டும் வரை வேலை செய்தவர்  இந்த பெரிய மனிதரின்   நண்பர்.   இந்த பெரிய மனிதரும்   அதுவரை  தன்  நண்பருடன்  இருந்துதான்  கடையை பூட்டியவர்.  ஆனால் இந்த பெரிய மனிதர்  கடையில் இருந்த  அந்த ஒரே ஒரு   " கீட்டர் "  ரை வீட்டுக்கு கொண்டு போகும் திட்டத்தை  தன்  நண்பருக்கு தெரிவிக்கவில்லை.  அடுத்த நாள் பின்னேரம் வேலைக்கு வந்த  இந்த பெரிய மனிதரின்  நண்பர் அதிர்ச்சி அடைந்து , பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பார்களே  இதுதான்  கடசி  நாள்  இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்  என்று அந்நேரம்  இருந்த ஊழியரிடம்   கூறியவர்  அதன் பிறகு அவர் வேலைக்கே  வருவதில்லை.  இந்த பெரிய மனிதர் எனக்கு கூறினார்  அவருக்கு  போக்கு  வரத்து கஷ்டம்  அதனால் நின்று விட்டார், நல்லவர்,  சம்பளமே வேண்டாம் என்று  விட்டார்”   என்று.  நான் ஒரு ஆஸ்மா நோயாளி கூட.   பொதுவாக மூச்சு  இழுக்க நான் கஷ்டப்பட்டால் , “ சுடுதண்ணி  குடியுங்கள் மாறும்”  என்று கூறுவார்.    ஒருநாள்  கடுமையாக பனி ( SNOW )  விழுந்து வீதி எல்லாம்  மூடி இருந்தது .   காலையில் கடை திறந்த  நீண்ட காலம் வேலை செய்யும் அந்த   ஊழியர்  குளிரை   தாக்கு பிடிக்க முடியாமல்  கடைக் காசில்  ஒரு  சின்ன "கீட்டர்ரை அருகில் இருந்த கடையில் வாங்கி போட்டார்.  இதை ஒரு குற்றமாக  அவரை பற்றி  பலநாட்கள் பல தடவைகள் எனக்கு  இந்த  பெரிய மனிதர்  கூறி திட்டினார்.  அந்த "கீட்டர்”  ரிலிருந்து  வீசும் சூடு முழங்காலுக்கு கீழ்தான் கொஞ்சம்  சூடுதரும்.   இப்படி  அந்த ஊழியரைப்  பற்றி  எனக்கு  குறைகள் கூறிக்  கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை  அந்த  ஊழியரை வேலையால் நிற்பாட்டி விட்டார் .  அந்த வருடமே அந்த   "கீட்டர”  பழுதாகி விட்டது. நானே என் சொந்த செலவில்  ஒரு சிறு   "கீட்டர்”   வாங்கி கடையில் போட்டேன்.

தற்போது  ஊழியர்  தட்டுப்பாடு  ஏற்பட்டது.  இன் நிலையில்  இந்த பெரிய மனிதர்  தன் நண்பர் ஒருவரிடம்  கேட்டு , இந்த  பெரிய மனிதரின்  கடையில் வேலை செய்ய அவர் ஒரு  ஆளை அனுப்பியிருந்தார்  .  அந்த  புது  ஊழியர்  ஒரு குடும்பக்காரர்.  அவரும்  சில நாட்கள் வேலை  செய்தார். இந்த பெரிய மனிதர்  அவருக்கு கூறியுள்ளார்  தான் தனது ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறேன் என்று தொகையை கூறியுள்ளார். அந்த தொகையானது  எமக்கு  தரப்படும்  ஊதியத்தைவிட  இன்னும் ஐந்தில் இரண்டு மடங்கு அதிகமான தொகை.  இறுதியாக  இந்த  பெரிய மனிதர்  நண்பர் அனுப்பிய ஆளுக்கு  ஊதியத்தையே கொடுக்காமல் நழுவிவிட்டார்.   அந்த நபர்  கடைக்கு வேலைக்கு வருவதை  நிறுத்தி விட்டு  பல  நாட்களாக   தன் சம்பள பாக்கியை  எடுப்பதற்கா  முயன்று தோற்று விட்டார். அவரே தனது பரிதாப  நிலையை  எனக்கு கூறி தானும்  தன்  மனைவியும்  மனம் வருந்தியதாக  மேலும் சொன்னார்.

 அடுத்து  மிஞ்சிய ஊழியர்கள்  குடலில்  புற்று நோய்  பிடித்து  வைத்தியம்  செய்து  கொண்டிருந்த  ஊழியரும் நானும் தான்.  இந்த பெரிய  மனிதரிடம்   நான் கூறினேன்,  உங்கள் கடையை உங்கள் குடும்ப உறவினர்களை கொண்டு நடத்தினால் நல்லது  என்று ஆனால்  இந்த  பெரிய மனிதர் அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பவில்லை. இந்த பெரிய மனிதரின் சகோதரியும்    தனக்கு வேலை தரும்படி கேட்டதாகவும் , அதை  தான்  விரும்பவில்லை  என்றார்.  அதுமட்டுமா,  இந்த பெரிய மனிதரின் மகன் அச்சமயம் பல்கலைகழக மாணவனாக இருந்தார், அச்சமயம்  சிட்டியில் உள்ள   உடுப்புக் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அவரை  கூப்பிட்டு  கடையை  நடத்தும்படி கூற  பெரிய மனிதர்  கூறினார், தன் மகனை தன் கடைக்குள் போட்டு விட்டேன் என்று உறவினர்கள் கௌரவ  குறைவாக  நினைப்பார்கள் என்று. இதுமட்டுமல்ல  இவரின்  சில உறவினர்கள் கடைகளில் வேலை செய்த அனுபவங்களுடன் இருந்தார்கள்.  இந்நிலையில்  நான்  இந்த பெரிய  மனிதருக்கு CASH REGISTER    இயக்குவது எப்படி என்றெல்லாம்  பயிற்சி கொடுத்து,   ஊழியர்கள் இல்லாத நேரத்தில் அவர் கடையை நடத்த  ஊக்கத்தையும்  ஊட்டினேன். அதனால் அவருக்கு ஊழியர்களுக்கு  கொடுக்கிற  அந்த  ஊதியக் காசில்  சேமிப்பும் ஏற்படுமல்லவா?  இதற்காக  இந்த  பெரிய மனிதர்   பலதடவைகள் எனக்கு நன்றி  கூறினார். இதைத் தொடர்ந்து  நானும, இந்த பெரிய மனிதரும் , புற்று நோய்காளான மற்ற ஊழியரும்தான்  கடையை நடத்தினோம் .

புற்று நோய்க்கு  சிகிச்சை பெற்று கொண்டிருந்த  ஊழியரின்  கதை மிக மிக பரிதாபமானது.  இந்த நாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும்  தூரதிஸ்ட  வசமாக  இந்த நாட்டில் வாழ  கதி அந்தஸ்தோ, வதிவிட  பத்திரமோ  கிடைக்கவில்லை. ஒரு வட  இந்திய  முதலாளி அவருக்கு பத்து வருடங்களுக்கு மேலாக தன்  கடையில் நல்ல சம்பளம் கொடுத்து  வைத்திருக்கிறார்.  ஆனால்  அந்த வட  இந்தியன் முதலாளி  தன்  முதுமையின் காரணமாக  பாகிஸ்தான்  நாட்டவருக்கு கடையை  விற்று விட்டார். புதிதாக  வந்த  முதலாளிகளுடன்  இவருக்கு  வேலை செய்வது  கஸ்டமாக  இருந்தது.  அதை தொடர்ந்து  குடலில் புற்று நோயும் வந்து விட்டது.  இவரின் பெற்றோருக்கு  தனக்கு  புற்று நோய் ஏற்பட்டதை  அவர்கள்  கவலைபடுவார்கள் என்று  மறைத்து  விட்டார் .  அவருக்கு  நெருங்கிய உறவினர்கள்  யாரும் கிடையாது.  திருமணம் செய்து வாழக்கூடிய  நிலைமைகள்  அவருக்கு  இருக்க வில்லை. வயதும் கடந்து விட்டது. பெற்றோர் , ஏனைய  உடன் பிறப்புகள் இலங்கையில். இவர்  புற்று நோய்  சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்  இந்த நாட்டில்  இருந்த போது   இலங்கையில்  தந்தையார்  இறந்து விட்டார்.   இவரே

 

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 5 தை  பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 5

 

 

குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை.  இலங்கை விட்டு வந்து  பதினாலு வருடங்கள் ஆகி விட்டன.  தந்தையும் இறக்கும்போதும் இவரை இட்ட கவலைதானாம்.  அவரின் தோற்றத்தை  பார்க்கும் போது , அவரின்  கவலைகளையும் , பிரச்சனைகளையும்

 

கேட்கும்போது  மனித  நேயம்  உள்ள எவருமே  அனுதாப்படுவார்கள். வருகிற வாடிக்கையாளர்கள் அந்த ஊழியர்மேல் அனுதாபமும்  பிரியமுமாய் இருந்தார்கள்.  அது  இந்த பெரிய மனிதருக்கு  பிடிப்பதில்லை.  இந்த  பெரிய மனிதர்  வழக்கம் போல் அவரை பற்றி எனக்கு குறைகள் கூறி திட்டுவார் . நோயாளியான அந்த ஊழியர் காலையில் கடையை  திறந்து  நடத்தி கொண்டிருக்கும் போது,  பின்னேர சிப்டை  இந்த பெரிய மனிதர்   செய்ய தொடங்கினார்.   இந்த  பெரிய மனிதர்  வழக்கமான நேரத்திற்கு கடைக்குவரமாட்டார்.  அநேகமாக  பிந்தி  வருவார். அந்த  ஊழியர் பசியால் துடித்து கொண்டிருப்பார். அவருக்கு கடை  உணவு சரி வராது, அத்துடன்  நடந்த சத்திர சிகிச்சைக்கு பின்  டொயிலட் “  பிரச்சனை  ஒருபக்கம் .  அதற்கு  இந்த  பெரிய மனிதர்  கண்ட  தீர்வு,  தான்  பிந்தி வரும் நேரத்தை  கணக்கு  பண்ணி அதற்கு   ஓவர் டைம்”  போட்டு படி , தான் அதற்கு ஊதியம் தருவதாக அந்த ஊழியருக்கு  கூறியுள்ளார்.  அந்த ஊழியரும்  ஓவர் டைம் “  எழுதி வைத்துள்ளார்.  இந்த  பெரிய மனிதர்   அவருக்கு  ஊதியம் கொடுக்கும் போது ,  அவர் தான்  எழுதி வைத்த  ஓவர் டைம் கணக்கையும்  காட்டி  காசு கேட்டுள்ளார். இந்த  பெரிய மனிதரும்  கொடுத்துள்ளார் ஆனால் மனம் உவந்தல்ல.  ஓவர் டைம் காசு கேட்டது  கடும் கோபம் . கள்ள கணக்கோ தெரியாது என்று எனக்கு  கூறி  அந்த  ஊழியரை பற்றி  ஆதாரமே இல்லாமல்   எனக்கு  குறைகள் கூறு  மிக கேவலமாக  திட்டி தீர்த்தார்.    மேலும்  அரசு  நிர்ணயித்த சட்டபடியான   ஊதியத்தை விட  இந்த  பெரிய மனிதர்    கொடுப்பதே  அரை  வாசி  ஊதியம்  அதில்   ஊழியர்களே  ரெயின் /பஸ்  செலவையும் சமாளித்து  கொள்ளவேண்டும். (இந்த  பெரிய  மனிதருக்கோ  அறுபது வயதை தாண்டியவர் ஆதலால், இலவச போக்குவரத்து பாஸ் இவருக்கு அரசு கொடுத்துள்ளது.)  அப்படி  இருக்க  ஓவர் டைம் காசு எப்படி இருக்கும் என்று   புரியும்தானே.  "மாஸ்டர், நீங்கள்  சொன்னதைத் தானே அவர் செய்துள்ளார்"  என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் , “ நான் சொல்லுகிற  தெல்லாம் செய்கிறதோ,  அந்தந்த நேரம் ஏதும் சொல்லுவேன், இக் கதையை தொடர்ந்து கதைக்காமல் விடுங்கள் ”  என்று  எனக்கு கூறினார். நான் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?  அந்த  ஊழியர்  கூறுவார்  சுவாசிப்பதற்கு  காற்று ஒன்றை தவிர எனக்கு தேவையான எல்லாவறையும்  காசு கொடுத்துதான்  வாங்கவேண்டும்,  எனக்கு  எல்லாம் இலவசமாக  கிடைக்கிற தென்றால் நானும் இலவசமாக  வேலை  செய்வேன் .  பெரிய மனிதர்  எனக்கு கூறுவார் யாரும் புற்று நோய் பிடித்தவனுக்கு வேலை கொடுப்பானா, நான் பாவம் என்று இரங்கி கொடுத்துள்ளேன்  என்பார்.

நண்பர்களே !  நீங்கள் பலர்   நான்  கடவுள்”  என்ற தமிழ் படம் பார்த்திருப்பீர்கள்.  தாங்கள் பணக்காரர்களாக   வாழ  அங்கவீனரான  பிச்சைகாரர்களை  பயன்படுத்தி  எப்படி உழைக்கிறார்கள் என்று. இதே சமயம் இந்த பெரிய மனிதர் எனக்கு கூற தொடங்கினார்,  தன்  வீட்டுக்கு அருகில் உள்ள  இந்தியன் சுப்பர் மார்கட்டில்  வேலை  செய்பவர்களுக்கெல்லாம்  கொஞ்ச சம்பளம்  கொடுகிறார்கள் என்று  அந்த  தொகை கூறினார். அதாவது அந்த சம்பளமானது  இந்த நாட்டின் அரசு   நிர்ணயித்த ஆக குறைந்த ஊதியத்தில்  மூன்றில் ஒரு பங்காகும்.  அங்கு வேலை செய்பவர்கள் இந்தியர்கள். அது பெரிய  சுப்பர் மார்கட் , பத்து பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்த பெரிய சுப்பர் மார்கட்டின்  வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் காட்டும் போது சட்ட விரோதமான  அற்ப சம்பளத்தை காட்ட முடியுமா? அத்துடன் இவருக்கு அங்கு வேலை செய்பவர்கள்  ( சட்ட விரோதமான )  தங்கள் சம்பளம் எவளவு என்று எல்லோரும் இவருக்கு கூறியிருப்பார்களா ?  அந்த ஊழியர்களில்  ஒருவன் தன்னும் அரசாங்க  அலுவலகத்திற்கு  ஒரு தகவல் தெரிவித்தாலே  அந்த சுப்பர் மார்கட் டின் முதலாளிமார் தண்டிக்கபட்டு, எல்லா சம்பள பாக்கிகளையும் ஊழியர்களுக்கு  கொடுக்க வைத்து விடுவார்கள்.  அது  மட்டுமா , எந்த ஊழியருக்கும்  சம்பளம் குறைய எடுக்க விருப்பமா?  இந்த பெரிய மனிதரின் உள் நோக்கம் எங்கள்  எல்லோருக்கும்  ஊதியத்தை  மேலும்  குறைப்பதே.

மேலும் அந்த ஊழியருக்கு  இருந்த  நோயால் மட்டுமல்ல,  ஏறத்தாழ  பதின் நான்கு  வருடங்கள் வாழ்ந்ததாலும்  அரசு  வதி விட  பத்திரம் கொடுத்தது.   வதிவிட  பத்திரம் கிடைத்தவுடன் அவர் உடனயே  கடைக்கு வந்து  இந்த பெரிய மனிதரிடம்  தான்  வேலையை  விடுவதாகவும்,   தன்  தாய் சகோதரங்களை பார்க்க  இலங்கை போவதாகவும் கூறினார்.  இவளவும்தான் நடந்தது.  இந்த பெரிய மனிதர் என்னை தவிர  ஏனைய  தொழிலாளிகளுடன்  சகஜமாக பழகமாட்டார்.  முதலாளி யல்லவா? இலங்கை போக இவனுக்கு  எங்கேயிருந்து   ஏரோ பிளேன்  டிக்கர்ருக்கு  காசு வந்தது,  நான் கொடுக்கிற காசில் இவன் மிச்சம் பிடிக்கமுடியாது,  தன்னிடம்  களவெடுத்தவர்கள் நல்லாய்  இருக்க மாட்டார்கள் என்று  கோபப்பட்டார்.  உண்மை என்னவென்றால்   புற்று நோய்க்கு  ஆளான அந்த ஊழியர் பத்து வருடங்களுக்கு மேலாக  தான்  நன்றாக உழைத்த  காலத்தில்  தனக்கென்று  கொஞ்சம் சேமித்து  வைத்ததாகவும், அத்துடன் அவரின் சகோதரியின் மகள்  கனடாவில் டாக்டர்ராக  கடமை புரிகிறா, அவவும்  மாமா என்று இவருக்கு உதவிகள் செய்வது  வழக்கம் எனக்கு கூறியிருந்தார். அதுமட்டுமல்ல கொழும்புக்கு  போய் வர ஏரோ பிளேன்  டிக்கர் வாங்க பெரும் தொகையா  முடியும்?   நான் உண்மையை கூறினாலும்  இந்த பெரிய மனிதர் கணக்கெடுக்கமாட்டார்.  தான் கள்ளன்  பிறரை நம்பான், காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம்  மஞ்சள்  என்ற பழமொழிகள் எனக்கு  ஞாபகத்திற்கு வந்தது. என்றோ ஒருநாள் இந்த  பெரிய மனிதர்  என்னையும் இப்படி குறைகல் கூறி திட்டுவார் என்று எனக்கு பட்டது.   சரி, புற்று நோய்க்கு  ஆளான  அந்த  ஊழியரும் வேலையை விட்டு விலகி  போய்விட்டதால் இப்போ நானும்   இந்த பெரிய மனிதரும்  தான்  கடையை நடத்தினோம்.

 

இவளவும் தெரிந்த பின் ஏன்  அவரிடம் நான் தொடர்ந்து வேலை செய்தேன் என்று  யாரும் கேட்கலாம்.  அந்த பெரிய மனிதரை  நம்பி   குருவி  சேர்த்தது மாதிரி விதை நெல்லாக  வைத்திருந்த சேமிப்பை ஆறு மாத தவனையில் தருவேன் என்று கூறிய சத்திய வாக்கை  நம்பி  கொடுத்து விட்டேனே.   அதுமட்டுமா நான் செய்த பிழை, எனக்கு  இந்த பெரிய மனிதர்  தந்த ஊதியமோ  அற்பமானது. அதுமட்டுமா  நான் வேலை வேண்டும் என்று போனவனல்ல , உதவி கேட்டதால் வேலைக்கு போனேன். ஒரு தரம் நான் கூறினேன் "நீங்கள் தரும் ஊதியத்தில் கிட்டதட்ட  ஐந்தில் ஒரு பங்கு  எனது பிரயாண செலவுக்கு  போகிறது  என்று.  இந்த  பெரிய மனிதர்  கூறினார்  பிரயாண செலவில் அரை வாசியை  தருவதாக. அதை  என் ஊதியத்துடன் சேர்க்கும்படி.   இந்நிலையில் இவர் தரும் ஊதியம் மிக அற்பமானதால்   நானும் என் ஊதியத்தை சேர்த்து எடுப்பதாக அவரின் தேவைகளுக்கு   அதுவும் கொச்ச காலத்தில்  கடை யை  இவர் விற்று விடுவார் என்ற நம்பிக்கையில்  விட்டு கொடுத்தேன். இந்த பெரிய மனிதர்  என்னிடம் கடன்  வாங்கும் போது  கூறிய  ஆறு மாத கால தவணை  முடிந்தது.  எனது சம்பள பாக்கியையும், நான் இவரின் முதலீட்டுக்கு கொடுத்தையும்  வாங்கி கொண்டு வேலையை  விட்டு போக முயன்றேன். ஆனால் முடியவில்லையே.  அவர்  கூறிய  பதில்களை   கீழே அப்படியே எழுதுகிறேன்.   …. " நான் சாகுமுன் உங்கள் காசை தருவேன் ". .  " …. ன் நண்பர்கள் எல்லோரும் எனக்கு சும்மாதான்  தந்து  முன்பு ஒரு கடை போட்டேன், நீங்கள் அப்படி விட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்… .”.  " வங்கியில் போய் கடன் எடுங்கள், நான் அக்கடனை  கட்டுவேன்.".. . “ கடை கொடுத்துதான்  உங்கள் கடனை தருவேன்….".    " என்னைப் பற்றி முழுக்கதையையையும் கூறினால்  நீங்கள் பயந்து விடுவீர்கள்."….. .  இப்படியெல்லாம் இந்த பெரிய மனிதர் கூறினார்.  இப்படி கூறினால் நான் என்ன செய்ய முடியும்?   கொடுத்ததோ  பெரும் தொகை.  எனக்கு உதவ யாருமில்லை, என் பலவீனங்களை  அறிவார்.  ஏதாவது  பிணை வாங்கி, எழுத்தில் எழுதி  வாங்கி  ான் கொடுத்ததுமில்லை.  சாட்சியும்  கிடையாது. நான் சண்டியனொ , பல சாலியோ அல்ல. என்னை நம்பி என் குடும்பம் இருக்கிறதே. நான் என்ன செய்ய முடியும்?  எனக்கு  தருமதியான பணத்திற்கு  தன்  கடையை எடுக்கும்படி பல தடவைகள் கூறினார். அவர்  தன்  கடைக்கு அவர் எனக்கு கூறிய  வாடகை வருடத்திற்கு  ஐம்பதாயிரம் , கற்பனை செய்து கூடி பார்க்கமுடியாத அளவுக்கு  அநியாய வாடை,   . நான் அதற்கு சம்மதிக்கவில்லை.  நான் கூறினேன் உங்கள் கடையை  எடுத்தால் நான் பிச்சை எடுத்து   நஞ்சு மருந்து  வாங்கி குடும்பத்துடன்   குடித்து சாக வேண்டியதுதான் என்றேன்.

அதற்கு என்ன பதில் சொன்னார் என்றால்,  " தட்சணா மூர்த்தி என்ற மிருதங்க வித்துவான் இருக்கிறாராம்,  அவரிடம் எந்த மேளத்தை  கொடுத்தாலும்  நன்றாக அடிப்பாராம், அது  மாதிரி தன் கடையை  விஷயம் தெரிந்த ஆள்  எடுத்து  நடத்தினால்  அவர் நன்றாக செல்வ செழிப்புடன் இருப்பாராம், தன்  வார்த்தைகளை  நம்பும்படி  அடிக்கடி எனக்கு கூறுவார். இவருடன்  இலங்கையில் இருந்தே  பழகிய  இருவர்  இவருடன்  சேர்ந்தது  கடையை சிறப்பாக நடத்த கேட்க  இவர் சம்பாதிக்கவில்லை.  அவரில் ஒருவர்  என் முன்னாலே  இவருக்கு கூறினார் " உம்முடைய கடை என்ன தங்கமுட்டை  இடுகிற வாத்து  என்று நினைத்துகொண்டு  கடைக்கு  விலை கூறுகிறீர் " என்று கருத்துகள் கூறினர்.  இந்த பெரிய மனிதர்  மௌனமாக  இருந்தார். பொறுத்த நேரத்தில் மௌனமாக இருப்பது அவர்  குணம்.   இந்த பெரிய மனிதர் தன்   கடையை கொடுக்க முடியாமல் இழுபட காரணங்கள் - கேட்ட  குட்வில்” , வாடை எல்லாம்  மிக மிக மிக அதிகம்.  தன் வியாபாரம்  நல்லது என்று காட்ட கணக்கு  வழக்குகள் கிடையாது.  தன்  கடையை   ஆட்கள்  நல்ல விலைக்கு கேட்டதாகவும் , தன் அக்கா மகன் கதைக்க தெரியாமல் அவர்களுடன் கதைத்து கெடுத்து விட்டார் என்று அடிக்கடி அவரைப்  பற்றி குறைப்பட்டார்.

இவைகள் ஒரு பக்கம் இருக்க நான் இந்த பெரிய மனிதரின் கடையில் வேலை செய்த காலத்தில் நடந்த சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன்  படித்து  பாருங்கள். ஒரு சமயம் என்னை   தன்  வீட்டுக்கு வரும்படி கூறினார், ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டி உள்ளது என்று.  நானும் அவர்  வீட்டுக்கு போனேன். இந்த பெரிய  மனிதரின்  பட்டம் பெற்ற  பட்டதாரிகள் அணியும்  ஆடையுடன் தன் குடும்பத்துடன்  இருக்கும் போட்டோ ஒன்று அவர் வீட்டில் சுவரில்  தொங்கிகொண்டிருந்தது.  அவர் எனக்கு முன்பே  கூறி இருந்தார்  தான் லண்டனில் உள்ள   ஸ்சட்போர்ட்  பல்கலை கழகத்தில்  படித்து  பி. ஏ . ஹோனர்ஸ்  பட்டம் பெற்றவர் என்று.  ஆங்கிலத்தில்  அதுவும் இங்கிலாந்தில்  பி. ஏ . ஹோனர்ஸ்  பட்டம் பெற்றவர் என்றால் ஆங்கில அறிவு  எப்படி இருக்கும் ?  இதென்னடா அநியாயமாக இருக்கிறதே என் மனதில் குழப்பம்.  

நான் யாருக்கு என்ன கடிதங்கள் எழுத வேண்டும் என்று  விபரங்களை  இந்த பெரிய   மனிதனிடம் எடுத்தேன்.  அதே  மூன்று  மணித்தியாலங்களுக்கு  மேல் ஆகி விட்டது. எனக்கு கூறினார்  இந்த வேலைக்கு  எல்லாம்  சம்பளம் தருவேன், சம்பள பாக்கியுடன்  கணக்கை  எழுதி வையுங்கள் என்றார். நானும்  இவருக்கு இப்படி  பல தடவைகள்  பல கடிதங்கள் தயாரித்து  கொடுத்துள்ளேன்.  ஆனால் உண்மையாக  நான் அதற்கெல்லாம்   சம்பள கணக்கு போட்டவன்  அல்ல.  ஒருநாள்  எனக்கு கூறினார் தன்  கடையை  பூக்கர் “  ( BOOKER) என்ற  வெள்ளையர்களின்  மொத்த விற்பனையாளர்களின் உதவியுடன்  தன்  கடையை  நவீனப்படுத்தி , சாமான்கள்  எடுப்பிக்க போவதாக , அந்த நிறுவனத்தில் இருந்து  தன்  கடைக்கு  பிரதிநிதிகள்  வருகிறார்கள், என்னை கடைக்கு வரும் படியும்,  தான் அதற்கான சம்பளம், ரெயின்  செலவு தருவதாக, அதை என் சம்பள பாக்கி தொகையுடன்  கூட்டும்படி கூறினார்.  அச்சமயம்  நான்  வீட்டில் இருந்தேன்.  நானும் போனேன்.  வெள்ளைகாரர்கள் இருவர்   வந்தார்கள்.   அவர்களுடன் நான் கதைத்து,  அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை  தெளிவாக  இந்த பெரிய மனிதருக்கு   விளங்க படுத்தினேன்.   நானோ  லண்டன் பட்டதாரியல்ல.

 எனக்கு  ஆச்சரியம் என்னவென்றால்  இவர் ஒரு லண்டன் பி.ஏ. ஹோனர்ஸ்  பட்டாதாரி, அதுமட்டுமா இங்குள்ள ஆரம்ப  பாடசாலைகளில்  "சப்பிளை"  ஆசிரியராக வேலை செய்தவர் என்றும், தன்னிடம் அதற்கு ஆதாரமாக  சம்பளத்தாள்கள்  இருக்கு என்றார்.   இவளவு தகுதி  வாய்ந்த  ஒருவர்,  தன்னளவு தகுதியற்ற  ஒருவரை  அதாவது  என்னை  ஆங்கிலேயர்களுடன்  கதைக்க கூப்பிட்டுள்ளார்  என்றால் என்ன  நினைக்கலாம்?   ஒரு நாள்  இந்த பெரிய மனிதர் இங்கிலாந்து  ஒரு சில பாடசாலைகளில் படிப்பித்த வரலாற்றை கூறினார். வரலாறை கேட்டேன்.  அந்த நேரம் என்ன மனோ நிலையில் இருந்தாரோ  வர் கூறியதை அப்படியே எழுதுகிறேன்.     தான் ஒரு கிறிஸ்தவ  ஆரம்ப பாடசாலையில்  " சப்பிளை  டீச்சர்" வேலைகள் எடுத்து கொடுக்கும் எஜென்சி  மூலம்  தற்காலிகமாக படிப்பித்ததாகவும் ,  தன்னை நிரந்தரமாக்க  தந்த  பத்திரத்தில்  "யெஸ்  / நோ " (  ஆம்/இல்லை ) வில் மாறி  புல்லடி போட்டு விட்டதாகவும் அதனால் தனக்கு வேலை  பறி போய்  விட்டதாக  கூறினார்.  என் மனதில் எழுந்த கேள்விகள் பல,   "யெஸ்  / நோ "  வில் மாறி  புல்லடி போட்டதற்காக  பல மாதங்கள் வேலை செய்த ஒருவரை வேலையால்  நிறுத்தி விடுவார்களா?  அப்படி  தூரதிஸ்ட  சம்பவம் நடந்திருந்தாலும்  ஆயிரக்கணக்கில்  ஆரம்ப பாடசாலைகள்  இங்கிலாந்தில்  இருக்கின்றன . வேறு ஒரு ஆரம்ப  பாடசாலையில்  வேலை எடுக்க முடியாதா?

இவரின்  கடையில் வேலை  செய்தவர்களே  இவரின் ஆங்கில அறிவை  மட்டுமல்ல,  இவரும்  ஒரு ஆசிரியரா என்பதைப்பற்றி  எனக்கு  விமர்சனம்  செய்திருந்தார்கள். எனக்கு உண்மையில்  கவலையாக இருந்தது இந்த பெரிய  மனிதருக்கு  இதெல்லாம் தேவையா?  .

ஒரு சமயம்  கடைக்கு இந்த பெரிய மனிதர் வாங்கி வந்த  பேரிச்சம் பழ  பக்கற்றுகளில்  ஒன்றில் புழு இருந்ததை கண்டேன்.  இது  பற்றி  இந்த  பெரிய மனிதருக்கு  கூறி அந்த பெட்டியை  குப்பையில் போட விரும்பினேன்.  இந்த பெரிய மனிதர் எனக்கு என்ன கூறினார் தெரியுமா ,  எங்கட  நாட்டில்  பாண் வாங்கும் போது, அதற்குள் வண்டுக்கள் செத்து இருக்கவில்லையா?  அந்த பாணை  சாப்பிடவில்லையா? புழுவை தட்டி விட்டு  விற்கும்படி எனக்கு கூறினார். நான்  என் மனதிற்குள் நினைத்தேன் தன் பிள்ளைகளுக்கு  புழு பிடித்த பேரிச்சம் பழ  பக்கற்றை சாப்பிட கொடுப்பாரா,    இந்த பெரிய மனிதர்  பண வெறி பிடித்து இப்படி நடக்கிறாரே, சாமான்கள்  வாங்க வரும் யாரும் புழுவை  கண்டு, சுகாதார அதிகாரிகளுக்கு  அறிவித்திருந்தால் , இவருக்கு  கடும் தண்டனையும் வழங்கி , கடையும் பூட்டிவிடுவார்கள்.  அது மட்டுமா டிவி , பத்திரிகைகளிலும்  செய்திகள் வந்திருக்கும்.  இந்த பெரிய மனிதரின் நல்ல காலம் அப்படி ஒன்றும் நடக்க வில்லை.  நான் அந்த  புழுப்  பிடித்த பேரிச்சம் பழ  பக்கற்றை இந்த பெரிய  மனிதருக்கு தெரியாமல்  குப்பையில் போட்டுவிட்டேன்.   அதுமட்டுமா வருடாவருடம்  மூவாயிரம் பேருக்கு கோவிலில் அன்னதானம்  செய்யும்  இவர் எவளவு தூரம் சுத்தமாக  தன்  வீட்டில்  சாப்பாடுகளை  தயாரிக்கிறார் என்பதில்  என் மனதில்  பெரும்  கேள்விக்குறி எழுத்தது.  

சில தடவைகள் இந்த  பெரிய மனிதர் எனக்கு கூறியுள்ளார், “ டோயி லேட் வசதிகள் வீட்டில் இல்லாமல் பனை வடலிகளுக்குல்  போனவர்கள்  பலர்  இங்கு இருக்கிறார்கள் ,  “ என்று.   அப்படியானால் இங்கு வந்த  வறிய  மக்கள் என்ன அவர்கள் பிரதேசங்களில்  பனை  வடலிகள்  அழிக்க பட்டுவிட்டதால் பனை வடலிகளை   தேடியா  புலம் பெயர்ந்தார்கள் ? வெளி  நாட்டுக்கு புறப்படுமுன் தன் வீட்டில் சவரில் குளித்து விட்டுதான் புறப்பட்டேன் என்றார் இவர்.  இவர் ஏன் புலம் பெயர்ந்தார்அவரை அறிந்தவர்கள் அவரிடமே  போய் பேட்டி  எடுங்கள்.

சரி இப்படி நிலைமைகள்  இருக்க,  காலம் மாதங்கள் ஆண்டுகளா போய்க்கொண்டிருந்தது.  என்னிடம்  தன்  முதலீட்டுக்கு   என்று வாங்கிய  பணத்தையும்  , என் சம்பள பாக்கியையும்  அவர் தருவதாயில்லை. வாங்கிய கடன் பெயரால் ஒரு சத காசு கூடி அவர் தராமல்  இருந்தார். கேட்டால் கடையை  கொடுத்து  தருவேன் என்றார்.  நான் என்ன  செய்ய முடியும் ?  நான் என்னை சட்ட ரீதியாக பதியும் படி கேட்டேன். நான் களவாக அவரிடம் வேலை செய்ய விரும்பவில்லை. என் வற்புறுத்தலால் தனது   கணக்காளரிடம்  கூறி  பதிந்தார். பதிந்ததிற்கு  என்ன சட்டபடி  அவர் சம்பளம் தரவில்லை. அவரின் சம்மதத்துடன்  கிழமை முடிய  அந்த அற்ப சம்பளத்தை எடுக்க தொடங்கினேன்.  மேலும்  அடிக்கடி இரவில் அவர் கடையில்  அசம்பாவிதங்கள் நடக்கும்.  அருகில் உள்ள மாடி வீடுகளில் வசிக்கும்  பையன்கள்  வந்து களவெடுத்துக்கொண்டு ஓடுவார்கள்.  அதுமட்டுமா   மதுபானங்களும் விற்பதால், குடிகாரர்களால் தொல்லைகள்  பல.  களவெடுப்பார்கள், தாக்க வருவார்கள், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை.  ஒரு சமயம்  மது பான போத்தலால்  என்னை நோக்கி எறிந்து அந்த போத்தல் எனக்கு பின்னால் இருந்த மதுபான போத்தல்களில் பட்டு  அவைகள் நொறுக்கின.  நான் தப்பியதே கடவுள் புண்ணியம்.  என்னால் போலிசை கூப்பிட முடியாத நிலை.  கூப்பிட்டு பிரயோசனம் இல்லை. அவர்கள் அதற்குள் தப்பி விடுவார்கள். என்னொரு விஷயம், இவர் கடையில் உள்ள  cctv  கமரா  அறவே வேலை செய்யாது. அபாய ஒலி  எழுப்பும் கருவியும்  கிடையாது.  அதுமட்டுமல்ல Public Liability Insurance  என்ற காப்புறுதி கட்டாயம்  இந்த பெரிய  மனிதர் அதை  கடைக்கு எடுத்திருக்க வேண்டும். அதன் நோக்கம்  கடைக்கு  வருபவர்களுக்கு, கடையில் வேலை  செய்பவர்களுக்கு  விபத்து, காயங்கள் ஏற்பட்டால் அல்லது கொல்லப்பட்டால்  அந்த காப்புறுதி  நட்ட ஈடு வழங்கும்.  நானோ குடும்பக்காரன், பிள்ளைகள் சிறியவர்கள். எனக்கு ஒன்று நடந்தால் என் குடும்பத்தின் கதி என்ன?   இந்த பெரிய மனிதர் காசு செலவழிக்கவேண்டும் அதற்கு  என்று  அறவே அந்த காப்புறுதியை எடுக்கவில்லை. அதற்கு அற்ப காசு முடியும். மதுபானங்கள் விற்பதற்கு , விற்பனை செய்பவருக்கான அனுமதி பாத்திரம் (personal licence) வைத்திருக்க வேண்டும்.  அப்படி  அனுமதி பத்திரம் உள்ளவரின் மேற்பார்வையில்  அனுமதி  பத்திரமில்லாதவர் மது பானங்களை விற்க சட்டம் அனுமதிக்கிறது. என்னிடம் அந்த அனுமதி பத்திரம் இல்லை. இந்த பெரிய மனிதர்  என்னை கடையில் தனியே மதுபானத்தை  விற்பனை  செய்ய  விட்டு விட்டு  அவர்  போய்  விடுவார்.

ஒரு சமயம்  இரவில் பாதுகாப்பை  கருதி  இலங்கையில்  வத்தளையை  சேர்ந்த  ஒரு சிங்களவரை மேலதிகமாக  வேலைக்கு  அமர்த்தினார். அதற்கு இவர் கொடுத்த  ஊதியம் , சட்ட படியான ஊதியத்துடன் ஒப்பிடும்போது   கிட்டதட்ட  நாலில் ஒரு பங்கிற்கு  குறைவானது, சட்டபடி அவரை இவர் பதியவும் இல்லை. சில நாட்கள் அந்த சிங்களவர்  வேலை செய்தார்.  அத்துடன் அவர்  வேலையை விட்டு நின்று விட்டார்.  சிலகாலம் போக அவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும்  ஒரு வயோதிபரை  வேலைக்கு  அமர்த்தினார்.  சில நாட்கள் போக அந்த வயோதிபர்  இவரின் வீட்டுக்கு போய்  தன்  ஊதியத்தை கேட்டுள்ளார்.  இந்த பெரிய மனிதர்  சிங்களவருக்கு  கொடுத்த மாதிரி ஊதியத்தை கொடுத்துள்ளார்  அந்த  வயோதிபர் கூட கேட்டு வாங்கி விட்டார். அன்றிலிருந்து  அந்த வயோதிபரை வேலைக்கு

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 6 றை  பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 6

 

 

இவர் கூப்பிடுவதில்லை.  என்னத்தையாவது  தாறதை தாங்கோ  என்று வந்து விட்டு , தான் கொடுத்த சம்பளம் காணாது என்று வற்புறுத்தி  கூடக்  கேட்டு வாங்கி விட்டான் என்று  அந்த வயோதிபரை பற்றி திட்டி  எனக்கு கூறினார்.  கடைசியாக கடையில் இரவில் வேலை செய்யும்  தொழிலாளிக்கு  உதவியாக வேறு தொழிலாளி இல்லை.  சில சமயங்களில்  குடிகாரர்களால்,  பையன்களால் ஏற்படும் தொல்லைகளால்  என் உயிரை காப்பாற்ற கடையை  உடனே பூட்டி விட்டு  ஒடி  இருக்கிறேன்.  சிலசமயம்  அருகில்  உள்ள  ரயில் நிலையத்தில் போய்  பாதுகாப்புக்காக  இருந்து விட்டு  மீண்டும் வந்து கடையை திறந்திருக்கிறேன்.  எத்தனையோ  தடவைகள்  இந்த பெரிய  மனிதருக்கு கூறியுள்ளேன், இந்த பெரிய மனிதர் அக்கறை எடுக்காததால்  அவரின்  மனைவிக்கு கூறியுள்ளேன், மகனுக்கு  கூறியுள்ளேன். அக்குடும்பம்  தங்களிடம் வேலை ஊழியர்களின்  பாதுகாப்பை பற்றி  அக்கறையே எடுக்கவில்லை.

ஒருநாள் இந்த பெரிய மனிதர் கூறினார்  கடைக்கு தான் சாமான்கள்  வாங்கி போடுவதாகவும்   இலாபத்தை  காணவில்லை என்றார்.  இந்த பெரிய மனிதர் இப்படி கூறுகிறாரே என்று சாமான்கள் கொள்வனவு செய்த பற்று சீட்டுகள், கடை பூட்டும் பொது  எடுக்கப்படும் நாளாந்த விற்பனையை காட்டும் "Z " வாசிப்புகளையும்,  இருக்கிற சாமான்களின் பெறுமதிகளையும் வைத்து  இலாபம் (GROSS PROFIT ) பார்த்தேன். சராசரியாக  50% வீதத்திற்கு மேல் காட்டியது. பொதுவாக  இறாலை போட்டு சுறா பிடிப்பது என்று கேள்வி பட்டிருப்பீர்கள்.  உண்மையில் அது சாத்தியமா என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த பெரிய மனிதர்  மண்புழுவை வைத்து  திமிங்கலம்  பிடிக்க முயன்றால் சரியாகுமா?   நான் கணக்கை காட்டினேன்.  அந்த  பெரிய  மனிதரால்  வீதக் கணக்கை விளங்க முடியவில்லை.  சாவச்சேரி சந்தையில் மரக்கறி  விற்ற கணக்கை உதாரணமாக கூறி இலாபக் கணக்குக்கு  விளக்கம் கூறினார்.   இவளவுக்கும் தான்  யாழ்/ சென்ட்ரல் கொலிஜில்  அரசாங்க பரீட்சையான  க.பொ .த . சாதாரணம் / கணித  பேப்பர்  திருத்தினவராம் . சாகவச்சேரி சந்தையில் மரக்கறி விற்பவர் அன்றைய தின குத்தகையை  கட்டி விட்டு இலாபம் பார்க்கலாம்.  லண்டன் மாநகரில் கடை வைத்திருக்கும் ஒரு முதலாளி அப்படி கணக்கு பார்க்கலாமா?  கணக்காளர்களே  (Accountants)   தேவையில்லையே!  செலவுகள், வரிகள் பல.  என்ன அறிவு .. என்ன அறிவு … ?   அவருக்கு விளங்காது என்று இல்லை.  பணவெறி  அந்த தருணத்தில் அவரை முட்டாள் ஆக்கி விட்டது.   "  ஒவ்வொரு மனிதனும்  தான் சரியாக  செய்வதாக நினைத்துதான் ஒவ்வொன்றையும்  செய்கிறான் . "  எனக்கு   தத்துவம் கூறுவார்.  அதற்காக  இந்த கணித  ஆசிரியர்  பிழையாக  கணித பாடங்களை செய்த எல்லோருக்கும்  சரி என்று பாஸ்  மாக்ஸ்  போட்டாரா என்று யோசித்தேன்.

இவரின் கூத்துக்கள் எப்படி இருந்தாலும்  பொதுவாக  நான் சாமான்கள்  வாங்க போகும்  சுப்பர் மாக்கட்டில்,  அடிக்கடி  சில சாமான்களை  அரை விலைக்கு  அல்லது  ஒன்று வாங்கினால் அடுத்தது இலவசம் என்று மலிவு விலையில் சாமான்களை விற்கும்போது ,  மனித நேயத்தின் அடிப்படையில் என் வங்கி  கடன் அட்டை/  கிறடிட்  காட்டை பாவித்து சாமாங்கள் வாங்கி என் காரில் போட்டு  இவர் வீட்டுக்கு போய்  கொடுப்பேன்  கடையில்  அவர் விற்க.  அக்காசை அவர் தந்து விடுவார்.  அவர் சாமான்களை விற்கும்  விலைகளை  பார்த்து அவருக்கு கூறுவேன் , உங்கள்  கடையில் இரண்டாம் வாய்ப் பாடில் இருந்து  ஐந்தாம்  வாய்ப்பாடு வரை தெரிந்த எவனும்  வேலை செய்யலாம் என்று.  அப்படி விலையை கூட்டி போவார்.  அதே சமயம்  அவர் மகன் ஒரு பல்கலைகழக மாணவன் , கடைக்கு வந்தால் அவன் விலைகள்  கூடிப்போயிற்று என்று குறைப்பான்.  ஆனால் இந்த பெரிய மனிதரோ எனக்கு  கூறுவார் பழையபடி விலைகளை கூட்டி போடும்படி. நானும் செய்தேன்.   கடும் விலைக்கு  சாமான்களை விற்பார். வாடிக்கையாளர்கள்  விலையை பற்றி குறை கூறுவார்கள்.  உடனே அவர்களுக்கு  கூறுவார்  இது "சிட்டி"  விலை என்று. எனக்கு கூறுவார், “ நாங்கள் கடை வைத்து  மக்களுக்கு  சேவை செய்கிறோம் , அது இவர்களுக்கு விளங்க வில்ல என்று.

இந்த  பெரிய மனிதர் ஒரு ஆன்மீக வாதி.  பகலில் கடையில் இருந்து   ஆன்மீக கட்டுரைகள்  எழுதி வைப்பார்.  நான் பின்னேரங்களில்  வேலைக்கு போனால்  அவர் எழுதி வைத்த கட்டுரையை தருவார், வாசிப்பேன்.  அத்துடன் எனக்கு ஆன்மீக போதனைகள்  நடக்கும்.  அதன் பின் அவர்வால்தம்ஸ்டோவில் உள்ள  பிள்ளையார்  கோவிலுக்கு  போவதாகவும், தான் வீட்டுக்கு கோவிலில் இருந்து போக இரவு பத்து, பதினோரு    மணியாகும் என்று  புறப்பட்டு விடுவார். என்ன கடவுள் பக்தி அவருக்கு என்று நான் பல  சமயங்களில்  நினத்ததுமுண்டு.  கோவிலுக்கு போறதை வழக்கமாக கொண்டிருந்தார்.  சில சமயங்களில்  அருகில் உள்ள மாடிவீடுகளில்  வாழும்  பையன்கள்   கூட்டமாக  வைத்து  கிரிப்ஸ் பக்கற்றுகள்,  சொக்கி லேட்டுகளை  தூக்கி கொண்டு  ஓடி  விடுவார்கள். மிகவும்  கெட்ட வார்த்தைகளால் அதுவும் தமிழில் திட்டி , வெட்டுவேன், கொல்லுவேன் , என் மகன்  இப்போ இங்கு நின்று இருந்தால் எல்லோருக்கும்  அடித்து நொறுக்கி இருப்பான் என்பார்.     ஒருநாள் அவரிடம் கேட்டேன் ,  "என்ன மாஸ்டர்  இப்படி கெட்ட  வார்த்தைகளால் பேசுகிறீர்கள்?"  என்று . அதற்கு அவர் எனக்கு  சொன்ன பதில் தான் நன்றாக கெட்ட வார்த்தைகள்  பேசுவாராம்.  உங்கள் வீட்டாருக்கு  தெரியுமா என்று கேட்டேன், தெரிந்திருக்கலாம் என்றார்.

இப்படியான நிலைகளில் நான் சமாளித்து கொண்டு வேலை செய்தேன்.  ஆனால்  இந்த பெரிய மனிதர்  சம்பளத் தாள்களை  ஒழுங்காக  தன்  கணக்காளரிடமிருந்து  வாங்கி எனக்கு தருவதில்லை. காரணம் அந்த  கணக்காளருக்கு  உரிய  கூலியை  இவர்  கொடுப்பதில்லை. மிக மிக கஷ்டப்பட்டு அழுத்தங்கள் கொடுத்துதான்   வாங்குவேன். இவரின் கணக்காளரிடம் நான் கெஞ்சி வாங்க வேண்டிய சூழ்நிலை கூடி ஏற்பட்டது. ஒரு சமயம்  கணக்காளரிடம் இவரால் பேச்சு  வாங்கினேன்.

இதே சமயம் இந்த பெரிய மனிதர்  தன் கடைக்கு சாமான்கள் வாங்க  ஒரு வட இந்தியரின் உதவியை நாடுவார்.  அந்த மனிதர் அன்றன்றாட  உழைப்பில்  திருப்தி காண்பவர். அவருக்கு  பேரப்பிள்ளைகளும் உண்டு.  அவரிடம் ஒரு வானும் உண்டு.  அவர் இந்த பெரிய மனிதரின் வீட்டுக்கு போய் , இந்த பெரிய மனிதரையும்  கூட்டிக்கொண்டு  "காஷ் அண்ட் கறி " களுக்கு போய்  சாமான்களை  வாங்கி, கடைக்கு கொண்டு வருவார்.  கிட்டதட்ட  மூன்று, நாலு மணித்தியால வேலை.  இந்த பெரிய மனிதர்  அதற்கு கொடுக்கும் கூலி  நியாயமான கூலியில்  மூன்றில் ஒரு பங்கு. அந்த வட இந்தியர்  ஒரு கோக் (கொக்கோகோலா)  கானை எடுத்து உடைத்து குடித்துவிட்டால், அல்லது ஒரு சின்ன சிகரட் பக்கற்றை  கேட்டு  எடுத்துவிட்டால்   அந்த மனிதனை பற்றி எனக்கு கூறி கோபமாக திட்டுவார்.

ஒரு சமயம் தான் மூவாயிரம் பேருக்கு அன்னதானம் செய்யும்  நிகழ்ச்சிக்கு சமைக்க  மரக்கறி சாமான்கள், பாத்திர பண்டங்கள் எடுக்க என்றெல்லாம்  இந்த வட  இந்தியரை வானுடன்  பாவித்து விட்டு, எல்லாவற்றுக்கும்  கூலி தருவேன் என்று கூறிவிட்டு கடைசியில் கூலியே கொடுக்காமல்  பிறகு  தருவேன், பிறகு தருவேன் என்று  கூறிக்கூறி  காசை தராமல் விட்ட  கதையை  அந்த  வட இந்தியர் எனக்கு  கூறி கவலைப்பட்டார்.

இந்த பெரிய  மனிதரின்  பணப்பேராசையில் செய்யும்   பல சம்பவங்கள்  பார்த்த  நான்  ஒரு சமயம் சொன்னேன், " நீங்கள்  பாவித்த  டொயிலட்  பேப்பரையும் , கழுவி பாவிக்கலாம் என்றால் பாவிப்பீர்கள் போல் இருக்கிறது என்று.  அதற்கு அந்த பெரிய மனிதர்  " ஆம் “  என்றார்  .   நான் ஆச்சரிய படவில்லை.  இன்னொருநாள் சொன்னேன்   ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம்  கொக்கு"  என்ற மாதிரி  நீங்கள் கடையை  பலர் வந்து கேட்டும்  கொடுக்காமல் இருக்கிறீர்கள் என்று.   அவர் என்ன பதில் எனக்கு கூறினார் என்றால், தன்னை நான் சரியாக புரிந்து வைத்திருக்கிறேன் என்றார்.  

அதற்கு காரணங்கள் இருந்தன.  அவரின் கடை  லண்டனில்  சூன் 1 (ZONE 1) அமைந்துள்ளது. பல மாடி கட்டிடங்கள், அலுவலகங்கள், உல்லாச பிரயாணிகளின்  நட மாட்டம்  ல்லாம்  இருப்பதுடன், முன்னுக்கு ரெயில்வே  நிலையம், அருகில்  பெரிய  பஸ் நிலையம்  எல்லாம் உண்டு.  ஒரு தரம் அவரின் கடைக்கு அருகில்  ஒரு கண்காட்சி (exibition) நடந்தது.  இந்த பெரிய மனிதர் அதற்கு என்னையும் கூட்டி போனார். அது என்னவென்றால்  இவரின் கடைக்கு  கிட்ட உள்ள  பஸ் நிலையங்கள், ரெயில்வேயுக்கு  சொந்தமான  கடை  கட்டடங்களை  தகர்த்து  பல மாடிகள்   கொண்ட  மூன்று  பாரிய கட்டட  தொகுதிகள் அமைக்க  இருப்பதாகவும் , நவீன பஸ் நிலையம் , கடைகள்  என்றும் ஆயிரக்கணக்கான பேர் வேலை  செய்யக்கூடியதான  அலுவலகங்கள் , குடியிருப்புகள் அந்த மாடிகள்  இருக்கும் என்று காட்டும் கண்காட்சி ( exibition)  அது.  அங்கு அதைப்பற்றி விளக்கங்கள் கொடுத்தார்கள்.  அந்த திட்டம் கட்டம்  கட்டமாக  பூர்த்தியாக மூன்று வருடங்கள் எடுக்கும் என்றார்கள்.  இந்த பெரிய மனிதருக்கு விளங்காதவற்றை நான் கேட்டு கேட்டு விளங்கபடுத்தினேன்.  அதன் பிறகு இந்த பெரிய மனிதர் செய்த வேலை,  தனது  கடைக்கு  கட்டட  வாடையையும், குட் வில்லையும்  கூட்டி கடை வாங்க வருபவர்களிடம் கேட்க தொடக்கி விட்டார்.  போதாத காலம்  அந்த பாரிய கட்டட  திட்டத்தை, நாட்டில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியால்  சில வருடங்களுக்கு  ஒத்தி வைத்துள்ளார்கள், அவளவும்தான் .   ஆனால் மேலும் மேலும் இவர்  தன்  கடைக்கு வாடையையும், “குட் வில்லையும் கூட்டிக்கொண்டு இருந்தார்.  அதுமட்டுமல்ல  கடை  கட்டடத்தை  சொந்தமாக விலைக்கு  வாங்க  வருபவர்களுக்கு  அரை மில்லியன்  விலை கூறிக்கொண்டிருந்தார்.  இவரே  கடை கட்டிட  உரிமையாளரும்  அத்துடன்  நடத்தும் வியாபாரத்தின்  உரிமையாளரும் கூட. 

மேலும் அடிக்கடி எனக்கு கூறினார்  தான் கடை கொடுத்து முடிய, வீட்டில் சும்மா  வேலை இல்லாமல் இருக்க மாட்டேன்.  அப்படி  இருப்பது  ஒரு ஆணுக்கு மரியாதை இலை,  தான் இந்தியாவில் இருந்து அரிசி, பருப்பு இறக்குமதி செய்யும்  எண்ணம் தனக்கு இருக்காம்,  தான் இந்தியாவுக்கு போய்  அங்கு நின்று  அரிசி, பருப்பு அனுப்பி வைப்பாராம் அவற்றை நான் இங்கு   “Customs clearance”   செய்து பார மெடுக்கவேண்டியது எனது வேலை என்றார்  அதை  நான்  நம்பும்  வகையில், இவரது கடைக்கு அருகில் உள்ள இந்தியன்  உணவு விடுதிக்கு  சாப்பிட  வருகிற  உல்லாசப்  பிரயாணிகளில்  யாராவது  இந்தியன் வியாபாரிகள் இவரது கடைக்கு வந்து விட்டால் , அவர்களுடன் கதைத்து , தான் அரிசி, பருப்பு இறக்குமதி செய்ய  இருப்பாதாக கூறி   என்னையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தது வைத்து அவர்களின்  பெயர்கள்  விலாசங்கள்  கொண்ட  பிஸ்னஸ்   காட்டுகளைவாங்கி வைப்பார் தான் இந்திய சென்றால் அவர்களின் உதவிகளை பெற.

இப்படி இருக்க  ஒரு நாள் எப்படியோ "ஒரு உறு  மீன்"  அவரிடம்வந்து  சிக்கியது.   அவனோ  பங்களா தேசத்துக்காரன் . அவன் பல கடைகளை வைத்திருக்கும்  முதலாளி.   இந்த பெரிய மனிதர்  தனது கடையை  விலை பேசி முடித்தார். பதினைந்து , இருபது  வருடங்களுக்கு ஒரே அடியாக குத்தகைக்கு  கொடுக்க போவதாக எனக்கு  அடிக்கடி  கூறினார்.  

கடையை வாங்க வந்தவனிடம்  ஒரு தொகை முற்பணமும் வாங்கி விட்டார். முப்பதாயிரம் வருட வாடைக்கும்,  ஐம்பதாயிரம் குட்வில்லுக்கும் கொடுக்கிறேன் என்றார்.  இரு பகுதியினரின் சட்டத்தரணிகள்   பேப்பர்  வேலையை  (PAPER  WORK)  தொடங்கினார்கள்.   இந்த பெரிய மனிதர் எனக்கு இரண்டு அல்லது  மூன்று தரத்திற்கு மேல் வெவ்வேறு சந்தர்பங்களில் கூறினார், " நான் ஒரு இலட்சம் , எண்பதாயிரம்  என்று குட்வில் கேட்டு கொண்டிருந்தனான்,  உங்களுக்குரிய காசுகளை தரத்தான் நான் இப்போ குட்விலை கொஞ்சம் குறைத்து கொடுக்கிறேன், இவளவு காலமும் நீங்கள் காசுகளை கேட்டு பிரச்சனைகள் கொடுக்காமல் பொறுமையாக ஒத்துழைத்ததிற்கு  நன்றி ..... " என்றெல்லாம்   எனக்கு தொடர்ந்து  கூறினார். ஆகா , நமக்கு சிறைவாசம்  முடியப் போகிறது, விடுதலை கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டேன்.

 ஆனால்  நான் எதிர் பார்த்த மாதிரி நடக்கவில்லை.   விடையை வைத்து ஆளுக்கு ஏற்ற  மாதிரி கணக்கு  போடுகிறனுடன் வெல்ல  எனக்கு  அனுபவம்  இல்லை.

 இந்த  பெரிய மனிதர்  வழக்கமாக பத்து  சிப்டுகளையும், நான் ஆக நாலு  சிப்டுகளையும் செய்து கொண்டிருந்தோம்.  அவரே எனக்கு பல தடவைகள் கூறியுள்ளார்,  விக்கிற  கடை தானே என்று தான் சரியாக  அக்கறை எடுக்கவில்லை என்று.  கடையில் அடிக்கடி எலிகள்  ஓடுகிற நிலைமையும் வந்தது. அத்துடன் எலிகள் சொக்கிலட்  பக்கற்றுகள் , “கிரிப்ஸ் “  பக்கற்றுகள்  பல வற்றை கடித்து நாசமாக்கின. வாடிக்கையாளர்களே எலிகள்  ஓடும்போது கண்ணால் கண்டுள்ளார்கள். இவரின் அதிஸ்டம்  யாருமே   மாநகரசபை  சுகாதார  அதிகாரிகளுக்கு  முறைப்பாடு செய்யவில்லை.  செய்திருந்தால்  மிக கடுமையாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.  பத்திரிகைகள், டிவி களிலும் அவரின் போட்டோவுடன் கூடிய  செய்திகளும் வந்திருக்கும்.  எனக்கு இரவில் கடையில் எலிப்பொறி வைக்கிறதும்  ஒரு  வேலையாகி விட்டது.  எலிகள் பிடிபட்டு இருக்கும், அவரின் மகன்  அவைகளை  கூண்டுடன்  தன் காரில் கொண்டு  போய் எங்கேயாவது விடுவான். கடையில்  இருக்கிற  டாயிலட்டும்  பழுதாகி , ஒழுக்கும் மணமும்  ஒரு பக்கம்.   எனக்கு  கூறினார்  பப்ளிக் டாயிலட்டை  பாவிக்கும் படி. அதற்கு  காசு செலுத்த வேண்டும்.  இப் பிரச்சனைகளை தாங்கி கொண்டு வேலை செய்தேன்.  இதே சமயம்  இவரின் கடைக்கு அன்மையாக  வேறு  கடைகள் திறக்க பட்டதால் , இவர் செய்த வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.   கடையை வாங்க  முன் வந்த ஆள், "பாஸ்ட்  பூட் றெஸ்ட்ரறண்ட் "(FAST FOOD  RESTAURANT)  கடையை அதில் திறக்க விரும்பினான்.  அதனால் அதற்கான  அனுமதி பத்திரங்கள் எடுப்பதில் கால தாமதமானது.  இந்த பெரிய மனிதர் சாமான்கள் வாங்குவதையும்  குறைத்து,  கடை திறக்கும்  நேரத்தையும் குறைத்து, கடையில் உள்ள "பிரிஜ்" சுகள், சாமான்கள் வைக்கும் தட்டுகளை கலட்டி வேறு கடைக்காரர்களுக்கு  விற்க தொடக்கி விட்டார்.

அத்துடன்  சாமான்கள்  சிலவற்றை , டெஸ்கோ எக்ஸ்பிரஸ் , லிடில் , பவுண்ட்  ஸ்சொப், ஐஸ்லன்ட் , போன்ற சில்லறை  கடைகளில்  கொஞ்ச சாமான்கள் வாங்கி போடுவார்.  ஒரு நாள் சொன்னார் என்னை வாரத்தில் ஒரு நாள்,  வேலைக்கு  வந்தால் காணும், அதுவும் தனக்கு  என்னை  தேவைப்படும்போது.  அதுமட்டுமல்ல  சில மாதங்களில் தன்  கடை  கைமாறுகிறது என்று கூறி தான் சொன்னபடி  பண விடயத்தில் நடப்பேன்  என்று எனக்கு  என்றார். வேலை அற்ற நான், கையிலும் பணம் இல்லாமல் வீட்டில் அதிக நாட்கள்  இருந்தேன்.  ஒரு குடும்பக்காரன் அப்படி இருக்க முடியுமா?  ஆனால் அவர் கடையில் வேலை செய்வதாக பதிவு இருந்தது.  

 
இந்த பெரிய  மனிதர தான்  கட்டாயம்  காசுகளை  தருவேன் என்று உறுதி கூறியிருந்ததால், அதை  நம்பி  ஒரு  கடை  எடுப்பதற்காக  கடன்  பட்டேன்.  அந்த கடைக்குரிய  முதலீடுகளை  மேலும் செய்ய என்னிடம் பணம் இல்லை.  அத்துடன் வாங்கிய கடன்களால் வட்டி,  கடன் அட்டை  (CREDIT CARDS) களின்  கடன்கள் வளர்ந்தன.  எடுத்த கடையையும்  இழந்தேன். அதனால் வீட்டில் நான் பழையபடி வேலை அற்றவனாக,   அதுவும்  கடனாளியாக  இவர் எப்போ காசு தருவார் என்று  தினமும் எதிர் பார்த்தபடி இருந்தேன்.  இதனால் சராசரியாக தினமும்  இவருடைய கடைக்கு  டெலிபோன் செய்தது , எனக்குள்ள பண நெருக்கடிகள், கஷ்டங்களை கூறி  என் காசுகளை தந்து விடுதலை செய்யும்படி ,  நீங்கள் உங்கள் சொத்து  பத்துகளை பெருக்க, காப்பாற்ற  என்  தோள்பட்டைகளில் ஏறி  நிற்கிறீர்கள் , இனியும் தாங்க வலிமை இல்லை ... என்றெல்லாம்  அவரிடம் அடிக்கடி புலம்புவேன்.   அவரும் கூறுவார், " உங்கள் நிலைமைகள் எனக்கு நன்றாக விளங்குகிறது, கொஞ்சம் பொறுங்கள் தருவேன்"  என்றார்.   தன்  வசதிக்கு ஏற்றமாதிரி  கடையை திறந்து, பூட்டி  அவரே தனிய கடையை நடத்தி கொண்டிருந்தார். ஒரு நாள் அவருடன் நான் டெலிபோனில்  கதைத்தபோது  கூறினார், கடை கைமாறின மாதிரித்தான் என்றார். அதை "கம்பிளிசன்"(completion) என்பார்கள்.  "கம்பிளிசன்"  முடிந்ததா என்று கேட்டால்  முடிந்த மாதிரி என்பார்.   உனக்கும் பே  பே , உன் அப்பனுக்கும் பே  பே என்ற மாதிரி  இவர் பதில் எனக்கு இருந்தது.  தினமும் அவரது கடைக்கு குறைந்தது இரண்டு தரமாவது டெலிபோன் செய்து அவருடன் நிலமைகளை அறிய  கதைப்பது வழக்கம். இவர் என்னை ஏமாற்றலாம் என்ற பயம் என் மனதில் வந்துவிட்டது.  ஒரு நாள்  டெலிபோன்  செய்தபோது,  அவர் கடை  டெலிபோன் தொடர்பு துண்டிக்கபட்டத்தை கண்டேன்.  அவரின் வீட்டுக்கு டெலிபோன் செய்தால் பதில் இல்லை.   அவர் வீட்டுக்கு போய்  பெல்லை  அழுத்தினால், அதற்கும் பதில் இல்லை. என்னால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.  ஆண்டுகள்  பல கடந்தும் என் சம்பள பாக்கியையும்  , தன்  முதலீட்டுக்கு கென்று வாங்கிய   பணத்தையும்  அவர் தரவில்லை.    அவர் என்னிடம்  வாங்கிய  பணம்  எனக்கு அது  விதை  நெல்லு மாதிரி.  விதை நெல்லை வைத்துதானே  பயிர் வளர்க்க  விதைக்க போடலாம்.  குருவி நெல்லை சேர்த்த மாதிரி எத்தனை ஆண்டுகள், குளிர்,  மழை, வெயில், சினோ (SNOW)  களைப்பு  பாராமல்  வருந்தி  சேர்த்த  பணம்.    

இளம் வயதில் ஒருவனை பணத்திற்காக ஏமாற்றினால் சரி போய்விட்டது  வயது இருக்குதானே  உழைக்கலாம்  என்று  கொஞ்சமாவது  ஆறுதல் அடையலாம்.    நடுத்தர  வயது கடந்த ஒருவனை ஏமாற்றினால்  அவனிடம்  ஏற்கனவே நிறைய சொத்து பத்துகள், காசு பணம்  இருந்தால்  ஒழிய அனேகமாக  மீண்டும்  எழும்ப  வாய்ப்பில்லை.  என் நிலையோ இனி எழும்ப வாய்ப்பேயில்லை. கஷ்டங்கள், கடன்கள்  தொடருகின்றன.  நீங்கள் யாரும் கேட்கலாம்  முதலீட்டுக்கு என்று வாங்கிய பணத்தின் பேரால் மாதா மாதம்  அவர் கூறியபடி  வட்டியாவது  எனக்கு  தந்தாரா என்று?  அப்படி ஒன்றுமே அவர் எனக்கு இது வரை தந்ததில்லை. வங்கி தந்த கடன் அட்டைகளில் ( Credit Cards ) நாளாந்த வாழ்கை செலவுகள்  ஓடிக்கொண்டிருந்தன.

 
ஒரு நாள் காலை 11  மணிபோல்  அவரின் வீட்டுக்கு டெலிபோன்  செய்தபோது, அவரின் மனைவி   எடுத்தார்.  மாஸ்டர்  இருக்கிறாரா என்று கேட்டேன்.  அவ  சொன்னா , அவர் சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்  வரை தரிசிக்க போய்விட்டார், எப்போ திரும்பி வருவார் என்று தெரியாது என்றார்  என்று.  நான் சொன்னேன்  மாஸ்டரிடம்  நான் டெலிபோன் பண்ணினதை கூறி அவரை எனக்கு  கூறுங்கள் என்றேன்.  ஆனால் இந்த பெரிய மனிதன்  எனக்கு டெலிபோன் எடுக்கவே இல்லை.  தொடர்ந்து காலையில் ஆறு ஆறரை மணிக்கு டெலிபோன் எடுத்தால்   பதில் இருக்காது.  ஒரு சமயம் எடுக்க அவர் மகன்  சினந்து  என்னை பேசினான்  இந்த நேரமா எடுக்கிறது என்று. சரி என்று ஒருநாள் நடுப்பகலுக்கு  கிட்டவாக எடுத்தால் அவரின் மனைவி கூறினார், அவர் காலையில் நேரத்தோடு சாமியாரிடம் போனால் இரவு  ஒன்று ஒன்றரை மணிக்கு தான் வீடு திரும்புவாராம்.  நானும் தொடர்ந்து டெலிபோன் செய்வேன. அவர் மனைவி  அதே பதிலை கூறுவா?

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 7 லை பார்க்க. ) 

ஒவ்வொன்றினது தலைப்புடன் பாகம் 1..2...3 என்பனவற்றையும் பதிவிட்டால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 7

 

 

நாட்கள்  இப்படியே ஓடி கொண்டிருந்தன.  ஒரு நாள் ஞாயிறு காலை டெலிபோன் செய்தபோது  அவரே டெலிபோன் கதைத்தார். தான்  முரளி கிருஷ்ண  சுவாமி”  அவர்களின்  சபையில் ஒரு அங்கத்தவர் , அவர் லண்டன் வந்துள்ளார்  அதனால் வீட்டில்  இருப்பது குறைவு என்றார்.  நான் எனக்கு  அவர் தர வேண்டிய  காசை பற்றி  கேட்க  அவர் சொன்ன பதில் என்னவென்றால் தான்  கொஞ்சம்  கொச்சமாக கடை  வாங்கியவனிடம்  வாங்கி  வாங்கி செலவழித்து  விட்டதாகவும,  நான் முழுக்காசையும் கேட்கிறேன் என்று என்னில் குறைகூறினார். உங்கள் வீட்டுக்கு வந்து "பெல்" லை அழுத்தினால், முன் போல் யாரும் கதவை திறப்பதில்லையே என்று நான் கூற அதற்கு  அவர் கூறிய பதில் அப்படி இப்போ நிலைமை  என்றார்.  பல ஆண்டுகள் அவருடன் பழகினேன், பல தடவைகள் அவரின் வீட்டுக்கு போய்  உள்ளேன்.  இப்போ நிலைமையை பாருங்கள் நண்பர்களே.

நான் கேட்டேன் என்ன மாஸ்டர்  இப்படி நம்பிக்கை துரோகம் செய்கிறீர்கள், உங்களை நம்பி  மதித்து கெளவுரவமாக  பீங்கானில் சாப்பாடு போட்டு  நான் தர, நீங்கள் சாப்பிட்டு விட்டு  அதில் "கக்கா " இருந்துவிட்டு திருப்பி  தருமாப்போல் செய்துள்ளீர்களே.  நான் வாழ வைத்திருந்த பணத்தைத்தானே  நீங்கள் தந்த வாக்குறுதிகளை நம்பி உங்கள் முதலீடுக்கு தந்தேன் ஆறு மாதம் என்றீர்கள் ஆனால் வருடங்கள் ஓடி விட்டனவே , நான் ஒரு குடும்பக்காரன், கடன், வட்டி தொல்லைகளில் நான் சிக்கி தவிக்கிறேன்  என்று கூற  உடனே அவர் டெலிபோனை  வைத்து விட்டார்  திருப்பி  நான் டெலிபோன் செய்ய அவரின் மனைவி சொன்னா என்னால் அவர்  மயங்கி  விட்டாராம்.  

இதென்னடா அநியாயமாக இருக்கே  என்று சில மணித்தியாலங்கள் கழிய மீண்டும் டெலிபோன் செய்தேன்.  மாஸ்டரின் மனைவி எடுத்தா , அவவிடம்  நீதி நியாயத்தைப்  பற்றி கதைக்கலாம்  என்றால், டெலிபோனை அடித்து வைத்து விட்டா. இந்த பெரிய மனிதர் எனக்கு பணம் தரவேண்டும்  என்ற சகல விபரங்களும்  அவரின் மனைவிக்கு  தெரியும்.  எனக்கு இந்த பெரிய மனிதனை தெரியும், அவரின் குடும்பத்தாரையும் தெரியும். ஆனால் என் மனைவிக்கு அவர்கள் ஒருவரையும் தெரியாது.  தப்பி தவறி  நான்  திடீர் என இறந்தால் அல்லது  அவர் இறந்தால் என் மனைவியையும்  அவர்கள் தெரிந்திருப்பது  நல்லதென்று , இந்த பெரியமனிதரின் வீட்டுக்கு சென்று அறிமுகப்  படுத்தியிருந்தேன்.   இந்த பெரிய மனிதரும் எனக்கு அடிக்கடி கூறினார் தனக்கு ஒன்று நடந்தாலும் தன்  மனைவி, பிள்ளைகள் தான் வாக்கு தந்தபடி எனக்கு காசு முழுவதையும் தருவார்கள், அவர்களுக்கு எல்லாம் சொல்லியுள்ளேன்  என்று ஆரம்ப காலங்களில் எனக்கு அடிக்கடி கூறியுள்ளார்.

இப்பிரச்சனைகளுக்கு  பின்   இந்த பெரிய மனிதனுடன்  தொடர்புகொள்ள  அடிக்கடி டெலிபோன்  செய்தேன் , சிலசமயம் அவர் மனைவி டெலிபோன் எடுத்தால் கூறுவார் , அவர் சாமியாரிடம் போயிற்றார் என்று.  நான் டெலிபோன் எடுத்ததாக கூறும்படி கூறுவேன்.   இடைக்கிடை  கடிதங்கள் கூடி போட்டேன்  என்னுடன் தொடர்பு கொள்ளும்படி.  பலன் கிடைக்கவில்லை.   

ஒருநாள் காலை ஏழு  மணிபோல் அவரின் வீட்டுக்கு போனேன்.  தற்செயலாக அவரின் வீட்டுக்கு அயலில் வாழும் ஒரு தமிழர் கதவை திறந்தார். அண்டா  குண்டாக்களில் சோறு கறிகள் வீட்டில்  இருந்தன. அத்துடன்  சில  ஆண்களும், பெண்களும் அங்கு அலுவலாய் இருந்தார்கள்.  அன்று   இந்த பெரிய மனிதன் மூவாயிரம் பேருக்கு அன்ன தானம் கோவிலில் கொடுக்கும் நிகழ்ச்சி  என்று எனக்கு தெரியாது.  காரணம் நான் இந்து மதத்தை சார்ந்தவன்  அல்லாததால்.  

அவருடைய  மகன் வெளியே வந்தான், என்னவேண்டும் என்றான்.  அவனுக்கு ஏற்கனவே  நான் என்னத்திற்காக  வைத்திருக்கிறேன் என்று தெரியும்.  அப்பாவை  பார்க்க முடியாது. என்றான். அதே சமயம்  பெரிய மனிதன்  சாரத்துடன் தேனீர்  கோப்பையுடன்  வீதியின் அருகே வந்தார்.  " நான் ஒரு கோவில் தர்மகத்தா, ஆசிரியர்  சொன்னபடி உங்களை  திருப்தி படுத்துவேன்,  உங்கள்  நிலைமைகள்  எனக்கு எனக்கு நன்றாக தெரியும்  என் முதலீட்டுக்கு உதவி செய்ததுக்கு நன்றி,  வங்கியில் கொஞ்சம் போட்டுள்ளேன் , நன்றாக கடிதங்கள் எழுதுகிறீர்கள் "   என்றார்.  நான் கண்களில் கண்ணீர்  கலங்க மீண்டும் என் கடன் பிரச்சனைகளை கூறி விட்டு வந்தேன். அவர் பயந்திருக்கலாம் தன்னை  வீட்டில் அன்னதானத்திற்க்கு  உதவி செய்ய வந்திருக்கிறவர்கள் முன்னால் நான்  அவமானப்படுத்தலாம்  என்று. ஆனால்   நான் அப்படிப்பட்டவன் அல்ல .  அவர் கூறியபடி அன்னதானத்திற்கு முதல் நாள்  வங்கியில் அற்ப  தொகை போட்டிருப்பதை பிறகு கண்டேன்.  இதன் பிறகு அவருடன் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழக்கம் போல் சாமியாரிடம் போய்விட்டார் என்று டெலிபோன் செய்தால் அவர் மனைவி கூறுவார். எனக்கு டெலிபோன் எடுக்கும்படி அவருக்கு கூறுங்கள் என்பேன். அவர்  எடுக்கமாட்டார்.  இக்காலகட்டத்தில் ஒரு மரணச் சடங்குக்கு போயிருக்கிறார். அங்கு அவர் ஊருடன் தொடர்புள்ள , அத்துடன் இவரிடம் சீட்டுகள் போட்ட ஒருவரிடம் பெருமையாக  கூறியுள்ளார் தான் கடையை  விலைக்கு கொடுத்து சொத்துகளை  காப்பாற்றி வைத்திருப்பதாக.  அதற்கு காரணம் அந்த நண்பர் வியாபாரத்தில் பாதிக்கப்பட்டு ஒரு  மில்லியனுக்கு மேல் இழந்து இன்றும் கஷ்டப்படுகிறவர்.  பல  உதவிகளை அவர்  வசதியாக இருந்தகாலத்தில் இந்த பெரிய மனிதனுக்கு செய்தவர்.  அந்த  நண்பர் எனக்கு இதை கூறினார். இந்த  பெரிய மனிதனின்  கடையில் வேளை  செய்தகாலத்தில் , இந்த பெரிய மனிதனுடன் தொடர்பாயுள்ள ஒரு சிலர் எனக்கும் பழக்கமானார்கள். இவரின் இரட்டை  வேடங்களை அனுபவரீதியாக கண்ட நான்  எனக்கு என்ன செய்யபோகிறார்  என்று தெளிவானது.  ஏற்கனவே தன்னிடம் வேலை செய்த ஊழியர்களுக்கு மனமுவந்து ஊதியம்  கொடுக்க  விரும்பாத மனிதன, கோவில்  அன்னதானத்திற்கு  வாடகைக்கு வானை  பிடித்து விட்டு கூலி கொடுக்காத மனிதன் , தன் கடையின் பெறுமதிக்கு  மேலாக  "குட் வில்" லையும், வாடகையையும் எதிபார்த்த மனிதன், பாவித்த டொயிலட்  பேப்பரை  கழுவிப் பாவிக்கலாம் என்றால் பாவிப்பீர்கள் என்று நான் கூற "ஆம்" என்று கூறிய மனிதன்,  என்னிடம்  முதலீட்டுக்கு  வாக்குறுதிகள் தந்து காசை வாங்கி முடிய எல்லோரும் தனக்கு சும்மா தான் காசு தருகிறவர்கள் என்று கூறிய மனிதன்,   தன்  மகனே  "அப்பாவிடம் யாரும் காசு வாங்கமுடியாது .... " என்று  தன்னை பற்றி கூறியதாக  எனக்கு கூறிய மனிதன்,  இங்குள்ள கோவில்களில் எப்ப போனாலும்   இலவசமாக சாப்பிட சாப்பாடு இருக்கும் என்று எனக்கு அடிக்கடி கூறிய மனிதன், புழு பிடித்த பேரிச்சம் பழ  பக்கற்றை புழுவை தட்டி போட்டு விற்கும்படி எனக்கு கூறிய மனிதன், ஊழியர்களுக்கு ஊதியத்தை சரியாக கொடுக்காத மனிதன்,   தான் மலை நாட்டில் படிப்பிக்கும் போது  ஆறு ஏழு வருடங்களாக  ஒரு சிங்கவர்  வீட்டில் ஒரே அளவு காசை சாப்பாடுக்கும் அறைக்கும்  சாப்பாட்டுக்கும் கொடுத்ததாக கூறிய மனிதன்  என்னை ஏமாற்ற போகிறார்  என்று என் மனம் பயந்தது. ( நான்  நிறைய எழுதலாம், ஆனால்  அசிங்கமாக இருக்கும, ஆகவே நான் எழுத விரும்பவில்லை.).

பல வாரங்களின் பின் இந்த பெரிய மனிதர் இலங்கையில் ஒரு கலியான வீட்டில் கோட்  சூட் அணித்து நிற்பதாகவும்,   இலங்கையில் ஆசிரியராக கடமை ஆற்றியதற்காக தன் ஒய்வூதியம்  எடுக்கும் அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.  பிறக பல மாதங்கள் கழிய கேள்விப்பட்டேன் அவர் இங்கிலாந்து திரும்பி  விட்டார் என்று.

இவர் என்னுடன் தொடர்புகளை அறுத்துவிட்டதால்,  இவருடன் பல ஆண்டுகள்  பழகிய  சிலரிடம் பிரச்சனைகளை கூறினேன்.  என் பக்கம் நியாயம் இருப்பதையும் அவர் செய்தது துரோகம் என்று கண்ட  அவர்கள் அவருடன்  தொடர்பு கொண்டு டெலிபோனில் கதைத்தார்கள்.  அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக காசை வங்கியில் போட்டு   போன வருடம்தான்  முதலீட்டுக்கு வாங்கிய தொகையையும், எனக்கு தருமதியான சம்பள பாக்கியில் மூன்றில் ஒரு பகுதியையும் கழித்து வங்கியில் போட்டார். அவர் ஊழியருக்கு  கொடுத்ததே சட்டபடியான ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கு.  என் ஊதியத்தை வருடக்கணக்காக வைத்து அனுபவித்துவிட்டு  அதிலும்  மேலும் மூன்றில் ஒரு பங்கை கழித்து விட்டு தருவதென்றால்,  இந்த பெரிய மனிதனைப்  பற்றி  என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?  

இவர் வீட்டுக்கு ஒரு நாள் டெலிபோன் செய்தேன்  இந்த பெரிய மனிதருடன்  கதைப்பதற்காக. பதில் இல்லை.   என் வீட்டு டெலிபோன் இலக்கம் அவர்கள் வீட்டு டெலிபோனில் பதிந்திருந்தது.  அவரின் மகன் எனக்கு  உடனே டெலிபோன் செய்து  என்ன வேணும் என்று கடுமையான குரலில் கேட்டான்.  நான் கூறினேன் அப்பாவுடன்  நான்  கதைக்க  வேண்டும் என்றேன்.  அப்பாவுடன் இனி கதைக்கமுடியாது, அப்பாவுக்கு வருத்தம், காசு முழுவதும் வங்கியில் போட்டு  தந்து முடித்தாயிற்று தன்னுடன் மட்டும்தான் கதைக்கவேண்டும் என்றான்.  நான் சொன்னேன்,  உம்முடைய அப்பாவுடன் தான் எனக்கு கதை பேச்சு, நானும் சாகவில்லை அப்பாவும் சாகவில்லை, கொடுக்கல் வாங்கள் நடந்ததது  எனக்கும் அப்பாவுக்கும் ஆகவே உம்முடன் நான் கதைக்க விரும்பவில்லை என்றேன் . மீண்டும் மீண்டு அவர் மகன் என் வீட்டுக்கு டெலிபோன் எடுத்து தொல்லை அதாவது என்னை மிரட்டுவது போல் நடந்தான்.  தகப்பன் பத்தடி பாய்ந்தால் மகன்  பதினாறடி  பாய்கிறானே என்று மிகவும் மனம் நொந்தேன். சண்டித்தன போக்கில் நிற்கும் மகனுடன்  வயது போன நான் கதைக்க முடியுமா?  அதுமட்டுமல்ல பெற்ற  தகப்பனே முன்பு எனக்கு கூறியுள்ளார்  தன்  மரியாதையை காப்பாற்ற தன்  மகனுடன்  தான் கதைப்பதே குறைவு,  தாயுடந்தான் எல்லாம், அதுமட்டுமல்ல தன் கடைக்குள்  இவரின் கடை உள்ள மாடிக்கட்டடத்தை  மேற்பார்வை   செய்யும் சீனர் ஒருவரை கடைக்குள் கதவை பூட்டி  பேசி அடிக்க போனவன் ,  இப்படி பல கதைகளை கூறியுள்ளார்.

 

நான் இந்த பெரிய மனிதரிடம்  இவருடன் பழகிய  அவரின் நண்பர்கள்  மூலம் வேண்டுகோள் விடுத்தேன்,  அந்த நண்பர்கள் முன்னிலையில்  நாம் இருவரும்   இந்து கோவிலில்  ஆண்டவன் சந்நிதானத்தில்  சத்தியம் செய்தது உண்மைகளை கதைப்போம், அந்த நண்பர்களே  தீர்ப்பு கூறட்டும். பொய் கூறுபவனை கண்டு பிடிக்கும்  Lie Dectector test (Ploygraph)  பரிசோதனைக்கு  நான்  தயார், அவரும் முன் வரவேண்டும். உண்மையை ஒழுங்கா ஒப்பு கொள்ள வேண்டும்.  கடிதங்கள்  மூலமும் அழைப்பு விடுத்தேன். அந்த மனிஷன்  வரவேயில்லை .

 இதே சமயம் கனடாவில்  உள்ள  இவரின் மனைவியில் சகோதரர் இருவருடன் தொடர்புகொண்டேன்.  அவர்களில்  ஒருவர்  Barrie என்ற இடத்தில் வாழ்கிறார். மற்றவர் குடும்பஸ்தன்.   Markham   என்ற இடத்தில்  வாழ்கிறார். Markham   என்ற இடத்தில்  உள்ளவர் கூறினார் தங்கள்  சொந்த ஊர் தெல்லிப்பளை ,  (காலம் சென்ற) தங்கள் தந்தையார்  ஒரு ஆங்கில ஆசிரியராக  இருந்தவர் என்றார். பேசும் போது  மிக நல்லவராக காணப்பட்டார். அவர் கூறினார்  தான்  இந்த  பெரிய மனிதர்  குடும்பத்துடன் கதைப்பதில்லை , எப்படியும் வேறு ஆட்கள் மூலம் செய்திகளை கூறுவேன் என்றார். மேலும் இங்குள்ள இவரின் தாய் உறவினருடன் , இவருக்கு தெரிந்தவர் மூலம் பிரச்சனைகளை கூறினால், அந்த உறவினர்  கூறினார் " அக்குடும்பம்  ராஜXXX   குடும்பம் மாதிரி, அவர்களுக்குள்ளே நீதிமன்றம் , நீதிபதிகள் லோயர்மார்கள்  எல்லாம்  இருக்கினம் தன்னால் கதைக்க முடியாது"  என்றார். இலங்கையில் அரசாங்க வேலைபார்த்தவர், இந்த பெரிய மனிதனை விட வயதானவர். அந்த உறவினர். ஒரு நாள் அவரிடம் கேட்டேன் இந்த பெரிய மனிதரின் தாயார்  கிறிஸ்தவ பெண்ணா அப்படித்தான் இந்த பெரியமனிதர்  எனக்கு கூறினர்  என்று. அந்த தாய் வழி  உறவினர் கூறினார் தனக்கு தெரியாது என்று.  அவருக்கு  என் பிரச்சனைகள்  தேவை அற்றதால்  அவரும் இவற்றில்  ஈடுபட விரும்பமாட்டார்தானே.  ஈடுபட்டும் பலன் கிடைக்காதே.   அவர் எனக்கு கூறினார்  செவ்வாய் , வெள்ளி கிழமைகளில் ஈஸ்ட் ஹாம்  மகா  லக்ஷ்மி கோவிலுக்கும், மற்ற நாட்களில் வல்தம் ஸ்டா பிள்ளையார் கோவிலுக்கும்  போகிறார் என்னை அக் கோவில்களுக்கு  போனால் சந்திக்கலாம் என்றார்.  போனேன்  ஆனால்  என்னால் அவரை அங்கு காண முடிய வில்லை.  எனக்கு வீணான பயணச்செலவும், நேர விரையமும்.  எனக்கு  ஐயர் ஒருவர்  என் பரிதாப கதையை கேட்டு  கூறினார், நான் செய்தது என் முட்டாள் தனம் என்று  தான்  யாரையுமே  நம்புறதில்லை,  வங்கியில் அவர்கள் கடன் எடுத்தால் அவர்களுக்கு கட்டாய கடமைகள் அதிகம் , அவர்கள் ஒழுங்காக வட்டியும் கட்டவேண்டும், கடனையும் கட்டவேண்டும்  இல்லாவிட்டால் வங்கி வழக்கு போட்டு கடனாளியின் சொத்துகளை விற்க  வைத்து  லோயர் செலவு அந்த செலவுகள், வட்டி, கடன் எல்லாம் அறவாக்கி விடுவார்கள்.  இது சும்மா வாய்  நாணயத்தை  நம்பி  கொடுத்தால்  இப்படித்தான், மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம்  செய்தது விட்டுவார்கள். இவர்கள்  எல்லாம் எப்படித்தான் சோறு தின்கிறான்களோ  என்று சபித்தார்.

அதுமட்டுமல்ல இந்த பெரிய மனிதருடன் கதைத்து என்னையும் இந்த பெரிய மனிதரையும் நேரில் வைத்து  தீர்வு காண்பதற்காக  இவரின் நீண்ட கால நண்பர்கள்  எடுத்த முயற்சிக்கு இவர் ஒத்துழைக்க  மறுத்துவிட்டார், சம்பந்த மில்லாமல்  என்னை திட்டினாராம்.    ஒரு சமயம்  இவரின் நண்பர் ஒருவர் தன்  வீட்டுக்கு என்னை வரவழைத்து, டெலிபோனில் உள்ள "ஸ்பீக்கர்"  ரை  "ஒன்"  பண்ணிவிட்டு  இந்த பெரிய மனிதருடன் பிரச்சனைகளை கதைக்க,  இந்த பெரிய மனிதர்  ேவலமாக  என்னைப்பற்றி  திட்டி கொண்டிருந்தார் அதாவது தன்  குடும்பத்தை, பிள்ளைகளை தன்  நண்பர்களை, உறவினர்களை  பிரிக்கிறேனாம்,  தன்  கடை  நான் தானாம்  பழு தாக்கினதாம்,  என்று  ஒரு துஷ்ட சிறு பையனை போல் எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த பெரிய மனிதர் கத்தி  கொண்டிருந்தார்.    நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அந்த நண்பர் கூறியதும் உடனே டெலிபோன் தொடர்பை துண்டித்து விட்டார்.  அதன் பிறகு  அவருடன் என் பிரச்சனைகளை  கதைத்தவர்களை  கண்ட போது  தெரியாத மாதிரி  விலகி   போனார் என்று  இது சம்பந்த பட்டவர்கள் எனக்கு  நேரடியாக  கூறினார்கள்.

 நண்பர்களே ! உதாரணமாக  உங்களுடன் அறிமுகமான ஒரு பெரிய மனிதர் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி , தான் உழைக்க  உங்கள் காரை கேட்கிறார்   ஆறு மாதங்களில்  திருப்பி தந்து விடுவேன் அத்துடன் உங்கள் காரை தன் வருமானத்திற்கு  பாவிப்பதால் அதற்கு உங்களுக்கு  வாடைகைப்  பணம் தருவேன் என்று.   நம்பிக்கையில்  சாட்சி இல்லாமல் , எழுத்தில்  எழுதி வாங்காமல்  நம்பி இவர்  பெரிய மனிதன்தானே என்று  நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.  ஆறு மாதங்கள்  முடிய வாடைக் காசும் இல்லை, காரும் இல்லை.  தவணைகள்  கூறிக்  கூறி  சில வருடங்களின் பின் நீங்கள் கொடுத்த அழுத்தத்தால் உங்கள் காரை  ஒரு தரம்  காரின்  டயறுகள் ,  மறு தரம் காரின் என்ஜின் , இன்னொரு தரம் காரின் இருக்கைகள்,  பிறகு காரின் "பொடி "(BODY)  இப்படி காலத்திற்கு காலம் துண்டு  துண்டாக அதுவும்  உங்கள் வீட்டு மதிலுக்கு மேலாக  உங்கள் வளவுக்குள் வீசி எறிந்து  விட்டு  காரை  உங்களுக்கு   தந்து விட்டதாக நியாயம் கேட்க உங்கள் நண்பர்களுக்கு  கூறியது  சரியா?  வாங்கிய காரை அப்படியே உருப்படியாக  கொடுத்திருந்தால் நீங்கள் ஏதாவது தொழில் செய்து கடன்களை அடைத்து பிழைத்திருக்கலாம்,. இது துண்டு துண்டாக பல மாதங்கள் எடுத்து பலவருடங்களுக்கு பின் தந்தால்  நீங்கள் அதை வைத்து வாழ முடியுமா?  அவரின் நண்பர்களே எனக்கு கூறுகிறார்கள் இந்த மனிதன் செய்தது  அருவருக்கு தக்க  பிழை என்று.  அதற்கு அவரின் குடும்பமும் ஒத்துழைக்கிறதே ? அவரின் கடையை  வருட  வாடை முப்பதினாயிரத்திற்கு கொடுத்து வாடை வாங்குகிறார். கடை  நடத்தும்போது வாங்கிய விலைகளை விட  இரண்டு , மூன்று, நான்கு மடங்கு ... விலைகளை வைத்து  சாமான்களை விற்றார்.  வைத்திருந்த ஊழியர்களுக்கு  நியாயத்தின்படி  ஊதியம் கொடுக்கவில்லை. என் ஊதியத்திலும் இறுதியாக மூன்றில் ஒரு பங்கு கழித்து விட்டார்.   என்னிடம் வாங்கியத முதலீட்டுக்கு  என்று.   முதலீடு செய்வது  இலாபத்தை ஈட்டத்தானே.
 
இன்று என் நிலைமை என்ன தெரியுமா இந்த மனிதன் சில ஆண்டுகள் கழிய  சிறிது சிறிதாக தந்த காசு, சம்பளப்பாக்கியால்  என் கடன்களில் ஒரு பகுதிகளை  கட்டி  காசுகளும் கரைந்து பிரச்சனைகளில் சொல்லென்னா  கஷ்டங்கள், கடன் பிரச்சனைகளில்  நானும் என் குடும்பமும்  சிக்கி தவிக்கிறோம்.  

 மிகவும் மனம் நொந்து ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் , பொதுவாகவே  யாராவது  பாத்திர  பண்டங்களை அயல் வீட்டாரிடம்  இரவல்  வாங்கி பாவித்திருந்தால், திருப்பி கொடுக்கும்போது அயல் வீட்டுக்கு போய்  பாத்திரங்கள் எல்லாம் தந்த மாதிரி சரியாக இருக்கா பாருங்கள் என்று நன்றி கூறி வருவோம். இது  பண்பும் நேர்மையும் கூட.   அதை விட்டு விட்டு அவர்கள் வீட்டு வளவுக்கு மதிலால் எப்போவதாவது ஒருதரம் பாத்திர பண்டங்களை  கொச்சம் கொச்சமாக  எறிந்து விட்டு  போய் பாத்திரங்களை கொடுத்துவிட்டேன் என்று வாங்கியவன் கூறுவது  நற்பண்பா?  அதுவும் பாத்திர பண்டங்கள் இரவல் வாங்கியது  தன்  உழைப்பிற்காக.

இந்த மனிதன் தன்  கடையை  கொடுத்து   முடிய  என்னை  தன்  வீட்டுப்பக்கமே  அண்டவில்லை , கதை பேச்சு தொடர்பும் இல்லை, நன்றி கூறத்தன்னும்  என் வீடு தேடி வந்ததும் இல்லை,  இருவரும் சேர்ந்தது கணக்கு பார்க்க தன்னும்  என்னை  தன்  வீட்டுக்கு  கூப்பிட்டது கிடையாது. அந்த குடும்பத்தில் ஒருவராவது  இவருக்கு அதை கூறியிருக்க கூடாதா ?   என்னுடன் கதைப்பதுமில்லை.  தன்னுடன் தொடர்பு கொள்ள  முயன்றால் தன்னை தொல்லைப்  படுத்துவதாக போலீசில் முறைடிவாராம்  என்று எங்கள்  பிரச்சனைளுக்கு  கதைத்து  தீர்வுக்கான முயன்ற அவரின் நண்பர் ஒருவருக்கு கூறி என்னை மிரட்டி உள்ளார்.  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும்?

 
இது ஒரு புறம் இருக்க , தன்னுடைய தப்பனார்  ஊரில்  ஆசிரியராக கடமையாற்றியதாகவும், இவரும் இவரின் உடன் பிறப்புகளும்   சாவகச்சேரி  டிறிபேக் கல்லூரியில் படித்ததாகவும்,  இறுதியில் நாட்டைவிட்டு புலம் பெயருமுன்  இவர் அங்கு ஆசிரியராகவும் கடமையாற்றியதாக  கூறினார். சிலருக்கு  ஆசிரியராக  இருப்பது அவர்களுக்கு பெருமை, சிலர் ஆசிரியராக  இருப்பது ஆசிரியர் தொழிலுக்கே பெருமை.  தொழிலுக்கே பெருமை  சேர்க்கும்  ஆசியர்கள்  வைத்திருப்பது பாடசாலைகளுக்கே  பெருமை.  அதே மாதிரித்தான்  மாணவர்களும்.  தென்மராச்சியிலேயே  புகழ் பெற்ற நீண்ட வரலாறு  கொண்ட கல்லூரி சாவகச்சேரி  டிறிபேக் கல்லூரி. மாணவனாகவும் ஆசிரியராகவும் இருந்த ஒருவர்  என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்.

நியூ  யவ்ன”  இணையதளத்தில் 2013-04-10    “மட்டுவில் ஆலயத்தில்  ஆறு  வயது மாணவனின் நற்பண்பு - இதனால் பெண் முத்தமிட்டார். என்ற தலைப்பில்  ஆலயத்தில் தவறவிடப்பட்ட பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவனைப் பற்றியும் அச்

 

           ( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி 8 டை  பார்க்க. ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும்  தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 8

 

 

 

சிறுவனின் தந்தை பற்றியும் செய்தியை வாசித்து பாருங்கள்.  நேர்மையாக வாழ வேண்டும்

 

என்று அந்த சிறுவனை பெற்றோர்கள் வளர்த்தார்கள். அந்த  சிறுவன்  தன்  நேர்மையான செயலால்  பெற்றோருக்கும் புகழ் சேர்த்துள்ளான். "நேர்மையே சிறந்த கொள்கை" யாக வாழும் அந்த  சிறுவனுக்கும், பெற்றோருக்கும்  என் வாழ்த்துக்கள்.  நம்ம கதையில் வரும்  குடும்பத்தை பாருங்கள் , வயதான இந்த பெரிய மனிதர்  ஒரு ஆசிரியர், இவரின்  தந்தை ஒரு ஆசிரியர், இவரின் சகோதரி ஒரு ஆசிரியை, இவரின் மனைவி  யாழ் பல்கலைகழகத்தின் கணிதம்  கற்றவர், அத்துடன்  அவரின் தந்தை  கூட ஒரு ஆசிரியர், பிள்ளைகளும் லண்டன் பட்டதாரிகள் ,   வாழ்வதோ அதுவும் ஒரு செல்வந்த நாட்டில் , வாழ்க்கை முறையை பாருங்கள் நண்பர்களே.  அந்த நேர்மையான சிறுவனுடன் ஒப்பிடும்போது  என்ன கண்றாவி  வாழ்க்கை இது ?

நண்பர்களே ,  இந்த பெரிய மனிதன்  என்னை நம்ப  வைக்க  சமுதாயத்தில் தனக்குள்ள அந்தஸ்து , தகமைகளைப் பற்றி கூறிய கதைகளை    ஒருகணம் யோசித்து  பாருங்கள் . அதுமட்டுமல்ல காலோட்டத்தில்  மேலும்  நான்  இந்த பெரிய  மனிதனைப் பற்றி  பிறகு அறிந்த   விஷயங்களை கீழே  பாருங்கள்.

இந்த  பெரிய மனிதன்  இந்த  நாட்டில்  தொடர்ந்து  ஒரு நல்ல வேலையில் , நல்ல சம்பளத்துடன் இருந்தார் என்றில்லை. பார்த்த  "சப்பிளை  டீச்சர்" வேலையும் பறி  போய்  விட்டது.  வீட்டில் சாப்பாடுகள்  செய்தது  புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு விற்றுள்ளார்  . அது பற்றி நான் அவரிடம் கேட்டபோது அது அவமானமாக இருந்ததால்  விட்டு விட்டதாக கூறி அதற்கு  உதாரணமாக தன்னிடம் இடியப்பம்,  சொதி , சம்பல்  வாங்கிய தன்  ஊர்  நண்பரிடம்  பெற்ற கசப்பான  அனுபவத்தை  தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை எனக்கு கூறினார்.  வீட்டில்  சீட்டு பிடித்தும்  வாழ்த்திருக்கிறார். வீட்டில் அறைகளில்  தமிழர்களை வாடைக்கு  இருத்தி உழைத்துள்ளார் .  ஆஸ்பத்திரி  ஒன்றில் சமையல் அறையில் சாப்பாடு,  சமையல் பாத்திரங்கள் கழுவும் வேலைக்கு  போய்  அது  தனக்கு கஸ்டமாக இருந்ததால் கைவிட்டதாக  கூறினார்.  தபால்  இலாக்காவில்  கடிதங்களை   தெரிந்து  வகைப்படுத்தும்   வேலைக்கு போனதாகவும், அங்கு பெண்களுக்கு அந்த வேலையே கொடுத்து விட்டு , தனக்கு கடிதங்கள் கட்டப்பட்ட  பொதிகளை  சுமந்தது கொண்டு வான்களில்  அடுக்கும் வேலைக்கு விட்டதாகவும், பிறகு தான் அந்த வேலையே விட்டதாக  கூறினார்.  

 இந்த பெரிய மனிதர் செய்கிற அன்னதானம் இவரின் சொந்த செலவில் செய்வதில்லையாம், இவரின் உறவினர்கள்,அயலவர்கள், நண்பர்கள், அத்துடன்  கோவிலில் கூடி கூறுவார்களாம்  அன்னதானத்திற்கு யாரும் பக்தர்கள் பங்களிப்பு செய்ய வந்தால் இந்த பெரிய மனிதனிடம் கொடுக்கும்படி.  இப்படி நிலைமை இருக்க  இவர் ஏன்  அந்த வட  இந்தியரை  கூலி தருகிறேன் என்று வானுடன் பாவித்து விட்டு கூலி கொடுக்காமல் போனது ஏன்  என்று புரியவில்லை . 

 தான்  இலண்டனில் படித்து  பட்டம்பெற்ற  ஒரு பி.ஏ .ஹோனர்ஸ்  பட்டதாரி  என்றும், இலங்கையில் கணிதம்  பாடம் படிப்பித்தவர் என்றும்  கூறும் இவருக்கு இங்கிலாந்தில் தொடர்ந்து  ஒரு வேலை எடுக்க முடியாமல் போனது மிக மிக ஆச்சரியமாக  எனக்கு இருக்கிறது. ஆங்கிலம் ஒழுங்காக தெரியாத ஒருவர் அதுவும்  இங்கிலாந்தில் பி.ஏ . ஹோனர்ஸ்  பட்டம் பெற்றது என்பது சரி, கம, பத, நிச மட்டும் பாடுபவன்  சங்கீத கலாநிதி  அல்லது சங்கீத பூசனம் என்ற பட்டம் பெற்றவன் என்று கூறுவது மாதிரி. அப்பட்டமாக கெட்டவார்த்தைகளையும், சண்டித்தன  கதைகளையும் பேசுகிற  ஒருவர், தன்னிடம் வேலைசெய்யும் ஊழியர்களை  மோசமாக , சட்ட விரோதமாக நடத்திய  ஒருத்தர்  ஆன்மீகவாதியாகவும் , அன்னதானம் செய்பவருமாக  இருப்பது எனக்கு குழப்பமாக இருக்கிறதுஇந்த  மனிதருடன்   நாற்பது  ஆண்டுகளுக்கு மேலாக  நட்புடன்  பழகியவரும், ஆசிரியராக இருந்தவரும் இவரின் ஊரான நுனாவிலுடன் தொடர்புல்லவருமான இவரின்  வயதை  ஒத்த இங்குள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு எனக்கு இந்த பெரிய மனிதன் செய்தவற்றை கூறிஇவர் ஒரு கணித ஆசிரியராக  இலங்கையில்  இருந்தவரா என்று கேட்டபோது , அவர்  கூறியபதில்  வென்றால் இந்த பெரிய மனிதர்   யாழ்/  கொழும்புத்துறையில் இருந்த ஆசிரியர் கலாசாலையில் பொதுபயிற்சி  பெற்றவர் என்று. நண்பர்களே பொதுவாக  கணிதம் க.பொ .த .(சாதாரணம்) வகுப்புக்கு  படிப்பிக்கும் ஆசிரியர்கள்  ஒன்றில் விஷேட  கணித  பயிற்சி  பெற்ற ஆசிரியர்கள் அல்லது  கணித  பட்டதாரிகள்அத் தராதரம் உள்ளவர்கள்தான்   பரீட்சை  தாள்களையும் திருத்துவார்கள்.  அதுமட்டுமா மேலும்  விசாரித்து அறிந்தது என்னவென்றால்  இவரின் அக்கா மகனிடம்  சில  கடைகள், வீடுகள்  வைத்திருக்கிறாரே ஒழிய  நூறு க்கு கிட்ட வீடுகள், கடைகள்  அவரிடம் இல்லை என்று அறிந்தேன். மத்துகம என்ற ஊரில் ஆசிரியராக இருந்தபோது  இவரின்  கற்பூர  தொழில்சாலையில் வேலைசெய்த பெண்பிள்ளைகளுக்கு சரியாக , ஒழுங்காக சம்பளம் கொடுத்திருப்பார்  என்று  நீங்கள்  நினைக்கிறீர்களா ?   மேலும்   இவரின் மனைவி வேலை எதுவும் செய்யாதவர்.  நான் இவர் கடையில் வேலைக்கு  சேர்ந்த காலத்தில் இவர் இந்த கடையை  நடத்தி கொண்டிருந்தாரே ஒழிய , வேறு தொழில் ஒன்றும் செய்யாமல் இருந்ததை நான் அவதானித்தேன்.  அப்படி இருக்க  இவர் சொந்தமாக  வீடு, கடை  வைத்திருப்பது   மிக மிக அதிசயமாக இருக்கு.   அவரும் எனக்கு அந்த இரகசியங்களை  கூறவில்லை.  

 தன்னை பற்றி முழுக்கதையும் கூறினால் நான் பயந்துவிடுவேன் என்று அவர் எனக்கு அடிக்கடி கூறியே என் மனதில் பயத்தை வளர்த்தவர்  இவர்.  கதையில் என்னென்ன மர்மங்கள் இருக்கோ, அவரும் ஒருநாளும் எனக்கு கூறியதில்லை.  என்னிடம்  வாங்கிய பணத்தில்  என்ன முதலீடு செய்தாரோ எனக்கு தெரியாது , மறைப்பேன் பொய் சொல்ல  மாட்டேன், எல்லாவற்றையும் கூறினால் மற்றவர்கள் மடையன் என்று நினைப்பார்கள்,  இப்படி அவர்  அடிக்கடி எனக்கு கூறும் தத்துவங்கள்.   என்னிடம்  முதலீட்டுக்கு  வாங்கிய பணத்தில் முதலீடு செய்து வருமானமும் எடுத்துக்கொண்டு , என்னையும்  அற்ப சம்பளத்திற்கு  வேலைக்கு  வைத்த  திறமை  யாருக்கு  வரும்.  அதுமட்டுமா சட்ட படியான  அடிப்படை  ஊதியத்தில் அரைவாசியை   ஊதியமாக பேசி  பிறகு அந்த தொகையில்  மேலும் அதில்   மூன்றில்  ஒரு பங்கை  கழித்து கொண்டு  மிகுதி சம்பள பாக்கியை  தந்த  இந்த  மனிதனைப் பற்றி  நண்பர்களே என்ன நினைக்கிறீர்கள்?

 

 புற்று நோய்க்கு ஆளான அந்த ஊழியர் சொந்த மாதிரி காற்று ஒன்றை தவிர மற்ற எல்லாவற்றுக்கும் நாம் காசு கொடுத்துதான் வாங்கவேண்டும்,  எல்லாமே சும்மா  கிடைத்தால்  நாமும் இந்த பெரிய மனிதருக்கு  போனால் போகுது என்று விட்டு கொடுக்கலாம்அப்படி இல்லையே பொய் பிரட்டுகள் கூறி  அபகரித்து வாழ்ந்தது  முன்னேற்றம் என்ற என்ற பெயரில்  “வீக்கம்அடைந்து சொத்து சுகங்கள்  சேர்ப்பது  நியாயமா?  இந்த பெரிய மனிதன்  செய்ததது நியாயமா? நீதியா? தர்மமா?

இப்போ இந்த பெரிய மனிதன் அதிகம்  கதைப்பது ஆன்மீகத்தைப் பற்றியும் , கோவில்களைப் பற்றியும் , சாமிமார்களைப் பற்றியும் தானாம் அத்துடன் கோவிலுக்கு அடிக்கடி  போகிறாராம்.  மேலும்  வழக்கம்போல் அவருடைய அன்னதான நிகழ்ச்சியை  வருடாவருடம்  நடத்திகொண்டிருக்கிறாராம்.

 

  ‘அம்மாஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்களே  உங்கள் பக்தன் என்று வருடா வருடம்  மூன்று நாட்கள் உங்களை  குடும்பத்துடன் தரிசிக்க வரும் இந்த பெரிய மனிதனுக்கும் குடும்பத்திற்கும்  நீங்கள் நல்ல அறிவுரைகளை  கூறுங்கள்.

சுவாமிஜி முரளி  கிருஷ்ண  அவர்களே  உங்கள் சபையில்  தான் ஒரு அங்கத்தவர் என்று  எனக்கு கூறிய உங்கள் பக்தனான  இந்த மனிதனுக்கு   நீங்கள் நல்ல அறிவுரைகளை  கூறுங்கள்

தமிழ் அன்பர்களே  இந்த பெரிய மனிதனுக்கும்  குடும்பத்திற்கும்  நீங்கள் நல்ல அறிவுரைகளை  கூறுங்கள்.

இந்த பெரிய  மனிதனின் நண்பர்களே, உறவினர்களே,  ஊரவர்களே  நீங்கள் இந்த பெரிய மனிதனுக்கும்  குடும்பத்திற்கும்  நல்ல அறிவுரைகளை கூறுங்கள்.

வெள்ளையர்கள் தங்கள் நாடுகளில் சட்டங்களை இறுக்கி கொண்டே போகிறார்கள். அதனால் கஸ்டப்பட  போவது மோசடிக்காரர்களே.  முன்புபோல்  தவறான  விபரங்களை கொடுத்து  வீடுகள் வாங்குவதெல்லாம்   இனி  மேலும்  சரிவராது  எல்லோருக்கும்  தெரிந்ததே. வேடிக்கை என்னவென்றால்  இந்த பேராசைக்காரர்கள் சேர்த்து  வைத்த சொத்துகளை  உயிரோடு இருக்கும் போது விற்றால் முதல் இலாப வரி”  (Capital Gains Tax ),  இவர்களுடைய  மரணத்திற்கு பின் பிள்ளைகளுக்கு உரித்தாகும்போது   அரசு நிர்ணயித்த  ஆகக்குறைந்த  தொகைக்கு  மேற்பட்ட  பெறுமதியான சொத்துகளுக்கு  ஆகக்கூடியது  நாற்பது  வீதமாவது வரி (Inheritance Tax ) கட்டவேண்டும்.  அந்தளவுக்கு பிள்ளைகள்  எல்லோரும் வருமானம் பெறுவார்களாக  இருப்பதில்லை.  அவர்களால்  வரி கட்ட முடியாவிட்டால் சொத்துகளை விற்று வரி கட்டவேண்டியுள்ளது. மேலும் பல  பிள்ளைகள்  தந்திரமாக ஏமாற்றி  உழைப்பதில்  வல்லவர்கள் அல்ல. நேர்மையான குணங்கள் கொண்டவர்கள்.  நம் தாய் நாட்டில்  பெண் பிள்ளைகளுக்கு  சீதனங்கள்  கொடுக்க  சொத்துகள் சேர்ப்பார்கள். நிறைய சொத்துகள் இருந்தால் பெரிய இடத்தில் மாப்பிளைகளை  பார்ப்பார்கள் . ஆனால்  இங்கு  சொத்துகள் சேர்த்தவர்களின் பிள்ளைகள் சரி , சேர்க்காதவர்களின்  பிள்ளைகள் சரி  கூடுதலாக தாங்கள் விரும்பும் ஆளை  எந்த இனத்தையோ, எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் சரி  மனம் முடிக்க விரும்புகிறார்கள்,  சிலருக்கு  கலியாணத்தில் அக்கறை  அற்றவர்களாக இருக்கிறார்கள்.  சிலருக்கு எல்லா வசதிகளும் இருந்தும்  மணப்பெண்கள் , மணமகன்கள்  கிடைக்காமல் கலியான  வயதை தாண்டி போய்கொண்டிருக்கிறார்கள்.  பல பிள்ளைகள் தொழில் நிமித்தமாக  இடம் பெயந்து   தூரத்து  ஊர்களில் , தூரத்து  நாடுகளில் வாழ்கிறார்கள்.  வயதான பெற்றோரை காப்பாற்ற,  அல்லது அவர்களின் வீடுகளில் பரம்பரையாக வாழ அந்த பிள்ளைகளுக்கு  வாய்ப்பில்லை.  தன்னை தானே பராமரிக்கமுடியாமல் தனித்த நிலைமையில் வயோதிபர்கள் மடங்களுக்கு  இடம் எடுத்து போகும்போது  அதற்குரிய செலவுகளை  சொத்து பத்துகள், காசு பணம் உள்ளவர்கள் அவர்களே கட்டும்படி  கூறப்படுகிறது.   அப்படி இல்லாதவர்களுக்கு  இலவச சலுகைகள் கிடைக்கின்றன.  இப்படி பல பிரச்சனைகளும் உண்டு. வாழும்போது  பிள்ளைகளுக்கு  பெற்றோர்  செய்வதே பெறுமதியாக உள்ளது.  ஏராளமாக  சொத்து சுகங்கள் காசு பணங்கள்  ரம்பரைக்கு  சேர்த்து வைக்கலாம் என்ற  திட்டங்கள் கூடுதலாக அர்த்தமற்றவை .  நாங்கள்  வாழும்  வெள்ளையர்களின் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள், பிள்ளைகள் வளர்க்க படும் முறைகள்,  பண்பாடுகள்  நம் தாய் நாட்டில் உள்ளவற்றுக்கு  எதிர் மாறாக உள்ளன. இவற்றை உணராமல் பேராசை பிடித்து  வாழும் நாட்டையும் ஏமாற்றி , சக  தமிழர்களையும் ஏமாற்றி சொத்து சுகங்கள்,  காசு பணம்  சேர்கிறார்களே.  இதெல்லாம் அவர்களுக்கு  தேவையா ?  இல்லையே! அப்படி இருக்க ஏன்  பேராசை பிடித்து ஏமாற்றி, நம்பிகை துரோகம் செய்து பணம், சொத்துகள், நகைகள் சம்பாதிக்க வேண்டும் ?  எல்லாமே அழிந்து போற உடலுக்காகவே தவிர உங்கள் ஆன்மாவுக்கா? இல்லையே!

இந்த வெள்ளையர்கள் நாடுகளில் சொத்துகளை தேடியதும்  மல்லாமல், சிலர் இலங்கை , தமிழ் நாடுகளிலும்  சொத்துகளை கெடுவில் வாங்கி விட்டிருக்கிறார்கள்.  ஆனால் வாழ்வது  வெள்ளை யர்களின்  நாடுகளில்.  பிறகு தங்கள் உடலில் பலம் குறைந்தவுடன், நோய் நொடிகளும் வந்தவுடன் தங்களால்  அங்கு போய் சொத்துகளை பராமரிக்க  முடியாது, தங்கள் பிள்ளைகளும்  தாங்கள் சாக அந்த சொத்துகளை  போய்  எடுக்க மாட்டார்கள் என்று விற்கிறார்கள்.  விற்று வந்த காசை தாங்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள். எப்படி இந்த காசு வந்தது என்ற கேள்விகளுக்கு பதில் கூறமுடியாத நிலையால் என்ன  செய்வது என்று குழம்பநிலை சிலருக்கு.  கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குதல் புது புது சட்டங்களால் (ANTI-MONEY LAUNDERING REGULATIONS)  அது சாத்தியமே இல்லை. ஏனெனில்  கேள்விகள் பல.  உயிரை பாதுகாக்க வெள்ளையர்களின் நாடுகளில்  ஒன்றுமே  இல்லாமல் தஞ்சம் அடைந்து  பலவிதமான சலுகைகாசுகளை இலவசமாக எடுத்து வாழ்ந்துவிட்டு  திடீர்ரென  இந்தியா, இலங்கையிலிருந்து  காசுகளை கொண்டுவர முயன்றால்  பல கேள்விகள்  வெள்ளையர்களின்  நிவாகங்கள்  ஆச்சரியத்துடன் கேட்பது நியாயமானது தானே. ஒரு பொய்  சொன்னால் ஒன்பது பொய் சொல்ல வேண்டும், பொய்களை  உண்மை என்று  நிருபீக்க  முடியாது.   ஆகவே நீங்களும்  சரி , உங்கள் பிள்ளைகளும் சரி  அனுபவிக்க முடியாத நிலையில் உள்ள  அந்த சொத்துக்கள் பாழாய்ப் போவதைவிட  நம் தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்க பட்ட நம்  சகோதர்களுக்கு  அள்ளி கொடுங்கள்.

யாரையும் உங்கள் திறமைக்கேற்ப    நீங்கள் ஏமாற்றி  வாழலாம் ஆனால் உங்கள் மனச்சாட்சிக்கு  சரி பிழை  தெரியும்.  'உன்னையே நீ அறிவாய் !'- சாக்ரடீஸ்அரசுக்குரிய  வரியை  அரசுக்கும் , தொழிலாளிக்குரிய  ஊதியத்தை தொழிலாளிக்கும் சட்டபடி கொடுங்கள்  (வியர்வை உலரமுன் பணியாளரின் கூலியைக் கொடுத்து விடுங்கள்”- முகமது நபி அவர்கள்) . மற்றவர்களை ஏமாற்றி துரோகம் செய்து வாய்மை தவறி  காசு பணம், சொத்து சுகம் சேர்க்காதீர்கள். "நேர்மையே சிறந்த கொள்கை" யாக வாழுங்கள்.  எதை செய்தாலும்  மனித நேயத்துடன் , தொழில் தர்மத்துடன்  சரியாக செய்யுங்கள்.   மனிதன் பிறக்கும் போதே  இறப்பும் நிச்சயமாகிறது.  அந்த திகதி நமக்கு தெரியாது. ஆனால் எம் வாழ்க்கை அதை நோக்கியே பயனமாகிறது. அதுவரை  நல்ல சிந்தனைகள், உயந்த கொள்கைகளுடன், சுய கவுரவத்துடன் ,   சக மனிதனுக்கும்  பிரயோசனம் உள்ளவனாக  வாழுங்கள், வாழ விடுங்கள்.

 

இறுதியாக நான் வேண்டுவதெல்லாம் "NAME AND SHAME”  போன்ற பகுதிகளை தமிழ்  இணையதளங்களில் திறந்து சக தமிழர்களால்  தாங்கள் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டு   பாதிக்கபட்டுள்ளோம்  என்பதை பாதிக்கபட்ட  தமிழர்கள்   வெளிப்படுத்தி தமிழ் மக்களின்  ஆதரவை தேட  உதவுங்கள். அப்பாவி மக்கள் மத்தியில் உள்ள இந்த விஷக்கிருமிகளை , ஒட்டுண்ணிகளை , களைகளை  நம் மக்களுக்கு அடையாளம் காட்ட  பாதிக்கப்பட்டவர்களால்தான்  முடியும்.

" விதி விலக்கெல்லாம்  பொது விதி அல்ல " என்ற தத்துவத்திற்கு  ஏற்ப புலம் பெயர்ந்த தமிழர்களில்  நேர்மையான, மனித நேயத்துடன்,  சக தமிழர்களை, சக மனிதர்களை  ஏமாற்றாமல்  தொழில் தர்மத்துடன்  வாழும்  என் தமிழ் சகோதர்களுக்கு  இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

                                                                                                                                                                                             -     - -                      -                                                                                                                                                                                       -  ஒரு  மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ  கொட்ட வேண்டும் என்று கொட்டிய  மாதிரி  இருக்கு.. :D

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு தமிழனையே இன்னொரு தமிழன் சுத்துவதும்  அவன் காதில் பூ சுத்துவதும்

காலம் காலமாக நடந்தாலும்

நண்பன் என நம்பி நீங்கள் ஏமாந்தது சற்று வருத்தம் அளிக்கின்றது

 

நீங்கள் எழுதிய " நாமும் தமிழர்களா ..?" என்ற தலைப்பிட்ட கட்டுரையை www .glomaltamilstelecom .com என்ற இணயத் தளத்தில் வெளியிட்டிருக்கின்றோம் ( அதில் உங்களுக்குச் சம்மதம் இல்லையெனில் நாம் அதனை எடுத்து விடுகின்றோம் )
நல்ல உள்ளமுள்ளவர்கள் வியாபாரத்தில் ஈடுபடவேண்டும் என்று விரும்புபவன் நான்.
நான் இங்கிலாந்து நாட் டவனல்ல . வேறொரு ஐரோப்பிய நாட்டில் வாழ்பவன்

நான் இந்தப் பிறப்பில் தமிழனாக இந்துவாக இலங்கையனாக பிறந்திருக்கின்றேன் இதற்க்கு முன்னைய பிறப்புகளில் சிங்களவனாக இந்தியனாக .... இஸ்லாமியனாக பௌத்தனாக கிறிஸ்தவனாக பல்மிருகமாக ... வேறு கிரகங்களிலும் பல பிறப்புக்களை எடுத்திருக்கக் கூடும் என்று நம்புபவன் சொல்லப்போனால் உலகில் உள்ள அனைத்தும் -- அசைவன அசையாதன - எனது உறவுகள் என்று உணருபவன்
என்னைப் பொருத்தவரை நான் ஒரு சினிமா நடிகனைப் போன்று வாழ நினைக்கின்றேன் இந்தப் படத்தில் தமிழனாக வேடம் கிடைத்திருக்கின்றது அடுத்த படத்தில் சிங்கள வனாகவும் வேடம் கிடைக்கக் கூடும்

வியாபர நிறுவனங்கள் தனிப்பட்ட தமிழர்களின் சொத்தாக இல்லாமல் --- தமிழ் சமூகத்தின் சொத்தாக பல வியாபாரங்கள் இருக்கவேண்டும் என்று கனவு காண்பவன் அதில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதி மக்கள் நலனுக்குப் பாவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுபவன்

 

*** 

Edited by இணையவன்
வியாபார - தனிப்பட்ட விபரங்கள் நீக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தனிமடலில் பரிமாறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.