Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ஸ் போர் ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Open%20letter_CI.jpg

 

தமிழ்ஸ் போர்  ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து Goshan Che என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது. தமது குரலுக்கு இடம் வழங்குங்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு அமைவாக இதனை மீள் எழுத்துருவாக்கலுக்கு உட்படுத்துமாறு கோரி மீண்டும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோளை சில நீக்கங்களுடன் பிரசுரிக்கிறோம். இதற்கு பதிலாகவோ, விமர்சனமாகவோ எழுதுபவர்கள் ஆரோக்கியமாக எழுதினால் மட்டுமே அவற்றை பிரசுரிப்போம். என்பதனை அறியத் தருகிறோம்.

ஆ.ர்

அண்மையில் நீங்கள் வெளிவிட்டிருந்த 'கொழும்பு விக்னேஸ்வரன்' என்ற அறிக்கைக்கான எனது பதில் இதோ.

முதற்கண் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வெளிவிடுவதை தவிருங்கள்.

விக்னேஸ்வரனின் மீதான உங்கள் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாயிருக்க வேண்டும். அவர் மீது  சேறடிப்பதாக  இருந்தால் அது தமிழர்களின் எதிரிகளுக்கே  நன்மையாய்  அமையும்.

இலங்கையில் இருக்கும் யாரும் தனி நாடு பற்றி அல்லது போர்க்குற்றம் பற்றி பேசினால், என்ன ஆகும் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தமிழ் மக்களினது  போராட்டம்  இப்போது  இரண்டு தளங்களில் நகர்த்தப்படுவது  அவசியமாகிறது. ஒன்று இலங்கைக்குள்  மற்றது இலங்கைக்கு  வெளியே.

இலங்கைக்குள்ளான  போராட்டம்  தேர்தல் முறைகளின்  படி இலங்கை சட்டத்துக்கமைவாக  முன்னெடுக்கப்பட  வேண்டும்.  இதைத்தான் த தே கூ செய்கிறது.  சி வியும்  இதைத்  தான் செய்வார்.

போர்க்குற்ற  விசாரணை  அழுத்தங்கள்,  தமிழக மாணவர்  போராட்டங்கள் என்பன  அதே சமயத்தில் இலங்கைக்கு வெளியே புலத்தில்  மேற்கொள்ளப் படவேண்டும். தமிழர்களின்  இலக்காகிய  இணைந்த  வடக்கு-கிழக்கு சுய நிர்வாக  அலகை  அடையும்  வரை  த தே கூவும், இபுலம் பெயர் அமைப்புகளும்  ஒரு  கொடியில்  பூத்த இரு மலர்களாக,  இரட்டை குழல் துப்பாக்கிகளாக  செயல்பட வேண்டும்.  இதுதான்  உலகளாவிய  தமிழரின் ஆவல், விருப்பம்.  இதுதான்  இன்றைய  கள யதார்த்தம். 

உங்கள்  அறிக்கையில்  நீங்கள் விக்னேஸ்வரனை கள யதார்த்தம் புரியாதவர் ( அவுட் ஆப் டச்) என்று சொல்கிறீர்கள். 

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள்   தனி நாட்டை  பற்றி கனவில்  யோசிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள்.. அவர்கள் தேவை  எல்லாம்  இப்பொது, வகை தொகையின்றி தொடரும் குடியேற்றத்தை எப்படி தடுப்பது, இராணுவமயமாக்கலை எப்படி தடுத்து நிறுத்தவது, போலீஸ் அதிகாரத்தை  எப்படி பெறுவது, காணி அதிகாரத்தை எப்படி தக்க வைப்பது,  தொழில்  வாய்ப்பிலும், கல்வியிலும், அபிவிருத்தியிலும் நியாயமான  பங்கை  எப்படி  பெறுவது, காணாமல் போன தமது உறவுகளை எப்படி மீட்பது, கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்காண தமது உறவுகளை எப்படி சகவாழ்வுக்கு கொண்டு வருவது, கணவர்களை இழந்து பெண் தலைமைத்துவத்தில் வாழும் குடும்பங்களின் அவலங்களை எப்படி போக்குவது, 30 வருட யுத்தத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலையில் இருந்து எப்படி மீழுவது   என்பது  போன்ற சிந்தனைகளில் நொந்து நூலாகிப் போய் உள்ளனர்..  அவர்களும்  மனிதர்கள் தானே.  எவ்வளவு  நாட்களுக்குதான்  உலகமே  எதிர்த்து  நிற்க  ஒரு  ஒற்றை இலட்சியத்துக்காக  போராட  முடியும்?  குறைந்தபட்சம் அவர்களுக்கு  தங்கள் பிள்ளைகளும்  நன்றாக  வாழ வேண்டும்  எனும்  ஆர்வமாவது  இல்லாமல் போகாது தானே.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒரு திடமான முதலமைச்சர் தேவை. மாகாண சபை முறைமையாலோ அல்லது முதலமைச்சராலோ இவற்றை எல்லாம் சாத்திக்க முடியாது என்பதனை இங்குள்ள தமிழர்கள் புரியாமல் அல்ல, அவர்கள் அரசியல் அறிவிலிகளும் அல்ல. ஆனால் இன்று இருக்கின்றவற்றையும் இழக்காமல் இருக்க இதனை ஒரு தற்காலிக ஆறுதலாகவாயினும் மாற்ற வேண்டும் என  ஏங்குகின்றனர்.  அதற்கு சீ.வீக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்க விளைகின்றனர். ஆயர்களும், மக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த தேர்வை ஆதரிக்கிறார்கள். இதில் ஆக்கபூர்வ விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால்  விமர்சனம் என்ற பெயரில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூடி முடிவு செய்த ஒருவரை, ஒரு கனவானை, மிகக் கீழ்தரமாக விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு  இல்லை. யாருக்கும்  இல்லை. உங்கள்  நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்,  தமிழர் ஒற்றுமையில் இப்படி மண்  அள்ளிப்போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? யார்  அந்த  உரிமையை  உங்களுக்கு  தந்தது?

உங்கள்  அறிக்கையில்  நீங்கள்  விக்னேஸ்வரனை  கொழும்பான் என்கிறிரீகள்.  முதலாவது  ஒன்றை  புரிந்து கொள்ளுங்கள் . விக்கினேஸ்வரன் எங்கு  பிறந்தாரென்பதல்ல முக்கியம். முன்னர்  தமிழர்களுக்கு  தலைமை தாங்கியவர்கள்  அல்லது  உலகத்  தமிழினத்தின்  தலைவர்கள் என்று தமிழர்களால்  போற்றப்பட்டவர்வர்களை எங்கு  பிறந்தார்  என்ற அடிப்படையிலா  தமிழர்கள் தலைவர்களாக  ஏற்றார்கள்?  அவர்களில்  பலர்  எந்த முறையில்  கிழக்கு  உட்பட்ட  முழு  இலங்கத்  தமிழருக்கும் ஏன்  உலகத்  தமிழர்களுக்கும்  தலைவர்கள் ஆகினார்களோ அதே முறையில்தான் விக்கினேஸ்வரனும்  முதலமைச்சர் வேட்பாளர்  ஆகினார். தமிழர்கள் எப்போதோ  தூக்கி  எறிந்து விட்ட  'பிரதேசவாதத்தை' இநீங்கள்  ஏன்  இப்போது  தூக்கி பிடிக்கிறீகள்?  மலேசியாவில்  பிறந்து  வளர்ந்த  கொழும்பில் வாழ்ந்த  தந்தை  செல்வாவும்  உங்கள்  பார்வையில்  தமிழர் தலைவராக  வரத்  தகுதியற்றவரா?  பல்லயிரம்  உயிர்க்கொடை  கொடுத்து நாம்  வளர்த்தெடுத்த  தமிழர் பிரதேச  ஒற்றுமையை, இப்படி குறுகிய நோக்கில் குலைத்தால்,  உங்களுக்கும்  கருணாவுக்குக்  அல்லது பிள்ளையானுக்கும்  என்ன வித்தியாசம்  இருக்க முடியும்?

அடுத்து  மானிப்பாயை  பூர்வீகமாக  கொண்ட  விக்கினேஸ்வரன்  தனது பெற்றார்  வேலை நிமித்தம்  கொழும்பில் இருந்ததால் கொழும்பில் பிறந்தார், வளர்ந்தார். எப்படி உங்கள்  பிள்ளைகள்  இன்று தழி ழே  பேசத் தெரியாது யூஎஸ் சிலும் லண்டனிலும், ஏனைய  ஐரோப்பாவிலும்  இருந்து கொண்டு ஈழப்போராட்டத்திற்கு  ஆதரவு  நல்குவதோடு,  ஈழப் போராட்ட அமைப்புகளுக்கு  தலமை  தாங்குகிறார்கள்.  இலங்கையில்  அல்லாது  இரண்டு 3  தசாப்தங்களுக்கு  மேல் புலம்பெயர்ந்து  வாழ்த்த  பலர் தானே இன்று  புலத்திற்கு  வெளியில்  ஈழப் போராட்டத்தை  நடத்துவதற்கு தலைமை  தாங்குகிறார்கள்.  அவர்களை  அவுட்டொப் ரச் என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை?   அதற்ககாக அவர்கள் பூர்வீகத் தமிழர்  இல்லை என்றாகி விடுமா?  ஆக  உங்கள்  பிரதே சவாத கருத்து  எல்ல வகையிலும் ஒரு பொருந்தா, காலத்துக்கு ஒவ்வாத,  அவுட் ஆப் டச் கருத்து என்பது தெரிகிறது. 

அடுத்து  இந்திஸ்தான்  பத்திரிக்கை  பேட்டியில் சி வி  இராணுவத்தையும் நேவியையும்  'நமது படைகள்'  என்று அழைத்ததாக  நீங்கள்  சொல்கிறீர்கள். இது  முழுப்பொய்யல்லவா? அந்த  பேட்டியில்  தானே  எமது  மண்ணில் 150000 க்கும் அதிகமான  'ஆக்கிரமிப்பு படைகள்'  நிற்கிறன. அவர்கள் வெளியேறும் வரை , இயல்பு  நிலை திரும்பாது என்கிறார் சி வி. 

இந்த முழுப் பூசணிக்காயை நீங்கள் எந்தச் சோற்றிலும் மறைக்க முடியாதே? இந்தப் பொய் மூலம்,  உங்கள்  அமைப்பு  மீது  தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்கு உள்ளாகிறது என்பதே உண்மை.

அடுத்து சி வி  தமிழ் நாட்டை  விமர்சித்து  விட்டார்  என்று  துள்ளிக் குதிக்கிறீர்கள்.  ஒன்றை  புரிந்து  கொள்ளுங்கள். தமிழக மக்களையோ, எமக்காக  தீக்குளித்த  முத்துகுமார்  போன்ற  தியாகிகளையோ, அல்லது நெடுமாறன்  போன்ற  தலைவர்களையோ  சி வி  ஒருபோதும் விமர்சிக்கவில்லை. அவர்  விமர்சித்தது  'காலை உணவு ஒத்திவைப்பு' போராட்டம் நடத்தியவர்களையும்  அவர் போன்ற அரசியல் வியாதிகளையுமே. இதில் என்ன தப்பிருக்கிறது?

உங்களுக்கு உண்மையிலே தமிழர்  நலனில்  அக்கறை  இருக்குமானால் இனிமேலும் இதுபோல ' சொந்த அழுக்கை நடுவீதியில் வைத்து கழுவும்' செயலில் ஈடுபடதீர்கள். த தே கூவும்,  சி வி யும்  எப்போதும்  விமர்சனங்களை வரவேற்பதாயே  சொல்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை  கூறுங்கள். இல்லாமல்  தொடர்ந்தும்  இப்படி தமிழர் ஒற்றுமை  மீது  சினைப்பர் தாக்குதல் செய்வீர்களாயின், நீங்கள் விலை போய்விட்டீர்கள்  என்றே கருத வேண்டி இருக்கும்.

  Goshan Che

 

//அடுத்து சி வி  தமிழ் நாட்டை  விமர்சித்து  விட்டார்  என்று  துள்ளிக் குதிக்கிறீர்கள்.  ஒன்றை  புரிந்து  கொள்ளுங்கள். தமிழக மக்களையோ, எமக்காக  தீக்குளித்த  முத்துகுமார்  போன்ற  தியாகிகளையோ, அல்லது நெடுமாறன்  போன்ற  தலைவர்களையோ  சி வி  ஒருபோதும் விமர்சிக்கவில்லை. அவர்  விமர்சித்தது  'காலை உணவு ஒத்திவைப்பு' போராட்டம் நடத்தியவர்களையும்  அவர் போன்ற அரசியல் வியாதிகளையுமே. இதில் என்ன தப்பிருக்கிறது?//
பிரச்சினை இங்கு தான் இருக்கிறது, சி வி யரைச் சொன்னார் என்பது பேட்டியில் சொல்லப் படவில்லை.பேட்டி சம்பந்தமாக எழுந்த விமரிசங்களுக்கும் அவர் இது வரை பதில் சொன்னதாகத் தெரியவில்லை.அவர் சார்பில் நீங்கள் சொல்லும் விளக்கம் டையிம்ஸ் ஒப் இந்தியாவில் வரப் போவதும் இல்லை.இந்திய தேசியப் பத்திரிகைகள் குறி வைப்பது தமிழ் நாட்டில் இருக்கும் தேசிய உணர்வை.இதனை சிவி புரிந்து கொள்ளவில்லை என்றால், அவரும் சம்பந்தன் முதலானோருடன் , இந்திய மத்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்தே விளையாடுகிறார் என்றே அர்த்தப்படும்.
இது தமிழத் தேசிய விடுதலைக்கு முற்றிலும் விரோதாமான ,விலைபோன செயற்பாடு.

புலம் பெயர் நாடுகளில் தமிழர், தாயகம் தொடர்பான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு அவர்களை புலிகள் என்று வர்ணிக்கிறது.  புலம் பெயர் தேசங்களில் புலிகள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தாயகத்தில் இருக்கும் அரசியல் வாதிகளை அரசு புலிகளாகி மேற்கு நாடுகளுக்கு காட்ட முயல்கிறது. வெளிநாடுகளில் இருப்பவர்களை புலிகளாக அரசால் வருணிக்க மட்டும்தான் முடியும். ஆனால் அதை நிறுவாத வரைக்கும் வெளிநாட்டு அரசுகள் அக்கறை எடுக்காது. ஆனால் இலங்கையில் அரசுக்கு எதையும் நிறுவிக்காட்டும் சித்திரவதை முறைகள் நன்கு பரீட்சயம். இதனால் தாயக அரசியல் வாதிகள் மேற்கு நாடுகளில் தடுக்கப்பட்டிருக்கும் புலிகளிலிடமிருந்து தம்மை விலத்திக்கொள்ளவது அவசியம் என்பதை உணர வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
நாரதர்,
இன்றைய தினக்குரலில் சி.வி உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார். யாழிலும் இணைக்கப்டடிருக்கிறது பாருங்கள்.ஆனாலும் இந்தியாவின் பேச்சை கேட்டே ஆக வேண்டும். இதுதான் யதார்த்தம். சி வி இந்திய அழுத்தத்தை லவகமாக கையாள்வார் என்று எதிர் பார்ப்போம். அல்லது எமக்கு வேறு என்ன தெரிவு இருக்கிறது?

////

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்கள் இலங்கையில் சமத்துவமும் கௌரவமும் உடையவர்களாக வாழவேண்டுமென்பதற்காக தமிழகத்தில் இருந்து குரல்கொடுக்கிற, போராட்டங்களை நடத்துகிற அரசியல் தலைவர்களையோ, சக்திகளையோ மலினப்படுத்தும் நோக்கில் எனது கருத்துக்களை அர்த்தப்படுத்த முயற்சிப்பது பொருத்தமற்றது.

குரல் கொடுப்பவர்களினதும் போராடுகின்றவர்களினதும் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன் என்றும் இந்துஸ்தான் ரைம்ஸுக்கு கூறியிருந்தேன். ஆனால், அவர்கள் இதை பிரசுரிக்கத் தவறிவிட்டனர்.

 

வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் தங்களுக்கான தீர்வை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென்று நான் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளருக்கு கூறினேன்.

 

அத்தகைய தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கையொன்றுக்குள்தானா என்று அவர் என்னிடம் கேட்டபோது, நான் அதற்கு "ஆம்' என்று பதிலளித்தேன். ஆனால், பிரசுரிக்கப்பட்ட பேட்டியில் அந்தப்பகுதிகள் பிரதிபலிக்கவில்லை.

 

 //

இப்போது தான் கவனித்தேன். இதைத் தான் இந்த பத்திரிகைகள் செய்யும் என்று தெரிந்திருக்க வேண்டும் பேட்டி கொடுக்கும் போது. பேட்டியின் முன் ந்கலைப்  பார்த்து சரி சொன்னபின்னர் தான் வெளியிட முடியும் என்று நிபந்தனை விதித்து இருக்க வேண்டும். புலத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியவற்றை நாம் செய்வோம்.அவருக்கு அங்கு உரிமை இல்லாவிட்டால் எதற்காக சுதந்திரமாக இருக்கும் நாம் செய்வது பற்றி அவர் அலட்டிக் கொள்ள வேண்டும். புலத்தில் இருந்து நாம் விமர்சித்த படியால் தானே இந்தப் பதிலும் வந்திருக்கு. ஆகவே அங்கு இருந்து உபதேசிப்பதை விட்டு விட்டு , யார் யார் எதிரிகளோ அவர்களுடன் மோதட்டும். சுதந்திரமாக இருக்கும் புலத் தமிழர்களைப் பற்றியோ இல்லை தமிழகத் தமிழர்கள் பற்றியோ அவர் ஏன் கவலை கொள்ள வேண்டும்? இதன் பின்னணியில் இந்திய வல்லாதிக்கம் இருப்பதாகவே நான் சந்தேகிக்கிறேன்.போகப் போக பூனைக் குட்டி வெளியால் வரும் தானே.மக்களும் ஊடகங்களும் அவதானமாக இருக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.