Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v.n.waran.png

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச தரப்பினர் முன்வருன்றார்கள். அதன் பின் எங்களை மறந்து விடுகின்றார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது.

நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள். ஆனால் தருவது அவர்களா? அது ஒரு போதும் இல்லை. இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்கு முறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கின்றார்கள்.

தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்? பாதிக்கப்பட்ட எமது மக்களின் அல்லல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டுதான் தெருக்கள் அமைக்கப்பட்டன.

இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்காக? 1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள் ஏன் தெருக்களைப் போட்டார்கள்?

வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன? 

இராணும் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும்? தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பெற் வீதிகளை காட்சிப் பொருளாக்கினார்கள். அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப் பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன.

எமது தமிழ் பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே எமக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எம்மை கொண்டுவித்தே எமக்கு குழி பறிக்க பெரும்பான்மை இன அரசு பின் நின்றதில்லை.

எனவே நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்றார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8820:2013-08-26-07-37-48&catid=1:latest-news&Itemid=18

தமிழ் பேசும் அரசு ஏற்கனவே உள்ளது!  போர்க்குற்றவாளி மகிந்தவும் அப்பப்ப தமிழில் கதைப்பதை CV அவர்கள் அறியவில்லையோ?

தமிழரசு தான் வேண்டும் என்று சொல்ல வலிமையான முதுகெலும்பு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
முதுகெலும்பை பற்றி முகம் தெரியாமல் இணையவெளியில் யாரும் வீரம் பேசலாம். களத்தில் தினம் தினம் வேட்ப்பாளர்கள் உதைபடும் தாக்கப்படும் நிலையில் இவ்வளவு துணிவாக பேசுவதற்கே அசாத்திய துணிச்சல் வேண்டும்.
 
மேலும் தமிழ் பேசும் (முஸ்லிம்கள் உட்பட்ட) அரசு என்பதில் எந்த தவறும் இல்லையே. 
 
தமிழ் அரசு என்றால் தனி நாடு என்ற கருத்தில் நீங்கள் சொல்லி இருந்தால். அதுவும் தவறே.
 
விக்னேஸ்வரன் தொடக்கத்திலே தெளிவாக சொல்லி விட்டார் தான் பங்கேற்ப்பது மாகாணசபை தேர்தலில்தான் என்று. அதன் பின் அவரை போய் வைவானேன்.
  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிற விசயத்தை சொல்லி சமகாலத்தில் சாத்தியப் பட வேண்டிய விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் என்ன முழக்கம்..?????! அப்படி என்னத்தை முழக்கமா புதிசா சொல்லிட்டார்...???! :o:rolleyes:

 

முதுகெலும்பை பற்றி முகம் தெரியாமல் இணையவெளியில் யாரும் வீரம் பேசலாம். களத்தில் தினம் தினம் வேட்ப்பாளர்கள் உதைபடும் தாக்கப்படும் நிலையில் இவ்வளவு துணிவாக பேசுவதற்கே அசாத்திய துணிச்சல் வேண்டும்.
 
மேலும் தமிழ் பேசும் (முஸ்லிம்கள் உட்பட்ட) அரசு என்பதில் எந்த தவறும் இல்லையே. 
 
தமிழ் அரசு என்றால் தனி நாடு என்ற கருத்தில் நீங்கள் சொல்லி இருந்தால். அதுவும் தவறே.
 
விக்னேஸ்வரன் தொடக்கத்திலே தெளிவாக சொல்லி விட்டார் தான் பங்கேற்ப்பது மாகாணசபை தேர்தலில்தான் என்று. அதன் பின் அவரை போய் வைவானேன்.

 

 

தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்கு, முழங்க இல்லை முனகவும் முடியாத நிலையில்தான் இன்று நாட்டில் தமிழினம் இருக்கிறது. விக்னேஸ்வரனே கூட தான் முழங்கியதாக சொல்லவில்லை. இது செய்தியை பிரசுரித்தவரின் விற்பனை யுக்தியே.

 

முதுகெலும்பை பற்றி முகம் தெரியாமல் இணையவெளியில் யாரும் வீரம் பேசலாம். களத்தில் தினம் தினம் வேட்ப்பாளர்கள் உதைபடும் தாக்கப்படும் நிலையில் இவ்வளவு துணிவாக பேசுவதற்கே அசாத்திய துணிச்சல் வேண்டும்.
 
மேலும் தமிழ் பேசும் (முஸ்லிம்கள் உட்பட்ட) அரசு என்பதில் எந்த தவறும் இல்லையே. 
 
தமிழ் அரசு என்றால் தனி நாடு என்ற கருத்தில் நீங்கள் சொல்லி இருந்தால். அதுவும் தவறே.
 
விக்னேஸ்வரன் தொடக்கத்திலே தெளிவாக சொல்லி விட்டார் தான் பங்கேற்ப்பது மாகாணசபை தேர்தலில்தான் என்று. அதன் பின் அவரை போய் வைவானேன்.

 

 

நீங்கள் "தமிழரா?", "தமிழ் பேசுபவரா?" முதலில் இதற்கான பதிலை சலாப்பாமல் தெளிவாக கூறுங்கள்.

தமிழை (அரைகுறையாக) பேசவல்ல சிங்களவர்கள் இன்று சிங்கள அரச பாதுகாப்புத் துறையில் கணிசமாக உள்ளனர். இவர்களும் "தமிழ் பேசுபவர்கள்" என்ற வரையறைக்குள் அடங்குவார்கள். இது தமிழரை முழுமையாக ஓரம்கட்டி விட்டு, தமிழ் பேசும் சிங்களவர்களை (முஸ்லிம்களையும் தான்) மட்டும் வைத்துக் கொண்டு 20 % தமிழர்கள் உள்ள நாட்டில் 50 % தமிழ் பேசுபவர்கள் அரச பாதுகாப்புத் துறையில் உள்ளனர் என்று உலகை ஏமாற்ற உதவி வருகிறது.

அதுபோலவே அரச, கல்வித்துறை  வேலை வாய்ப்புக்களிலும் போதியளவு "தமிழ் பேசும்" சிங்களவர்களை இணைத்து, தமிழ் பேசுபவர்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளனர் என்று வெளிநாடுகளுக்கு புள்ளிவிபரம் கொடுக்கப்படுவதை நிரந்தரமாக புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்குத் தெரியாத விடயமாக இருக்கலாம்    

அன்று மங்கள சமரவீர முதல் இன்று வாசுதேவ நாணயக்கார வரை இந்தத் திட்டத்தை ரகசியமாக முன்னெடுத்து வருவது தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை இல்லாதவர்களுக்கு விளங்கியிருக்காது. 8 வருடங்களின் முன்னர் தெற்கில் பெருமளவு சிங்களவர்களுக்கு அவசர அவசரமாக தமிழ் கற்பிக்கப்பட்ட நோக்கமும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களும் குறுகிய காலத்தில் இன்று தமிழ் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழனுக்கு என்றும் துணைபோகாத, தமிழின படுகொலைக்கு துணைபோன ஒருகும்பலை அரவணைப்பதாக நினைத்துக் கொண்டு தம்மை "தமிழர்" என்ற நிலையிலிருந்து "தமிழ் பேசுபவர்" என்ற நிலைக்கு தரம் தாழ்த்தும் அடிமைப் புத்தி கொண்டவர்கள் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆனால் ஓரிரு வாக்குகளைப் பெறுவதற்காக எமது பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர் தம்மை  "தமிழர்" என்ற நிலையிலிருந்து "தமிழ் பேசுபவர்" என்ற நிலைக்கு தரம் தாழ்த்துவதை தாயகத்தில் நிரந்தரமாக வாழத் துடிக்கும் நாம் விரும்பவில்லை.  

"தமிழர்", "தமிழ் பேசுபவர்" என்ற இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது முழக்கமிடுபர்களுடன் விவாதிப்பதும், கல்லில் நார் உரிப்பதும் ஒன்றே!

"தமிழ் பேசுபவர்கள்" என்ற மாயவலையின் ஆபத்தை வெளிநாடுகளில் நிரந்தரமாக இருந்துகொண்டு உங்களால் உணர வாய்ப்பில்லை என்பதை உங்கள் பதில் கூறுகிறது. இதை ஒருமாத சுற்றுலாவில் வந்துவிட்டு திரும்பி ஓடுபவர்களாலும் உணர முடியாது.

தாய் மண்ணை நிரந்தரமாக கைவிட்டு விலத்தும் மனநிலை உடையவர்கள் "தமிழர்" என்ற அடையாளத்தையும் தொலைக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால் "தமிழ் பேசுபவர்கள்" என்ற மாயவலையின் ஆபத்தை உணர்ந்த நாங்கள் ,தமிழரின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு தேர்தலில் நிற்கும் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் "தமிழ் பேசுபவர்கள்" என்று உளறிக்கொண்டு திரிவதை தாயகத்தில் நிரந்தர குடிமக்களாக இருக்கும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

 

 

திருத்தம்: சரியான பதிவை மேற்கோளிட

Edited by Sayani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.