Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 முனைகளில் மாவிலாறு நோக்கி பாரிய படைநகர்வு- செய்தி தொகுப்பு

Featured Replies

மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு: 6 படையினர் பலி! 3 போராளிகள் வீரச்சாவு.

திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்கா படையணியொன்றை, வால்கொட்டுப் பகுதியில் எதிர்கொண்ட போராளிகள், உக்கிர பதிலடி தாக்குதல்களை தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர்.

சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மட்டும் முன்னேறிய சிறீலங்கா படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தலைதெறிக்க தப்பியோடியுள்ளனர்.

ஏக காலத்தில், மாவிலாற்றில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லாறு காட்டுப்புறம் ஊடாக, ஈச்சிலம்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகளை வழிமறித்து தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், படையினருக்கு பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதேபோன்று, காட்டுப் பாதையூடாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட மூன்றாவது படைநகர்வு முயற்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

தப்பியோடிய சிறீலங்கா படைகளை இலக்கு வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி போராளிகளால், மூர்க்கத்தமான எறிகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

திருமலை மாவட்ட கட்டளை தளபதி கேணல் சொர்ணம் அவர்களின் நேரடி வழிநடத்தலில் களமிறங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், சிறீலங்கா படைகளின் வலிந்த ஆக்கிரமிப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்றைய முறியடிப்பு சமரில், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவைத் தழுவியதோடு மேலும் இருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எதிரியுடன் களமாடி வீழ்ந்த இந்த மாவீரர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

திருமலை மாவிலாறு சமரில், சிறீலங்கா படையினர் தரப்பில் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய சமரில், 5 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் 6 படையினர் படுகாயமடைந்திருப்பதாக, படைத்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

எனினும் உண்மை நிலையை மூடி மறைத்து, போலியான பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

  • தொடங்கியவர்

5 ஆம் இணைப்பு) மாவிலாறு நோக்கி மும்முனைகளில் முன்னேற படையினர் முயற்சி: 7 படையினர் பலி

[திங்கட்கிழமை, 31 யூலை 2006, 10:47 ஈழம்] [திருமலை நிருபர்]

திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் மேற்கொண்டு வரும் நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மேற்கொண்ட நகர்வு முயற்சிகளை மதியத்துடன் நிறுத்திய படையினர் பின்னர் பிற்பகல் முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா விமானப்படையின் கிபிர், மிக் ரக மற்றும் எம் - 28 ரக பீரங்கிகள் பொருத்தப்பட்ட உலங்குவானூர்திகளின் தாக்குதல் பின்புலத்துடன் பல்குழல் எறிகணை செலுத்திகள் மூலமும் ஆட்டிலெறிகள் மூலமும் படையினர் செறிவான தாக்குதல்களை இன்று காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

படையினரின் எறிகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவிலாறுக்கு வடக்கே உள்ள கல்லாறிலிருந்து வாய்க்கால் அருகே ஒருமுனையில் நகர்வு முயற்சியை மேற்கொண்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

கல்லாறிலிருந்து கிழக்காக ஈச்சிலம்பற்று நோக்கி ஒருமுனையில் மேற்கொண்ட நகர்வு முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட அதேவேளை கல்லாறுக்கு நேர் மேற்காக உள்ள திருமங்களம் என்ற இடத்திலிருந்து மாவிலாறுக்கு தெற்கே உள்ள அங்கோடை என்ற காட்டுப்பகுதி நோக்கியும் ஒருமுனையில் படையினர் நகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.

வால்கொட்டு என்ற இடத்தில் இந்த நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் படைத்தரப்பு எதிர்பார்த்தபடி நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் தமது தரப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்று பேர் வீரச்சாவடைந்துள்ளனர் என்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மாவிலாறு நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்டு வரும் நகர்வு முயற்சிகளுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்தி வருவதாக இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.

http://www.eelampage.com/

  • தொடங்கியவர்

3 முனைகளில் மாவிலாறு நோக்கி பாரிய படைநகர்வு - 20 படையினர் பலி - மூன்று போராளிகள் வீரச்சாவு

திருமலை மாவட்டத்தின் மாவிலாற்றுப் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா படையினர் இன்று காலை 8.00 மணிமுதல் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். படையினரின் இந்த பாரிய தரை ஆக்கிரமிப்பு முயற்சி விடுதலைப் புலிகளின் கடுமையான பதிலடியினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலதிக விபரம் 2வது இணைப்பு)

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் இரு அதிகாரிகள் உட்பட 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த முறியடிப்புத் தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்குழல் எறிகணை செலுத்திகள் மூலமும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலமும் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணமும் வான் படையின் மிக் மற்றும் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள் கண்மூடித்தனமான குண்டு வீச்சை மேற்கொண்ட வண்ணமும் இன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீலங்கா படைகள் பாரிய படை நகர்வை ஆரம்பித்தன.

திருமங்கலம் படைத்தளத்தில் இருந்து அங்கொடை பகுதியை நோக்கி பெரும் எடுப்பில் நகர்ந்த படையினரின் முயற்சி வல்கொட்டு என்ற இடத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பெருத்த எடுப்பில் படையினர் இந்த முனையினால் முன்னேற முயன்றபோதும் அவர்களால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குக் கூட முன்னேற முடியவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கல்லாறு படைத்தளததிலிருந்து ஈச்சிலம்பற்று பகுதியை நோக்கியதான நகர்வும், காட்டுப்பகுதியூடாக மேற்கொள்ளப்பட்ட நகர்வும் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்கள் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் சொர்ணம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி தற்போது கிபிர், மிக் ரக வானூர்திகளும், உலங்குவானூர்திகளும் கடுமையான தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டு வருவதாகவும் சரமாரியான எறிகணைத் மங்கிப்பிரிட்ஜ் உள்ளிட்ட படைத்தளங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

http://sankathi.com/content/view/4145/26/

  • கருத்துக்கள உறவுகள்

பிந்தி கிடைத்த செய்திகளின் படி படையினரின் தாக்குதல்கள் அனைத்தும் விடுதலபை;புலிகளால் முறியடிக்கப்பட்டு இருக்கின்றது...

  • தொடங்கியவர்

இணைப்பு 2

பிந்திக் கிடைத்த தகவலின் பலி சிறீலங்கா தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 15 படையினர் பலியானதோடு மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் சிறீலங்கா படையினர் இழப்புக்களை மூடிமறைப்பதில் ஈடுபட்டு வருகின்றது.

எனினும் பாரிய இழப்புக்கள் மத்தியில் படையினர் இன்று மாலையும் படை நடகர்வை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

இதன் அறிகுறியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பிரதேசங்கள் நோக்கி ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள், உலங்கு வானூர்த்தி தாக்குதல்களை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் எழிலன் மேலும் தெரிவித்துள்ளார்,

The Tigers dismissed army reports that dozens of their fighters were killed, saying three had died in a multi-barrel rocket attack. The military said seven soldiers were killed and several injured during a ground battle in the east.

"Fighting is going on," said army spokesman Brigadier Prasad Samarasinge. "Troops are consolidating the area. We have air strikes, artillery and mortar fire."

http://today.reuters.com/news/newsArticle....&archived=False

  • தொடங்கியவர்

7 ஆம் இணைப்பு) மாவிலாறு: படையினரின் முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 3 போராளிகள் வீரச்சாவு

http://www.eelampage.com/?cn=27912

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளினை வாசிக்க அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு புதுவை எழுதிய கவிதையின் சில வரிகள் யாபகத்துக்கு வருகிறது

உலகமே!

இதற்கும் உன் மெளனம் தான் பதிலா?

மரங்கைத் தறியாதீர் என்பவர்களே!

இங்கு பிள்ளைகளைக் கொல்கிறார்களே.

ஏன் கேள்வி எழுப்பவில்லை?

எமக்கான ஆறுதலை ஏன் தரவல்லை?

ஈழத்தமிழர் சாகப்பிறந்தவர்களா?

அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல

அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது.

இரத்தமும் இரத்தமும் பேசும் மொழியில்

புத்தபெருமான் போதிக்கவில்லை

ஆயினும் பேரினவாதம் அதைத்தானே போசிக்கிறது.

பொறுமையின் அளவுமட்டம் பெரியதானதல்ல

சின்ன உணர்வுத் திரியில் மூளக்கூடியது.

எம்மை மூட்டாதீர்

முளாசியெரிய வைக்காதீர்.

இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்

அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மெளனக்குரல்.

உலகமே!

எமக்குப்பதில் வேண்டும்

இப்போது வாருங்கள்

இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம்

எதற்காகவும் வரவேண்டாம்.

முடியுமெனில்

உங்கள் விழியில் எங்ளை எடுங்கள்

இல்லையெனில்

எங்கள் வழியில் எங்களை விடுங்கள்

பாருங்கள்

உற்றுப் பாருங்கள்

அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து

பென்னம்பெரிய நெருப்பு மூள்கிறது.

தெரிகிறதா?

இது தணியாது

இனிப் பணியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.