Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஒன்ராரியோ - தமிழினப் படுகொலை நினைவு நாள் - "மே 18

Featured Replies

 

 
 
 

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது.

Queens%20Park%204.jpg

விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.

Queens%20Park.jpg

2008 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் தன் மாவீரர் நாள் உரையில் கூறியது போல இன்று எம் தமிழீழ தேச விடுதலைப்போராட்டம் புலத்துத் தமிழர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்கள் இதனை சரியாக புரிந்து செவ்வனவே தம் காலக்கடமைகளை செய்து வருகின்றார்கள். அத்தகைய கால்பதிப்புகளில் ஒன்றாகவே இந்த வருட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவெழுச்சி நிகழ்வுகள் திகழ்கின்றது.

Queens%20Park%201.jpg

குறித்த நேரத்துக்கு சரியாக மாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு கனடியத் தேசிய கீதம், தமிழீழத் தேசியக் கொடிப்பாட்டு, என்பன இசைக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் வீர்ச்சாவெய்திய மாவீரர்களுக்கும் அக்காலகட்டத்தில் அநியாயமாக  படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தி, பூவள்ளித் தூவி மலர் வணக்கம் செலுத்தி எழுகையோடு நிகழ்வுகள் ஆரம்பமாயின.

Queens%20Park%203.jpg

எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள் என்பனவற்றோடு எழுச்சி உரைகளும் இடம் பெற்றன. எழுச்சி உரைகள் வரிசையில் பின்வருவோர் உரையாற்றினார்கள்:

நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர் தேசிய அவையைச் சேர்ந்த தேவா சபாபதி மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரியந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

ஒன்ராறியோ புதிய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் நீதன் சண் (NEETHAN SHAN) எழுச்சியுரை ஆற்றியதோடு ஒன்ராறியோ NDP கட்சி தலைவி ANDREA HORWATH மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த MPP JAGMEET SINGH ஆகியோரின் உரைகளையும் பகிர்ந்து கொண்டார். இவர்களோடு NDP கட்சித் தலைவர் THOMAS MULCAIR அவர்களும் வாழ்த்துரை அனுப்பி இருந்தார்.

Queens%20Park%205.jpg

லிபரல் கட்சியின் சார்பில் உரையாற்றிய MP JOHN MCCALLUM தனது உரையின் போது லிபரல் கட்சியின் தலைவர்JUSTIN TRUDEAU மற்றும் MP JIM KARIGIANNIS ஆகியோரின் உரையையும் வாசித்தார்.

MPP GLENN MURRAY தனது உரையின் போது Premier of Ontario Kathleen Wayne இன் நினைவுரையையும் வாசித்துப் பகிர்ந்து கொண்டார். MPP GLENN MURRAY  அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நடப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக தனது தொகுதியில் மரம் நடும் திட்டத்தை அமுல்ப்படுத்துபவர்.

Ontario Progressive Conservative party தலைவர் TIM HUDAK அவர்கள் இந் நிகழ்ச்சிக்காக விடுத்த பிரத்தியேக உரையும் வாசிக்கப்பட்டது.

இவர்கள் தவிர மார்க்கம் நகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களும், தமிழர் தகவல் ஆசிரியரான திரு. திருச்செல்வம், கனடியத் தமிழர் தேசிய அவை சார்பில் கிருஸ்ணா சரவணமுத்து, இளையோர் (TYO) அமைப்பின் சார்பில் சங்கரி, CTYA சார்பில் ஜெனிற்  ஆகியோரும் எழுச்சிப் பேருரைகள் ஆற்றினார்கள்.

எழுச்சி உரைகளைத் தொடர்ந்து தீபங்கள் ஏற்றி ஒளிமுகம் தோறும் நினைவுகள் ஏந்தி வணங்கப்பட்டது. இனப்படுகொலை எமக்களித்த மறக்க முடியாத வரலாற்று சோகங்களின் அழுகையை எழுகையாக மாற்றி தமிழீழ விடுதலை இலக்கை நோக்கி உறுதியோடு பயணிப்போம் என முள்ளிவாய்க்கால் மண் மீதும் மரணித்த மக்கள் மீதும் சத்தியம் செய்து உறுதி மொழி கூறப்பட்டது.

தம் நெஞ்சில் கனலும் தமிழ் தேசிய உணர்வை மாபெரும் மக்கள் அலை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வருகை தந்து முள்ளிவாய்க்காலில் விடுதலைக்காய் பலியான அத்தனை உறவுகளையும் நினைந்து மலரள்ளித் தூவி நினைவுத்தீபம் ஏற்றி மாவீரர் கனவுகளை நனவாக்க மறுபடியும் எழுவோம் என சாவினைச் சரித்திரமாக்கியவர்களை நெஞ்சினில் ஏந்தி சத்தியம் செய்து சென்ற காட்சியானது விதைக்கப்பட்ட வீரம் மறுபடியும் பல்கிப் பெருகி முளைத்தே தீரும் என்பதற்கு சான்றாகிச் சரித்திரமாகி நிற்கின்றது.

 

தமிழரின் தாகம் தமிழீழம் காணும் வரை தணியாது.

 

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

இது இன்னொரு விடுதலைப் பயணத்துகான ஆரம்பம்!

 

http://www.sankathi24.com/news/29773/64/18.aspx#.UZ6OftvGdkE.facebook

  • கருத்துக்கள உறவுகள்

அச்சச்சோ.. நீங்கள் ராதிகா சபேசனை விரட்டி விட்டீர்களாமே...ஏதும் பங்கு பிரச்சனையோ? அல்லது நாடு கடந்த அரசின் மேடையில் தோன்றியதால் வந்த காழ்ப்புணர்வோ? முதலில் ஒன்றாக இணைந்து ஒரே அணியில் நின்று ஒரு படுகொலை நாளையாவது நடத்தி சிங்கள அரசுக்கும், கனடாவுக்கும் உங்கள் பலத்தினைக் காட்டப் பாருங்கடா...பிறகு இலங்கை அரசை எதிர்க்கலாம்.  இல்லாட்டி இந்த முறை சீமான் கோடாலிக் காம்பாக வந்து 3 ஆக பிழந்த மாதிரி அடுத்த வருடம் 4, 5 என்று சிதறிப் போய் வைப்பீங்க..ஆயிரம் பேர் கூட வராத ஒன்றுக்கு மாபெரும் நிகழ்ச்சி என்று அடை மொழி கொடுத்து சனத்தினை இனியும் ஏமாத்த ஏலாது வோய்...

 

 

மூன்று பிரிவினரின் வாயிலும் இவ்வருடம் மண் .

  • கருத்துக்கள உறவுகள்

 

 ரொறொன்ரோ மண்ணில், மே 18 நினைவு நாளை... ஓரணியில் திரண்டு, பெரும் நிகழ்வாக நிகழ்த்திய கனடா உறவுகளுக்கு நன்றி. 

  • தொடங்கியவர்

மூன்று பிரிவினரின் வாயிலும் இவ்வருடம் மண் .

ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் 

ஊரு இல்லை உதவாகரைகள் அதுகள் .நிர்வாகம் அனுமதித்தால் பெயர் பட்டியல் இணைக்க முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட...உங்களால் வேறு என்ன ஆராச்சி செய்யமுடியும்...??..************

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

.நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர் தேசிய அவையைச் சேர்ந்த தேவா சபாபதி மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரியந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

ஒன்ராறியோ புதிய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் நீதன் சண் (NEETHAN SHAN) எழுச்சியுரை ஆற்றியதோடு ஒன்ராறியோ NDP கட்சி தலைவி ANDREA HORWATH மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த MPP JAGMEET SINGH ஆகியோரின் உரைகளையும் பகிர்ந்து கொண்டார். இவர்களோடு NDP கட்சித் தலைவர் THOMAS MULCAIR அவர்களும் வாழ்த்துரை அனுப்பி இருந்தார்.

 

http://www.sankathi24.com/news/29773/64/18.aspx#.UZ6OftvGdkE.facebook

 

 

எனக்கும்  NDP லிஸ்ட்இல் ராதிகா சிற்சபேசன் இல்லாதது ஏன் என்று விளங்கவில்லை. சில காலத்திற்கு முன்பு ராதிகாவை பற்றி ஒரு குற்றப்பதிவு  தமிழ் நெட் இல் இருந்தது. அப்ப இனி "கபாரோ ரூச் ரிவர் வேலியில்"  சான் நீதானோ இல்லாட்டி மற்ற இரண்டு கட்சிகளில் இருந்ததும் இரண்டு வீரர்கள்  போட்டியிட போகிறார்களோ தெரியவில்லை. வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.