Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கலில் சிக்கியுள்ள தலைவா? முடிச்சை அவிழ்ப்பார்களா சந்திரசேகரும் விஜயும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தலைவா' படப்பிரச்னை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் விஜய் ஆகியோர் முயற்சி செய்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விஜய் நடித்த 'தலைவா' படம் நாளை (9.8.2013) வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதனை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது.

அதுமட்டும் அல்லாமல், பொலீஸார் தங்கள் தரப்பில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.

 

இதையடுத்து விஜய், 'தலைவா' படம் அரசியல் படமல்ல. குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்க வேண்டிய ஜனரஞ்சகமான படம் என அறிக்கை விட்டிருந்தார்.

இந்தநிலையில், கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், படத்தின் இயக்குனர் விஜய் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொடநாடு செல்வதற்கு முன்பே கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

'தலைவா' படத்திற்கு பாதுகாப்பு கேட்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளிக்க நினைத்து கொடநாடு சென்றார்களாம். இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை இந்திய ஊடகங்கள் சில தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய கையடக்கத் தொலைபேசி நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதல்வரை சந்திக்க சந்திரசேகரும், இயக்குனர் விஜய்யும் மட்டுமே சென்றதாகவும், நடிகர் விஜய் செல்லவில்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதனை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது.

 

ஒரு காக்கா இம்புட்டோன்டு ஆயிண்டதுக்கு இவ்வளவு பெரிய களவரமாடா......... :D

யாரோ விஜய் நடித்த படங்கள் பார்த்து நொந்த பாட்டி புரளியக்கிழப்பிவிட்டிருக்கு போலக்கிடக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்டால் எவ்வளவு கஸ்டம்.முதலில் கமலின் படத்திற்கு இப்படி நடந்தது.இப்ப விஜய்க்கு நடக்குது.நாளைக்கு யாரோ :unsure:

 

மற்ற நடிகர்கள் எந்த டப்பா படத்திலும் நடிக்கவில்லையா சுபேஸ்? விஜய்க்கு மட்டும் என்ன நக்கல் <_<  <_<

  • கருத்துக்கள உறவுகள்

குருவி.. சுறா.. துப்பாக்கி வரிசையில படம் ஊத்திக்கப் போகுது என்று தெரிஞ்சதும் பயபுள்ள குண்டை வைச்சிட்டான். படம் ஏற்கனவே ஊத்திக்கிச்சு...! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்டால் எவ்வளவு கஸ்டம்.முதலில் கமலின் படத்திற்கு இப்படி நடந்தது.இப்ப விஜய்க்கு நடக்குது.நாளைக்கு யாரோ :unsure:

 

 

 

 

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... அம்மாவை வணங்காது படம் ரிலீஸ் இல்லையே.. :D

 

 

மற்ற நடிகர்கள் எந்த டப்பா படத்திலும் நடிக்கவில்லையா சுபேஸ்? விஜய்க்கு மட்டும் என்ன நக்கல் <_<  <_<

 

 

 

ரிப்போர்ட்டர்: ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜய்: எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..

ரிப்போர்ட்டர்: நாசமாப்போச்சு.... உங்க ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...

விஜய்: தெரியாதுங்ணா... :D

 

இதுதான் விஜய்... அடுத்த தமிழ்நாட்டு தலைவரா வரட்டாம் என்கினம் அவற்ர ரசிகர்கள்... டமிழனுக்கு விடிவே இல்லையா..?அந்தக் கடுப்புத்தான்... :D 

  • கருத்துக்கள உறவுகள்
vijay-10813-150.jpg

விஜய்யின் தலைவா படம் ரிலீஸாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மகிவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் போலீசார் விஷ்ணுவின் உடலை பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும் அதுவரை விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடாமல் பொறுமையோடும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.8.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

 

என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏமாற்றினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன். இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும்.அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89748&category=IndianNews&language=tamil

1150894_537298966337440_1428523119_n.jpg

1394_10151679637489865_1147023513_n.jpg
டாஸ்மாக்கை விட கொடிய போதை தருவதாய் மாறிக்கொண்டு இருக்கும் சினிமா !!!!!!!!!!!

ஒரு படம் வெளியாகவில்லை என்று பலர் தற்கொலை செய்து கொண்டு இருகின்றனர் என்ற செய்தி படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது ஒரு படத்திற்காக தனது தாய் தந்தையை கூட மறந்து இது போன்று ஒரு நடிகனுக்காக தற்கொலை செய்வதை பார்த்தல் நாம் எங்கே சென்றுகொண்டு இருகின்றோம் திரைப்படங்கள் நமக்கு இப்பொழுது போதை பொருளாகிவிட்டது போல் தான் தோன்றுகிறது போற போக்கை பார்த்தல் டாஸ்மாக்கை விட கொடிய போதை பொருளாகி கொண்டு இருகின்றது மதுவுக்கு மட்டும் அல்ல இங்கே சிலர் திரை நாயகர்களுக்கு அடிமைகளாய் திரிந்துகொண்டு இருகின்றனர் பிரச்சனைகளை பிரித்து உணரும் பாக்கவும் வேண்டும் நண்பர்களே நீங்கள் பேருந்தை உடைகின்றிர்கள் சாலை மறியல் செய்து காவல்துறையினரிடம் அடிபடுகிரீர்கள் ஆனால் உங்கள் தலைவன் உங்களை வேடிக்கை மட்டும் பார்கிறான் நன்றாக சிந்தித்து செயல்பாடுகள் ஒரு பொழுதுபோக்குக்கு எவ்வளவு மரியாதையை கொடுக்க வேண்டுமோ நேரம் ஒதுக்க வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள் இது போன்று மனித சக்தியை தேவை இல்லாமல் இலாகாதிர்கள்

 
நன்றி முகநூல்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.