Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவிற்குப் பிரச்சனையான நோர்வேயின் தன்னினச் சேர்க்கைத் தூதுவர்

Featured Replies

கொழும்பிற்கான நோர்வேத் தூதுவராக இருப்பவர் ஒரு பெண்மணி. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் தூதுவர் தனது வாழ்க்கைத் துணையைக் கொழும்புக்க அழைக்க இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது மஹிந்த ராஜபகசவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக் குடியரசுத் தலைவரின் உறைவிடமான அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த சிங்கள பௌத்த இனவாத அமைப்பான பொது பல சேனா நோர்வேத் தூதுவரின் திருமணத்தையும் அவர் தனது பெண் வாழ்க்கைத் துணையை இலங்கைக்கு அழைப்பது பற்றியும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

நோர்வேயில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இலங்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. 1964-ம் ஆண்டு 60 நாடுகள் வியன்னா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட போது தன்னினத் திருமணம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.

12 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து முதல் முதலாக ஆண் ஆணையோ அல்லது பெண் பெண்ணையோ திருமணம் செய்ய அனுமதித்தது. கடைசியாக பிரன்ஸ் இதை அனுமதித்தது. கனடா, சுவீடன், ஐஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவில் சில மாநில அரசுகளும் தன்னினத் திருமணத்தை அனுமதித்துள்ளன. ஆனால் இது இரு நாடுகளுக்கிடையிலான அரச தந்திரப் பிரச்சனையாக இலங்கையில் உருவெடுத்துள்ளது.

வியன்னா உடன்படிக்கையின் 9வது பந்தியின்படி ஒரு நாட்டு அரசு தனது நாட்டுக்கு இன்னும் ஒரு நாடு அனுப்பிய தூதுவரை வரவேற்கப்படாத ஆள் (persona non grata) என்று சொல்லி அவரைத் திருப்பி அழைக்கும் படி அந்தத் தூதுவரை அனுப்பிய நாட்டைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் வியன்னா உடன்படிக்கையில் 22 பந்தியின் படி ஒரு நாட்டுக்குள் இருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் இல்லத்திற்கும் அந்த வெளிநாட்டுச் சட்டம்தான் செல்லுபடியாகும். அதற்கும் நடக்கும் குற்றத்தை அந்த நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு அரசுதான் கையாள முடியும்.

நோர்வேத் தூதுவர் தனது துணைவியுடன் தூதுவர் இல்லத்திற்குள் வாழ்கை நடாத்தினால் அதை இலங்கை சட்டப்படி செல்லுபடியற்றது என்று சொல்ல முடியாது. நோர்வேத் தூதுவர் தனது வாழ்கைத் துணையை தனது வேலைக்காரி எனக் கூறி இலங்கைக்கு அழைத்தால் இலங்கை அரசு அனுமதி வழங்கியே ஆக வேண்டும். நோர்வேத் தூதுவரை மஹிந்த ராஜபக்ச அரசு வெளியேற்றினால் உலகெங்கும் உள்ள தன்னினச் சேர்க்கையாளர்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டி வரும்.

 

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா உலகெங்கும் உள்ள ஓரின்ச் சேர்க்கையாளர்களின் கோபத்தை சம்பாதிக்காமல் அம்மணியையும்,துணைவியையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்கொப்பரான, சிங்களத்தின் கிக்கடுவை,நீர்கொழும்பு மற்றும் இலன்கைத்தீவின் உல்லாசபுரிகள் அனைத்திலும், பயணிகள் அதிகமாக வருவது சிறுவர் பாலியல் உறவுக்காகவும் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றது என்பதற்காகவுமே. தவிர நான் வாழும் நாட்டில் வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்ட சிங்களவர்களில் அனேகர் தன்னினச்சேர்க்கை ஜோடிகளாக இங்குவந்தவர்களே. அப்போ மகிந்தவுக்கு நாய் உழைச்ச காசு குரைக்காதோ.

ரதி அக்காவின் கோரிக்கை யாற்றிறே. நோர்வே தூதுவரின் துணை இலங்கை செல்கிறார்.!

இலங்கையின் அரசால் கவுரபிரஜயாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆத்தர் C. கிளார்க் அவர்களும் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பது உலகறிந்த விடயம்.....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.