Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் அமைச்சரவையிலும் ''றோ'' இருக்கிறதாம்! கூறுகிறார் குணதாஸ அமரசேகர

Featured Replies

Mahinda-RAW.jpg

 

அரசாங்கத்திலுள்ள ''றோ'' முகவர்களின் தேவைக்கமைய 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=14790

 

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவின் அமைச்சரவையிலும் ”றோ” இருக்கிறதாம்! கூறுகிறார் குணதாஸ அமரசேகர

http://tamilworldtoday.com/archives/14790

 

Mahinda-RAW.jpg

இலங்கை அரசாங்கத்திலுள்ள ”றோ” முகவர்களின் தேவைக்கமைய 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து தற்போது தென் இலங்கை அரசியலின் பேசும்பொருளாக மாறியுள்ளது.

சிங்கள கடும்போக்கு சக்திகள் தற்போது 13ஆவது அரசமைப்பை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனக் கோரிவருகின்றன. இதற்கமைய இன்று (06) கொழும்பில் பல ஊடகவியலாளர் சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.

இதில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் குணதாஸ அமரசேகர,

13ஆவது அரசமைப்பு குறித்து மகிந்த அரசாங்கத்திற்கு யார் ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்பது தமக்கு விளங்கவில்லையெனக் கூறினார்.

அத்துடன், இந்த அரசியலமைப்பில் பகுதி பகுதியாக மாற்றங்களைச் செய்யக் கூடாது எனவும் பகுதி பகுதியாக மாற்றம் செய்வதைவிட அதனைச் செய்யாமல் இருப்பது மேலானது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறு செய்வது ஏமாற்றும் வேலை எனவும் சாடினார். இவை அனைத்தும் யாருடைய ஆலோசனைகள், யாருடைய வழிகாட்டல்கள் என்பது தமக்கு விளங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

”இதேவேளை, இந்த அரசாங்கத்திற்குள்ளும், அமைச்சரவையிலும் ‘றோ’ அமைப்பின் முகவர்கள் இருப்பதாகவும், அவர்களின் ஆலோசனைக்கமைய இவை முன்னெடுக்கப்படுவதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.”

எவ்வாறாயினும், இவ்வாறு பகுதி பகுதியாக மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், இதிலுள்ள மிகமுக்கிய அம்சங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல இவ்வாறு சிறு சிறு பகுதிகளை நீக்கி தம்மை ஏமாற்ற முடியாது எனவும் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பிலுள்ள சில விடயங்களை மறுசீரமைப்பதற்கு கடந்த செவ்வாய் இரவு நடைபெற்ற ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரண்டு மாகாணங்களை இணைத்து ஒரே மாநிலமாக்குவதற்கான அதிகாரம் இரத்துச் செய்யப்படுகிறது. அத்துடன், மாகாண சபை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமாயின் அதற்கு அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை எனவும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவுசெய்த பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற திருத்தத்தை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து தீர்மானிக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டது. இந்த முடிவையே தற்போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எதிர்த்து குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளது.

 

 

இதேவேளை, வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவுசெய்த பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற திருத்தத்தை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

 

 

தேர்தல் பொதுநலவய அமைப்பு த்லைவர்களின் மகாநாட்டுக்குமுதல் நடத்தப்படவேண்டும் என்பதை பிரிதானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும். அப்படி நடத்தப்படாவிட்டால் அந்த நாடுகள் மகாநாடை பகிஸ்கரிக்க வேண்டும்.

 

13ம் திருத்தத்தில் என்ன திருத்த கொண்டுவந்தும் அதை பலன் இல்லாதது ஆக்கினால் இந்தியா கூட்டத்தை பகிஸ்கரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அமைச்சரவையிலும் ''றோ''

 

ரொம்ப ரொம்ப லேற்...................... :(

  • கருத்துக்கள உறவுகள்

அணிசேரா நாடுகளுக்கு எப்படி தண்ணிகாட்டி மாநாட்டை நடத்தலாம் என

யோசிக்கின்றார்கள். 

 

றோ வின் திட்டப்படி நடந்தால் சிலவேளை மகிந்த தப்பலாம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.