Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை இலங்கை மறைமுகமாக எச்சரிக்கிறதா..?- பாகிஸ்தான் இராணுவதளபதி நாளை இலங்கை வருகிறார்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இலங்கை மறைமுகமாக எச்சரிக்கிறதா..?- பாகிஸ்தான் இராணுவதளபதி நாளை இலங்கை வருகிறார்..

AshfaqParvezKayani.jpg

 

பாகிஸ்தான் இராணுவதளபதி ஜெனரல் ஆஸாப் பர்வேஸ் கயானி வரும் 27ம் திகதியில் இருந்து மூன்றுநாள் பயணமாக இலங்கை வருகிறார் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

2011 தை மாதம் இடம்பெற்ற அவரது முன்னைய பயணத்தின் பின்னர் இடம்பெறும் இலங்கைக்கான அவரது இரண்டாவது பயணம் இதுவாகும்.

 

இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் ஜெனரல் ஆஸாப் பர்வேஸ் கயானி இலங்கையின் உயர் ராணுவ அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார்.அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.

 

மேலும் 28 ஜூன் 2013 அன்று தியத்தலாவை இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் இடம்பெற இருக்கும் ராணுவ அணிவகுப்பை பிரதம அத்தியாக கலந்துகொண்டு பார்வையிடுவார்.

 

பாகிஸ்தானிய ராணுவத்தளபதியின் இந்த வருகையானது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை இன்னும் பலப்படுத்தும் ஒன்றாகும் என்று கொழும்பு பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ளன.

 

இந்தியா இலங்கைப் படையினருக்கு தமிழ்நாடு வெலிங்கடன் கல்லூரியில் பயிற்சி வழங்க மறுத்ததை தொடர்ந்து கொழும்பு பத்திரிகைகள் தமது படையினருக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா பயிற்சி வழங்க முன்வந்திருக்கின்றன என திரும்ப திரும்ப எழுதிவருவதற்கு மத்தியில் பாகிஸ்தானிய இராணுவத்தளபதியின் இந்த திடீர் வருகையானது இந்தியாவை அச்சுறுத்த அல்லது இந்தியாவுக்கு தனது அதிர்ப்தியை தெரிவிக்க இலங்கை மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நாடகமாகவே கருதவேண்டி இருக்கிறது..

 

http://www.ampalam.com/2013/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எனி சுதர்சன நாச்சியப்பன் அறிக்கை விடுவார்.. நாங்கள் பயிற்சி கொடுக்காட்டில் இலங்கை பாகிஸ்தானிடம் பயிற்சி எடுக்கும் என்று.

 

இலங்கை சீனா.. பாகிஸ்தான்.. அமெரிக்கா.. இஸ்ரேல்.. ரஷ்சியா.. இங்கிலாந்து.. பங்களாதேஷ் என்று உந்த நாடுகள் பூராவும் பல ஆண்டுகளாக பயிற்சியும் ஆயுதங்களும் எடுத்துக்கிட்டுத்தான் இருக்குது. உவர் நாச்சியப்பன் இப்ப தான் எங்களுக்கு பாடம் கற்பிக்கிறார்..!  உவர் தான் டக்கிளஸை ஈழத்து எம் ஜி ஆர் என்று புகழ்ந்த புகழ்வீரனும் ஆவார். :lol::D

SL_PAK.jpg

இராணுவ ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், பாகிஸ்தான் படைத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஸ் கயானி நாளை (27) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

 

தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19091

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.