Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை மாணவர் கொலை விசாரணை இலங்கை அரசின் வெறும் கண்துடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மாணவர் கொலை விசாரணை இலங்கை அரசின் வெறும் கண்துடைப்பு

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வரவுள்ளமையாலும், உலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவுமே திருகோணமலை மாணவர் படுகொலை தொடர்பில் 12 பேரை எட்டு வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவெறும் கண்துடைப்பு பம்மாத்து நடவடிக்கையே.


இலங்கை அரசு நீதி வழங்கும் என்ற நம்பிக்கைஎனக்கில்லை. இந்தப் படுகொலைகள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு படுகொலையான மாணவர்களில் ஒருவரான ரஜிகரனின் தந்தை மருத்துவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை காந்தி சிலையடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 அப்பாவித் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பில் 12 சிறப்பு அதிரடிப்படையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 8 ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரனின் தந்தையான மருத்துவர் மனோகரன் பி.பி.சி. செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

படுகொலை நடந்து சில காலங்களில் இப்படியாக சில அதிரடிப்படையினரைக் கைது செய்து விசாரித்துவிட்டு அவர்கள் படுகொலை செய்தமைக்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டும் மனோகரன், தற்போதைய இந்தக் கைது நடவடிக்கையும் சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குச் செல்லவுள்ளதாலும், உலக நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாகவுமே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ள மனோகரன், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் சாடியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் இப்படிப்பட்ட மோசமான வன்செயல்கள் தொடர்பாக எத்தனையோ ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போதிலும் இதுவரை எந்தவொரு விசாரணைகளு@ம பூர்த்தியாகவில்லை.

எனவே எமக்கு இலங்கை அரசு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையே இடம் பெற வேண்டும் என்று மனோகரன் வலியுறுத்தினார்.

http://onlineuthayan.com/News_More.php?id=318722152707236386

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 ல கிழக்கில போர் துடங்கிட்டுது .... எண்டது போனவைக்கு தெரியாமல் இருந்திருக்காது .... எண்டது தான் எண்ட அபிப்பிராயம் ....

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு விடுதலை கிடைக்க போராடின புலிகளைத்தான் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றல்....நீதிகிடைக்க போராடுறாள் கதைக்கவும் பிடிக்கவில்லையோ...நீங்களெல்லாம் எந்த இனப்பிறப்போ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.