Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் வீட்டினுள் புகுந்தவர்களில் இருவர் சிறிலங்கா படையினர்

Featured Replies

சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரம வீட்டினுள் நுழைந்து, அச்சுறுத்தியவர்களில் இருவர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளவர்கள் என்றும், இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பம்பலப்பிட்டியில் உள்ள சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தன இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டுக்கள் 5 பேர் புகுந்து அவரை கத்திமுனையில் மிரட்டியதுடன், தேடுதல் நடத்தினர்.

இரண்டரை மணிநேரமாக வீட்டுக்குள் அவர்கள் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது, ஊடகவியலாளரான அவரது கணவர் ரமேஸ் அபேவிக்கிரம கடமை முடிந்து வீடு திரும்பியிருந்தார்.

வீட்டினுள் சந்தேகநபர்களின் நடமாட்டத்தை உணர்ந்த அவர், உடனடியாக சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார்.

சிறிலங்கா காவல்துறையினர் விரைந்து சென்றபோது, குறிப்பிட்ட குழுவினருடன் மோதல் ஏற்பட்டது.

இதன்போது அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ஏனையவர்கள் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளை முயற்சி போன்று இது சித்திரிக்கப்பட்டிருந்தாலும், ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவை அச்சுறுத்தும் முயற்சி என்றே சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட குழுவில் இருந்த இருவர் சிறிலங்கா இராணுவத்தில் இருந்தவர்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சிறிலங்கா இராணுவம் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் தங்கியுள்ள நிலையில், எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,

“இந்தச் சம்பவத்துடன் சிறிலங்கா இராணுவத்தைத் தொடர்புபடுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் எந்த தொடர்புமில்லை.

பிடிபட்டவர்களில் ஒருவர், இராணுவச் சிப்பாயான சாமர குமார, இராணுவத்தில் இருந்த போது கொள்ளைகளில் ஈடுபட்டதற்காக 2009 செப்ரெம்பரிலேயே கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், இராணுவ நீதுமன்றினால் 90 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அங்கிருந்து தப்பியோடிய அவர், 2010இல் சரணடைந்து, மீண்டும் 90 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தை முடித்த பின்னர் இராணுவத்தில் இணைந்த அவர், 2010 ஒக்ரோபரில் விடுமுறை எடுக்காமல் தப்பிச்சென்றிருந்தார்.

பின்னர் அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது நபரான, அசங்க உபேசிறி 2009இல் இராணுவத்தில் இணைந்து 2010இல் தப்பியோடியவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://goldtamil.com/?p=7117

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. "சட்டத்துக்குப் புறம்பான" வேலைகளை செய்விக்கவென்றே தப்பி ஓடச் சொல்லுவார்கள் போலுள்ளது..

ஓடினவர்களுக்கு புனர் வாழ்வும் அப்படி ஒன்றுதான். முன்னர் புலிகள், கருணா படையினர் பலருக்கு புதிய் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

 

மாரடைப்பு வருத்தக்கார புதர்களில் ஏன் விழ வேண்டும். தெருவால் ஏன் போகவில்லை என்ற கேள்வி என்னை இன்னமும் குடைகிறது. வெந்நீர் கொடுத்த அயலவர் வீடு ஏன் அவரை வெளியே போகவிட்டது?

 

Edited by மல்லையூரான்

அப்ப மற்றவர்கள் யாராம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.