Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்

 

 

 

என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை‌ டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த‌ எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க‌, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க.

இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ, இல்லை நாலாயிரம் ருபாய் ஃபேன்ஸி பனியனை பார்த்து கூப்பிடாங்களான்னு தெரியலை, ஒரு கை குறையுது வரிங்களான்னு கேட்ட ஓடனே, பலியாடு மாதிரி தலையாட்டிட்டு போயிட்டாரு. அங்க போய் உட்கார்ந்த உடனே பெரிய ஜபர்தஸ்த்தா சேர் கிட்டே இருந்த மினரல் வாட்டர் எடுத்து குடித்து தொண்டையை சரி செய்து ஒபாமா மாதிரி உக்காந்துகிட்டார்.

கலந்துரையாடல் தொடங்கியது.ம‌த்த அஞ்சு பேரும் ஆங்கிலத்தில் பொலந்து கட்ட வாட் ஷி இஸ் டெல்லிங் ன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாரு. கடைசில‌ எது ந‌ட‌க்க‌ கூடாதுன்னு நாம‌ நினைச்ச‌மோ அது ந‌ட‌ந்திடுச்சு, ஆமா மைக்கை இவ‌ர் கையில‌ கொடுத்துட்டாங்க‌, ப்ளாகுல‌ சிங்க‌ம் போல‌ உறுமுற‌ த‌ல‌, அங்க‌ புலிகுட்டி த‌ம்பி பூனைக்குட்டி மாதிரி என்ன‌ பேச‌றாருன்னு கடைசி வரைக்கும் யாருக்கும் புரியலை. ம‌னுசன் எவ்வ‌ள‌வு நேரம் தான் சும்மா உட்கார‌‌ முடியும், அவ‌ங்க‌ளும் இப்ப‌டி ஒருத்த‌ர் ந‌ம்ம‌ கூட‌ இருக்காருன்னே க‌ண்டுக்காம‌, அவ‌ங்க‌ பாட்டுக்கு பேசிட்டு இருதாங்க‌. ந‌ம்மாளு பார்த்தாரு கொஞ்ச‌ நேர‌த்துல‌ மெதுவா எந்திரிச்சு, அங்க‌ நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கிட்டு இருந்த‌ பெண்ணிட‌ம்(பேர‌ழ‌கி) மே ஐ கோ டு த‌ டாய்ல‌ட்னு என்ன‌வோ சொல்லிட்டு ந‌ழுவிட்டாரு. ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் ந‌டைபெற்று கொண்டிருக்கும் பொழுது இப்ப‌டி அசிங்க‌மா பாதியில‌ எழுந்திருச்சு போற‌து எவ்வ‌ள‌வு கேவலம். கேட்டா நோபல் க‌மிட்டில் இருந்து ஒரு ஃபோன், உட‌னே அடுத்த‌ ஃபைளைட் புடிச்சு ஸ்வீட‌ன் வ‌ர‌ சொல்லீட்டாங்க‌னு எதாச்சும் புருடா விடுவாரு. அட‌ ந‌ம‌க்கு த‌மிழே த‌ற்குறி, விக்கிலீக்ஸ் விம‌ல் என்று சாருவால் அன்புட‌ன் அழைக்க‌ப‌ட்டும் மாம‌ல்ல‌ன் தின‌மும் காலை அவ‌ருடையை ப‌திவில் இருந்து ஒரு மேற்க்கோள் காட்டி அவருடைய‌ த‌மிழை திருத்திக்கொண்டிருக்கிறார், இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ அங்க‌ போய் மேடை ஏறி த‌மிழ்நாட்டோட‌ ஒட்டு மொத்த‌ மானத்தையும் வாங்க‌னுமா?

அந்த‌ க‌ரும‌த்தை பார்க்க‌னும்னு நினைக்குற‌வ‌ங்க‌ இங்க‌ போய் பாருங்க‌
http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1

ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொல‌ம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. http://charuonline.com/blog/?p=2883//மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. http://charuonline.com/blog/?p=2974//காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை ப‌டிச்சிட்டு அவ‌ரோடு குஞ்சுங்க‌ எத்த‌னை பேர் கால‌ங்காத்தால‌ சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க‌ போறாங்க‌ளோ, அவ‌ங்க‌ளை அந்த‌ நித்தி தான் காப்பாத்த‌னும்.

இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க‌, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:
பிச்சைகாரன்: எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் சாருவின் பதில்: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.

எஸ்.ரா ரஜினியை அழைத்து கூட்டம் சேர்த்துட்டார்ன்னு இவரும், இவரோட போர்படை தளபதிகள் ஆறு பேரும் சேர்ந்து எக்ஸைல் விமர்சண கூட்டம்ன்னு ஒன்னை போட்டாங்க, சரியா எண்ணிப் பார்த்தா இருபத்தி மூனு பேர், சாருவையும் சேர்த்து வந்திருப்பார்கள், இதில பத்து பேர் வெளியில வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு உள்ள வந்தவங்க. எப்படியோ கையில கால்ல விழுந்து ஞானியையும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அவர் எதோ சாருவை ஓபாமா ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளப் போகிறார்ன்னு சப்பு கொட்டிட்டு வந்தவங்களுக்கு சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்துன மாதிரி, அந்த புக்கையும் சாருவையும் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு. இனிமேலாச்சும் விடல பசங்களுக்கு பிடிக்குற மாதிரி எழுதறத விட்டு உருப்படியா எதாச்சும் எழுத பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சும்மா விடுவாரா, இன்னைக்கு வந்து அவரோட ப்ளாக்குல‌ பக்கம் பக்கமா பேண்டு வச்சுட்டாரு.

கொஞ்ச‌ நாளா, என்ன‌மோ ப‌ண்ணி தொலைய‌ட்டும் யாரும் க‌ண்டுக்காம‌ விட்ட‌ இவ‌ரை இப்போ எல்லாரும் திரும்ப‌வும் ர‌வுண்டு க‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிடாங்க‌. மாம‌ல்ல‌ன்( விக்கிலீக்ஸ் விம‌ல்) தின‌மும் இவ‌ர் ட‌வுச‌ரை உருவிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சாருவோட‌ லிங்கையை கொடுத்து அவ‌ர் எழுதியிருக்கும் கோமாளித‌ன‌த்தை ப‌கிர‌ங்க‌ ப‌டுத்தி வ‌ருகிறார். எப்ப‌டி நித்தி மேட்ட‌ர் வெளியான‌ உட‌னே ஒரு வைர‌ஸ் வ‌ந்து க‌ரெட்டா சாரு நித்தியை ப‌த்தி எழுதின கட்டுரைகளை ம‌ட்டும் டெலிட் ப‌ண்ணிட்டு போச்சோ அதே போல‌ ஒரு ‌வைர‌ஸ் கூடி சீக்கிர‌ம் திரும்பி வ‌ரும்னு நினைக்குறேன்.

இவ்வ‌ள‌வு நாளா அந்த பொண்ணு chat விவ‌கார‌த்திற்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு(த‌ப்பில்லைனா போலிஸ் கிட்ட‌ போக‌ வேண்டிய‌து தானே) ம‌ழுப்பிட்டு இருந்தவர் இன்று அவ‌ருடைய‌ த‌ள‌த்தில் என்ன‌ கூறியிருக்கிறார் பாருங்க‌ள். http://charuonline.com/blog/?p=2970 //துக்ளக்கில் ஒருவர் எழுதவேண்டுமென்றால் அவர் கறைபடியாதவராக இருக்க வேண்டும். என் எழுத்தை விரும்பாதவர்கள், திட்டமிட்டு, வேண்டுமென்றே என்னை ஒரு Scandal லில் மாட்ட வைத்தார்கள். அந்தக் கறை என்மீது பதிந்துவிட்டதால் என் எழுத்தும் நிறுத்தப்பட்டது.// இதுவ‌ரை எனக்கும் அந்த ற்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு சொன்ன‌வ‌ர் இப்போ அவரை திட்ட‌மிட்டு மாட்ட‌ வைத்துவிட்டார்க‌ளாம். so அந்த உரையாடல் நடந்தது உண்மைன்னு அவரே ஒத்துக்கிட்டார்.கொஞ்ச‌ நாள் ஆயிடுச்சே எல்லாரும் ம‌ற‌ந்திருப்பாங்க‌ன்னு நினைச்சு இப்ப அடுத்த‌ பிட்டை போட‌ ஆர‌ம்பிச்சுட்டாரு என்னன்னா, இவ‌ரு மேட்ட‌ர் ப‌ண்ற‌ விசிய‌த்துல‌ யாருமே இவ‌ரை அடிச்சிக்க‌ முடியாதாம், இருப‌த்தி அஞ்சு வ‌ய‌து இளைஞ‌ன் கூட‌ இவ‌ர் கூட‌ போட்டி போட‌ முடியாதாம், கேட்டுக்கோங்க‌ப்பா இனி திரும்ப‌வும் ஆர‌ம்பிச்சிடுவாரு, ப‌தினேலு வ‌ய‌து பேர‌ழ‌கி என்னை திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ற்புறுத்திகிறார், பெங்க‌ளுரில் ஒரு மாததிற்கு மூன்று ல‌ட்ச‌ம் ச‌ம்பாதிக்கும் ஒரு இள‌ம்பெண் என் மூல‌மாக‌ ஒரு வாரிசு வேணும்னு உயிரெடுக்குறாள். நேற்று காபி ஷாப்பில் மூன்று பெண்கள் என்னை ஒரு வெறியோடு பார்த்தார்கள்ன்னு உலகத் தொலைகாட்சியில் முதல் முறையாகன்னு ஒரு வீடியோ எவிட‌ன்ஸ் மாட்டாமலா போயிடும், அதுவும் அநேக‌மாக‌ அவ‌ரோட‌ ப‌டைத்த‌ள‌ப‌திக‌ள் கிட்ட‌ இருந்தே தான் வெளிவ‌ரும்ன்னு ப‌ட்சி சொல்லுது. ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.சாரு அடிக்க‌டி யானையை புண‌ந்த‌ கொசு கதை சொல்லுவாரு. ர‌ஜினி மேட்ட‌ர் கூட‌ அப்ப‌டி தான், இவ‌ர் பாட்டுக்கு ர‌ஜினிட‌ம் கேள்வி கேட்குறேன், ச‌வால் விடுகிறேன்னு முழ‌ங்கிட்டு இருக்கிறாரு. பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.

 

 

http://bleachingpowder.blogspot.in/

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :D  "மே ஐ கோ டு த‌ டாய்ல‌ட்னு என்ன‌வோ சொல்லிட்டு ந‌ழுவிட்டாரு. "

 

இலக்கிய சந்திப்பே இப்ப பொழுது போக்காகிவிட்டது பலருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு (நகைச்சுவைத்) தமிழே... ஒரு அழகு தான்.
இணைப்பிற்கு நன்றி நுணா. :)  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்

 

  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.

முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.

 
alps.jpg

இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.

நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.

இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.

இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.

இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

 
மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.
 
எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.
 
அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.
 
என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.
 
இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.
 
என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.
 
எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.
 
  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது
 
             மொழி
 
  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை
 
  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?
 
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
 
 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/
 
இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.
 
             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?

riyas.jpg

எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.

 

http://www.pichaikaaran.com/2013/07/blog-post.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாருவின் நாவல் கூட வாசித்ததில்லை :unsure: யாழில் யாராவது வாசித்துள்ளீர்களா?

இணைப்பிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.