Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் திருப்புமுனையில் தமிழ் தேசிய அரசியல் - இதயச்சந்திரன்

Featured Replies

13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும்.

10072013%20008.jpg

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில் நடைபெறும் இராணுவமயமாக்கல், குடியேற்றம், சிங்களமயமாதல் மற்றும் பௌத்தமயமாதல் போன்றவற்றின் ஊடாக, உள்நாட்டுத் தீர்வினை கண்டடையலாமென்று அரசு செயற்படும்போது, அதனைக் கண்டும் காணாததுபோல, பேர்லினிலும் டெல்லியிலும் கூட்டங்களை நடாத்துவது பொருத்தமற்றது போல் தெரிகிறது.

இந்த வல்லரசுகளுக்குத் தெரியாத, புரியாத விடயங்களை நாம் தெளிவுபடுத்துகிறோம் ,இராஜதந்திர மௌனத்தை கலைக்கப்போகிறோம் என்று முயற்சிகளை மேற்கொள்ளும் தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், எல்லாவற்றையும் தெரிந்தவர்களோடுதான் தாம் பேசுகிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழர் தரப்புக்களின் டெல்லிப்பயணம் போன்று, தென்னிலங்கைத்தரப்பும் தமது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த டெல்லிக்குச் செல்கின்றது.

அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னாலுள்ள காய்நகர்த்தல்களை நோக்கினால், இந்திய அழைப்பின் காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். ‘13 இல் கைவைப்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இந்திய பிராந்திய பாதுகாப்பு நலனிற்கு அச்சுறுத்தலாக அமையாது’ என்கிற வகையில் பசிலின் விளக்கங்கள் இருக்குமென எதிர்பார்க்கலாம். அத்தோடு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை, எந்தவொரு மாகாணத்திலும் சிறிதளவேனும் இழப்பதை சிங்கள தேசம் விரும்பவில்லை என்பதோடு, அகில இலங்கை பௌத்த கொங்கிரசும், பௌத்த உயர் பீடங்களும் இந்த 13 ஐ நீக்க வேண்டுமென்பதில் திடமாக இருக்கிறார்கள் என்ற செய்தியையும் இந்தியாவிற்கு பசில் முன்வைப்பார்.

13வது திருத்தச் சட்டம் குறித்து தென்னிலங்கையிலுள்ள ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகளைப் பார்த்தால், எதிர்ப்பரசியலுக்குள் ஒரு எதிர்ப்பரசியல் முளைத்திருக்கும் விந்தையைக் காணலாம். வட-கிழக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நிர்வாகம் மற்றும் நிலஅபகரிப்பு குறித்து உள்ளுக்குள் முரண்படாத ஆளும் இடதுசாரித்தரப்பினர், இந்த 13 விவகாரத்தில் மட்டும் போர்க்கொடி தூக்குவதன் மர்மம் என்ன?.

சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிப்பலத்தால் எம்.பி பதவியைப்பெற்ற இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள், 13 விவகாரத்தில் முரண்டு பிடிப்பதால் எத்தகைய மாற்றங்களை ஆளும்தரப்பிற்குள் உருவாக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது. விடுதலைப்புலிகளை போரில் வென்ற பலத்தை வைத்து, சிங்கள பெருந்தேசியவாதத்தின் மிகப்பெரிய ஆதரவினைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சவின் அதிகார பீடத்தில், சிறு அசைவையும் இவர்களால் ஏற்படுத்த முடியுமா?.

இருப்பினும், இடதுசாரிகள் உடன், ஆளும் தரப்பினர் உருவாக்கும் முரண்நிலைப்போக்கும், அதனால் ஏற்படும் பிரிவுகளும், மேற்குலகிற்கு எதிரான, இடதுசாரிகளின்பால் நாட்டம் கொண்ட சில சர்வதேச நாடுகளின் ஆதரவினை இலங்கை இழக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கலாம்.

குறிப்பாக கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகளின் இலங்கை குறித்தான பார்வையில், இடதுசாரிகளின் வெளியேற்றம் மாற்றத்தை ஏற்படுத்துமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆளும் கட்சிக்குள் உருவான எதிர்ப்பரசியல், தென்னிலங்கை ஊடக வெளியில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ‘ஒருங்கிணைப்புக்குழு’ உருவாக்கம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதி மற்றும் தேர்தல் விவகாரங்களைக் கையாளப்போகும் இக்குழு, தேசிய அரசியல், சர்வதேச அரசியல் குறித்தான விடயங்களை விவாதித்து முடிவெடுக்கும் வல்லமையைக் கொண்டிருக்குமா என்பதை அவதானிக்க வேண்டும். அரசியல் தீர்வு, சர்வதேச உறவு குறித்து, மிகவும் காத்திரமான, தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய அவசியம், இன்றைய சூழலில் அதிகமாகவிருப்பது உணரப்படுகிறது.

இலங்கை குறித்து , இந்தியா எத்தகைய இராஜதந்திர அணுகுமுறையைக் கையாள்கிறது என்பதனை ஆழமாகப்புரிந்து கொள்வதும், இந்திய உபகண்டத்தில் தமது நலனிற்கு ஏற்றவாறு மூலோபாயச் சமநிலையை மாற்றியமைக்க, சீனாவும், அமெரிக்காவும் எவ்வாறு தேசிய இனப்பிரச்சினையை பயன்படுத்த முனைகின்றன என்பதோடு, அதிலுள்ள நுண்ணரசியலை அறிந்து, அதற்கேற்றவாறு அரசியல் வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்வது அவசியமானது.

சீனாவின் முதலீட்டு ஆதிக்கம் தணிவடையும்வரை, இலங்கை அரசுடனான உறவினைப் பலப்படுத்தும் முயற்சியை இந்தியா கைவிடாது. அதுமட்டுமல்லாது, இலங்கை அரசின் மீது அழுத்தத்தைத் பிரயோகிப்பதற்கு, தேசிய இனப்பிரச்சினையில் தவிர்க்க முடியாத பங்காளியாக இருக்கும் நிலையையும் இழந்துவிட இந்தியா விரும்பாது.

ஆகவே, அரசியல் தீர்வு விடயத்தில், எமது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில், இந்தியாவுடன் பேசுவோர் பேசலாம். இந்தியாவுடன், இணக்கப்பாட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இயக்கங்களை வளர்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெறப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க உதவியும், ‘சீபா’ ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறைவேற்ற முடியவில்லை.

‘எமது பலம், எதிராளியின் பலவீனம்’ என்பதன் மறுதலையாக, இந்தியாவின் தேவையை இலங்கை அரசு பயன்படுத்தும்போது, தமிழர் தரப்பால் ஏன் பயன்படுத்த முடியாது?. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட, சர்வதேச அரசியல் பார்வை குறித்த நிலைப்பாட்டின் அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/31227/64//d,fullart.aspx

 

 

சீனாவின் முதலீட்டு ஆதிக்கம் தணிவடையும்வரை, இலங்கை அரசுடனான உறவினைப் பலப்படுத்தும் முயற்சியை இந்தியா கைவிடாது. அதுமட்டுமல்லாது, இலங்கை அரசின் மீது அழுத்தத்தைத் பிரயோகிப்பதற்கு, தேசிய இனப்பிரச்சினையில் தவிர்க்க முடியாத பங்காளியாக இருக்கும் நிலையையும் இழந்துவிட இந்தியா விரும்பாது.

ஆகவே, அரசியல் தீர்வு விடயத்தில், எமது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில், இந்தியாவுடன் பேசுவோர் பேசலாம். இந்தியாவுடன், இணக்கப்பாட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இயக்கங்களை வளர்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெறப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க உதவியும், ‘சீபா’ ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறைவேற்ற முடியவில்லை.

‘எமது பலம், எதிராளியின் பலவீனம்’ என்பதன் மறுதலையாக, இந்தியாவின் தேவையை இலங்கை அரசு பயன்படுத்தும்போது, தமிழர் தரப்பால் ஏன் பயன்படுத்த முடியாது?. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட, சர்வதேச அரசியல் பார்வை குறித்த நிலைப்பாட்டின் அர்த்தங்கள் 

 

 

 

இது தவறான கருத்து என நினைக்கிறேன்.
 
சீனாவுடனான வர்த்தக உறவுகள், அந்த உறவுகளினூடான அரசியல் செல்வாக்குகள் என்பன சக்தி வாய்ந்த மேற்கு நாடுகளே தவிர்க்க முடியாமல் ஈடுபடுகின்றன. இன்னிலையில் சின்னஞ்சிறிய இலங்கை இவற்றைக் கைவிடும் என்று இந்தியா எதிர்பார்க்காது.
 
ஏன் இந்தியாவே சீனாவுடன் பலத்த வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில் இனப்பிரச்சனை, சீனாவை இலங்கையில் இருந்து விலத்த உதவும் ஓர் ஆயுதமாக இந்தியா பாவிப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு.  
 
இதனால் சிங்களவர், இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டை நிறுத்த சீனப்பூச்சாண்டியை காட்டுவதற்கு ஓர் எல்லை உண்டாகிறது.
 
இனப்பிரச்சனை அணுகுமுறையில் இந்தியா பின்வரும் பரிமானங்களைக் கொண்டிருக்கலாம்.
 
1. இந்திய உள்நாட்டு அரசியல் ( தமிழ்நாடு )
2. சீன இலங்கை பொருளாதாரா உறவுகள் அதைத் தாண்டி பாதுகாப்பு உறவுகளாக வளர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது. இந்த சீன இலங்கை கூட்டில் பாக்கிஸ்தானும் பங்காளியாகலாம்.
 
 
இந்தியா இலங்கைத் தலையீட்டைத் தாமதிக்க தாமதிக்க இந்த அச்சுறுத்தல் நிலை வளர்வதற்கான சாத்தியம் அதிகரிக்கிறதே ஒழிய குறையவில்லை. கடந்த நான்கு வருடங்கள் இதற்கு சாட்சி.
 
அத்தோடு இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்கட்சிகள் இல்லை. இந்நிலையில் இன்னும் பல வருடங்கள் பதவியில் இருக்கப்போகும் சிங்களத்தலமையில் இந்தியாவிற்கு எதிரான அச்சுறுத்தல் வளரவே செய்யும். ஆகவே ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து இந்தியா காலதாமதம் செய்தால், யாருக்கும் நன்மை இல்லை.
 
25 வருடங்களிற்குப் பின் எமது நலன்களும் இந்திய நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இந்தியாவுடனான ஒரு இணக்கப்பாடுதான் எம் நலன்களை தக்கவைக்கவோ வெல்லவோ உதவும். 

ஈசன் சொல்ல முனைவதை தான் நானும் இன்னும் வேறு விதமாக சொல்ல நினைக்கிறேன்...   சீனாவை இலங்கை கைவிட வைப்பதற்காக இந்தியா இலங்கைக்கு உதவுகிறது என்பது எல்லாம் வெளியில் சொல்லப்படும் ஒரு மாயை... 

 

இந்தியாவை சுற்றி ஏழு நாடுகள்(நிலப்பரப்புக்கள்)  எல்லையாக இருக்கின்றன...  இதில் சீனாவின் கையில் இருக்கும் திபெத்தை தவிர யாரும் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை...  சீனாவின் பக்கமே இருக்கிறார்கள்..  அதை எல்லாம் பற்றி இந்தியா கவலைப்படுவதாக இல்லை...  

 

இலங்கையின் அமைவிடம் இந்திய நலன்களுக்கு பாதிப்பாக இருக்கிறது எண்று அதனால் இலங்கை இந்தியாவுக்கு தேவை எனும் வாதம் வரலாம்...  அதிலும் ஒரு உண்மை என்ன எண்றால்  சேது கால்வாயை வெட்டுவதில் மூலம் அந்த அமைவிட நலனை தன்பக்கம் இழுக்கும் நிலையிலேயே இந்தியா இருக்கின்றது..  ஆனால் இந்தியா அதை செய்ய முனையவில்லை...  காரணம்....?? 

 

சீனாவின் கைகளில் இலங்கை இருப்பது போல ஒரு மாயை இருந்தாலும் உண்மையில் இலங்கை இந்தியாவின் மகுடிக்கே ஆடுகிறது...   காரணம் தன் பிரச்சினைகளில் இருந்து மேற்கு நாடுகளை சமாளிக்க இலங்கைக்கு சீனா அல்ல இந்தியாவே தேவைப்படுகிறது...   மேலும் இதுக்கு உதாரணம் சொல்வதானால் சீன நிறுவனங்கள் இலங்கை வந்து ஒப்பந்தம் போடும் அதே நேரம் இலங்கை அரசியல் தலைமைகள் மாதம் ஒரு முறை இந்திய உயர்மட்ட விஜயம் செய்கிறார்கள்...   அது காரணம் இல்லாமலா...?? 

 

 

Edited by தயா

நானும் ஒரு பத்து வருடங்களாக இந்தாளின் அரசியல் ஆய்வை கனேடிய வானொலி ஒன்றில் கேட்டுவருகின்றேன் .

எதுவும் இல்லாமல் பத்து பன்னிரண்டு பக்கம் எழுதுவார் ,அதே போல மணிக்கணக்கில் ஆய்வு என்று அறுப்பார் .

அரிசிக்கு பதில் உமி தின்று வளர்ந்தாரோ தெரியாது


இவர் மட்டுமல்ல இவர் போல பலர் தான் எமது ஆய்வாளர்கள் .

புலிகள் இருக்கும் போது ,புலிகளுக்கு குழி தோண்டியவர்கள் தான் இன்று மிகப்பெரிய ஆய்வாளர்கள் ?


இவர் மட்டுமல்ல இவர் போல பலர் தான் எமது ஆய்வாளர்கள் .

இவரின் கடந்தகாலம் தெரிந்தால் யாரவது எழுதுங்களேன் .

அவருடைய எழுத்தில் பகுதி உண்மை இருக்கு. ஆனால் அவர் உறவு முடியும் காலத்தை அனுமானிக்க பார்க்கிறார். ஆனால் அதை அனுமானிக்க தக்க ஏதுக்கள் எதும் இந்த நேரம் வெளிப்படையாக  கண்ணுக்கு தெரியவில்லை.

 

இந்தியா இலங்கையில் பக்கம் சாரா கொள்கையை பா.ஜ.க காலத்தில் கடைப் பிடித்தது(வெளிபார்வைக்கு தன்னும்). குடும்பி மலையை இழந்த பின்னர் வந்து இறங்கியது.  அப்போது கொடுத்த காரணம் இலங்கை, சீனாவிடம் ஆயுத உதவிக்கு போகிறதென்பது. போரில்லாத இந்த நேரம் போவது பொருளாதார உதவிக்கு எங்கிறார் கட்டுரை ஆசிரியர்.

 

அவர் இந்த நேரம் போர் இல்லை என்று வைத்துக்கொண்டு ஆய்வு நடத்துகிறார் போலிருக்கிறது. அப்படியானால் வடக்கில் எதற்கு பாரிய இராணுவ மீள் கட்டமைப்பு, நெடுஞ்ச்சாலைகள் அமைப்பு எல்லாம்? இலங்கை போர் ஆயத்த நிலையை தளர்த்தாதவரைக்கும் இலங்கையில் போர் என்றுதான் கொள்ள வேண்டும். எனவே  சீனாவுடன் நடப்பது, பொருளாதார திரை சீலை மறைவில் போர் ஆயத்தங்கள். தமிழருடன் போர் முடிந்துவிட்டத்தால் ஆயத்தகங்களை பிரதானமாக இன்னொருதடவை வடக்கில் இந்தியா ஊடுருவாமல் இருக்க் செய்யும் ஆயத்தமாகத்தான் கொள்ள வேண்டும். நடப்பவற்றின் வெளித்தன்மைகளை வைத்து இலங்கை- சீனா ஆயுத முன்னேறங்கள்,  இலங்கை-இந்தியா பொருளாதார முன்னேற்றங்கள். என்று ஒரு ஒப்புக்குச் சொல்லாம். ஆனால் இந்தியா கூட தனது பொருளாதர முன்னேற்றங்களை திரிகோணமலை, வடக்கு என்றுதான் இது வரையில் வைத்திருக்கு. இனிமேல் அம்பாந்தோட்டைக்கும் போகிறது. இதில் இந்தியா தனது பக்கத்தால் முடிந்தளவு மறைத்துக்கொண்டு தன்னைத்தான் ஆயத்தம் செய்கிறது. அதனால் இதில் (1).  50% வீத கீரைக்கடக்கு எதிர் கடையும், (2).  50% எத்தனுக்கு, எத்தனும் தான்.  எனவே அவரின் ஒரு பகுதிதான் சரி.

 

மேலும் அவர் அமெரிக்காவின் முத்துமாலை கருத்தை தள்ளிவைத்துவிட்டு ஆய்கிறார். அதில் இலங்கை சீனாவை நோக்கி போவதிலும் பார்க்க சீனாதான்  தான் இலங்கையை நோக்கி வருகிறது.  அதை கூட அவர் முழுமையாக பார்க்க வேண்டும். கன்னகரா காலத்திலில் இலங்கை- சீனா 100 % சுத்த வியாபார நோக்கத்தில் இணைந்தார்கள்.  இங்கைக்கு அரிசி வேண்டும், சீனாவுக்கு ரப்பர் வேண்டும். ஆனால் 2000 களில் சீனா இலங்கையை அணைத்தது. இந்தக் காலம் முத்துமாலை ஆரம்ப காலம். 2008,2009 பின்னர் கதை முழுவதாக மாறிவிட்டது.  இந்த புதிய உறவை சொல்வதானால் திருநாவுக்கரசரின் தேவாரம்தான் தேவை. 1954 ஆண்டு "இலங்கை முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்". இன்றைய சீனா-இலனகை உறவு "பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள், தன்னை மறந்தாள், தன் நாமம் கேட்டாள், தலைப்பட்டாள் நன்கை தலைவன் தாளே". இனி இதில் எப்படி திரும்பி வரமுடியும் என்று அவர் இந்திய முதலீடுகள் தொடர வேண்டிய நாட்களுக்கான காலத்தை வரையறுக்கிறார் என்பது தெரியாது. இன்றைய இலங்கை-சீனா உறவை எப்படி முடிக்க முடியும் என்று அவரால் கூறமுடியும் என்பது தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்தரப்பிற்கு இவைகள் அல்ல தலையாய பிரச்சனை, மேற்குறுப்பிட்ட பிரச்சனையின் தன்மைகள் காலத்துக்குக்காலம் சூழ்நிலைக்கேறு மாறுவது தவிக்கமுடியாதது. தவிர அதின்மூன்றாவது அரசியல் அமைப்பென்பது தற்போதைய சூளலில் ஒரு வித்தை இந்த வித்தை படுதோல்வியில் முடியவேண்டும் அதாவது சிங்களத்தால் மீழப்பெறப்படல்வேண்டும் அப்போதுதான் எமக்கு நியாயம் கிடைப்பதற்கான பொதுவெளிஒன்று திறக்கப்படும். இதற்கான காலம் ஒரு பத்துவருடங்களாகவும் இருக்கலாம், அடுத்த தைப்பொங்கலுக்குச் சுதந்திரதமிழீழப் பிரகடனம் என்று சொன்னதைக் கேட்டே பல பத்து வருடங்கள் ஆகியது நினைவிருக்கு. ஆகவே எமது இலக்கு நோக்கிப்போவதை, இலகுவாக்குவதே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்ததின் மீள்பெறுகை. இதை சுங்களம் செய்யுமா? இதுதான் இப்போதைய கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.