Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி அமைச்சர் என்ற ரீதியில் நவனீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கத் தயார்: ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதி அமைச்சர் என்ற ரீதியில் நவனீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கத் தயார்: ரவூப் ஹக்கீம்

[Tuesday, 2013-08-13 09:32:46]
hakeem-seithy-20120918-150.jpg

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாகின்றமை போன்றன தொடர்பில் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடும்.

  

அவ்வாறான கேள்வி எழுப்பினால் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டுக்காக நியாயமான விளக்கங்களை அளிப்பேன். கட்சியின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைப் புரிந்து கொள்வார். ஜனாதிபதி பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். எனினும், சில பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார். யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

நக்கியாச்சு

இனி  வாந்தி  தானே.....?

இனம்  என்ன பாடு  பட்டாலென்ன?? :(  :(

கக்கீம் தயாராக இருக்கிறார் என்பதையும் ஐ.நாவுக்கு தெரிய வைத்துவிடுவதுதானே. இவர் 19ம் தொடரில் என்ன பேசினார் என்பதின் கொப்பி ஒன்றை நவவீதம்பிள்ளையிடம் கொடுத்தால் அத்ன் பின்னர் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு கக்கீம் விளக்கம் சொல்லாம். கக்கீம் நீதி அமைச்சரா அல்லது அதிகாரம் ஒன்றும் இல்லாத அரச பிரச்சாரியா என்பது நவநீதம் பிள்ளைக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என்வே அதிகாரம் குறைந்த மந்திரி கக்கீமை சந்திக்காமல் விட்டுவிடுவதுதானே.

 

ஆனால் கக்கீம் அமெரிக்க தூதுவருக்கு ஏன் சிராணியை அரசு பதவி நிக்கியது என்பது பற்றி விளங்கப்படுத்த போய் அல்லல் பட்டவர். 

நீதி என்றால் என்னவென்று தெரியாத நீதி அமைச்சர்களை நவநீதம் பிள்ளை அவர்கள் சந்திப்பது நேர விரயம்.

போர்க்  குற்றம் நடைபெறவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்திப்பது நேர விரயம்.

இவை உண்மையை கண்டறிவதில் தடைகளை ஏற்படுத்தும்.

எனவே நேரடியாக முள்ளிவாய்க்கால் போரில் மாட்டுப்பட்ட மக்களையும் கூட்டமைப்புப் பிரதிநிதிகளையும் சந்திப்பதே ஆரோக்கியமானது.
 

கிரான்ட்பாஸ் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளில் திருப்தி - ஹக்கீம்

 

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அக் கட்சியின் உயர் மட்டக் குழு ஒன்று நேற்று (12) கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தமது கட்சியினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

எனினும் அவ் விசாரணைகள் திருப்தியளிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

 

http://tamil.adaderana.lk/news.php?nid=43242

வடக்கில் போட்டியிடும் 5 உறுப்பினர்களை நீக்கியது முஸ்லிம் காங்கிரஸ் [ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 01:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] hakkeem.jpgவடக்கு மாகாணசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் கட்சியின் முடிவுக்கு மாறாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து உயர்பீட உறுப்பினர்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. 

இல்ஹாம்,கரீம், முதாஜித், நஜாத், ஜெகியா ஆகியோரு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்று கட்சி ஒருமனதாக முடிவெடுத்துள்ள நிலையில், அதனை அவமதிக்கும் வகையில், செயற்பட்டுள்ள ஐந்து பேரையும் கட்சியை விட்டு நீக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130815108871

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.