Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் விஜயத்தின் பின் த.தே கூட்டமைப்பின் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளன: முஸாமில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Mohammed-Muzammil-.jpg

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என என தேசிய சுதந்திர முன்ணனியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மொஹமட் முஸாமில் இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத அமைப்பு அல்ல. இதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பயங்கரவாதியல்ல. அவர் தமிழ் மக்களின் வீரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்ட அதிகாரத்தை நிலைநிறுத்த செயற்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் எவ்வாறு இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். விடுதலைப் புலிகள் அன்று ஆயுதம் மற்றும் சர்வதேச பலத்தை கொண்டு செயற்பட்டனர். இதேபோன்று தற்போது அரசியல் மற்றும் சர்வதேச பலத்தை கொண்டு இயக்கப்படுகின்றது என்றார்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

வவ்

வவ்

வவ்............... :(

அப்போ கக்கீம் ஜின்னா மாதிரி தனி அலகு பெற்றுத்தந்தால் என்ன செய்கிறதா உத்தேசம்?

  • கருத்துக்கள உறவுகள்

காக்கவிண்ட தொப்பியைக் காணம்.

 

தான் போக வழி இல்லை. மூஞ்சூறு விளக்குமாறை காவுது எண்டது இதைத்தான்.

 

பள்ளி எல்லாம் உடை படுகுது.

 

இது உங்க என்னவோ புலம்புது!.

 

என்னத்தை சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

காக்கவிண்ட தொப்பியைக் காணம்.

 

தான் போக வழி இல்லை. மூஞ்சூறு விளக்குமாறை காவுது எண்டது இதைத்தான்.

 

பள்ளி எல்லாம் உடை படுகுது.

 

இது உங்க என்னவோ புலம்புது!.

 

என்னத்தை சொல்ல?

 

 

 

எல்லாம் எசமான் ஏதாவது எலும்பு துண்டை விட்டெறிவார் என்ற நப்பாசை தான்.

 

 

இந்த இனத்துக்கு

நிச்சயமாக  விடிவு இல்லை.........  :(   :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
கோத்தாவின் உரை முஸ்லிம் மக்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது: முஜிபூர் ரஹ்மான்
 
  ஆர்.யசி

நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும் சம நீதி, சட்டங்களை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் முஸ்லிம்களுக்கு சட்டமும், நீதியும் செயற்படாது என்ற வகையிலான கருத்தினையே பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகள் கிடைக்கின்றது எனவும் அவரின் கருத்து அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறான கருத்துக்களினால் இலங்கையில் வாழும் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் விதமாக அமையப்பெற்றுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் இக்கருத்திற்கு அரசாங்கம் தெளிவான கருத்தொன்றினை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6874

இதுக்குப் பின்னராவது ஒரு தொடை எலும்பாவது கிடைக்காதா...? அவ்வ்வ்வ்வ்.....


அடைப்படைத் தொழிலே வியாபாரமென்பதற்காக இனத்தையே விற்றுப்பிளைக்கவேண்டுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.