Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது – கோதபாய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது – கோதபாய ராஜபக்ஷ

27 மே 2013

இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச்சரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேவைகளுக்காக எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92234/language/ta-IN/article.aspx 

பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாகாநாடு கார்த்திகையில் நடக்கப் போகிறது. இது நடக்காவிட்டால் இதனால் கிடைக்க இருக்கும் பெரும் தொகை பணத்தை அரச குடும்பம் இழக்கும். அது அவர்களை ஒரு தடவை சிந்திக்க வைக்கும். ஆனால் இந்தியாவின் காவலாளியான கமலேஸ் சர்மாவின் எடுப்பில் நடைபெறும்  ஏமாற்றுக்கதையான 13ம் திருத்ததின் கீழ் வடக்கு தேர்தலை நடத்துவது என்ற நாடகத்தை அரங்கேற்ற பிருத்தானியாவும் ஆஸ்திரேலியாவும் இணங்கியிருக்கின்றன.

 

கோத்தா தேர்தலை குழப்புகிறார். அதுவும் நன்மைக்குத்தான் போலிருக்கிறது. மாகாநாடு தொடர்ந்து முன்னால் சென்று தேர்தல் நடக்காவிட்டால், தமிழரை மட்டும் அல்ல இந்தியா தங்களையும் கமலேஸ் சர்மாவை வைத்து ஏமாற்றுகிறது என்பதை இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் உணர்வார்கள். 

 

நம்பியார் ஆடிய ஆட்டத்தை முதலில் கண்டுபிடித்து மியன்மாரில் நம்பியாரின் நியமனத்துக்கு இங்கிலாந்து காட்டிய எதிர்ப்புக்காளால்த்தான் ஐ.நாவின் உள்ளே நம்பியாரின் பிடி தளர்ந்து இந்தியாவின் கும்மாளம் அடங்கத்தொடங்கியது. இதனால், முள்ளிவாய்க்காளில் இந்தியா வீசிய இரசாயனக்குண்டுகளை மூடி மறைத்த ஐ.நா,  அதன் பின்னர் நிபுணர் அரிக்கை, பிரேரணை, உள்ளக அறிக்கை என்றெல்லாம் முன்னேறியிருக்கிறது. அது மாதிரியே இந்த கமேஸ் சர்மாவின் ஆட்டம் அடங்கி, பொதுநலவாயத்திலும் இந்தியாவின் கும்மாளம் அடக்கங்க வேண்டுமாயின் கோத்தா தேர்தலை குழப்புவதில் வெற்றி காண்பது நன்மையாக முடியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.