Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதரகத்திலுள்ள நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்; 400 இற்கும் மேற்பட்ட தமிழ்நூல்களும் உள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தூதரகத்திலுள்ள நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்; 400 இற்கும் மேற்பட்ட தமிழ்நூல்களும் உள்ளன

யாழ்ப்பாணம், நல்லூர் மருதடியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பொதுமக்களும் பயன்படுத்தலாம் என்று இந்திய துணைத்தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலான ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவற்றில் இந்து மதம், வரலாறு, தத்துவம், வெளிநாட்டுக் கொள்கைகள், யோகா, சாஸ்திரிய நடனம், சித்திரம் மற்றும் சமையற்கலை போன்ற விடயதானங்களில் 400 இற்கும் அதிகமான தமிழ் நூல்கள் உள்ளன. மேலும் சிறு தொகை ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்பட இறுவட்டுக்களும் உள்ளன.

பொதுமக்கள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நூல்கள் மற்றும் இறுவட்டுக்களை இரவல் எடுக்க விரும்புவோர் தூதரக அலுவலகத்தில் தம்மை அங்கத்தவராக பதிவு செய்ய வேண்டும். பதிவுகளுக்காக மீளளிக்கப்படக்கூடிய வைப்புப் பணமாக 500 ரூபா செலுத்தப்பட வேண்டும்.

நூலக அங்கத்துவத்தை தொடர விரும் பாதவிடத்து இரவலாக பெற்ற நூல்களையும், அங்கத்துவ அட்டையையும் மீளளித்து வைப்புப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

நூலக அங்கத்துவப் படிவங்களை தூதரகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூரணப்படுத் தப்பட்ட படிவங்கள் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, பெயர், வயது மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவதொரு சான்றிதழின் பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=325872151406320621

அப்பத்தான் றோவிற்கு ஆள் பிடிக்க இலகுவாய் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

தாஜ்மகால், தஞ்சைப் பெரிய கோயில் என்று ஷெனாய் இசை ஒலிகக மக்களின் மனங்களில் இந்திய சிந்தனைகளைவிதைப்பார்கள்.. தஞ்சை தமிழகம் என்றாலும் இந்திய பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுவது இயல்பே..

  • கருத்துக்கள உறவுகள்

அப்பத்தான் றோவிற்கு ஆள் பிடிக்க இலகுவாய் இருக்கும் 

 

முன்னாள் ஈழப்போராளிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டினம்போலகிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.