Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஒன்றை ஏற்படுத்த பொது பலசேனா முயற்ச்சிக்கிறது – டிலான் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3b9e75ed60b1ced24b7b31e5b8feab58.jpg

 நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த பொது பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத அமைப்பு முயற்சித்து வருகிறது. அவர்கள் அப்படி செய்யும் போது, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். இதனை பொறுக்க முடியாத பலசேனா அமைப்பு எங்களை பைத்தியம் என்று  கூறுகிறது என அமைச்சர் டிலான பெரேரா தெரிவித்துள்ளார்.

 
மதத்தின் போர்வையால், தம்மை தலைவர்களாக உருவாக்கி கொண்டு, இனவாதியாக இருப்பதற்கு பதிலாக பைத்தியகாரனாக இருப்பது சிறந்தது நான் எப்போதும் இனவாதியா இருந்ததில்லை.எவர் எதனை கூறினாலும் நான் இருக்கும் நிலைப்பாட்டில் இருந்து மனிதனாக செயற்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  மதம் என்ற போர்வையில் பல சேனாக்களை உருவாக்கும் சிலர், நாட்டை தீயிட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹாலி-எல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்புகும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
நாட்டில் இனவாத்தை தூண்டி நாட்டை பின்நோக்கி கொண்டு செல்வதை விட பைத்தியகாரனாக இருப்பது மேலானது. மதவாத, இனவாத வீரனாகும் தேவை எனக்கில்லை.  கடந்த காலத்தில் ஹலால் அச்சத்தை ஏற்படுத்தினர்.  இதன் மூலம் முஸ்லிம் சகோதரத்துவம் மேலும் வலுவடைந்தது. முஸ்லிம்கள் எப்போதும் சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் இருந்து வருகின்றனர்.
 
முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை. முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=856942204129780148

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான்.. மதத்தொடர்பை வைத்து இலங்கைவாழ் முஸ்லீம்களை மத்திய கிழக்குடன் சம்பந்தப்படுத்திவிட்டார்.. அதே மத சம்பந்தத்தால் தமிழர் இந்தியாவுக்கு கூடின உறவல்லோ.. அதையும் சொல்லலாமே.. :D

என்ன நக்கலா? முடிந்தால் இன்னொரு யுத்தம் செய்து பார்க்கட்டும் முஸ்லிம்களுடன்  :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுடன் சண்டை இடுவதா ? அவர்களின் பலம் இவருக்கு தெரியாது போல ...... அல்கைட, இஸ்கரி தொய்ப, ஜிகாத், போன்ற அமைப்புகளின் ஆதரவு இருக்கின்றது .......... பல அரபு நாடுகளின் முழுதான ஆதரவு இருக்கின்றது என்பதை சிங்களம் மறக்கக்கூடாது  :icon_mrgreen: இதற்க்கு மேலும் யுத்தம் செய்ய விரும்பினால் செய்து சாகுங்கள் நாங்கள் முஸ்லிம்கள் அப்போது செய்தது போல் வேடிக்கை பார்க்கின்றோம்  :o  :icon_idea:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.