Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் புளொட்டின் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமாலை 4மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.30மணிவரையில் நடைபெற்றது. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நேற்று 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.

 

24ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளை திரு.ராஜா ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு சிறீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கந்தசாமி குருக்கள் தீபச் சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்  அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கும், ரெலோ இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  அமரர் அமிர்தலிங்கம் உருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்தனர். அமரர் சிறிசபாரத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், அமரர் பத்மநாபா அவர்களின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மலர்மாலை அணிவித்தனர். தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மலராஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கழகக் கண்மணிகள் மற்றும் போராளிகளின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டது.

 

மௌன அஞ்சலியைத் தொடர்ந்து புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னைநாள் வவுனியா நகரபிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன்  தலைமை உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அஞ்சலி உரையாற்றினர்.

 

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் தனதுரையில்,

 

வீரமக்கள் தினமான இந்நிகழ்வில் அனைத்துப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருகின்றோம். இவர்கள் எதனை அடைவதற்காக தமது வாழ்வினை அர்ப்பணித்தார்களோ அவர்களது தியாகங்களுக்கு இடைக்கால தீர்வுகளெதுவும் ஈடு இணையாக முடியாது. இருந்தாலும் இன்று ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம்தான் அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையுமென்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் இன்றைய சூழ்நிலையில் படுகின்ற அவலங்கள் சொல்லிலடங்காது. அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ஆக்கிரமிப்பு, நிலப்பறிப்பு இவைகளினால் நாம் ஒரு தேசிய இனமாக எங்களது மண்ணிலிருந்து மறைந்து விடுவோமோ என்கிற நிலைமைகள் உருவாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எங்களிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதுவே எங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டதற்கான முழுமுதற் காரணமாக இருந்தது.

 

மேலும், இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய தலைவர்களதும், உறுப்பினர்களதும், பொதுமக்களதும் உயிர் அர்ப்பணிப்புக்களை ஞாபகப்படுத்துவதற்காக தனித்தனியாக நினைவு தினங்களை நடாத்துகின்றன. வருங்காலங்களிலாவது எம் மக்களிடையே இருக்கக்கூடிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒரு பொதுவான நாளினை தேர்ந்தெடுத்து அந்த நாளில் இந்த நினைவுகூரலை அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து நடத்த வேண்டும். இதுவே ஒரு சிறந்த நினைவு தினமாக இருப்பது மாத்திரமன்றி கசப்பான கடந்தகாலங்களை மறந்து ஒற்றுமையை வலுப்படுத்த அது உதவும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து புளொட் மத்தியகுழ உறுப்பினரும், வன்னிப் பிராந்திய அமைப்பாளருமான திரு. சிவநேசனின் (பவன்)  நன்றியுரையுடன் வீரமக்கள்தின நிகழ்வுகள் நிறைவடைந்தன.

 

இந்நிகழ்வுகளில் புளொட் முக்கியஸ்தர்கள், புளொட் அங்கத்தவர்கள், வவுனியா நகரசபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், கல்விச் சமூகத்தினர், தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், கணவன்மாரை இழந்த பெண்கள், மறைந்த எமது தோழர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94138/language/ta-IN/article.aspx

இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய தலைவர்களதும், உறுப்பினர்களதும், பொதுமக்களதும் உயிர் அர்ப்பணிப்புக்களை ஞாபகப்படுத்துவதற்காக தனித்தனியாக நினைவு தினங்களை நடாத்துகின்றன. வருங்காலங்களிலாவது எம் மக்களிடையே இருக்கக்கூடிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒரு பொதுவான நாளினை தேர்ந்தெடுத்து அந்த நாளில் இந்த நினைவுகூரலை அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து நடத்த வேண்டும். இதுவே ஒரு சிறந்த நினைவு தினமாக இருப்பது மாத்திரமன்றி கசப்பான கடந்தகாலங்களை மறந்து ஒற்றுமையை வலுப்படுத்த அது உதவும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

 

சொன்ன சொல்லை காப்பாற்றினால் சரி 

இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய தலைவர்களதும், உறுப்பினர்களதும், பொதுமக்களதும் உயிர் அர்ப்பணிப்புக்களை ஞாபகப்படுத்துவதற்காக தனித்தனியாக நினைவு தினங்களை நடாத்துகின்றன. வருங்காலங்களிலாவது எம் மக்களிடையே இருக்கக்கூடிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒரு பொதுவான நாளினை தேர்ந்தெடுத்து அந்த நாளில் இந்த நினைவுகூரலை அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து நடத்த வேண்டும். இதுவே ஒரு சிறந்த நினைவு தினமாக இருப்பது மாத்திரமன்றி கசப்பான கடந்தகாலங்களை மறந்து ஒற்றுமையை வலுப்படுத்த அது உதவும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

 

சொன்ன சொல்லை காப்பாற்றினால் சரி 

 

..அதாவது மாவீரர் தினத்தினை மாற்றச் சொல்கின்றார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.