Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மாவட்டத்தில் விவசாய கடன்களை கோரி நிதிநிறுவனங்கள் நெருக்குதல்

Featured Replies

வன்னி மாவட்டத்தில் விவசாய கடன்களை பெற்ற விவசாயிகள் தமது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவர்களுக்கு எதிராக குறித்த வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த ஜாப்பா அபேயவர்த்தனவின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த காலங்களில் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிகளில் விவசாய கடனை பெற்றுள்ளதோடு, வங்கிகளில் நகைகளை ஈடுவைத்து பணத்தை பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும் எதிர்பாராத விதத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உட்பட இயற்கை அனர்த்தங்களினால் வன்னி மாவட்ட விவசாயிகளின் பல ஏக்கர் விவசாய செய்கைகள் அழிவடைந்தது.

இதனால் குறித்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு மன உழைச்சலுக்கும் உள்ளாகினர். குறித்த இயற்கை அனர்ந்தம் 2011 மற்றும் 2012 ஆகிய காலங்கலிலேயே அதிகம் நிகழ்ந்தது.

இதனால் இந்த விவசாயிகள் குறித்த கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பாக 20-09-2012 அன்று திகதியிடப்படப்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடனை செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக குறித்த வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் குறித்த விவசாயிகள் தற்போது பாரிய மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தோற்றிவிக்கப்பட்டுள்து.

எனவே தற்போது உணவுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் குறித்த விவசாயிகளின் வங்கி கடன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.sankathi24.com/news/32005/64//d,fullart.aspx

போர் அழிவுகளுக்கான நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கும் வரைக்கும் ஒருசதமும் திருப்பி தர முடியாது என்று "அடித்துக்" கூறிவிடவேண்டியது தான்.

  • தொடங்கியவர்

குடுத்த காசுக்கு காணிகளை புடுங்கி வைப்பார்கள் இது அரச திட்டம் பாவம் எம் மக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.