Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகாவுடன் ஒருபோதும் அரசியல் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை - சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chandrika_bandaranayake-seithy-150.jpg

எதிர்காலத்தில் செயற்பாட்டு ரீதியான அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டரீதியான உறுப்பினர் என்ற வகையில் அந்த கட்சியின் ஊடாகவே இருக்கும் என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் ஒரு போதும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் சரத் பொன்சேகாவுடன் அரசியல் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

  

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சரத் பொன்சேக்கா, நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தாலும் இதுவரை நான் அவரிடம் அரசியல் விடயங்கள் பற்றி பேசியதில்லை. அவரை ஒரு வைபவ மண்டபத்தில் மாத்திரம் சந்தித்துள்ளேன். இதன் போது, நட்புறவு ரீதியில் அவருடன் உரையாடினேன். ஒரு காலத்தில் நாட்டின் முப்படை தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த காரணத்தினால், நாட்டின் இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசுவது வழமையானது. விடுதலைப்புலிகளை தோற்கடித்த இராணுவத் தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகா மீது முன்னாள் ஜனாதிபதி, பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக இருப்பதுடன், அதன் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். தனது அரசியல் பயணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தே ஆரம்பித்ததால், அதில் இருந்து ஒருபோதும் விலக போவதில்லை என்று சந்திரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87127&category=TamilNews&language=tamil

சகோதரத்துவ சண்டை இல்லாமல் சிங்களவர் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

எல்லா சிங்கள கட்சிகள், குழுக்கள் சேர்ந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும்.(நடக்கிற காரியமா... சும்மா ஒட்டுக்குழு பரப்புரையை திருப்பி பார்த்தோம்)

அவர்களின் வயிற்று பிழைப்புக்காக எதையாவது சொல்லிதானே ஆகவேண்டும் இல்லை என்றால் எலும்பும் இல்லாது போய்விடும்

 

  • கருத்துக்கள உறவுகள்

chandrika_bandaranayake-seithy-150.jpg

. விடுதலைப்புலிகளை தோற்கடித்த இராணுவத் தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகா மீது முன்னாள் ஜனாதிபதி, பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87127&category=TamilNews&language=tamil

 

இங்கே தான் சந்திரிகா தான் ஒரு உண்மையான சிங்களத்தி என் நிரூபிக்கின்றார்.

 

மகிந்த ஆட்சியில் இனி பண்டார நாயக்காக்களுக்கு இடமில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.