Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கு

Featured Replies

இன்று நடைபெற்ற தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கும் கோரிக்கை பேரணி மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது.

எல்லா கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் சார்பிலும் பெரும்திரளான தோழர்கள் இந்த பேரணியில் பங்கேற்று கைதானார்கள். கைக்குழந்தையுடன் ஒரு தாயும் மற்றொரு தந்தையும் கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்டதை பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்ச்சியுற்றது. அன்னைத் தமிழை காக்க எத்தனை தியாகங்களும் செய்ய இவர்கள் அணியமாக உள்ளனர் என்பது மட்டும் தெரிந்தது.

சாதி மதம் கடந்து அனைத்து கட்சிகளும் பேதங்கள் இன்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மதம் சார்ந்த கட்சிகளில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியது. தமிழ் மொழியை காக்க அணி அணியாக இளையோர்கள், வயதானோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இப்போரட்ட்டத்தில் தங்கள் பங்களிப்பை நல்கினர். பெரும் திராவிட கட்சிகள் இன்னும் இப்போராட்டம் பற்றி அறியவில்லை போலும்!

முதல் மற்றும் இரண்டாம் மொழி போர் தமிழகத்தில் நடக்கும் போது நான் பிறக்கவில்லை. அப்போராட்டத்தில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் என்னிடத்தில் இருந்ததுண்டு. இன்று நடந்த போராட்டம் நம் முன்னோர்கள் செய்த மொழிப்போரை நினைவு படுத்தியது. ஒரே ஒரு வேறுபாடு தான் . அன்று நடந்த மொழி போர் இந்திய அரசுக்கு எதிராக நடந்தது. இன்று நடக்கும் மொழிப்போர் நம் தமிழக அரசை எதிர்த்து நடக்கிறது. அவ்வளவு தான். காலம் எப்படி மாறி உள்ளது. நமது அரசே நமக்கு எதிரியாகி விட்டது.

14483_692946234053563_1021224532_n.jpg
935871_692947477386772_702203341_n.jpg
1016618_692947617386758_1007208396_n.jpg
1148941_692948874053299_1740319580_n.jpg

 

Rajkumar Palaniswamy

முகநூலில் இருந்து [ 07 August 2013 ]

 

தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கும் கோரிக்கை பேரணி

http://newsalai.com/details/Rally-for-Tamil-medium-instruction-for-all-.html#sthash.onJVQLth.4N7SCaiV.dpbs

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கும் கோரிக்கை பேரணி மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது.

எல்லா கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் சார்பிலும் பெரும்திரளான தோழர்கள் இந்த பேரணியில் பங்கேற்று கைதானார்கள். கைக்குழந்தையுடன் ஒரு தாயும் மற்றொரு தந்தையும் கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்டதை பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்ச்சியுற்றது. அன்னைத் தமிழை காக்க எத்தனை தியாகங்களும் செய்ய இவர்கள் அணியமாக உள்ளனர் என்பது மட்டும் தெரிந்தது.

கூட்டு முயற்சிக்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் வரவேற்க்கத்தக்க விடயம்.
 
பேசும்போது (கதைக்கும்போது) ஆங்கிலத்தையும் அந்நிய மொழிகளையும் தவிர்த்து தமிழில் பேசினால் மெல்ல மெல்ல சாகும் தமிழ் வாழும்.  
 

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பேரணி 1000க்கு மேற்பட்டோர் கைது

தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக்கொண்ட வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை மெல்லமெல்ல வெளியேற்றி விடும் நிலை ஏற்படும். இந்த ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தமிழகமுதல்வருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளிக்க சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி இன்று(07.08.2013) காலை 10.00 க்கு நடைபெற்றது.

இப்பேரணியை தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருகிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமானதோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபாஅவர்கள் துவக்கிவைத்து பேசினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன்,  ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லைசத்திய, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு,தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் கா.பரந்தாமன், விடுதலைத் தமிழ்ப் புலிகள்த் தலைவர் தோழர் குடந்தைஅரசன், புதுக்கோட்டை பாவாணன், தமிழர் நீதிக் கட்சி சு.பா.இளவரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர்தமிழ்நேயன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மே பதினேழு இயக்கம்ஒருங்கிணைபாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் தோழர் அருண்சோரி, உலகத்தமிழர் கழக நெறியாளர் பேரா.ம.இலெ.தங்கப்பா, தலைநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த. சுந்தரராசன், தமிழ் உரிமைக்கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பானார், மக்கள் கல்வி இயக்கம் பேரா.பிரபா கல்விமணி, மக்கள் நல்வாழ்வுஇயக்கம் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மையக்குழு சிவ.காளிதாசன், சேவ் தமிழ் இயக்கம் செந்தில்,தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன், தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான், தாளாண்மை உழவர்இயக்கம் பொறி. கோ.திருநாவுக்கரசு, தமிழர் குடியரசு முன்னணி வழக். செயப்பிரகாசநாராயணன், தொழிலாளர் சீரமைப்புஇயக்கம் தோழர் மா.சேகர், தமிழ் மீட்புக் கூட்டியக்கம் அ.சி.சின்னப்பத்தமிழர், தமிழ்க் களம் புலவர் அரங்கநாடன், மக்கள்மாநாட்டுத் கட்சித் தலைவர் வழக்.க.சக்திவேல், செந்தமிழர் இயக்கம் ந.மு.தமிழ்மணி, திருவள்ளுவர் அறக்கட்டளைமா.செ.தமிழ்மணி, அன்றில் பா.இறையெழிலன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் 1000க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கைதாயினர்.

தோழர் பெ.மணியரசன் தலைமையில் போராட்ட குழுவினர் தமிழக முதல்வரின் தனிச் செயலாளரின் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை நேரில் சென்று கையளித்தனர்.

பல்வேறு கட்சித் தலைவர்களும் தோழர்களும் 1000த்திற்கு மேற்பட்டோர் கைதாகி அண்ணா கலை அரங்கத்தில் சிறைபடுத்தப் பட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ.இராசேந்திரன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், தோழர் க.முருகன். பொதுக் குழு உறுப்பினர்கள் தோழர் கவித்துவன், தோழர் தமிழ்மணி, தோழர் பழ.நல்.ஆறுமுகம், தோழர் இராசு, தோழர் இரா.சு.முணியாண்டி, தோழர்ஆரோக்கியசாமி, தோழர் விடுதலைச் சுடர், தோழர் கு.சிவபிரகாசம். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன். மகளிர் ஆயம் தோழர்கள் மீனா, மேரி, இலட்சுமி, செராபீனா உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டு கைதாயினர்.

http://www.sankathi24.com/news/32144/64/1000/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.