Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைவனின் சீற்றம்

Featured Replies


                                                                                    இறைவனின் சீற்றம்
 
சென்ற யூன் [2013] மாதத்தில்  உத்தரகண்ட் மாநிலத்தில் மிகமோசமான பேரழிவு ஏற்பட்டது.அதுபற்றிய உண்மைகளை இந்திய ஆட்சியாளர்களும்
அவர்களை ஆதரிக்கும் ஊடகங்களும் அமுக்கிவிட முயன்றன.எனினும் பிணக்காடாகக் காட்சியளித்த அப்பகுதிபற்றிய செய்திகள் வெளியே
கசிந்துள்ளன." சுமார் 50ஆயிரம் பேர்வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" [குமுதம்:03-07-2013;பக்.137].  இறந்தவர் எண்ணிக்கை
பற்றி உறுதிபடக் கூறமுடியாதெனினும் நிகழ்ந்தது "இமாலயச்சுனாமி" எனக்குறிப்பிடப்பட்டிருப்பது அதன் பாரிய அளவினைச் சுட்டுகிறது
எனலாம்.
 
                       கேரளமாநிலத்திலிருந்து அங்கு உதவிப்பணிக்காகச் சென்ற மருத்துவர்குழுவின் கருத்துப்படி அங்குள்ள மக்கள் தங்கள் உற்றார்
உறவினர்களை இழந்துள்ளனர். உளப்பாதிப்படைந்துள்ள அம்மக்களுக்கு ஆறுதல்தேறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தவேண்டும். பல பாடசாலைகளில்
மாணவர்கள்,ஆசிரியர்களைக் காணவில்லை. பல கிராமங்கள் பெரும்பான்மையான குடும்பத்தலைவர்களை இழந்துள்ளன. பல கிராமங்களில்
ஆயிரக்கணக்கான வாகனங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை.பாதைவசதிகள்,
தமது சொத்துகள், வாழும்வழிமுறைகள் எல்லாவற்றையும் இழந்துள்ள அந்த மக்கள் வழமைநிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கலாம்.
 
                          அறநெறி வழிமுறைகளைப் புறக்கணித்து அதிகார அகங்காரத்துடன் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை மேற்கொண்ட
இந்திய ஆட்சியாளர்க்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே "இமாலயச்சுனாமி"யை  நான் கருதுகிறேன். "வேந்தன் அன்றறுப்பான், தெய்வம்
நின்றறுக்கும்"  என்ற முதுமொழிக்கேற்ப முள்ளிவாய்க்கால் அழிவின் நான்குஆண்டு நிறைவின்போது -- சோனியா ஆட்சியின் இறுதிப்பகுதியில் --
இந்த மனித அவலம் நிகழ்ந்துள்ளது. இறைநம்பிக்கை உள்ளவர்கள் இப்படி நம்பலாம். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் இதனை "இயற்கையின்
சீற்றம்"  என வருணிக்கலாம். இறைவனின் சீற்றமோ அல்லது  இயற்கையின் சீற்றமோ இந்த அழிவிலிருந்து, அவலத்திலிருந்து நாம் பாடம்
கற்றுக்கொள்ளவேண்டும். எமது சிந்தனைகளில், செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.ஆண்டவன் வழியாகிய அறத்தினைவிட

மனிதருக்கு ஆக்கம் தருவது வேறெதுவும் இல்லை என்ற தெளிவுடன் நாம் வாழவேண்டும்.


Geologists are not surprised by the scale of the Uttarakhand tragedy
The loss of human lives in what the Uttarakhand chief minister called a “Himalayan tsunami” could be as high as 25,000 or more.

World yet to know magnitude of Uttarakhand calamity: KSSP

http://www.tehelka.com/theuttarakhandfloods/


 
  • கருத்துக்கள உறவுகள்
 
அறநெறி வழிமுறைகளைப் புறக்கணித்து அதிகார அகங்காரத்துடன் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை மேற்கொண்ட

இந்திய ஆட்சியாளர்க்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே "இமாலயச்சுனாமி"யை  நான் கருதுகிறேன்.

 

 

 

இந்திய ஆட்சியாளர்கள் எங்கே தண்டிக்கப்பட்டார்கள்?  :o 

 

முள்ளிவாய்க்காலின், தமிழின அழிப்பை, இந்த இயற்கை அழிவுடன் ஒப்பிடுவதே தவறு!

 

இயற்கை, இனம், மதம், மொழி பார்த்து அழிப்பதில்லையே! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த மக்கள் எங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? அவர்கள் ஏன் இறைவனால் தண்டிக்கப்பட வேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆட்சியாளர்கள் எங்கே தண்டிக்கப்பட்டார்கள்?  :o 

 

முள்ளிவாய்க்காலின், தமிழின அழிப்பை, இந்த இயற்கை அழிவுடன் ஒப்பிடுவதே தவறு!

 

இயற்கை, இனம், மதம், மொழி பார்த்து அழிப்பதில்லையே! :blink:

 

 

 

இயற்கை, இனம், மதம், மொழி பார்த்து அழிப்பதில்லை

உண்மை

எம்மை   பார்த்து பார்த்து  அழித்தார்களே

இவர்களை  யார்  அழிப்பது?????

அதன்  வலியை  எப்படி  உணர்த்துவது???

 

 

அவர்களது  உறவுகள்  அழியும்போது...................???

அதுவே  இது நல்ல  செய்தி  என்பதற்கான எனது பார்வை

இந்த  மக்களும்  

முள்ளிவாய்க்காலை  பார்த்தபடி  வாய் மூடி மௌனமாக இருந்தார்கள்

அவர்கள் மீது கருணை  வரவில்லை

ஏனெனில்  எமது அழிவை  இவர்கள்  விரும்பினால்   தவிர்த்து இருக்கலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி மக்களின் அழிவை இறைவன் கொடுத்த தண்டனையாக பார்க்க முடியாது......

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி மக்களின் அழிவை இறைவன் கொடுத்த தண்டனையாக பார்க்க முடியாது......

 

இறைவனும் சீறக்கூடிய நிலையிலையா இருக்கிறார்? :o

 

381650.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.