Jump to content

பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை ? திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது!


Recommended Posts

 பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், செக்ஸ் தொல்லை கொடுப்பதாக” கூறி இருந்தார்.

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.

இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது…

என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன்.

என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  http://goldtamil.com/?p=4114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

556401_569897693069234_327472477_n.jpg

 

ஜேம்ஸ் வசந்தன் நல்லதொரு அறிவிப்பாளர்.
இப்படியான... அசிங்க வேலைகளைச் செய்யக்கூடியவராகத் தெரியவில்லை.
பக்கத்து வீட்டுப் பெண், பொய்ப் புகார் கொடுத்திருக்கவே.... சாத்தியங்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வசந்தன் கைது... கமிஷனர் ஜார்ஜ்ஜின் மலையாளப் பாசம்:

சுப்ரமணியபுரம், பசங்க‌ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னைபோலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம். 

கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.


ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட‌ உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக‌ சொல்கிறார்கள். 

சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.

ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.

லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் ஜிப்பை கழட்டிக் காட்டியதாக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது 'தமிழ்நாட்டில்' அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது 'ஜீன்ஸ் பேண்டா', 'காட்டன் பேண்டா' என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக‌ தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.

 

https://www.facebook.com/vallavan.udayaraj

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவன், உங்களது இடுகையை எல்லோரும் வாசிக்கவேண்டும் என்பதற்காக யாழ்களத்தில், உங்கள் பதிவிற்கு அசிங்கமாகத் தலைப்பெழுதி "மித்திரன் பத்திரிகை" ரேஞ்சுக்குக் கொண்டுவந்திட்டியள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தமிழர் தலைநகரிலேயே ஒரு தமிழர் நிம்மதியா இருக்க முடியவில்லையா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.