Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதனை தடுக்க புதிய சட்டம் அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
srilanka_CI.jpg

 

நாட்டின் பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதனை தடுப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அச்சு ஊடகங்களிலும் இணையத்தின் வழியாகவும் பிரதான மதங்களின் கற்பிதங்களுக்கு புறம்பான வகையிலோ அல்லது மதக் கொள்கைகள் கோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையிலோ தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட உள்ளது.
 
முதல் கட்டமாக பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் வரைவுச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தையோ அதன் கொள்கைகள் கோட்பாடுகளையோ இழிவு படுத்தக் கூடிய அச்சு மற்றும் இணைப் பிரசூரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சின் செயலாளர், பௌத்த சாசன ஆணையாளர் மற்றும் நான்கு பீடங்களின் பீடாதிபதிகளினால் பரிந்துரை செய்யப்படும் நபர்களினால் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
 
உத்தேச வரைவுச் சட்டம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனு;ப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 

அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் தேவதாசி என்ற பெயர் பிடிக்கலையாம். கௌரவக்குறைவாக இருக்கிறதாக கவலைப்படுறாரு. அதுதான் வேசி என்று அழைக்கனுமெங்கிறார். <_<

 

இந்த வன்முறை அரச சட்டங்களால் அல்லவா இவர்களை உலகம் எள்ளி நகையாட ஆரம்பித்தார்கள். மியன்மார், இலங்கை என்ற இரண்டு வன்முறை நாடுகளுக்கு முன்னர் வரை புத்தம் உலகின் முதன்மையான ஜீவகாருணிய மதமாக அல்லவா கருத்தப்பட்டு வந்தது. ரைம்ஸ் எழுதிய கட்டுரைத் தன்னும் படிக்கலையா இவர்கள்? புண்ணாக்கு மந்தைகளாக நடந்து கொள்ள விரும்புகிறார்கள் போலும். 

 

முடிவில் புத்தம் என்றால் என்ன என்று அரசு வரையறுத்து அதற்கு மேலே கீழே போவோரை தண்டிக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டிய தேவைக்கு தள்ளப்படுவார்கள். ஆனல் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக புத்த துறவிகள் இந்து மதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் எழுதி சட்டம் போட வரும் போது இலங்கை சரித்திரத்தை திரித்தது போல 10,000ம் ஆண்டுகளாக  இந்தப் பூமியில் இருக்கும் மதத்தையும் திரித்து இந்துக்களை இழுவுபடுத்த போகிறார்கள். 

 

அநாகரிக தர்மபால ஆரம்பித்து வைத்த வெறி.  ஜெர்மனிக்கு ஒரு பிஸ்மார்க். இலங்கைக்கு ஒரு அநாகரிக தரமபால. நிச்சயமாக சிங்கள திருநாவுக்கரநாயனாரும் திருஞானசம்பந்தரும் பிறந்துதான் ஆவார்கள்.

Edited by மல்லையூரான்

அநாகரிக தர்மபால ஆரம்பித்து வைத்த வெறி.  ஜெர்மனிக்கு ஒரு பிஸ்மார்க். இலங்கைக்கு ஒரு அநாகரிக தரமபால. .

 

 

அநாகரிக தர்மபாலவுக்கு ஹிந்தியா விழா எடுக்கப் போகிறார்களாம்!

இது சுஸ்மா சுவராஜின் ஏற்பாடாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவாக்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இஸ்லாமிய இந்து உறுப்பினர்கள் எதிர்க்கலாம்
ஆனால் சிங்கள  கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்க்கமாட்டார்கள்
அங்குதான் அவன் தன்னைச் சிங்களவன்  என நிரூபிக்கின்றான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவாக்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இஸ்லாமிய இந்து உறுப்பினர்கள் எதிர்க்கலாம்

ஆனால் சிங்கள  கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்க்கமாட்டார்கள்

அங்குதான் அவன் தன்னைச் சிங்களவன்  என நிரூபிக்கின்றான் 

உண்மைதான் வாத்தியார்,
 
எப்போதும் சிங்களவர் மத ஒற்றுமைக்கும் மேலாக இன ஒற்றுமையையே பேணி வருகிறார்கள்.  
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மைதான் வாத்தியார்,
 
எப்போதும் சிங்களவர் மத ஒற்றுமைக்கும் மேலாக இன ஒற்றுமையையே பேணி வருகிறார்கள்.  

 

நாங்கள் தமிழர் மட்டும் தான் யாழ்பாணத்தார்  மட்டக்களப்பார் இந்து முஸ்லீம் கத்தோலிக்கம் என்று சிங்க்களவர்களின்  ஒற்றுமையை வலிமையடைய வைத்தது

சிங்களவர்கள் எல்லோரும் வெள்ளைகளின் படிக்காசுக்கு கிறிஸ்தவர்களாக(மகிந்த குடும்பம் மீன்பிடி உரிமைக்கா மாறியதாக கேள்வி) மாறி இப்போது பாராளுமன்ற, உள்ளுராட்சி தேர்தல்களில் கிடைக்கும் படிக்காக திரும்ப மதம் மாறிவிட்டார்கள். பேராயர் மல்கம் ரஞ்சித்தார் கூட மந்திரி பதவி கிடைத்தால் cloak கழற்றி வைத்து விட்டு சிவப்பு சால்வையை களுத்தைச்சுற்றி போட்டுக்கொள்வார்.  தமிழர்கள் அப்படி அல்ல. அமெரிக்கன் மிசன் கல்வியை வைத்துத்தான் அந்த நாளில் மதம் மாற்றம் செய்தது. மாறியவர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.