Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி

Featured Replies

விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி
சனிக்கிழமை, ஆவணி 3, 2013 2:10 pm
dd-theva-270x155.png

ஜனதிபதி மகிந்தவின் வேண்டுகோளை (எச்சரிக்கை?)அடுத்து தனது முதலமைச்சர் பதவியை துாரப்போட்ட டக்ளஸ் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக  சின்னத்துரை தவராசா என்பவரை நியமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அவர்குறித்த பதிவு ஒன்றை ஈபிடிபி வெளியிட்டுள்ளது.அதனை கீழே தருகின்றோம்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட முற்போக்கு புத்திஜீவியாக மிளிர்ந்தவர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூலம் நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர்.

பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் சட்ட ஆலோசகராக விளங்கி வருகின்றார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் சம புலமை உடையவர். அதே போல சட்ட நுணுக்கங்களிலும், அரசியல் சாணக்கியங்களிலும் சிறந்தவர்.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு திறமையில் சற்றும் சளைத்தவர் அல்லர்.

அரசியல் கற்றுக் குட்டியாக உள்ளார் என்று சுயம் ஒப்புக் கொண்டு உள்ளார் விக்னேஸ்வரன். இது விக்னேஸ்வரனின் மிகப் பெரிய பலவீனம்.

ஆனால் அரசியலில் மிக நீண்ட அனுபவமும், அறிவும் உடைய தவராசா உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளை காட்டிலும் சட்ட அறிவில் முதிர்ந்தவர். குறிப்பாக அரசியல் சட்டத்தில் மேதாவி. அதிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தம், 13 ஆவது அரசமைப்புத் திட்டம் போன்றவற்றின் சரத்துக்களை கரைத்துக் குடித்தவர்.

தமிழர்கள் போராடிப் பெற்ற வரப் பிரசாதமான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமான அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பற்றுறுதியுடன் செயற்பட்டு வருபவர். மட்டும் அல்லாமல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாத்தே ஆக வேண்டும் என்று பகிரங்கமாக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றார். சர்வ கட்சி மாநாட்டில் ஈ. பி. டி. பியின் சார்பில் கலந்து கொண்டு பேராசிரியர் திஸ்ஸ விதாரண உட்பட ஏனைய அமைச்சர்கள்கூட வியக்கத் தக்க வகையில் வாதங்களை மு வைத்து அமோக பாராட்டுகளை வென்றவர். இவர் சட்டத்தரணி அல்லர். ஆனால் எந்தவொரு சட்டத்தையும் சுருங்கக் கூறி இலகுவாக விளங்க வைக்கக் கூடியவர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராக வரித்து உள்ள இவரின் சிறப்பியல்புகளில் ஒன்றே அமைச்சரைப் போலவே பழகுகின்றமைக்கு எளிமையானவர், இனிமையானவர். இடைத் தரகர்கள் எவரும் இன்றி நேரடியாகவே மக்கள் சந்தித்துப் பேசக் கூடிய ஒருவர்,

விக்னேஸ்வரன் கொழும்பு கறுவாக்காட்டுக்காரர். தவராசா வடக்கில் வயல் காடு மற்றும் பனங்காட்டுக்காரர்.

மாகாண சபையை நடத்துகின்றமைக்கு அல்லது மாகாண சபையை வழி நடத்துகின்றமைக்கு மிக பொருத்தமான ஒருவராக சிவில் அமைப்புக்கள் பிரதிநிதிகள் இவரை காண்கின்றனர்.

என்று தெரிவிக்ப்பட்டுள்ளது

http://urumal.com/2013/08/03/14211/

 

டக்ளசின் ஆலோசகர் என்றா சும்மாவா? அதுவே ஒரு பெரிய தகுதிதான் இவருக்கு. அடுத்து ஒபாமாவிற்கு அரசியல் சட்ட ஆலோசகரா போனாலும் நாம் ஆச்சரியப் படலாம். பாவம்  தவறான ராசா  அவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு ஏன் இந்த சின்னபிள்ளை பதவியான முதலமைச்சரா வர ஆசைப்படுகிறார்- வாழ்நாள் முழுதும் டக்ளசுக்கு கால் கழுவலாமே ?   (உயர் உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது தம்பி) :icon_idea: 

விக்கினேஸ்வரன் எந்த வகையிலும் சவால் அல்ல: சுசில் பிரேமஜயந்த

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் போட்டியிடுவது எமக்கு, எந்த வகையிலும் சவால் அல்ல.

மேலும் கூட்டமைப்பு வடக்கில் வெற்றி பெற்றுவிட்டால் ஏற்படும் ஆபத்துத் தொடர்பில் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

ஆபத்தான நிலமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் முகாம்களிலேயே இருப்பதாகவும், அவர்கள் வீதிகளில் இல்லையெனவும், வீதிகளில் பொலிஸாரே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=6251

கடத்தல், கப்பம் கும்பலில் ஒருவர் இந்த தவ(றான)ராசா.

தேவா தன்னிடம் விக்கினேஸ்வரனைவிட நல்ல வேட்பாளர் இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னையில் உள்ள எல்லோரும் நீதியரசர் விக்கினேஸ்வரனை அப்படி குறைத்து எடை போடத் தயாரில்லை. சம்பிக்க, விமல் போன்றோர் அவர் பார்த்து "புலி, புலி" என்று இன்னமும் ஊளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் UPFA இன் தலைவரோ நீதியரசரை பேயாகவே காண்கிறார் என்று குற்றம் சட்டப்பட்டிருக்கிறார். 

 

இந்தப் பேய் அப்படி ஒன்றும் கறுப்பாக இல்லை என்று நீதியரசர் விக்கினேஸ்வரனை பற்றி தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார் மகிந்தா. முன்னர் ஒருதடவை பேய்க்கு பயந்தவன் சுடலைக்குள் வீடு கட்டுவதில்லை என்றும் ஒரு பேய்க்கதை பேசியவர் மகிந்தா. அப்புறம் ஏன் மகிந்தா நீதியரசர்ப்பேய் கறுப்பா இல்லையா என ஆராய்ந்தார் என்பது ஒரு திறந்த கேள்வி. ஆனாலும் அதை ஆராய்ந்து கொள்பவர்கள் தங்கள் தங்கள் இஸ்டத்திற்கேற்ப ஏற்ப பொருள் கற்பித்துக்கொள்ளலாம். மகிந்தருக்கு அதில் அதிகம் மறுப்பு ஒன்றும் இருக்காது. 

 

மகிந்தா எதோ  காரணத்துக்காக பேயை ஆராய்ந்து அறிக்கை கொடுத்திருக்கிறார். அவரின் கண்களுக்கு அது அவ்வளவு கறுப்பாக இல்லாமால் இருக்கிறது. வழமை போல மேற்கு நாட்டு அரசியல் வாதி ஒருவரின் வாய்க்குள் இருந்து வராதா ஒரு வார்த்தைதான் இங்கும் மகிந்தா சொல்லியிருப்பது. ஏன் எனில் மேற்கில் "Out of Context Interpretation" என்ற ஒரு பேய் உலாவி வருவதுண்டு. அது கவனக்குறைவாக பேசும் அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முழுவதாகவோ அல்லது பாகுதியாகவோ குடித்துவிடக்கூடியது. அண்மையில் அதிகாரமிக்க அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பதவி சுசான் றைஸ்சுக்கு கிடைக்காமல் போனது அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்முகம் கொடுக்கும் போது அமெரிக்காவின் லிபிய தூதுவரின் மரண விசாரனையை குறைத்து எடை போட்டு பதில் சொல்லியிருந்தமையே. அதே நேரம் அதிபர், ஒபாமா, பயங்கரவாதம் தவறாமல் விசாரிக்கப்படும் என்று சுசான் றைசுக்கு முதல் பதில் அளித்திருந்தார். சுசான் றைசின் பதில்கள், லிபியாவில் நடந்தது பயங்கரவாதமில்லை என்றதாக பொருட்ப்படுத்தபட்டு அவர் பதவி ஏற்காமல் தடுக்கப்பட்டுவிட்டது. அங்கு அரசியல்வாதிகள்  வெளியார் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது வாளின் நுணியில் நடப்பது போன்ற சிக்கலான விடையம். ஆனல் மகிந்தர் பேயின் நிறம் பற்றி பேசியிருப்பது இலங்கையில் தானே. யார் அதைப்பற்றி என்ன நினைத்தாலும் அவருக்கு கவலை இல்லை. அங்கு சந்திர மண்டலத்திலுமிருந்து மகிந்தாவின் SLFP கட்சி அரிசி கொண்டுவந்திருக்கு. அதனால் இப்படியான பேயின் நிறத்தை ஆராயும் அரசியல் விஞ்ஞானங்கள் சர்வசாதரணமாக அல்ல, "சபாஸ்" என்று ஒரு plus point உடன் வரவேற்கப்பட்டுவிடும்.

 

ஊடக அடக்கு முறை அதி உச்ச தாண்டவம் ஆடும் இலங்கையில் கூட, அதன் அதிபர் ஒருவர் ஒரு செய்தி சொன்னால் அதை ஆராயத்தான் முயல்வார்கள். அதனால் இந்த பேய் வெள்ளையாக இருப்பதன் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி மட்டும் அங்கு கூட இல்லாமல் போகாது. தமிழர்கள் யாரும் நீதியரசர் விக்கினேஸ்வரனை அப்படி ஒன்றும் பேய்-வெள்ளையாக காணவில்லை. அவர்கள் அதிகாரமே இல்லாத மாகாணசபைக்கு அவரை முதலமைச்சராக்கினாலும், அவர் அங்கு எதோ அரசியல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துத்தான் அனுப்புகிறார்கள். தாமே அவர் என்ன செய்வார் என்றதை தெரியாமல், "ஏதோ செய்வார்" என்று அவர்கள் அங்கு அவரை அனுப்பும் போது, நிச்சயம் அவர் அவர்களின் நம்பிக்கை பாத்திரமாக இருக்கிறார் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. தமிழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அப்படி ஒருவரை இலங்கை அதிபர் பேய் என்று அழைப்பது தமிழ் மக்களைப் புண்படுத்தாத? என்பதல்ல இங்கே பிரதான கேள்வி. அதாவது அவர் தமிழ் மக்கள் புண்படுவதை தவிர்க்க விரும்புபவரும் அல்ல, அதே நேரம் அவர் நீதியரசரை "பேய்" என்ற தமிழ் சொல்லின் எந்த பொருளுடனும் இணைத்துப் பேசவுமில்லை.

 

"அப்போ என்னதான் இங்கே பிரச்சனை?" என்ற கேள்வி இன்னமும் திறந்தபடி இருக்கிறது. மகிந்த தன்னைத்தான் முழுமுதல் கடவுளாக நினைத்துக்கொள்பவர். அதனால் இயற்கையாக அவரை  சுற்றி நிறையத்ததான் பேய்க்கணங்கள் ஆராத்திதுக்கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு அவர் சொல்லிய சேதிதான் இது. இது தமிழ் மக்களோ, சிங்கள மக்களோ எவர் வரையும் வராது.  அவரை சுற்றி இருக்கும் பேய்க்கணங்களின் ஆவலான எதிர்பார்ப்பாகிய "கடவுளா, சாத்தானா இந்த தடவை வெல்வார்" என்ற எதிர்ப்பார்ப்புக்கு அவர் கடவுள்தான் வெல்வார் என்று பதில் சொல்லியிருக்கிறார். விக்கினேஸ்வரன் தேர்தலில் வென்றால் இன்னொரு மனிதாபிமானமான யுத்தம் ஒன்றை வடக்கில் நடத்தக்கேட்கும் பேய்கணங்களுக்கு அவர் சொல்லியிருப்பதுதான் இது. கலிகத்துப்பரணியில், கொற்றவையை சுற்றியிருக்கும் பேய்கள் குலோத்துங்கனின் போர் கொலைகளில் வரும் மனித நிணத்திலும் இரத்தத்திலும் ருசியாக கூழ் காச்சிக்குடிப்பதற்கு அவன் பின்னால் அலைவது போல அலைவதுதான் இந்த கணங்களும் செய்வது. ஆனால் தமிழர் இந்த தடவையும் எலும்பும் சதையும் இரத்தமும் பொறுக்க ஆமியை அனுப்ப வேண்டியத்தில்லை என்றிருக்கிறார் முழுமுதல் கடவுள். அது அவரை சுற்றியிருக்கும் பேய்க்கணங்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். 

 

இந்த முறை "கிழட்டு எல்லாளனை கைமுணு தனிய கையாள்வார்" என்கிறாராக்கும். ஆனால் மகிந்தா அப்படி ஒன்றும் கைமுனு மாதிரி, ஒன்றுக்கு ஒன்றாக, நேர் சமருக்கு அழைத்து போர் புரிபவர் அல்ல.  அவர் விழுத்திய எல்லோரும் முதுகில் குத்தப்பட்டவர்கள். தயான் ஜெயதிலகா, பொன்சேக்கா, சிராணி, சந்திரிக்கா, ரணில், லசந்தா, வாஸ் குணவர்த்தனா, மனமோகன் சிங், பிளெக், சொலெயும், ராதிக்கா குமராசாமி, தாமரா குணநாயகம், K.P, கதிகாமர், பீரிசு, கக்கீம் சிதம்பரம், கனிமொழி, சிவசங்கர் மேனன்  சகலரும் இப்படி விழுந்தவர்கள் தான். வீழ்ந்து மாண்டவர்கள் என்பதிலும் பார்க்க அடக்கப்பட்டவர்கள் என்பது தான் கூட உண்மை. எப்படி மகிந்தா இப்படி ஒவ்வொரு தடவையும் வெற்றி கொள்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள அவரின் புத்த சமய மகிந்த சித்தாந்தை விளங்கினால் சற்று இலகு. "ஆசையே துன்பத்திற்கு காரணம், அதை நீக்கிவிட்டால் துன்பம் நீங்கிவிடும்" என்கிறது புத்தமதம். ஆனல் ஆசை சதி செய்கிறது. யாரை அது விட்டது. அதனால் ஆசைகாட்டும் மகிந்த சித்தாந்தத்தில் விழுந்தவர்களில் சிலர்தான் இவர்கள். மகிந்த சித்தாந்தத்தை இந்த அரசியல் முட்டாள்கள் அறியாமல், அளவு கடந்த ஆசையால், அசோக வனத்தில், தலதா மாளிகையில், அலரி மாளிகையில் அபரிமிதமாக சிலிர்த்துப்போய் இருக்கும்  தடுக்க பட்ட ஆபிள் பறித்து சாப்பிட்டுவிடுகிறார்கள். இப்படி செய்த திருட்டால் வரும் வெக்கத்தை, அவமானத்தை மறைக்க இந்த அரசியல் சிங்கங்கள், பண்டிதர்கள், குருவுகள் தாமாகவே தமது முதுகை திருப்பிக்காட்டி மகிந்தரை குத்து என்று கேட்டு குத்து வாங்கிக்கொண்டு போகிறார்கள். 

 

ஆனால் இது எப்பொதுமே அவ்வளவு இலகுவாக மகிந்தருக்கு இருந்ததில்லை. சில பேய்களை இருட்டில் வைத்து கறுப்புப்பேயையும், நிறைஇருட்டையும் வேறு படுத்திப் பார்த்துக் குத்துவது அவருக்கும் சற்று சிரமாக இருந்திருக்கிறது. கனகரத்தினம், சனல் 4ல் வந்த வாணி, வைத்தியர்கள் போன்ற பேய்களை அவர் அவர் குத்தியவிதம் வேறு. சுடலையில் இருட்டுடன் இருட்டாக மறைந்து நின்று ஆடிய இந்த பேய்களை பிடிக்க, அவர், முதலில் அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குட்டிபேய்களை, பெண்டிர் பேய்களை தனது வீட்டுக்கு இழுத்து வந்து கொள்ளிக் கட்டையால் சுட்டு சுட்டு கதற வைத்து ஆட்டம் போட்ட பேய்களை இருட்டிலிருந்து வெளியே வரவைத்து குத்தினார். 

 

மகிந்தா கடுப்பாக நின்றாடும் பேய்களை ஒருவிதமாகவும் ஒத்துழைக்கும் பேய்களை இன்னொருவிதமாகவும் அவைக்கேற்ற வழிகளாக ஆடியும், பாடியும்தான் குத்தி வந்தார். ஆனால் அவரின் கணங்களான சம்பிக்க, விமல், குணதாச அமரசேகரா போன்றோர் நீதியரசைப்பார்த்து "புலி, புலி" என்று ஊளையிட்டதால்த்தான் மகிந்தா இந்த பேயின் நிறத்தை ஆராய்ந்து பார்த்து பதில் சொல்லியிருக்கிறார். அதாவது மகிந்தாவால் விக்கினேஸ்வரனை புலி என்று பட்டம் கட்டி கனகரத்தினம் போன்றவர்களுக்கு கொடுத்த புனர்வாழ்வு கொடுக்க முடியாது. எனவே பாதையை மாற்றியிருக்கிறார். இது கறுப்பல்ல எங்கிறார். அதனால் அவர் போகப் போகும் பாதை மகிந்த சித்தாந்தம் என்று அந்த பேய்கணங்களுக்கு சொல்லியிருக்கிறார். நீதியரசர் விக்கினேஸ்வரன் என்ன, மகிந்த சித்தாந்தத்தால் இலகுவில் கவரப்பட்டுவிடக்கூடிய  சாதரண நபரா என்பதை காலங்கள் போக மகிந்தா அறிந்து கொள்வார். ஆடியோ, பாடியோ கறக்க முடியாத காட்டெருமைகளும் தோட்டத்தில் உண்டு என்பதை அவர் தேர்தலின் பின்னர் உணருவார்.

Edited by மல்லையூரான்

  • 3 weeks later...

சபாஷ் போட்டித்தான். :lol:  :lol:  :lol:  :lol:

 

 

விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை நன்கு தெரியும்: சுசில் பிறேமஜயந்த

திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013 02:05 0 COMMENTS
DSC03550.JPG
-எஸ்.சொரூபன்

'தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், 'எமது கட்சியானது அமைதியான ஒரு தேர்தலையே விரும்புகிறுது, அமைதியான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் த.தே.கூ. பொய்யான பிரசாரங்களின் மூலம் மக்களினை நாடிச் செல்கின்றது. 

அரசு இதுவரையில் எவ்வளவோ பெரிய அபிவிருத்திகளினை மேற்கொண்டுள்ளது அதில் எந்தவொரு அபிவிருத்திகளையும் த.தே.கூ. அரசிடம் கேட்டதில்லை. குறிப்பாக முன்னால் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் செயற்பாட்டைக்கூட அரசு தானாகவே மேற்கொண்டது இதனைக்கூட த.தே.கூ. கேட்கவில்லை' என்றார்.

மேலும், 'த.தே.கூ. பொலிஸ், காணி அதிகாரங்களினை முன்னிறுத்துகின்றனர் ஆனால் இலங்கையின் ஏனய 8 மாகாணங்களும் இவ்வதிகாரங்கள் இன்றிதான்; இயங்குகின்றன அவ்வாறு இருக்கையில் வடக்கில் மட்டும் இவ்வதிகாரங்கள் மூலம் அபிவிருத்தினை செய்யமுடியாது. இந்தியாவை விட இலங்கை எவ்வளவோ சிறிய நாடு இதில் இவ்வதிகாரங்களை பிரிப்பது அவ்வளவு சுலபமல்ல' என்றார்.

அத்தோடு, 'யாழ். தீவுப்பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கும் எமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை அது கட்சி ஆதரவாலர்களின் செயற்பாடாக இருக்கலாம் இதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. வலி. வடக்கில் 2003ஆம் ஆண்டு 64 சதுர கிலோ மீற்றரிலும், 2004ஆம் ஆண்டு 37 சதுர கிலோ மீற்றரிலும், 2013ஆம் ஆண்டு 24 சதுர கிலோ மீற்றரிலும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெறும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் முதன்மை வேட்பாளர் தவராஐக், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் அங்கையன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
  • கருத்துக்கள உறவுகள்

தவ(றான)ராசா, இங்கிலாந்தில் இருந்து கொண்டு... தீபம் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில்...
எச்சிலால்... நக்கி, நக்கி... கையில் வைத்திருந்த குறிப்புகளைப் பிரட்டியதைப் பார்த்த போது...
இவரின்... மூஞ்சயைப் பார்க்கவே... அருவருப்புடன் வயித்தை குமட்டிக் கொண்டு வாந்தி தான் வருது.smileys-vomiting.gif

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல், கப்பம் கும்பலில் ஒருவர் இந்த தவ(றான)ராசா.

 

 

அது தான் தலையங்கத்தில் இருக்கே

சற்றும்  சளைத்தவரில்லை  என்று...... :lol:

தவ(றான)ராசா, இங்கிலாந்தில் இருந்து கொண்டு... தீபம் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில்...

எச்சிலால்... நக்கி, நக்கி... கையில் வைத்திருந்த குறிப்புகளைப் பிரட்டியதைப் பார்த்த போது...

இவரின்... மூஞ்சயைப் பார்க்கவே... அருவருப்புடன் வயித்தை குமட்டிக் கொண்டு வாந்தி தான் வருது.smileys-vomiting.gif

ஏன் பாஸ் இவனுக  எல்லாம் அரசியலுக்கு வரலை என்று யாரு அழுதா ?  குத்தியன் அட்டூலியம் காணாது என்று இவன் வேறையா? :D

ஈ.பி.டி.பி. காடையர் கும்பலில் ஒரு விக்னேஸ்வரன் இருந்தாராமே!  
அவருடன் ஒப்பிட்டிருப்பார்கள்.

விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி

1150956_637271516297798_183749023_n.jpg

//இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு....
நம்புனாதான் சோறுபோடுவேன்னுமகிந்த மாமா சொல்லுச்சி.... நானும் நம்பிட்டேன்.... நீங்க எப்டி... சாப்புடுறிங்களா... இல்ல.....//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.