Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால் - எதுவேண்டுமானாலும் நடக்கலாம்: - அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Era_Samapanthan150.jpg

தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும், ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது..

 

கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இனஒடுக்குமுறைகள்தான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது. 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

 

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நாட்டை பிளவுபடுத்தும் என்ற அச்சம் தேவையற்றது. அத்தகைய பரப்புரைகளைச் செய்யும் ஜாதிக ஹெல உறுமயவோ, தேசிய சுதந்திர முன்னணியோ பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவைக் கொண்டவையல்ல. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=84439&category=TamilNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா காலத்தில் அமைதி வழியில் போராட்டம்.. இறுதியில் தந்தை செல்வாவே சொன்னார்.. "தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.."

 

பிறகு ஆயுதப் போராட்டம்..

 

பிறகு திரும்பவும் அமைதி வழியே சரியென்றார்கள்..

 

இப்போது "எது வேண்டுமானாலும் நடக்கலாம்".  :huh: 

 

உருப்படியா ஏதாவது ஒன்றை சொல்லமாட்டிங்களா? :unsure::D

அறிந்தோ அறியாமலோ சர்வதேசத்தை முழு மனத்துடன் இலங்கையில் இழுத்துவந்து பூட்டிவிட்டவர் கதிர்காமர்.  முள்ளிவாய்க்காலின் பின்னர் எதுவுமே இல்லாமல் போகாமல்  சம்பந்தர் இன்று அரசியல் என்று எதையோ பேசத்தக்க புண்ணியம் செய்துவைத்தவர் கதிர்காமர். அதாவது ராஜதந்திர யுத்த என்ற இன்றைய தமிழரின் பாதைக்கு வழி கோலியவர் கதிர்காமர். 

 

புலிகள் வென்ற பந்தயத்தை, முடிவில் வைத்து திருப்பிப்போட்ட புகழ் கதிர்காமருக்குத்தான்.  ஆனால் அதன் போது அவர் வெளிநாடுகளிடம் ஏற்படுத்திவைத்த எதிர்பார்ப்புகள் இன்று அவர்களை, போர் முடிந்தபின்னரும், இலங்கைத் திரை அரங்கை விட்டு வெளியேறாமல் செய்துவிட்டது. இலங்கை நமக்கு காட்டிய "பே பே" யை கதிர்காமர் கூட்டிவந்துவிட்டு போன மேற்கு நாடுகளுக்கும் காட்டிவிட்டது. அவர்கள் நம்ம மாதிரி அதை எற்க தயாரில்லை.

 

கடந்த சில ஆண்டுகளாக, இலங்கையின் அரசியலில் இந்தியா, மேற்கு நாடுகள், சீனா என்ற முறைப்படி கையோங்கி வந்திருக்கு. இன்னொரு தடவை மேற்கு நாடுகள் என்று கை ஓங்கினால் தமிழருக்கு தீர்வுகள் வர இடம் உண்டு. (தனக்கு மூக்கு போனாலும், எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்கட்டும் என்று இலங்கையும், எப்படிதான் சர்வதேச தலையீடுகள் வந்து இலங்கை அரசியலில் அதிகாரம் பண்ணினாலும், தமிழருக்கு உரிமை கொடுப்பதில் பிடியாக மறுத்துவருகிறது)

 

கச்சதீவில் ஏமாற்றம், ரஜீவுக்கு முதுகில் அடி எல்லாம் கிடைத்தும் இந்தியா தனது கனவு கன்னியாக சிங்களத்தின் பின் தொடர்ந்தும் சுற்றியது; சுற்றுகிறது.

 

இந்தியாவின் கதை இப்படித்தான் போகிறது: கட்டிய வீட்டில், அறுசுவையாய் சமையலை செய்து, வாழை இலையை வெட்டி வந்து போட்டுவிட்டு, சமைத்த சோறு ஆறுகிறது என்று, வாசலில் வந்து நின்று, திண்ணையில் ஒரு கண் சரிந்து எழும்பி, தலைவன் வருவான் வருவான் என்று தவித்துக்கொண்டிருக்கிறாள் தலைவி. ஆனால் அடுத்த கிராமத்தில் சீலையை இழுத்து போர்த்துக்கொண்டு ஒரு பெண் போட்ட குரலுக்கு ஓடிவந்த கணவனால் மூட்டுகள் முறிபட்டு இப்போதுதான் தள்ளடித் தள்ளடி  வீடுவருகிறார் தலைவனார்.  வீட்டில் காந்திருந்தவள் ஏது என்ன நடந்தது என்று தவித்து தவித்து கேட்க "அடி உன்னால்தான் எல்லாம்" என்று குற்றம் சட்டுகிறார்.

 

இந்தியா (காங்கிரஸ்) இல்லத்தரசியிடம் உணவும், மினிக்கி மடித்த உடையும் மட்டும்தான் கேட்கிறது, ஆனால் உடம்புக்கும், உள்ளத்தின் உறவுக்கும் அடுத்தவன் வீட்டு பெண்ணின் கதவை தட்டலாம் என்று அரசியல் கொள்கைகளில் நடந்துகொள்கிறது. தமிழ் நாட்டு தமிழர்களை தூக்கி எறிந்துவிட்டு சீனாக்காறனின் காமக்கிழத்தியான சிங்களத்தின் கதவை தட்டி நன்றாக வாங்கிக்கட்டிகொண்டு போய் இருக்கிறது இந்தியா. இதனால் இந்திய காங்கிரசின் இ.வி இளங்கோவன் தமிழர்களைத் திட்டுகிறார் இன்று. தான் தமிழ் ஈழம் பிரிக்க இலங்கை வந்ததாக பிரட்டு பேசுகிறார்.  சுரேஸ் பிரேமசந்திரனோ "நான் தான் உனக்கு தலைவாழை இலை வெட்டிப் போட்டுவைத்து காத்துக்கொண்டிருக்கிறேன், நீ ஏன் எங்கெல்லாமோ போய் அடி உதைப் படுகிறாய் ?"  என்று காங்கிசுக்காக உருகுகிறார்.

 

1970 களில் இந்தியா வங்காளத்தில் தலை இட்டு தீர்த்ததில் இருந்து தமிழர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. வங்காளிகள் இந்தியாவின் மேற்கில் இருந்தது போல்  தெற்குத்தமிழ் நாட்டிலும் தமிழர்கள் இருந்ததால், காங்கிரஸ் தமிழருக்கு நீதிகிடைக்க வைக்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் காங்கிரஸ் இந்தியாவில் விடும் அதே கோமாளித்தனத்தை இலங்கையிலும் காட்டலாம் என்று நினைக்கிறது. இந்தியா இரசாயன ஆயுதங்களை கொடுத்து அடித்து முடித்தவுடன் சம்பந்தர் பிழையான உதவியாக இந்தியாவை தங்களை(கூட்டமைப்பை) காப்பாறும்படி கேட்டு ஓடினார். ஆனால் பழிவாங்கள் மோகத்தில் மயங்கியிருந்த இந்தியா துணைவியா, தேவடியாளா என்ற கேள்வியில், கண் மண் தெரியாமல், தேவடியாள் என்று பதில் இறுக்கிறது.

 

கடந்த தடவை காங்கிரஸ் நடத்திய  தீர்வுக்கூட்டத்தில் நாச்சியப்பன்  ஈழத்தமிழர்கள் என்ன பேச வேண்டும், என்ன தீர்வு கேட்க  என்று தான் எழுதி வைத்திருந்து  அவர்களிடம் கொடுத்து வாசிக்க வைத்தார். இதனால் ஆனந்தசங்கரியும், சுமந்திரனும் கை அடிபாட்டு வரை சென்றார்கள். அந்த அனுபவத்தில் இந்த கூட்டத்தில் அவர்கள் ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. பதிலாக தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை என்ற தேவடியாளால் ஏமாற்றப்பட்ட இன்னொரு வாடிக்கையாளர் ஆன மேற்கு நாடுகளை இன்று  நம்பத்தொடங்கியிருக்கிறார்கள்.  இதனால் சம்பந்தரின் பேச்சில் மாற்றம் காணப்படுகிறது.

 

அரிவரிக்கு சென்ற சிறுவன் அங்கே 4+5=9 என்று கை எடுத்து கணிக்கும் இரண்டு இலக்க கூட்டல் கணிதம் படித்தான். இன்று ஆறாம் வகுப்பில் X + Y என்ற கூட்டலைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் போது இதுதானே அரிவரியில் படித்த இரண்டு இலக்க கூட்டல் என்ற யாரும் நினைத்தால் அது அப்படி அல்ல. அன்று அரிவரி முடிந்து விடுதலை விட்ட போது பள்ளியும், படிப்பும் முடிந்தாக  நினைத்தான். அதன் பின்னர் 5 வகுப்பில் primary school முடிந்த போது பள்ளியும் படிப்பும் முடிந்த்தாக நினைத்தான்.  இன்று Secondary  பள்ளியில் ஆறாம் வகுப்பில் வந்து அமர்ந்திருந்து மாறிகளை வைத்து கூட்டி X+Y=? என்று கண்டுபிடிக்க முயல்கிறான். இன்று அவன் பலபடிகள் கடந்து வந்திருக்கிறான். அரசியலில் X,Y என்ற இரண்டு மாறிகள் மட்டும் அல்ல, ஒரு சாதாரண நிலையில் 20,30 மாறிகளைப் போட்டு சமன்பாடுகள் விடுவிக்க வேண்டும் என்ற சிக்கலை உணர்ந்து கொண்டும் வருகிறான்.  அன்று கூட்டிப்பழகிய இந்தியா, இலங்கை என்ற இரண்டு திருத்த முடியாத மாறிலிகள்  இன்றும் இருக்கின்றன. ஆனால் அவைகளைக் கூட  மாறிகளாகவும் வைத்து கையாள சிறுவன் கற்றுக்கொள்ள வேண்டும். கதிர்காமர் என்ற அண்ணன் மாறிகளை கூட்டிக்கழிப்பதை பார்த்துச் சிறுவன் ஒருநாள் ஆச்சாரியப்பட்டதுண்டு. ஆனால் அவரிடமிருந்து அது முடியுமான காரியம் என்றதை சிறுவன் கற்றுக்கொண்டுவிட்டான். 

 

சம்பந்தர் கதையை மாற்றுகிறார் போலிருக்கு. ஆனால் அவர் இன்று கூட்டுவது பழைய மாறிலிகள் அல்ல. புதிய மாறிகள்.  இங்கே சமாதனம்  ஒரு நிலையான சொல்லு அல்ல. அதனால் தான் சந்திரிக்காவும் கதிர்காமரும்,ராஜதந்திர நாடகத்தில்  சமாதனத்துக்காக போர் என்ற போர்வையில் போரை ஆரம்பித்துவைத்திருந்தார்கள்.  ராஜதந்திர பாதையில் சம்பந்தர் பல பழைய கதைகளை புதிதாக சொல்ல வேண்டிவரும். இது மாறிலிகளுடன் படித்த எண்கணிதத்தை மாறிகளுக்கு மாற்றி நுண்கணிதமாக்குவதாகும். இது இந்தியாவை கைவிட்டு விட்டு புதிதாக உதவ வருபவர்களுடன் ஒத்துபோவதற்காகவே அல்லாமல் புதிதாக தெரிந்து கொண்டுவிட்ட பழைய பாதை ஆகாது. மேற்குநாடுகள் எப்படி சிங்களத்துக்கு உதவி சிங்களத்தை வெல்ல வைத்தார்களோ, அதே மாதிரி தமிழரிகளின் பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கு என்றதை அவர்களை உணரவைக்க வேண்டும்.  அந்த நிலைமையில், இலங்கையிடம் "திரும்ப போர்வரைக்கும் செல்வோம்" என்று சொன்னாலும்  இலங்கையானது தீர்வைப்பற்றி சட்டை செய்யாது என்று மேற்கு நாடுகளுக்கு சம்பந்தர் காட்டிவைக்க முயன்றால் அதை நாம் எமக்காக சொன்னதாகவும், அவர் திரும்ப போருக்கு ஆயித்தமாகிறார் என்றும் கொள்ள வேண்டியதில்லை.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால் - எதுவேண்டுமானாலும் நடக்கலாம்:
ஐயா தற்கொடை போராளியாக மாறிபோடதையுங்கோ பிளிஸ்..
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இப்போதைக்கு எல்லோருகும் இதுதான் வழி. அது சம்பந்தனாக இருந்தாலென்ன, டக்கிளசாக இருந்தாலென்ன எல்லாமே ஒன்றுதான்.

சிங்கலத்தை வெருட்டுவதை விடுத்து இந்தியா என்னதான் சொல்கிறதென்பதை ஐய்யா சொன்னரென்றால் நல்லது. எதுவுமேயில்லாமல் வெறும் வாய்ச்சவடல் பேசிப் பேசி உடம்பை ரணகளமாக்கி விட்டதுதான் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.