Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹஜ் காலத்தில் குழப்பத்துக்கு தூபமிடும் தீக்குளிப்புச் சம்பவம்; அமைச்சர் ஹக்கீம் முன்னெச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் அண்மையில் நடைபெற்ற பிக்கு தீக்குளிப்புச் சம்பவத்தால் புனித நோன்பு, ஹஜ் பெருநாள் கடமைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில்தான் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான துரதிஸ்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பௌத்த மேலாதிக்கவாதிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதன் பின்னணி குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்று  அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து பௌத்த பிக்குகள் ஒருசிலரால், முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலுள்ள இறைச்சிக்கடைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக இப்போது எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றாகத்தான் கண்டியில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்க்கவேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வந்தவண்ணம் உள் ளன.எனினும் நாங்கள் மிகவும் நிதானமாக இந்த விடயங்களைக் கையாளவேண்டியுள்ளது.

ஹஜ் பெருநாள் காலத்தில் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பில் நாங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளோம். அதில் எதுவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து உயர்மட்டத் தரப்புகளின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=652882074931640247

 

 

அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக இப்போது எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றாகத்தான் கண்டியில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்க்கவேண்டியுள்ளது.

 

 

ஜனநாயக அரசியலில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு கக்கீம் போன்றவர்களின் கட்சி ஒரு தொகுதி தன்னும் கைப்பற்றுவதாகும்.

 

கக்கீமால் இந்த மாதிரி எல்லாம் போட்டு உறுட்டப்பட  முஸ்லீம்கள் இவ்வளவு மோடையாக்காளா என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கு. தொடர்ந்து பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி ஏய்ப்பதில் மாகா, மகோ நிபுணராக திகழ்கிறார். முஸ்லீம்களால் இவரை ஒதுக்க முடியாத நிலையில் முஸ்லீம்களை "ஆத்தடியில் எறிமாடன், குளத்தடியில் கொள்ளிவாய்" என்று தொடந்து மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைத்திருக்கிறார். இதில் தமிழர் தலை இடப்போனால் உடனே .கி.மு 2000 முதல் புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினார்கள் என்று விடுகிறார்.

 

மகிந்த அரசால் முஸ்லீம்களுக்கு எதிராக செய்யப்படும் அக்கிரமங்களை, தனது முயற்சியால் மகிந்தா அரசு முஸ்லீம்களை வாழவைப்பத்தாக எதிர் வழத்தில் ஏய்த்து காட்டி,  தனது நிகழ்சி நிரலை கொண்டு செல்கிறார்.

 

இவரும் மகிந்தாவும் இல்லாவிட்டால் சிங்களங்கள் ஒரு நாளில் முஸ்லீம்களை உழுது பிரட்டியிருந்திருப்பார்கள் என்று முஸ்லீம்களை நம்ப செய்து வைத்திருக்கிறார்.

can't wait to see sinhalese and moors clashing

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.