Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7ஆயிரம்பேர்கொண்ட புலிகளைத்தோற்கடிப்பது பிரச்சனையல்ல!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா

[ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா]

7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார்.

கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

கேள்வி: குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது...

பதில்: ஆம்... அந்தப் பெண் நின்று கொண்டிருந்ததை பார்த்தேன். மஞ்சள் நிற சல்வார் கமீஸ் அணிந்து மருத்துவமனையின் நுழைவாயில் அருகே நின்றிருந்தார். எனது வாகனம் நோக்கி அவர் வந்தார். அதன் பின்னர்தான் உணர்ந்தேன். அவர் தற்கொலைதாரி என்று.

பிற்பகல் உணவுக்காக எனது வீட்டுக்கு நான் சென்று கொண்டிருந்தேன். எனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சில நிமிடங்களில் சென்றுவிடலாம். எனது வாகனம் மருத்துவமனையை நெருங்கியபோது இரு இராணுவத்தினர் வணக்கம் செலுத்தினர். அப்போது அவர்களைப் பார்த்தேன். அதன் பின்னர் சல்வார் அணிந்திருந்த பெண் என்னை நோக்கி வந்தார். திடீரென குண்டுவெடித்து தீப்பந்துகள் எழுந்தன.

வாகனம் சிறிது தொலைவு சென்று நின்றது. எனது ஓட்டுநரும் பாதுகாவலரும் கீழே கிடந்தனர். முன் இருக்கையில் ஒருவர் இறந்து கிடந்தார். நாங்கள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறோம் என்று அப்போதுதான் உணர்ந்தேன். வாகனத்தின் கதவை திறக்க முயன்றேன். கொமாண்டோ படையினர் என்னை நோக்கி ஓடி வந்தனர். கதவைத் திறந்தனர். என் முகவாய்க்கட்டையில் இரத்தம் வெளியேறியது.

நான் வாகனத்தின் கதவைப் பிடித்துக் கொண்டு தரையில் நின்றேன்.

என் மூளையும் இதயமும் பாதிக்கவில்லை என்பதையும் உணர்ந்தேன்.

உந்துருளியில் வந்த பாதுகாப்புப் பிரிவினர் தரையில் கிடந்தனர்.

அப்போது நோயாளர் காவு வண்டி வந்தது. அதில் ஏற்றப்பட்டேன். அதன் பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டேன். அதுதான் நினைவில் இருக்கிறது.

1993 ஆம் ஆண்டு யாழ். தேவி நடவடிக்கையின் போது நான் காயமடைந்திருந்த சூழ்நிலையை உணர்ந்தேன். என் உடலின் உள்ளே இரத்தம் வெளியேறுவதை உணர்ந்தேன்.

மூச்சுவிட கடினமாக இருப்பதை உணர்ந்தேன்.

இரத்தத்தை வால்வுகள் மூலமாக வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டேன்.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது போக்குவரவு நெரிசலாக இருந்தது. எனது கடினமான உடல் நிலைமைகளை மருத்துவர்களிடம் தெரிவித்தேன்.

என் உடைகள் இரத்தத்தில் நனைந்து தோய்ந்திருந்தது.

கேள்வி: எப்போது உங்களுக்கு நினைவு திரும்பியது?

பதில்: எனது மகள் "Thaththi api awa". என்று கூறும்போது நினைவு வந்தது. என் நண்பர் பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றுகிறவர். அவர், "சரத், இது சுனில். உன்னைப் பார்க்க 12 ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வந்துள்ளேன்" என்றார். என்னால் யாரையும் பார்க்கவில்லை. ஆனால் கேட்க முடிந்தது. 5 நாட்கள் கழித்து எனக்கு நினைவு திரும்பியது.

உட்காயங்களால் நான்கு ஐந்து நாட்களுக்கு வலி இருந்தது. ஒரு மாத காலத்துக்குள்ளாகவே அனைத்து காயங்களும் சரியாகிவிட்டது. ஒவ்வொரு கட்டமாக நான் குணமடையும்போதும் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

கேள்வி: உங்களுக்கு மிக அருகாமையில் உங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டது குறித்து இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அதை திரும்பிப் பார்க்க இது சரியான தருணம் அல்ல. என்னுடைய ஈடுபாட்டையோ செயற்பாடுகளை மாற்ற அதைத் தவிர வேறு வழி இல்லை. விரைவில் அதை மறந்துவிடுவேன். எமது செயற்பாடுகளை சரியான முறையில் நிறைவடையச் செய்ய வேண்டும். இந்த விபத்தால் தாமதமடைந்திருக்கும் எனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது குறித்து நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். இப்போதும் அதில் நம்பிக்கை உண்டா?

பதில்: இராணுவ நடவடிக்கைதான் ஒரே வாய்ப்பு என்று எப்போதும் கூறுவதில்லை. அரசியல் தலைமைப்பீடம் உள்ளது. அவர்கள் அரசியல் ரீதியான முடிவுகளை மேற்கொள்வர். நாங்கள் பாதுகாப்புப் படையானது தேவைப்படும் நிலையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும் உள்ளோம்.

பேச்சுக்கள் மூலம் தீர்வுக்கான சாத்தியம் இருப்பின் இராணுவத் தீர்வை எவரும் நினைக்கமாட்டார்கள்.

அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அக்கறையுடன் இருந்தால் அவர்களிடம் நாம் குறைகாண வேண்டியதில்லை. கடந்த கால பழிவாங்கல்களை வைத்திருக்க வேண்டியதில்லை. யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதச் செயற்பாடுகளை தொடர்ந்தால் நாம் பதில் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

கேள்வி: அமைதி முயற்சிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபாட்டுடன் உள்ளனரா?

பதில்: அவர்களது செயற்பாடுகள் மூலம் அவர்கள் ஈடுபாட்டுடன் இல்லை. தொடரும் கிளைமோர் தாக்குதல், அப்பாவி பொதுமக்கள் மற்றும் படையினர் கொல்லப்படும் நிலையில் விடுதலைப் புலிகள் தரப்பில் நேர்மையாக இருப்பதாக தெரியவில்லை.

அவர்கள் பயங்கரவாதத்தைத் தெரிவு செய்தால் நாம் செயற்பட வேண்டிய நிலைக்குச் செல்வோம். 7 ஆயிரம் பேர் உள்ள ஒரு குழுவைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல.

கேள்வி: உங்கள் கணக்குப்படி அவர்களிடம் உள்ள கடும் போராளிகள் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

பதில்: இரண்டாயிரம் பேர் இருக்கலாம். யுத்த நிறுத்தத்துக்கு முன்பாக 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது.

கேள்வி: மக்கள் படையின் தாக்கம் குறித்தும், பொதுமக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது குறித்தும்?

பதில்: இராணுவ ரீதியான மோதல் நிகழ்கின்றபோது விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் கொடுக்கக் கூடியவர்களாக அவர்கள் செயற்படுவர். அவர்கள் ஒன்றும் பாரிய பங்களிப்பைச் செய்துவிட முடியாது. அவர்களில் பலருக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விமானத்திலிருந்து குண்டுகள் விழுகின்றபோது ஓடிவிடுகின்றனர்.

பொதுமக்கள்தான் கிளைமோர் குண்டுகளை வைக்கின்றார்க என்பதை ஏற்கமாட்டேன். அரசாங்க படையினர் மீது குண்டு வீசுகிற அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லும் திட்டத்துடன் உள்ள நபர் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும். நோக்கம்தான் முக்கியம்.

கேள்வி: நேருக்கு நேர் மோதாமல் கிளைமோர் தாக்குதல்களை நடத்துவதும் தாக்கிவிட்டு ஓடுவதுமான தாக்குதல்களை மேற்கொள்வது, முக்கிய பிரமுகர்களை தற்கொலைதாரி குண்டுகள் மூலம் தாக்குதவது என்ற விடுதலைப் புலிகளின் உத்திகள் குறித்து?

பதில்: ஆம். அவர்களது நீண்டகால திட்டம். தொலைவில் இருந்து படையினரை கொல்வதன் மூலமாக படையினர் மனவலிமையைச் சீர்குலைப்பது, கவனத்தை திசை திருப்புவது என்பதையும் தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மூலம் மக்களின் மனங்களில் அச்சத்தை உருவாக்குவதுமான உத்தி இவை. இவற்றுக்கு முகம் கொடுக்கும் உத்திகளை நாம் பெற்றிருக்கிறோம். அவற்றை வெளிப்படுத்த இயலாது.

கேள்வி: உங்கள் மீதான கொலை முயற்சித் தாக்குதல், பாரமி குலதுங்க கொலை ஆகியவற்றின் மூலம் புலிகள் இன்னும் வலுவானவர்களாக சந்தேகிக்கலாமா?

பதில்: தற்கொலைத் தாக்குதல் என்பது மிகவும் ஆழமான பிரச்சனை. உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்களவர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் சிங்கள மொழியை நன்கு அறிந்து கொண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைதாரிகள் செயற்படுகின்றனர். அதனால் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலும் பொருளாதார இலக்குகளிலும் ஊடுருவ முடிகிறது.

நமது புலனாய்வுப் பிரிவில் உள்ள குறைபாடுகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். என் மீதான தாக்குதல் சம்பவத்தை எடுத்துக் கொண்டால் ஒருநாளைக்கு இராணுவ மருத்துவமனைக்கு 1,800 பேர் வருகின்றனர். இராணுவ தலைமையகத்துக்கு மட்டுமல்ல. பல்வேறு பணிகளுக்காகவும் வருகின்றனர். அவர்களைக் கட்டுபடுத்த நினைத்தால் வேறு சில பிரச்சனைகள் வரும். இருந்தபோதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: புலனாய்வுத்துறைக்கான கட்டமைப்பு வசதிகள், ஆயுதங்கள் குறைபாடு இருப்பதாக முறைப்பாடுகள் வந்தனவே?

பதில்: இத்தகைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கப்படும். விடுதலைப் புலிகளால் ஏராளமான புலனாய்வுத்துறையாளர்கள் வேட்டையாடப்பட்டு விட்டனர். அந்த நிலைமை மாற்றியமைக்கப்படும்.

கேள்வி: இராணுவத்தில் விடுதலைப் புலிகளின் உளவாளிகள் இருப்பதாக பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவே?

பதில்: அது குறித்து நாம் செயற்பட்டு வருகிறோம். இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு முன்பாக அவர்களது பின்னணியை ஆழமாக விசாரிக்கிறோம். சிங்களம் நன்கு தெரிந்த நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் இணைந்திருப்பதை கண்டுபிடிக்கிறோம். இருப்பினும் இராணுவத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுப்பவர் குறித்து ஆதாரம் கிடைத்தால் அந்நபர் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு மேலதிக தண்டனைக்குள்ளாக்கப்படுவர். ஆதாரங்கள் இன்றி ஒருவரை குற்றம்சாட்ட வேண்டியதில்லை. அது வதந்தியாக இருப்பின் அவர் மீது குற்றம்சாட்ட முடியாது.

கேள்வி: நீங்கள் காயமடைந்தபோது மக்களின் எதிர்வினை குறித்து?

பதில்: ஒட்டுமொத்த நாடும் என்னோடு இருந்தது. என்னை ஆசிர்வதித்தனர். நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்பினர். அது குறித்து பெருமிதம் அடைகிறேன். என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கிறேன்.

கேள்வி: உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? மருத்துவர்கள் என்ன பரிந்துரைத்துள்ளனர்?

பதில்: நான் ஓரளவு குணமடைந்துவிட்டேன். 18 கிலோ எடை குறைந்துவிட்டேன் என்பதைத் தவிர.

கேள்வி: நீங்கள் உயிர்தப்பிய உங்கள் அதிர்ஸ்டம் குறித்து?

பதில்: அது என் அதிர்ஸ்டமாகவும் இருக்கலாம் அல்லது விடுதலைப் புலிகளின் துரதிருஸ்டமாகவும் இருக்கலாம். அதுகுறித்து உறுதியாகச் சொல்ல இயலாது. என்னுடைய கடமைகளில் நான் ஈடுபாட்டுடன் இருப்பேன். என்னுடைய முடிவுகள் விமர்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அது என் சொந்த நலனுக்காக எடுக்கப்படவை அல்ல. ஒரு இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்பதற்கானது.

கேள்வி: நீங்கள் படுகாயமடைந்த நிலையில் குடும்பத்தினரது நிலை?

பதில்: மற்ற எந்த ஒரு குடும்பத்தையும் விட எனது குடும்பத்தினர் அதிர்ச்சியும் துயரும் அடைந்தனர். ஆனால் என்னை ஒருபோதும் எனது பணியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லவில்லை. அது எனது கூடுதல் பலம்.

கேள்வி: நீங்கள் பொறுப்புகளை ஏற்றபின்னர் உடனடியான எதில் கவனமெடுக்க உள்ளீர்கள்?

பதில்: களத்தில் உள்ள இராணுவத்தினரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். வலுவான இராணுவத்தைக் கட்டமைக்கும் வகையில் சீரமைப்பு நடவடிக்கைகளை தொடருவேன்.

கேள்வி: எப்போது இராணுவத்தினரை சந்திக்க உள்ளீர்கள்?

பதில்: இராணுவ சீருடையை அணிந்த உடன் அதுதான் செய்வேன் என்றார் சரத் பொன்சேகா.

http://www.eelampage.com/?cn=27900

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடித்தான் நிறையப்பேர் சொன்னவை சிகரட் பத்துறதுக்குள்ளை அழிப்பம் எண்டு சிலபேர் ஆமியின்ரை பேரை சொன்னாலே மூத்திரம் பெய்வினம் என்றும் பாதை திறக்கின்றம் என்றும் சொன்னவை இவரும் ஏதோ சொல்லவேணுமென்று சொல்லயிருக்கின்றார் காலத்துக்கு காலம் வாறவையள் ஏதாவது வீரு வசனங்கள் சொல்லுறது வழமைதானே?

sugarwarez085pj6.gifsugarwarez177tt1.gifsugarwarez085pj6.gifsugarwarez177tt1.gifsugarwarez085pj6.gifsugarwarez177tt1.gif

sugarwarez085pj6.gifsugarwarez177tt1.gifsugarwarez085pj6.gifsugarwarez177tt1.gifsugarwarez085pj6.gifsugarwarez177tt1.gif

கடைசியா மாங்குளத்தை பிடிச்சிட்டம் 2000 புலிகளை அழிக்காமல் திரும்ப மாட்டம் எண்டும் சொன்னவை....!

ஆனாலும் நல்லா பாடமாக்கித்தான் வச்சிருக்கினம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இனி இப்படியான பல நகைச்சுவைகளுக்கு குறைவு இருக்காது.ஆக்கள் மாறினாலும் வசணங்கள் மாறாது :P

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவின் கூற்று முட்டாள்தனமானது. படையினரின் எண்ணிக்கைப்படி பார்த்தால் எந்தச் சிறிய நாடும் இந்த உலகத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. பரம வைரிகளான தாய்வானும் சீனாவும் இன்றுவரை தமது எல்லைகளைப் பாதுகாத்தபடிதான் இருக்கின்றன. காஸ்மீரை உரிமை கொண்டாடும் போராளிகளை இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தற்போது மக்களின் துணை ராணுவப்பிரிவுகள் வேறு தோன்றியுள்ள தமிழீழத்தைக் அவ்வளவு இலகுவாகக் கிள்ளுக்கீரையாக மதிப்பது அவரது அரசியல், ராணுவ, ராஜதந்திர அறிவின் வறுமை நிலையையே காட்டுகிறது. ஓரு நு}று பேராக இருந்த போராளிகளைத் தோற்கடிக்க முடியவில்லை இப்போது ஏழாயிரம் பேரை முடித்துவிடலாமென பட்டாசு கொழுத்துறார்;. சத்தம் சிங்களமக்களுக்குக் கேட்க நல்லாகத்தான் இருக்கும். அவரின் வெடிகள் முழுவதும் வெறும் கலியாணவெடிகள்தான் என்பது போகப்போகத்தான் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.