Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செரென்டிப் (Serendib)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gordon Weiss எழுதிய *கூண்டு" என்ற புத்தகத்திலிருந்து இலங்கை தீவு பற்றி ஒரு சில சுவாராஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். சிலரிற்கு இது ஏற்கனவே தெரிந்தவிடயங்களாக இருக்கலாம். உங்களிற்கு தெரிந்தவற்றையும் இங்கே பதியலாம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 

இலங்கையின் இன்னொரு பெயர் தான் செரென்டிப். தற்செயலாக மகிழ்சிக்குரியவற்றை கண்டுபிடிப்பது என்பது அதன் பொருள்.
அரேபிய மொழியில் இலங்கையை செரென்டிப் என்று அழைப்பார்கள். 

வட இந்தியாவில் இருந்து கி.மு. 483இல் விஜயன் 700 வீரர்களுடன் நாடுகடத்தப்படுகிறான். 
அதே ஆண்டில் தான் புத்தரும் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதற்கு முன்னர் புத்தர் மூன்று முறை இலங்கை வந்துள்ளார். 

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் துட்டகைமுனு என்ற அரசன் அண்டைநாட்டு தமிழ் அரசனான எல்லாளனை வீழ்த்துவதை மகாவம்சம் கொண்டாடுகிறது.
எல்லாளன் வீழ்கிறான், தமிழர் படைகள் முறியடிக்கப்படுகின்றன, சிங்கள மொழி, இனம், பௌத்தம் அனைத்தும் காப்பாற்றப்படுகின்றன. இது ஆரம்பப்பள்ளி சிங்கள மாணவர்களிற்கு கற்றுத்தரப்படுகிறது. 

துட்டகைமுனு-எல்லாளன் போர் உண்மையில் நடைபெற்றதா என்பதை உறுதியாக கூறமுடியாது.
மகாவம்சத்தில் கூறியது போல் துட்டகைமுனு-எல்லாளன் போர் நடந்திருந்தாலும் அது முழுவதும் உண்மை என நம்பமுடியாது.
துட்டகைமுனு-எல்லாளன் போர் நடந்து 500ஆண்டுகளிற்கு பின்னர் எழுதப்பட்டதே மகாவம்சம். 

ஆங்கிலேயர் வரும்வரை மகாவம்சம் என்பது மறக்கப்பட்டிருந்தது. 1838இல் அது சில ஆர்வலர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது (அதுவரை அது பாளி மொழியில் தான் இருந்தது). 

ஆனால் அதை மொழிபெயர்த்தவர்கள் யாரும் ஆங்கிலத்தில் அறிஞர்களல்ல. எனவே அதை சரியாக கணிக்காமல் இலங்கை சிங்களவர்க்கே உரித்தானது என்ற ஒரு பிரமையை உருவாக வித்திட்டனர். 

அதன் பின்னர் 1877இல் ஆங்கில ஆளுநர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்த பொழுது தான் அப்படி ஒன்று இருப்பதே பெரும்பாலான சிங்களர்க்கு தெரியவந்தது. 

இறுதியாக இருந்த ஒரே ஒரு தமிழ் கண்டியரசு ஆங்கிலேயர்களின் கீழ் வந்த போது ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. 
அந்த உடன்படிக்கையில் மூவர் தான் சிங்கள மொழியிலும் ஏனையர்வகள் தமிழ்பொழியிலும் கையெழுத்திட்டனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் முன்னோர் ஒருவரும் தமிழில் தான் கையெழுத்திட்டுள்ளார் என்பது சுவையான செய்தி.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலிருந்து காலனி ஆதிக்கத்திற்கு விசுவாசமாயிருந்த சிங்களவர்கள் முதலியார் என்றழைக்கப்பட்டனர். இலங்கையின் சுதந்திரத்திற்கு பின் பிரதமர்களான சேன நாயக்கர்கள், பண்டார நாயக்கர்கள் எல்லோரும் இந்த வழி வந்தவர்கள் தான். 
இலங்கை அரசியலில் செழித்து நிற்கும் பல சிங்களவர்கள் இப்படியான செல்வந்தர்கள் தான். இந்நிலை மகிந்த அதிபராகும்வரை நீடித்தது. 

1955ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பண்டாரநாயக்காவிற்கு சிங்களம் பேச வராது என்பது இன்னொரு சுவையான செய்தி.

பண்டாரநாயக்கா சேனநாயக்காவுடன் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி இலங்கை சுதந்திர கட்சியை நிறுவினார். பின்னர் 1959ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா அவரது தோட்டத்தில் வைத்து பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டார்.

இதில் ஒரு குறிப்பிடும்படியான விடயம் நடந்தேறியது. பண்டாரநாயக்கா தனியாக சுதந்திர கட்சியை ஆரம்பித்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் டான் அல்வின் ராஜபக்சே! இன்றைய மகிந்த கும்பலின் தந்தை இவர் தான்.

சிங்கள இளைஞர்கள் சிங்கள அரசிற்கெதிராக கிளர்ச்சியில் இறங்கிய போது மகிந்தவும் அதில் அடங்கியிருந்தார். அவர் தனது நண்பர்களுடன் ஆயுதம் தாங்கி ஒரு மறைவான இடத்திலிருந்து கொடுத்த பேட்டியை இன்றும் நாம் இணையத்தளங்களில் காணலாம்.
பின்னர் மகிந்தவும் அவரது சகோதரரும் ஜெயவர்த்தெனே அரசிடம் இருந்து தப்பி அவ்வப்போது வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

"தென்னிலங்கையில் என் மக்கள் மீது நடைபெறும் கொடுமைகளை ஐ.நா. தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்" என ஜெனிவாவில் உள்ள ஐ.ந. கட்டிடத்திற்கு அடிக்கடி ஒருவர் வந்து கூறியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் வேறு யாருமல்ல. மகிந்த ராஜபக்சே தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மகிந்த ராஜபக்சே சிங்கள அரசால் வேட்டையாடப்பட்ட சிங்கள இளைஞர்களிற்காக ஐ.நா.வுடன் வாதாடிக்கொண்டிருக்கையில் அவரின் தம்பி கோத்தபாய சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து சிங்கள இளைஞர்களை வேட்டையாடினார். அப்பொழுது கோத்தபாயாவை விட உயர்ந்த பதவியிலிருந்தார் பொன்சேகா. 

தொடரலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம்.. தொடருங்கள் செங்கொடி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.