Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண நேரத்தில் இயேசு பேசிய தமிழ் மொழி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று “Jesus on the cross talk tamil ” என்ற you tube காணொளியை காண நேரிட்டது. அந்த காணொளி நந்தலாலாவில் முன்பு வெளிவந்த “: இருண்ட வாழ்க்கையினுள்ளே” என்ற பதிவில் குறிப்பிட்ட செய்திகளை உள்ளடக்கியிருந்தாலும், கூடுதலாக இயேசு தமிழ் மொழி பேசினார் என்ற ஆச்சரியத்துள்ளாக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளது.

இயேசு மூன்று மொழிகளை பேசியிருந்தார் என்றும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கிரேக்க மொழியிலும், பொது மக்களிடம் அராமிக் மொழியிலும், கடவுளிடம் தமிழ் மொழியில் பேசினார் போன்ற கருத்துகளை காணொளி பதிவு செய்துள்ளது. இயேசு கடைசியாக பேசிய ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வாக்கியம் தமிழ் என்றும், அதன் பொருளையும, உருமாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

காணொளியின் கருத்து உண்மை, பொய் என்று வாதிடுவது நோக்கமல்ல. ஆனால் உலகில் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.உலகின் மிக பழமையான மொழி தமிழ்மொழி என்று லண்டனில் இருந்து வெளியாகும் மிர்ரர் ஆங்கில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிர்ரர் பத்திரிகையில் கேள்வி பகுதியில் உலகில் இப்போதும் பேசப்படும் மிகபழமையான மொழி எது என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு இப்போதும் பேசப்படும் மொழிகளில் தமிழ்தான் மிக பழமையான மொழி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராச்சி மூலம் தெரியவந்துள்ளது என்றும், இதற்க்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்கிறது.

tamil.jpegசிந்துவெளிநாகரிகம்,மற்றும் சுமேரியா நாகரிககாலத்தில்கூட இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மொழியின் பயன்பாடு இருந்திருக்கிறது என்றும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஆறுகள் குறித்த விபரங்ககள் கூடபழங்கால தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. உண்மையிலேயே சமஸ்கிருதமட்டுமல்ல அனைத்து இந்திய மொழிகளுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழ்தான் வேர், என்று கூறப்பட்டுள்ளது.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பலகாலமாகவே இருக்கும் ஒரு போராட்டம், எது மிகபழமையான மொழி சமஸ்கிருதமா? அல்லது தமிழா? என்பது. இந்திய அரசு சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அளவுக்கு , சமஸ்கிருதத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு , சமஸ்கிருதத்தை பழமையான மொழியென பறைசாற்றும் அளவுக்கு , சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு என்றுமே தமிழ்மொழியைச் செய்தது கிடையாது.

ஏதோ, இந்திய மொழிகளில் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைகளும் சான்றுகளும் ஆவணங்களும் உறுதியாக இருப்பதால் செம்மொழி தகுதியை ஒரு பெயருக்குக் கொடுத்துவிட்டு தமிழைச் சிறுமைப்படுத்தும் விதமாக முன்பு தெலுங்கு மொழியை செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்த இந்திய அரசு மலையாளத்தையையும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

‘செம்மொழி’ (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் – மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

” செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் ” என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

407106_595309137154007_1606479133_n-300xமலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

இந்தியாவில் இருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்று உலகம் பொதுவாக சொல்லும்”யூனேஸ்கோ” ஏற்றுக்கொண்டுள்ளது. அதுவும் வாழுகின்ற செம்மொழியாக இந்தியாவில் உள்ளது தமிழ் மட்டும்தான். காங்கிரஸ் அரசின் பல கூத்துகளில் இதுவும் ஒன்று..

பின்குறிப்பு : என் தாய் மொழி மலையாளம் ..

கருத்து உதவி : தினமணி

http://nandalala.info/?p=595

 

  • கருத்துக்கள உறவுகள்

 ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம், என்ன‌ என்பதையும்... கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கலாம். :)

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி கட்டுரையாளர் மலையாளி அவரின் சாட்டை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து கொடுத்தபிற்பாடு தகுதி அற்ற மொழிகளுக்கு செம்மொழி என்று அறிவித்த  காங்கிரஸை சாடுவதே.  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் கூகிலில் பின்வருமாறு தேடினால்

What's really the oldest language still spoken and used 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் குறிப்பிடும் "ஈழம்" தமிழ் என்றார்கள். இப்போது இயேசுவும் தமிழில் பேசினார் என்கிறார்கள். இப்படி சகட்டு மேனிக்குச் சொல்லும் ஆதாரமற்ற கருத்துகளால் நாம் எது சொன்னாலும் "உடான்ஸ்" என்று நினைக்கும் நிலை வந்து விடப் போகிறது (வந்தே விட்டது) என நினைக்கிறேன்!

 

 ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம், என்ன‌ என்பதையும்... கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கலாம். :)

 

இந்த வீடியோவில் அர்த்தம் சொல்லபடுகிறது.

 

 

பைபிளில் குறிப்பிடும் "ஈழம்" தமிழ் என்றார்கள். இப்போது இயேசுவும் தமிழில் பேசினார் என்கிறார்கள். இப்படி சகட்டு மேனிக்குச் சொல்லும் ஆதாரமற்ற கருத்துகளால் நாம் எது சொன்னாலும் "உடான்ஸ்" என்று நினைக்கும் நிலை வந்து விடப் போகிறது (வந்தே விட்டது) என நினைக்கிறேன்!

 

இந்த வீடியோவை பாருங்கள்.

 

இந்த விளக்கங்களில்  எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை இருக்கோ ,இல்லையோ என்பதைவிட ..............தமிழ்மொழியில் ஆதித்தன்மை என்ற ஒண்டு உள்ளது என்பதை பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது .............

 

  • கருத்துக்கள உறவுகள்

யேசுநாதரின் வரலாற்றில், அவரது இளமைக்கால வரலாற்றில் ஒரு பெரிய இடைவெளி காணப்படுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்!

இது அவரது  தத்துவத் தேடலின் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கக் கூடும்! அந்தத் 'தொலைந்த காலத்தில்' அவர், இந்தியாவில் தத்துவத் தேடலில் ஈடுபட்டிருக்கவும் கூடும்!

அப்போது, இந்தியாவில் தமிழ் அல்லது தமிழின் மூத்த மொழிவடிவம் ஒன்றில் உள்ள நூல்களை வாசித்திருக்கலாம், அல்லது மற்றையர்வகளுடன் தத்துவ 'விவாதங்களில்' ஈடு பட்டிருக்கலாம்!

 

எதையும், ஒரு திறந்த மனத்தோடு' அணுகுவதே புத்திசாலித் தனம்! 

 

சிதைக்கப்பட்ட வரலாறுகளும், சரித்திரங்களும், முடிந்தவரையில் சரிவர எழுதப்படவேண்டும்! :D

  • 2 weeks later...

யேசுநாதரின் வரலாற்றில், அவரது இளமைக்கால வரலாற்றில் ஒரு பெரிய இடைவெளி காணப்படுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்!

இது அவரது  தத்துவத் தேடலின் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கக் கூடும்! அந்தத் 'தொலைந்த காலத்தில்' அவர், இந்தியாவில் தத்துவத் தேடலில் ஈடுபட்டிருக்கவும் கூடும்!

அப்போது, இந்தியாவில் தமிழ் அல்லது தமிழின் மூத்த மொழிவடிவம் ஒன்றில் உள்ள நூல்களை வாசித்திருக்கலாம், அல்லது மற்றையர்வகளுடன் தத்துவ 'விவாதங்களில்' ஈடு பட்டிருக்கலாம்!

 

எதையும், ஒரு திறந்த மனத்தோடு' அணுகுவதே புத்திசாலித் தனம்! 

 

சிதைக்கப்பட்ட வரலாறுகளும், சரித்திரங்களும், முடிந்தவரையில் சரிவர எழுதப்படவேண்டும்! :D

 

இலங்கையில் இருந்த போது நான் இதை  ஒரு கட்டுரையில் படித்திருந்தேன். கிறிஸ்து காஞ்சி, நாலந்தா மாதிரி ஒரு பல்கலைக் கழகத்தை நாடி இந்தியா வந்திருந்தார் என்றும் அவர் இந்தியாவில் படித்த தத்துவம் தான் அவர் சொல்லும் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன் நயம் செய்த்துவிடல்"  என்ற சொல்லின் பொருள் என்று அந்தக் கட்டுரை விளங்க வைக்க முயன்றது.(கிறிஸ்து வட இந்தியாவரை  பயணம் செய்திருந்திருக்க கூடிய ஒரு பயணப் பாதையையும் அந்த கட்டுரை விவரித்திருந்தது)  அதே கட்டுரை மேற்கு நாடுகளின் சைலொக்கின் தத்துவமான கண்ணுக்கு கண் கேட்கும் தத்துவம் அரிஸ்டோட்டலின் தத்துவங்கள் என்றும் மற்றக் கன்னத்தை காட்டுவது மேற்கு நாடுகளில் வழக்கம் இல்லை என்றும் வாதிட்டிருந்தது. ஜிசசின்  மாணவர்களை உடமையாக்கும் குரு சீட முறையைக் கூட இந்தியாவின் பாரம் பரியமாக அந்தக்கட்டுரை காட்டியிருந்தது.

 

இன்று தமிழ் நாட்டில் சில கிறிஸ்தவ பாதிரிமார் திருநாவுக்கரசரின் பக்தி மார்க்கம் Jesus இன் தத்துவங்கள் என்றும், சமணப்பள்ளிகளில் கல்வி கற்ற திருநாவுக்கரசர், கல்வியில் ஈடுபாடு காட்டி, தோமஸ் அவர்களின் தத்துவங்களை கற்றிருந்தார் என்றும் கூறுகிறார்கள். (சிலர் தோமஸ் என்ற குரு தமிழ் நாட்டில் இருந்ததில் உண்மை இல்லை என்கிறார்கள்) இவர்கள் இந்து மதத்தில் இடைக்காலத்தில் உதயமான வேள்வியை இந்து மத்தின் அடிப்படைப்படையாகவும் அது பக்தி மார்க்கத்துக்கு எதிரானதாவும் காட்டுகிறார்கள். இதனால் பக்தி மார்க்கம் இந்தியாவில் இல்லாதாகவும் அது இந்தியாவுக்கு இடை செருகல் என்றும் வாதாடுகிறார்கள். பக்தி மார்க்கத்தின் அடிப்படை துவைதம் என்பது பக்தன் இறைவனை நம்புகிறான் என்பதும் வாதத்தின் படி. ஆனால் பக்தி மார்க்கம் அத்துவத்திற்கு முன்னையது. மேலும்  இவர்கள் புத்தரை, மகாவீரரை மறந்து போகிறார்கள்.  மேலும் சிலர் மத்துவரின் துவைதம் கிறிஸ்துவின் தந்தை தனயன் தத்துவம் என்றும் கூறுகிறார்கள்.  இந்த இரண்டுக்குள்ளும் காணப்படும் அடைப்படை முரண்பாடு, இரண்டுமே கிறிஸ்தவத்திலிருந்து வரவில்லை என்பதும், சங்கரர், புத்தர், மகாவீர்ர், (பரமகம்சர் -குறைந்தளவு), ஜித்து கிருஸ்ண மூர்த்தி வரைக்கும் கடவுளை ஏற்றுக் கொள்வதில்  தயக்கம் காட்டினார்கள் என்பதும் இவர்கள் எல்லோரும் திரை மறைவாக தாங்கள்தாம் கடவுள்கள் என்று கூறினார்கள் என்பதும்,  இதையேதான் கிறிஸ்து மேற்கு நாடுகளில் கூறப்போய் மரணத்தை சந்தித்தார் என்பதும், கிறிஸ்து  தான் இந்திய மதக் கொள்கைகளின் அடிப்படைகளை அறிந்திருந்தார் என்பதும் மற்றய வளம்  நிரூபிக்கபடவில்லை என்பதையும் நிதர்சணமாக காட்டுகிறது.   இந்திய மதக்கோடபாடுகளில் மனிதனேதான் கடவுள் ஆவதும், இதனால்தான் சிந்து வெளியில் சிவன் எப்படி பசுபதி ஆனான் என்பதும் காட்டப்படுகிறது.  இதை மேற்கில் ஏற்றுக்கொள்வது கிடையாது. எனவே கிறிஸ்து மகனான தான் தந்தையின் பிரதி நிதி என்று கூறப்போய் மரணத்தை சம்பவித்தார். கிறீசில் இந்திய சுவாமிகள் தங்களைத் தாங்கள் முத்தியியை அடைவத்தாக கூறி தீயில் ஆகுதியாவது ஆவணப்படுத்தபட்டிருக்கு. பைதாகிரஸ் போன்ற்வர்கள் இந்தியாவிலிருந்து தான் கேத்திர கணித்தை கற்றார்கள் என்றும் சொல்லப்படுகிரது. இந்த தொடர்புகள்தான் கிறிஸ்துவின் பரந்த மனம் கற்ற வேண்டிய பாடம் இந்தியாவில்தான் இருக்கிறது என்றும் அவரை அங்கே அனுப்பி வைத்தென்றும் சொல்லப்பட்டது. 

 

ஆனல் தமிழ் பற்றிய தொடர்பு ஆராயப்பட வேண்டியது. நாலந்தா கூட தமிழர்களால்(பல்லவ இளவரசர்களாள்) நிர்வகிக்கப்பட்டத்தாக கூறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.